Tuesday, April 14, 2020

நமது வாழ்வை அசை போட்டு நெறிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு


 இறுக்கமான மனநிலையில் (Fixed Mindset) இருந்து வளர்ச்சி மனநிலைக்கு (Growth Mindset) எவ்வாறு மாறுவது? 



அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் மூலமாக தமிழ்நாட்டில் சமூக பொது ஒழுக்கமானது மீண்டும் நிலைபெறும் வாய்ப்பு கூடியுள்ளது. வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தமது வாழ்வை அசை போட்டு நெறிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் இப்போது கிடைத்துள்ளது. (‘கொரோனா மூலமாக அமுலாகும் 'சமூகஒரீஇ'; பொது ஒழுக்கத்தில் வளரும் தமிழ்நாடு’; 

நாம் சந்திக்கும் இன்பங்களை மட்டுமின்றி துன்பங்களையும் அனுபவித்து, வாழ்க்கை என்ற விளையாட்டில் நல்ல திசையை நோக்கி நாம் முன்னேறுவதற்கான திறவுகோலும் நமது மனநிலையில் (Mindset) தான் இருக்கிறது.

எத்தகைய மனநிலை இருந்தால், நாம் நல்ல வகையில் வாழலாம்? என்ற இரகசியங்களும் ஆராய்ச்சிகள் மூலமாக வெளிப்பட்டு வருகின்றன. சுருக்கமாக, அவை வருமாறு:

1.நமது மனநிலை பற்றிய சரியான புரிதல்

2. சமூகத்தில் எதையும் கறுப்பு வெள்ளையாகவே, அல்லது வெற்றிதோல்வியாகவே, இரட்டை இலக்க அணுகுமுறையில் (Binary) பார்ப்பதைத் தவிர்ப்பது

3.நாம் சரியென்று ஏற்றுக்கொண்டவைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது;

4.நாம் எதற்காக வாழ்கிறோம்? என்பதையும் மறுவரையறைக்கு உட்படுத்துவது

5. குறிப்பிட வரம்பிலிருந்து திறந்த மனநிலைக்கு மாறுவது

How to upgrade your mindset for the better: 1. Become more aware of your mindsets; 2. Avoid seeing reality in binary terms; 3. Reflect on your beliefs; 4. (re)Define your purpose in life; 5. Turn limiting mindsets into liberating ones;  

1. நமது மனநிலை பற்றிய சரியான புரிதல் பற்றிய ஆய்வில் நமது மனதில் உள்ள தேவைகளைப் பற்றிய புரிதல் முக்கிய இடம் பெறுகிறது.

ஒரு மனிதர் நல்ல அல்லது தீய செயலில் ஈடுபட, அவர் மனதில், அதற்கான தூண்டுதல் எண்ணம் (Motivation) உருவாக வேண்டும்.

செயலில் ஈடுபட தூண்டுதல் எண்ணம் உருவாக, மனதில் அது தொடர்பான ஈடுபாடு (interest) இருக்க வேண்டும்.

மனதில் ஈடுபாடு உருவாக வேண்டுமானால், அதற்கான தேவைகளை (Needs) உணரவேண்டும்.

நாம் 'பிறரின் அங்கீகாரம்' என்ற தேவைக்கான மனநிலையில் வாழ்கிறோமா? அல்லது பிறரின் அங்கீகாரத்தைப் பற்றிய கவலையின்றி, நம்மையே நமது எஜமானனாகக் கருதி, நமது வளர்ச்சியே முக்கியம், என்ற தேவைக்கான மனநிலையில் வாழ்கிறோமா? என்பது போன்ற கேள்விகளுடன், நமது மனநிலை பற்றிய சரியான புரிதல் பற்றிய ஆய்வில் ஈடுபடலாம்.  

தமிழ்நாட்டில் இன்று எவருடனும் உரையாடும் போது, கீழ்வரும் போக்கு பெரும்பாலும் வெளிப்பட்டு வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று தொடர்பான விபரங்கள், நாம் சந்தித்த வித்தியாசமான அனுபவங்கள் என்று எதையும் உரையாடலில் துவக்கமாக வெளிப்படுத்தினால், அடுத்த நபர் அந்த உரையாடலில் நம்மை ஒப்பீடு குறிப்பாயத்தில் (Comparison reference) சிக்க வைத்து, தான் எந்த வகையிலும் தகவல்களிலோ, அனுபவங்களிலோ குறைந்தவரல்ல, என்று நாம் அவரை அங்கீகரிப்பதை வெளிப்படுத்தும் வரையிலும், அந்த உரையாடலை ஒரு வகை 'ஈகோப் போராகவே' (Ego war) தொடர்வார். அவர் தெரிவித்த தகவல்களில் ஏதும் குறை இருப்பதை நாம் சுட்டிக்காட்டினால், அவர் மீதே நாம் குறை கண்டுபிடித்தது போல கோபத்தை வெளிப்படுத்துவார். அத்தகைய நபர்களுடன் உரையாட நேர்ந்தால், துவக்கத்திலேயே நாம் அவரை அவர் விரும்புமாறு, அங்கீகரித்து, அவர் தெரிவிக்கும் தகவல்களில் குறைகள் இருந்தாலும் சுட்டிக்காட்டாமல் பொறுமையாக கேட்டால், உரையாடல் சுமுகமாகவும் நேரவிரயமின்றியும் முடியும் என்பது எனது அனுபவமாகும்.

அந்த அளவுக்கு, பிறர் 'நம்மை  பாராட்டி அங்கீகரிக்க வேண்டும்' என்ற தீராத ஏக்கத்துடன் (a hunger for approval ) வாழ்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்  மிகவும் அதிகரித்துள்ளது. அத்தகையோர் எல்லாம் 'இறுக்கமான மனநிலையில் (Fixed Mindset) வாழ்பவர்கள் ஆவார்கள்.

அவ்வாறு பிறரின் அங்கீகாரத்திற்காக தீராத ஏக்கத்துடன் வாழ்பவர்களிடமிருந்து வேறுபட்டு, சாகும் வரை கற்றலுக்கான உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் (passion for learning rather than a hunger for approval) வாழ்பவர்களும் உலகில் இருக்கிறார்கள். அத்தகையோரின் மனநிலையானது வளர்ச்சிக்கான மனநிலையாக (growth mindset) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தம்மை புத்திசாலி, திறமைசாலி என்று நிரூபிப்பதற்காகவே, பணம், செல்வாக்கு போன்றவற்றை ஈட்ட உதவும் முடிவான மனிதப்பண்புடன் வாழ்பவர்களின் உலகமாக, 'இறுக்கமான மனநிலையில் வாழ்பவர்களின் உலகம் இருக்கிறது. (the world of fixed traits — success is about proving you’re smart or talented. Validating yourself)

நமது வளர்ச்சிக்கான நேரத்தின் பகுதியை இழந்து,‌ 'நாம் மிகப்பெரிய ஆள்' என்பதை நிரூபிக்க, நமது நேரத்தை ஏன் நாம் விரயமாக்க வேண்டும்? (Why waste time proving over and over how great you are, when you could be getting better?)

நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதற்குப் பதிலாக, ஏன் மறைக்க வேண்டும்?‌ (Why hide deficiencies instead of overcoming them?)

நமது வளர்ச்சிக்கு சவால் விடும் நபர்களைத் தேடாமல், நமது சுயமதிப்பு தற்புகழ்ச்சியை ஊக்குவிக்கும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் ஏன் தேட வேண்டும்? (Why look for friends or partners who will just shore up your self-esteem instead of ones who will also challenge you to grow?)

நம்மை வளர்க்கச் செய்யும் அனுபவங்களைத் தேடாமல், ஏற்கனவே பிறர் முயன்று நிரூபிக்கப்பட்ட வகையில் ஏன் முயற்சிக்க வேண்டும்? (And why seek out the tried and true, instead of experiences that will stretch you?)

என்பது போன்ற கேள்விகளுடன் புதிய திசைகளில், புதிய அனுபவங்களை நோக்கியே, வளர்ச்சி மனநிலையில் (growth mindset) உள்ளவர்கள் எல்லாம் பயணிக்கிறார்கள்.

வாழ்க்கையில் கடுமையான சோதனைகளை சந்திக்கும்போது, அவற்றை வெற்றிகரமாகக் கடந்து செல்ல உதவுவது வளர்ச்சி மனநிலையாகும். (This is the mindset that allows people to thrive during some of the most challenging times in their lives.)

வெற்றி அல்லது தோல்வி என்ற இரட்டை இலக்கச் சிறையில் சிக்காமல், வாழ்க்கையில் கற்றலே அத்தகையோரின் இலக்காகும். (their priority was learning, not the binary trap of success and failure) 

2.    சமூகத்தில் எதையும் கறுப்புவெள்ளையாகவே, அல்லது வெற்றிதோல்வியாகவே, இரட்டை இலக்க அணுகுமுறையில் (Binary) பார்ப்பதானது, நமது வாழ்க்கையையே அந்த சமூக இரட்டை இலக்க சிறையில் சிக்க வைத்துவிடும்.

கருத்து கறுப்புவெள்ளைநோய்க்கு உள்ளான முற்போக்காளர்கள் தம்மையும் அறியாமல்முற்போக்கு சாதி (அல்லது அதில் உள்சாதி) வட்டத்தில் சிக்கி விடும் ஆபத்தும் உண்டு. அவ்வாறு தமக்கான பிம்பத்தில் (image) சிக்கிய பின், தாம் சிந்திக்கும் வெளிப்படுத்தும் கருத்துகள் தமது பிம்பத்தைப் பாதிக்குமா வளர்க்குமா என்று யோசித்து செயல்படும் நோய்க்கு அவர்கள் ஆளாவார்கள்.

அதன் பின் நாம் வெள்ளையாகப் பார்க்கின்ற ஒருவரின் குறைபாடுகள் பற்றிய ஆதாரங்கள் நமது பார்வைக்கு வரும் போது பெரும்பாலும் அதைப் பொய் என்று சொல்லி ஒதுக்க முற்படுவோம். அதையும் மீறி அந்த ஆதாரங்கள் உண்மையென்று ஆகி விட்டால் கறுப்பை வெள்ளையாகப் பார்த்து விட்டோமோ என்ற ஐயம் நம்மை வாட்டத் தொடங்கும். நமக்குத் தெரிந்த பிம்பங்கள், குழு அடையாளங்கள் (தலித், தி.. நக்சலைட், ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம் போன்ற இன்னும் பிற) மூலமே நமக்குப் பார்க்க பழக்கமாகி, உண்மைகளையும் நல்ல தனி நபர்களையும் அடையாளம் காண முடியாமல் போய் விடும். சில நேரங்களில் உண்மைகளுக்கும் நல்ல தனி நபர்களுக்கும் எதிரான சுயநல முயற்சிகளை ஆதரிக்கும் தவறையும் நாம் செய்ய நேரிடும்.            (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html)

கருத்து கறுப்பு வெள்ளை நோயில் சிக்கியவர்கள் எல்லாம், பிறரை தமது நிலைப்பாட்டிற்கு ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? என்று இரட்டை இலக்க அணுகுமுறையில் அணுகுவார்கள். அந்த உரையாடலிலும் தமக்கு வெற்றியா? தோல்வியா? என்ற இரட்டை இலக்க அணுகுமுறையில் அணுகுவார்கள்.

3. நாம் சரியென்று ஏற்றுக்கொண்டவைகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் தேடி, அதன் வெளிச்சத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த மறுபரிசீலனையின் மூலமே, உரிய திருத்தங்களுடன் சரியான திசையில் நாம் பயணிக்க முடியும்.

பார்ப்பனர் நலன்' என்ற கருத்தில், ஆயிரக்கணக்கான வருடங்களாக கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களில் பெரும்பான்மையினரைக் கல்வி கற்க விடாமல் செய்தவர்கள் 'பார்ப்பனர்கள்', என்ற பெரியாரின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தவன் நான், இசை ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கிய பின்னும்.

எனது இசை ஆராய்ச்சி தொடர்பாகதொல்பொருள் துறையில் (Archeology Dept)  ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளருடன் (Epigraphist)  உரையாட வாய்ப்பு கிடைத்த போதுமேலே குறிப்பிட்ட எனது நிலைப்பாட்டை விளக்கினேன்.

அபத்தமான கேள்வி கேட்ட ஒரு ஆரம்பப் பள்ளி மாணவரை, ஒரு கல்லூரி பேராசிரியர் பார்ப்பது போல, என்னைப் பரிதாபமாகப் பார்த்து, "சார், அது தி. காரங்க சொல்றது. கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்பொருள் சான்றுகளின் படி, வெள்ளைக்காரர் வருவதற்கு முன், இங்கு அதிகம் படித்தவர்களாக இருந்தவர்கள் 'கம்மாளர்கள்' என்று விளக்கினார்.

கல்லூரியில் பேராசிரியராக, தமிழ்நாட்டில் அந்த காலக்கட்டத்தில் மார்க்சிய - லெனினிய புலமையாளர்களுடன் விவாதப் போர் நடத்தி, அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட எனக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமானது. ஒரு ஆரம்பப் பள்ளி மாணவரை, ஒரு கல்லூரி பேராசிரியர் பார்ப்பது போல, என்னைப் பரிதாபமாகப் பார்த்தது பற்றி நான் கவலைப்படவில்லை. அதுவரை நான் கேள்விப்பட்டிராத புதிய, எனது நிலைப்பாட்டிற்கு எதிரானதகவல் என்னை வியப்பில் ஆழ்த்தி, அது தொடர்பாக மேலும் ஆராயும் எண்ணத்தினைத் தூண்டியது. அந்த முயற்சிகளின் விளைவே பின் வரும் பதிவு ஆகும்.

தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; 

இன்று நோவாம் சோம்ஸ்கி (அமெரிக்கா), ஸ்டீவன் பிரவுன் (கனடா), ரிச்சர்ட் வெட்டஸ் (லண்டன்), ஜான் சார்ப்லி (சிங்கப்பூர்), என்.ராமநாதன் (சென்னை) உள்ளிட்ட இன்னும் பல உலக அளவிலான புலமையாளர்களால் பாராட்டப்பெற்ற ஆய்வுகளுடன், நான் பயணித்து வருகிறேன். (http://drvee.in/). இன்றும் எனது 'இசைத்தகவல் தொழில் நுட்பம்' (Music Information Technology) வகுப்பில் இருந்த (சாஸ்திரா பல்கலைக்கழகம், திருச்சி என்..டி) மாணவர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும், எனது கருத்துக்கு எதிரான கருத்துக்களை உரிய ஆதாரங்களுடன், எந்த பயமுமின்றி, உற்சாகமாக முன்வைப்பதை நான் ஊக்கப்படுத்தி வருகிறேன்.  

நம் மூலம் வெளிப்படும் கண்டுபிடிப்புகளுக்கு நாம் ஒரு ஊடகமே (Medium). அவற்றில் சில அடுத்து வரும் ஆராய்ச்சியில் தவறு என்று கண்டுபிடிக்கப்படுவதானது ஆராய்ச்சியில் வளர்ச்சியே. அது நமது மாணவர்கள் மூலம் நடந்தால் மகிழ்ச்சியே.  

4.    நாம் எதற்காக வாழ்கிறோம்?

உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அறிவுலகில் கோமாளியாக வெளிப்படும் வாய்ப்புள்ளது பற்றிய அறியாமையில், நாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகள் தான் சரியானவை; என்று மூடிய மனதுடன் (Closed mind) வாழ்கிறோமா?

நாம் தனி னிதரல்ல. சமூகத்துடனும் இயற்கையினுடனும் பின்னிப்பிணைந்தே நமது வாழ்க்கைப் பயணிக்க முடியும். நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, ஊரான் வீட்டுப்பிள்ளைகளைக் காவு கொடுத்து, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துகளுக்கும் கேடு விளைவிக்கும் போராட்டங்களை ஊக்குவித்து வாழ்வதானது, சமூகத்திற்குக் கேடான வாழ்க்கையாகாதா? இயற்கைப் பாதுகாவலராக நம்மை முன்னிறுத்திக் கொண்டு, இயற்கையின் சீரழிவிற்குக் காரணமாகும் மேல்த்தட்டு வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதானது, இயற்கைக்குக் கேடான வாழ்க்கையாகாதா?

பிறரின் அங்கீகாரத்திற்காக தீராத ஏக்கத்துடன் வாழ்கிறோமா? அதிலிருந்து வேறுபட்டு, சாகும் வரை கற்றலுக்கான உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வாழ்கிறோமா?

நாம் எதற்காக வாழ்கிறோம்? என்பதை, நமது செயல்பாடுகளைத் தூண்டி வரும் நமது தேவைகள் மற்றும் ஈடுபாடுகள் மூலமே அடையாளம் காண முடியும்.


'தமிழ்நாடு எக்கேடு கெட்டால் என்ன? நாமும், நமது குடும்பமும் புத்திசாலித்தனமாகப் பிழைத்து மேற்கத்திய நாடுகளில் செட்டில் ஆவோம்'' என்ற திசையில் பயணித்தவர்களின் புத்திசாலித்தனம் எல்லாம், கொரோனா மூலமாக‌  கேள்விக்குறியாகி வருகிறது.


கிடைக்கும் தூரத்தில் இருக்கும் 'பாதுகாப்பு மண்டிலத்தில்' (Comfort Zone) அடைக்கலமாக வாய்ப்புகள் இருந்தாலும்; நமது சொகுசு தேவைகளுக்கும் (Needs), ஈடுபாடுகளுக்கும் (Interests) நாம் அடிமையாகி, நமது 'சுதந்திரத்தினை' பலகீனமாக்கும் நோயில் சிக்காமல் பயணிப்பவர்களே, சமூகத்திற்கும் இயற்கைக்கும் இயைந்த வாழ்க்கையில் வாழ முடியும். அவ்வாறு நாம் வாழும்போது, நாம் விரும்புவது அண்டத்தின் உதவியுடன் சாத்தியமாகும். (‘அகத்தின் மையம் புறத்தின் மையத்திற்கு அடிமையாகலாமா?’; 


‘We warriors of light must be prepared to have patience in difficult times and to know the Universe is conspiring in our favor, even though we may not understand how.’; ‘When you want something, all the universe conspires in helping you to achieve it.’ - Paulo Coelho



5.    'குறிப்பிட வரம்பிலிருந்து திறந்த மனநிலைக்கு மாறுவது' என்பதானது, மேற்குறிப்பிட்ட நான்கிலும், நாம் பெறும் வெற்றியைப் பொறுத்ததாகும்.

நமது பழக்கங்களே நம்மை உருவாக்குகின்றன. நமக்கு இன்றுள்ள மனநிலை என்பதானது நீண்ட கால பழக்கங்கள் மூலமாக உருவானதாகும்அந்த மனநிலையைப் புதுப்பிப்பது என்பதானது, ஏற்கனவே உள்ள சிந்தனை முறையை மாற்றி புதியதாக ஒன்றை நாம் பெறுவதாக அமையும். (We are creatures of habit. Our mindsets take a long time to develop. Upgrading them requires replacing a pattern with a new one.)

உலகைப் பார்க்கும் போது, நமக்கு வேண்டியவைகளை மட்டும் அனுமதிக்கும் 'லென்ஸ்' (lens) போன்றதே நமது மனநிலை ஆகும். அவ்வாறு பார்ப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை அகற்றி, விடுதலை பெற்ற திறந்த பார்வைக்கு வழிவகுக்கும் அளவுக்கு, நமது மனநிலையை நாம் புதுப்பிக்க வேண்டும்.( Your mindset is a lens that filters your reality. Upgrade your mindset by turning limiting beliefs into liberating ones.)

குறிப்பிட வரம்பிற்குள்ளேயே நமது மனநிலையானது பழகிப் போய், அந்த  மனச்சிறையில் நாம் ஒரு வகை போலியான பாதுகாப்பு உணர்வில் சிக்கி, நமது வாழ்க்கையானது வளர்ச்சியின்றி முடங்க நேரிடலாம்.

அதிலும் பொதுவாழ்க்கையில் பயணிக்கையில், மேற்சொன்னவாறு 'குறிப்பிட வரம்பிலிருந்து திறந்த மனநிலைக்கு நாம் மாறிய பின்னர், அவ்வாறு மாறாமல் பயணிப்பவர்கள் நம் மீது குற்றம் சுமத்திய அனுபவமும் எனக்கு உண்டு.

"அப்போது (நான் 'பெரியார்' கொள்கையாளராக இருந்த காலத்தில்) அவர் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா? அந்த நோய்க்கான மருந்தை எப்போது கண்டு பிடித்தார்? அவரோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மருந்தைக் கொடுக்காமல் தான் மட்டும் மருந்தை உட்கொண்டு சரியானார்? இந்தக் கேள்விகள் உடன் செயலாற்றிய எங்களுக்கு ஏற்படுவது நியாயமா? இல்லையா?”

என்று என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் தொடர்பாக;

நியாயமான கேள்விகள். ஆமாம். நான் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை, எனது இசை ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து, என்னால் முடிந்தவரை, 2005லிருந்து, என்னை (தஞ்சை இரத்தினகிரி, மனோகரன் உள்ளிட்டு) சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்களிடம் விளக்கி வருகிறேன்; பதிவுகள் வெளியிட்டு வருகிறேன்.’

நாம் சந்திக்கும் மான, அவமானங்களைப் பற்றிய கவலையின்றி, பாராட்டு புகழ் போன்ற ஏக்கமின்றி, சாகும் வரை கற்றலுக்கான உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் (passion for learning);

மைக்ரோஉலகத்தில் என்னைப் போல வாழ்வது எளிது. அதே போக்கில், மேக்ரோஉலகத்திலும் வாழ முடியும் என்பதை கடந்த காலத்தில் நிரூபித்தவர் .வெ.ரா. நமக்கு வேண்டியவைகளை மட்டும் அனுமதிக்கும் 'லென்ஸ்' (lens) போன்ற வகையை பின்பற்றாமல், தமது நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களையும் சென்சாரின்றி, தமது 'குடிஅரசு' இதழ்களில், 1925 முதல் 1944 வரை வெளியிட்டவர் .வெ.ரா. 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கியதானது, 1967க்குப்பின் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கி முனிவாராகலாமா? என்று யோசிக்கும் அளவுக்கு அவருக்கே கேடாகவும், தமிழ்நாடானது ஊழல் கொள்ளையர்களிடம் சிக்கி சீரழியவும் வழி வகுத்தது.

அதே 1944க்கு முந்தைய குடிஅரசு இதழ் போக்கில், நிகழ்காலத்தில் பயணித்தவர் துக்ளக் சோ. விடுதலைப் புலிகளை துவக்கம் முதலே சமரசம் இன்றி எதிர்த்து வந்துள்ள இதழ் துக்ளக் ஆகும். விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்து பழ.கருப்பையா எழுதிய கட்டுரை எந்த சென்சாருமின்றி அப்படியே துக்ளக் இதழில் வெளிவந்தது.

துக்ளக் விழா மேடையில், சோ முன்னிலையில், கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா தமது விமர்சனத்தை முன்வைத்தபோது, அரங்கில் எதிர்ப்பு கூச்சல் எழுந்தது. உடனே மைக்கில் சோ அதனைக் கண்டித்து, அமைதி நிலவிய பின், டி.ராஜா தமது விமர்சனத்தை தொடர்ந்தார்.

அந்த நிகழ்ச்சியானது கீழ்வருவதை எனக்கு நினைவூட்டியது.

அது போலவே, ஒருமுறை திருச்சியில் .வெ.ரா முன்னிலையில் ஜெயகாந்தன் .வெ.ராவின் நிலைப்பாடுகளை விமர்சித்தார். அரங்கில் எதிர்ப்பு கூச்சல் எழுந்தது  உடனே .வெ.ரா அவர்கள் கூட்டத்தை அடக்கி அமைதியை ஏற்படுத்தினார். அதன்பின் ஜெயகாந்தன் தமது விமர்சனத்தைத் தொடர்ந்தார்.

'துக்ளக்' இதழைக் கண்டித்து 'விடுதலை' இதழில் வெளிவந்த கட்டுரை தொடர்பானஇணையதளத்தை (ஆர்வமுள்ள துக்ளக் வாசகர்கள் படிக்கும் வகையில்) துக்ளக்கில் வெளியிட்டு, அந்த கட்டுரைக்கான மறுப்பையும் துக்ளக் இதழில் வெளியிட்டார், அதன் இன்றைய ஆசிரியர் குருமூர்த்தி. அதனை எனது பதிவுகளிலும் நான் வெளியிட்டுள்ளேன்.

மோடி பிரதமரான பின் வெளிப்பட்ட நல்லவைகளை ஆதரித்து, 'பெரியார்' ஆதரவாளர் ஒருவர் கீழ்வரும் கருத்தினை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

பிஜேபியின் பயோமெட்ட்ரிக் அட்டடென்ஸ் சிஸ்டம் டெல்லி அரசு அலுவலர்களை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர வைத்திருக்கிறது.

என்னுடைய (எனதுநாட்டின்) சாதனை, என்னுடைய குறை இதில் நான் எதில் மிகுந்த நேரம் செலவிடவேண்டுமென்றால், என்னைப் பொறுத்தவரை எனது குறைகளை நிவர்த்தி செய்வதில் தான். குறைகளின் மீது வலிமையான எதிர்மறை பின்னூட்டந்தேவை.

பாஜக அரசிடமிருந்து இப்படியொரு நல்லது வந்து விட்டதே, எப்படி வரலாம். இப்படி வந்தால் அது வளர்ந்து விடுமே என்ற எண்ணங்கள் சற்று தாழ்வானவை!!!

பாஜகவிடமிருந்து இது போன்ற பலவை வரவேண்டும்.

எல்லா கட்சிகளும் உயர் சிந்தனைகளால் நிறையவேண்டும் என்ற மனநிலை வரும் போது இவைகளெல்லாம் தானாக மறைந்துவிடும்.”

தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்திற்கான அலை உருவாக வேண்டுமானால், அதற்கு பங்களிக்க விரும்பும் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறையும் அதுவேயாகும்

"இப்போதுள்ள 60 ஆண்டுப் பெயர்கள். இந்த 60 பெயர்களும் சமஸ்கிருத மொழியில் அமைந்தவை அல்ல என்றும், அவை பாலி மொழிச்சொற்கள் என்றும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே விளக்கியவர் பண்டித அயோத்திதாசர் ஆவார்.

நானும்கூட ஆசீவகம் பற்றி ஆராயாமல், அயோத்திதாசரைப் படிக்காமல் இருந்திருந்தால், ‘தை மாதமே தமிழ்ப்புத்தாண்டுஎன்றே நம்பியிருப்பேன்." -‘தமிழ் அறிவியல் மரபுப்படி சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு.’- பேராசிரியர் முனைவர் .நெடுஞ்செழியன்; 

என்ற கருத்தின் மூலமாக, ஒரு மனிதர் தாம் சாகும் வரை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் கற்றலின் முக்கியத்துவத்தினை,  .நெடுஞ்செழியன் வெளிப்படுத்தியுள்ளார்: தமது நிலைப்பாட்டிற்கு வெளிப்படும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல். 
 
இன்று தமிழ்நாடு திருப்பு முனையில் உள்ளது.

கொரோனா நோய்க்கிருமியானது மனித உடலில் ஒட்டி, ஆற்றலை உறிஞ்சி, தமது இனத்தைப் பெருக்கி உடலை அழிக்கும். அதற்கு வழியின்றி திறந்த வெளியில் இருக்கும் கொரோனா நோய்க்கிருமியானது, சில நாட்களுக்குள், அதிக வெப்ப நிலையில் சில மணி நேரங்களில் அழிந்துவிடும்.

பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக செயல்நுட்பத்தினையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடக்கி விட்டன. பல நிபுணர்களின் கருத்துப்படி, உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஒரு வருடத்திற்கும் மேலாகலாம். அது இன்னும் அதிகமாக நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சமூகக் கொரோனா நோய்க்கிருமிகளான பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூகசெயல்நுட்பத்தின் முடக்கம் காரணமாக, அவர்களின் ஆட்டங்கள் அடங்குவதும் நிச்சயமாகி வருகிறது.

எனவே இறுக்கமான மனநிலையில் (Fixed Mindset) இருந்து வளர்ச்சி மனநிலைக்கு (growth mindset) மாறுவதை ஊக்குவிக்கும் சமூகசூழலும் கனிந்து வருகிறது. அதில் முந்திக்கொண்டு உரிய மாற்றங்களுடன் பயணிப்பவர்கள் எல்லாம், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தலைகளாவார்கள். தாமதிப்பவர்களும் அந்த மீட்சிக்கான வால்களாகப் பயணிக்க வேண்டிய நெருக்கடிகளும் கூடி வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று ஓய்ந்த பின்னர் வெளிப்படும் தமிழ்நாடு, நிச்சயமாக ஆக்கபூர்வ திசையில் பயணிக்கும் புதிய தமிழ்நாடாக வெளிப்படும்.

No comments:

Post a Comment