Wednesday, April 8, 2020


 தமிழ்நாட்டில் குருட்டுப் பகுத்தறிவு முடிவுக்கு வருகிறது


 இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு இனி நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது                


ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச் மாதம் 18 ஆம் தேதிவரை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தன. அந்தக் கூட்டங்களில் இருநூறு முதல் இரண்டாயிரம் பேர்வரை கலந்து கொண்டார்கள். 19, 20 ஆம் தேதி கூட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றம் சென்று வந்தோம். அன்று அந்த எச்சரிக்கைகளை உண்மை என்று நம்பாதவர்களே அதிகம். ஆனால் ஒரே ஒரு நிகழ்வில் டெல்லியில் கூடியவர்களை, அவர்களின் இஸ்லாமிய அடையாளத்தினை மட்டும் முன்னிறுத்தி பரப்பப்படும் அவதூறுகள் மதவெறி நஞ்சேறிய சங்கிகளின் தீவிர செயல்பாட்டை காட்டுகிறது.’

-  -  'பெரியார்' பற்றாளர் ஒருவரின் கருத்து 

டெல்லி மாநில அரசு தடை அமுலில் இருந்த காலத்தில் அந்த தடையை மீறி நடந்த நிகழ்ச்சியை;( https://www.firstpost.com/india/tablighi-jamaat-congregation-was-held-despite-ban-on-events-with-more-than-50-participants-8212021.html)

மற்ற அது போன்ற தடையில்லாத மாநில நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுவது சரியா? இது போன்ற அபத்தமான வாதங்களை முன்வைப்பது தான் குருட்டுப் பகுத்தறிவு ஆகும்.

சில 'பெரியார்' பற்றாளர்கள் 'குருட்டுப் பகுத்தறிவின்' இலக்கணமாக எவ்வாறு வலம் வருகிறார்கள்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தம்மை அறிவுபூர்வமாக 'இடிப்பாரை' வரவேற்று பயணித்த .வே.ரா அவர்களின் தமிழ் தொடர்பான கருத்துக்களை, 'குருட்டுப்பகுத்தறிவாளரின்' கருத்துக்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால் எனது ஆய்வுகள் மூலமாக, மேலே குறிப்பிட்ட கருத்து எவ்வாறு தவறானது? என்பது வெளிவந்த பின்பும், அவற்றை ஏற்றுக் கொள்ளாமலும், அறிவுபூர்வமாக மறுக்காமலும் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், 'குருட்டுப் பகுத்தறிவாளர்களாக' வரலாற்றில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா
(‘'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்’;

.வெ.ராவின் 'தாய்ப்பால் பைத்தியம்' நூலில் வெளிப்பட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' கருத்துக்களை நியாயப்படுத்தி சில 'பெரியார்' பற்றாளர்கள் 'குருட்டுப் பகுத்தறிவின்' இலக்கணமாக வலம் வருகிறார்கள். அவர்களை மறுக்காமலே, தமிழ் தொடர்பாக .வெ.ரா வெளிப்படுத்திய சிலவற்றை முன் வைத்து, .வெ.ராவை தமிழ் ஆதரவாளராக சித்தரிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களும் வலம் வருகிறார்கள்

நானறிந்த வரையில் .வெ.ரா அவர்கள் தாம் சாகும் வரையில் 'பொது சிவில் சட்டம்' கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். இன்று தி. பொது சிவில் சட்டத்தினை எதிர்க்கிறது. .வெ.ரா அவர்கள் மறைந்த பின்புஎப்போது யாரால் எதற்காக அந்த கோரிக்கையானது .வெ.ராவின் நிலைப்பாட்டிற்கு எதிராக மாற்றப்பட்டது? என்பதை தி. இது வரையில் விளக்கம் தந்ததாகத் தெரியவில்லைதெரிந்தவர்கள் தெரிவித்தால், நன்றி தெரிவித்து, அந்த தகவலை நான் ஆராய இயலும். இல்லையென்றால், அதுவும் குருட்டுப்பகுத்தறிவின் விளைவுகளில் ஒன்றாகஇடம் பெறும்.

'மொழி', 'இனம்', 'சாதி', உள்ளிட்டு தாம் முன்வைக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளையெல்லாம் கண்டு கொள்ளாமல், உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் குருட்டு பகுத்தறிவாளர்கள், உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் வாழ்கிறார்களா? என்ற ஆய்வினை தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.’ 

பரமபதம் என்ற ஸ்நேக் அண்டு லேடர்ஸ்

காலனியத்திற்கு முன் ஆடப்பட்ட அந்த விளையாட்டின் படமானது, அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்டபரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

கீழ்ப்படியாமை, அகந்தை, ஈனம், களவு/திருட்டுபொய்/புரட்டு, மதுபானம் அருந்துதல், கடன், கொலை, கோபம்/வெஞ்சினம்/வஞ்சம்கர்வம், பெருமை, காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன.

தமிழில் 'இனம்', 'சாதி' போன்ற சொற்களின் பொருள் திரிந்து, 1944இல் 'திராவிடர் கழகம்' மூலம், 'குருட்டு பகுத்தறிவு' வளர்ந்த வேகத்தில், 'பாவம், புண்ணியம்' எல்லாம் மூடநம்பிக்கைகளாக பிரச்சாரம் செய்யப்பட்டு, அதன் விளைவாக பரம பதம் விளையாட்டிலும், அந்த சமூக அம்சங்கள் நீக்கப்பட்டனவா? என்பதையும், திரிந்துள்ள இன்றைய பரம பதம் விளையாட்டோடு ஒப்பிட்டு, ஆராய எண்ணியுள்ளேன்.          

வாழ்க்கை பரமபதத்தில் ஒரு மனிதரின் வாழ்வில் முக்கிய கட்டங்களில் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் தென்படும். அதில் அவர் தேர்ந்தெடுக்கும் வழியில் பயணித்து, அதனால் வரும் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்தாக வேண்டும். அந்த ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் சரியான வழியை தேர்தெடுக்க மேற்கத்தியப் பகுத்தறிவானது, அதன் 'வரைஎல்லைகள்' (limitations) காரணமாகதுணை புரியாது.

தமிழ்நாட்டில் சமூக சடங்குகள் எல்லாம் காலனியத்தின் அறிமுகத்திற்கு முன், எவ்வாறு இருந்தன?

காலனியம் தமது 'சுயநலன்களுக்காக' அறிமுகப்படுத்திய 'புதிய சாதி அமைப்பும்

சமூக ஒப்பீடு நோயும் (Social Comparison Infection), அதன் மூலம் வளர்ந்த  சமூக உயர்வு ஏற்ற தாழ்வுகளும்;

என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன? 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில், அவை எல்லாம் இன்னும் மோசமாக, எப்படி சீரழிந்தன?

என்ற ஆய்வுகளை எல்லாம், 'மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு' என்ற 'குருட்டு பகுத்தறிவு பார்வையில்', இருட்டில் வைத்திருந்த போக்குகளும் முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், சிந்தனையாளர்களும், தமது நாடுகளில் உள்ள பொருளதாரச் சிக்கல்களுக்கும், கொலை, தற்கொலை, போதைப் பழக்கம், வன்முறை உள்ளிட்ட சமூகச் சிக்கல்களுக்கும் தீர்வுகளுக்கான சாவிகளை (Keys) இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள பாரம்பரியப் பண்பாடுகளில் தேடத் தொடங்கியுள்ளனர். 'அந்த' தேடலில்சமஸ்கிருத இலக்கியங்களைப் போல, பழந்தமிழ் இலக்கியங்கள் உலகின் கவனத்தை இன்று வரை ஈர்த்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியங்களை தமிழர்களே வெறுக்கும் அளவுக்கு, 'குருட்டுப் பகுத்தறிவு' செல்வாக்கு பெற்றதே, அதற்குக் காரணமாக இருந்தது, என்பது எனது ஆய்வு முடிவாகும்
(http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_5.html)

தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமியை 'தமிழ் விரோதி'யாக கண்டிப்பதும், முன்னாள் முதல்வர் கருணாநிதியை 'தமிழ்க் காவலராக' பாராட்டுவதும் குருட்டுப் பகுத்தறிவு ஆகாதா?

ஸ்டெர்லைட் போன்ற எதிர்ப்புகளுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து எதிர்க்கும் போக்கு தொடர்ந்தால், புதிய திட்டங்கள் வராமலும்; அதிக வேலைவாய்ப்புகளுடன் செயல்படும் தொழில்களும், தமிழ்நாட்டை விட்டு, வெளியேறும் அபாயமும் இருக்கிறது. அது போன்ற எதிர்ப்புகள் இருந்திருந்தால், திருச்சி பெல், துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை, போன்ற பல தொழிற்சாலைகள்/திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்குமா?

ஸ்டெர்லைட் படுகொலையில், ‘ஆச்சாரப் பார்ப்பான், லௌகீகப் பார்ப்பான்' காண்பது குருட்டுப் பகுத்தறிவாகாதா? ஊழல் வழிகளில் அரசு அதிகாரிகளானவர்கள் எல்லாம், அதே 'ஊழல் வழியில்' கிடைக்கும் 'எலும்புத்துண்டுகளுக்காக', அரசுக்கும், பொதுநலனுக்கும் 'கேடாகவும் பணியாற்றும்'(?) ஆபத்திலும் தமிழ்நாடு சிக்கியுள்ளதை பாதுகாக்கும் 'சமூக திருடர்கள் கவசமாக', 'குருட்டுப் பகுத்தறிவு' பயன்படலாமா? 'குருட்டுப் பகுத்தறிவு' போக்கிலிருந்து, தமிழ்நாடு 'விடுதலை' பெறாத வரையிலும், ‘என்கவுண்டரில்சுட்டுக் கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணி' மூலம் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) காணும் வாய்ப்பு தொடராதா?
(http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_24.html)

ஒரு சமூகத்தில் பொது ஒழுக்க நெறிகள் எல்லாம் மோசமாக சீர் குலைந்த பின்னர் தான், அந்த சமூகத்தில் புலமையாளர்களை எல்லாம் அச்சுறுத்தும் 'அறிவு ரவுடித்தன போக்கு' வெளிப்படும்.

'தமிழ்நாட்டில், கட்சித்தலைவர்களின் நூல்களை அறிவுபூர்வமாக கூட விமர்சிக்கமுடியாத 'அறிவு ரவுடித்தன போக்கு' இருப்பதற்கு சான்றாகவே, 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்நூலாசிரியரின் வாழ்வானது, வரலாற்று சான்றாகி விட்டது.' 


என்ற பின்னணியில்;


முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த கீழ்வரும் சம்பவமானது, முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நடந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்? என்று மனசாட்சியுடன் வாழ்பவர்கள் எல்லாம் யூகிக்கலாம்.

மதுரையில் 1981-இல் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில், 'திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழிசை எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது?' என்று வீ.பா.கா. சுந்தரம் உரையாற்றினார். உடனே எம்.ஜி.ஆர் மேடையில் ஏறி, 'நான் இப்போது முதல்வர். தமிழிசை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள்; செய்கிறேன்" என்று அறிவித்து; பின் வீ.பா.கா சுந்தரத்தை அணைத்து, அவரின் காதருகே, ", ரி, , , , , நி, தமிழா?" என்று எம்.ஜி.ஆர் கேட்க, உடனே வீ.பா.கா.சுந்தரம் "ஆமாம் ஐயா. வாய்ப்பு தந்தால் நேரில் விளக்குகிறேன்' என்று சொன்னார். அதன்பின் சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி, சில காலம் கழித்து மறைந்தார்.

வீ.பா.கா சுந்தரம் என்னிடம் மேற்குறிப்பிட்ட தகவலை சொன்னார். ...தி.மு. அவைத் தலைவராக இருந்த காலத்தில், புலமைப்பித்தனும் அதை என்னிடம் உறுதிப்படுத்தினார்.

2001 காலக்கட்டத்தில் அமைச்சர் பொன்னையனையும் வீ.பா.கா. சுந்தரத்தையும் சந்திக்க வைத்து, அதன் மூலம் மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆரின் 'தமிழிசை மீட்பு' வாக்குறுதியை, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு செல்ல, புலமைப்பித்தன் முயற்சித்தார். ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. ஏன் நடைபெறவில்லை? என்ற ஆராய்ச்சியானது, ஜெயலலிதாவின் மர்மமான மரணம் நடந்ததற்கு காரணமான சமூக செயல்நுட்பத்துடன் தொடர்புடையதாக, வருங்காலத்தில் வெளிப்பட்டால் வியப்பில்லை.

தமிழ்ப் பொது வியாபாரிகளின் வாடையின்றி பயணித்தாலேயே ''தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' மற்றும் சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய 'MUXEL', போன்ற கண்டுபிடிப்புகள் என் மூலமாக வெளிப்பட்டு வருகின்றன. அந்த வியாபாரிகளின் செல்வாக்கு ஒழியும் வரை, மேற்குறிப்பிட்ட தாமதப் போக்குகளையும் தவிர்க்க முடியாது
(https://tamilsdirection.blogspot.com/2020/03/musical-linguistics-muxel-physics-of.html)

கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, பொதுவாழ்விலும் பங்களித்த எனது ஆய்வுகளுக்கு நேர்ந்தகதி, இளம் தமிழ்ப்புலமையாளர்களுக்கு இனி ஏற்படாது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்தது மட்டும் அதற்கு காரணமல்ல;

தமிழை வைத்து இனி அரசியல் வியாபாரம் செய்தால் எடுபடாது; என்பதை திராவிட அரசியல் கட்சிகள் உணர்ந்து விட்டார்கள். எனவே 'அந்த' அரசியல் வியாபார விற்பன்னர்களாக இருந்த எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், புரவலர்களை இழந்த அனாதைகளாக அல்லற்படும் படலமும் தொடங்கி விட்டது.

என்னைப் போன்றே தமிழ்ப்புலமையை மீட்கும் முயற்சிகளும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

தமிழ் லெக்சிகன் உள்ளிட்ட தொகுப்புகளில் நான் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை எல்லாம் தொடக்கமாக கருதி, துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் இளம் ஆராய்ச்சியாளர்கள் முன்னேறலாம்.

அது மட்டுமல்ல, 'அந்த' இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம், தொழில்நுட்ப புலமையாளர்களுடன் குழுவாக இணைந்து, சந்தைப்படுத்தக் கூடிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் காலம் நெருங்கி வருவதை, கீழ்வரும் காணொளியிலும் விளக்கியுள்ளேன்.


.வெ.ரா காலம் முதல் செல்டன் பொல்லாக் காலம் வரையில் நீடித்த‌, தமிழ்ப்புலமையின் பலகீனமான  அறிவு வலிமையானது, முடிவுக்கு வரும் படலம் தொடங்கி விட்டது.இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு இனி நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது

No comments:

Post a Comment