Friday, April 24, 2020


பலவகை திருட்டுத்தமிழர்களைப் பாதுகாக்கும் சமூகப்புழுதிகள்?


சரியான சமூகக் கண்களை, சமூகப் புழுதிகளில் இருந்து எவ்வாறு காப்பாற்றலாம்?



உடலில் உள்ள கோளாறுகளைக் கண்டுபிடிக்கும் 'எக்ஸ்-ரே' (X-ray) கருவி போல,

தமிழ்நாட்டில் உள்ள சமூகக்குறைபாடுகளைக் கண்டுபிடிக்க 'சமூக எக்ஸ்-ரே' (Social X-ray) கண்ணோட்டமானது, திருக்குறள் (573) வழியில் செயல்படுவது நல்ல பலனைத் தரும்.

'பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம்
 கண்ணோட்டம் இல்லாத கண்'

'பண் என்னாம் பாடற்கு இயைபு' என்பது விளங்க வேண்டுமானால், பண்ணில் இடம் பெறும் எழுத்தின் ஒலிக்கும், பாடல் பற்றியஇசைக்கும், இடையில் உள்ள தொடர்பு முக்கியமாகும். அந்த தொடர்பினை விளங்கிக் கொள்ள, 'இசையின் இயற்பியல்' (Physics of Music) பற்றிய அடிப்படை அறிவு வேண்டும்.

அந்த அடிப்படை அறிவின் துணையுடனேயே, நான் 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' இருப்பதைக் கண்டுபிடித்து, ‘Musical Phonetics in Tolkappiam’ ஆய்வுக்கட்டுரையினை (2013 டிசம்பர்) உலகத்தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு இதழில் வெளியிட்டேன்

தமிழ்நாட்டில் சமூக நோயாக அரங்கேறிய கவர்ச்சிகர பேச்சும் எழுத்தும் மேற்குறிப்பிட்ட அடிப்படை அறிவினைப் பெறுவதில் ஆர்வமற்ற வெறுப்பு அரசியலுக்கு எவ்வாறு வழி வகுத்தது? என்பதையும் நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ் தொடர்பான கட்சிகளும் ஆர்வலர்களும் வெறுப்பு அரசியலில் சிக்கி பயணிக்கும்போது, தமிழ்நாட்டு பொது அரங்கில் சமூகப்புழுதிகள் வெளிப்பட்டு சமுகக் கண்ணோட்டத்தையே சீர் குலைக்கும் ஆபத்தும் வெளிப்படும்.

தெருவில் நடக்கும் போது, புழுதிக் காற்றில் சிக்கினால், முதலில் பாதிக்கப்படுவது கண்களே. உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி, தண்ணீரில் முகத்தையும் கண்களையும் நன்கு கழுவிய பின் தான், ஒழுங்காகப் பார்க்க முடியும். மேலேக் குறிப்பிட்ட புழுதிக் காற்று என்பது கண் பார்வையைப் பாதிக்கும், கண்களைக் கழுவாத வரையில்.

தெருவில் நடப்பது போல், சமூகத்தில் நாம் பயணிக்கும் போது நம்மைச் சுற்றி நடப்பவைகளைப் பார்க்கிறோம். காதில் கேட்பது, கண்கள் மூலம் பார்ப்பது, படிப்பது உள்ளிட்டு நமது புலன்கள் தரும் உள்ளிடுகளை(inputs) அடிப்படையாகக் கொண்டு, நமது அறிவு அனுபவத்தைக் கொண்டு பார்க்கின்ற பார்வை அதுவாகும். அவ்வாறு ஒழுங்காகப் பார்க்கத் தெரியாத கண்ணைப் பற்றியே கீழ்வரும் திருக்குறள் (573) குறிப்பிடுகிறது.

பாடற்கு ஒரு பண் இயைபு உள்ளதா, இல்லையா என்று வைரமுத்து போன்ற பாடலாசிரியர்களுக்கே தெரியுமா என்று கேள்வி எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது
(‘பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?’; 

கண் பார்வைக் குறைபாடுகளில் வண்ணங்களைப் பார்க்க முடியாத குறைபாடு 'வண்ணக் குருடு' (Colour Blindness) என்று அழைக்கப்படும். அதே போல் சமூகத்தில் எதையும் சரியாகப் பார்க்கத் தெரியாதக் குறைபாட்டை 'சமூகவண்ணக் குருடு' (Social Colour Blindness) என்று அழைக்கலாம்

அந்த நோக்கில் சமூகத்தில் உள்ளவற்றை சரியாகப் பார்க்கும் கண் உள்ளவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நாடாக உள்ளதா என்று கேள்வி எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. அந்த கேள்வி எழக் காரணமானவழிபாட்டுப் புழுதிப்  புயல்பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

கண்களை புழுதிகளில் இருந்து காப்பாற்றினால் தான், கண் பார்வையையும் காப்பாற்ற முடியும். அது போல வெறுப்பு அரசியலில் சிக்காமல், திருக்குறள் (573) வழியில் சரியான சமூகக் கண்களுடன் பயணிப்பவர்கள் எல்லாம், சமூகப் புழுதிகளில் இருந்து, தத்தம் சமூகக்கண்களைக் காப்பாற்ற வேண்டும்.

வெறுப்பு அரசியலில் கிளம்பும் சமூகப்புழுதிகளும், வெறுப்பு அரசியலைப் பரப்பும் சமூக நோய்க்கிருமிகளையும் கொண்டிருக்கும்.

வாழ்க்கையில் கடுமையான சோதனைகளை சந்திக்கும்போது, அவற்றை வெற்றிகரமாகக் கடந்து செல்ல உதவும் வளர்ச்சி மனநிலைக்கான, நமது மனநிலையின் மாற்றத்தை, எவ்வாறு வெறுப்பு அரசியல் கெடுக்கும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக செயல்நுட்பமானது 'வெறுப்பு அரசியல்' அடிப்படையில் செயல்படுவதாகும். 'கருத்து கறுப்பு வெள்ளை சமூக நோய்' என்பதானது வெறுப்பு அரசியலின் விளைவாகும்.

கருத்து கறுப்பு வெள்ளை நோயில் சிக்கியவர்கள் எல்லாம், பிறரை தமது நிலைப்பாட்டிற்கு ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? என்று இரட்டை இலக்க அணுகுமுறையில் அணுகுவார்கள். அந்த உரையாடலிலும் தமக்கு வெற்றியா? தோல்வியா? என்ற இரட்டை இலக்க அணுகுமுறையில் அணுகுவார்கள்.

நல்ல ஆரோக்கியமான மனித வாழ்வுக்கு, திறந்த காற்றோட்டமான இடத்தில் (Free Ventilation) வாழ்வது அவசியமாகும். அதே போல் நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு, தாம் வாழுமிடம், பணியாற்றுமிடம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமக்கான சமூக வெளியில் (social space), சமூக சுவாசத்திற்கான (social breathing) ‘திறந்த காற்றோட்டமும்' அவசியமாகும்.

சமூக சுவாசத்திற்கான (social breathing) 'திறந்த காற்றோட்டம்' இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  மது இயல்போடு ஒட்டியஉள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும், உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்

கருத்து கறுப்பு வெள்ளை நோயில் சிக்கி, பிறரை தமது நிலைப்பாட்டிற்கு ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? உரையாடலிலும் தமக்கு வெற்றியா? தோல்வியா? என்ற இரட்டை இலக்க அணுகுமுறையில் அணுகுபவர்களை எல்லாம்;

சமூக சுவாசத்திற்கான 'திறந்த காற்றோட்டம்' உள்ள சமூக வெளியில் அனுமதித்தால், என்ன ஆகும்?

அந்த உரையாடலின் ஊடேயே, கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளைப் போல, அவர்களின் நிலைப்பாட்டை நாம் ஆதரித்தால், தமிழ் இனப் போராளி' என்றும், எதிர்த்தால், 'தமிழ்த்துரோகி' என்றும் பட்டங்கள் வழங்கப்படும் சமூக அநாகரீகத்தையும் நாம் அனுபவித்தாக வேண்டும்.

நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியாத சமூக மூச்சுத் திணறலுக்கு அது வழி வகுக்கும்.

சமூக மூச்சுத்திணறல் மிகுந்த சமூக வெளியில், வெளிப்படும் பேச்சுக்களும், எழுத்துக்களும், பெரும்பாலும் ஆதாயத்திற்கு வாலாட்டும்/கண்டிக்கும் நபர்களிடமிருந்து வெளிப்படும்.

கவர்ச்சிகர கூலி, உயிரிழப்பு உள்ளிட்டு சந்திக்கும் ஆபத்துகளுக்கு ஏற்ற அளவுக்கு கவர்ச்சிகர இழப்பீடு மூலமாக, தமிழ்நாட்டில் செம்மரத்திருட்டுத்தமிழர்கள் எவ்வாறு உருவானார்கள்? கிராம மட்டத்தில் இருந்து மாநில மேல் மட்டம் வரை அரசியல் பின்பலமுள்ள ரவுடிகள், தரகர்கள், அரசில் உள்ள கறுப்பு ஆடுகள், சர்வதேச தரகர்கள் என்ற மிகப்பெரிய பிரமிப்பூட்டும் வலைப்பின்னலானது, எவ்வாறு செம்மரத்திருட்டுத்தமிழர்களைப் பயன்படுத்தி, அவரவர் பங்களிப்புக்கு ஏற்ற ஆதாயத்தை பெறுகிறார்கள்? என்பதைக் கீழ்வரும் கட்டுரை விளக்கியுள்ளது.


இது போன்ற வலைப்பின்னல்கள் மூலமாகவே, சிலைத்திருட்டுத்தமிழர்கள், கிரானைட் திருட்டுத்தமிழர்கள், தாதுமணல் திருட்டுத்தமிழர்கள் என்று பலவகைத் திருட்டுத்தமிழர்கள் தமிழ்நாட்டில் செல்வம் மற்றும் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட திருட்டுத்தமிழர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமலும், மக்களிடையே அம்பலமாகி அசிங்கப்படாமலும் அவர்களைக் காப்பாற்றும் நோக்கிலேயே;

'தமிழ், தமிழுணர்வு, சாதி, மத, மொழி, வட்டாரஉணர்வுகள் அடிப்படையில் சமூகப்புழுதிகள் கிளம்பி, தமிழ்நாட்டைச் சீரழித்து வருகின்றன. மேற்குறிப்பிட்ட பலவகை திருட்டுத்தமிழர்களை கண்டித்தோ, அந்த வலைப்பின்னலை எதிர்த்தோ செயல்படாத கட்சிகள் மூலமாகவே, சமூகப்புழுதிகள் அவ்வப்போது தமிழ்நாட்டில் கிளப்பப்படுகின்றன

‘'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன
(உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.” 

கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளநமது உடலுக்கான (Physical) சமூக பாதுகாப்பு (Social Protection Intervel) இடைவெளியை நாம் பின்பற்றியாக வேண்டும். அது போல, சமூகப்புழுதிகளைக் கிளப்பி வரும் வெறுப்பு அரசியல் என்னும் சமூகக்கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, கீழ்வரும் வழிமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.

வெறுப்பு அரசியலைப் பரப்பும் சமூக நோய்க்கிருமிகளில் இருந்து, எவ்வாறு நம்மைத் தற்காத்துக் கொள்வது?

இன்று அரசு அமுல்படுத்தியுள்ள கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக, சமூக நோய்க்கிருமிகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளைஎளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

கொரோனா தொற்று நோயில் இருந்து விடுபடும் வரையில், ஒவ்வொருவரும் அடுத்த நபரிடம் இருந்து குறைந்தது 3 அடி இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அந்த 3 அடி என்பதானது, அந்த மனிதரிடம் இருந்து கொரோனா நோய்க்கிருமியானது நம்மை தாக்காமல் பாதுகாக்க உதவும் இடைவெளியாகும். அது நமது உடலுக்கான (Physical) சமூக பாதுகாப்பு (Social Protection Interval) இடைவெளி ஆகும்.

நமது குடும்பம், நட்பு, மனதில் உள்ள ஈடுபாடுகள் (interests) தொடர்பான தேவைகளின் அடிப்படையில், நாம் சந்திக்கும் நபர்கள், செல்லும் கூட்டங்கள் போன்றவை எல்லாம் நமது சமூக சுவாசம் தொடர்புடைய சமூக வெளி ஆகும். வெறுப்பு அரசியலைப் பரப்பும் சமூக கொரோனா நோய்க்கிருமிகளான மனிதர்கள் மற்றும் அமைப்புகள் எல்லாம், நம்முடன் தொடர்பு கொள்ள இயலாத அளவுக்கு, அந்த சமூக வெளியில் தள்ளி வைக்கும் இடைவெளி தான், நமது சமூக சுவாசத்திற்கான பாதுகாப்பு சமூகஇடைவெளி ஆகும்.

சரியான சமூகக் கண்களுடன் பயணிப்பவர்கள் எல்லாம், சமூகப் புழுதிகளில் இருந்து, தத்தம் சமூகக்கண்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறையும் அதுவேயாகும்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான செயல்முறையில்

அனுமதிக்கக் கூடியவைகளை மட்டும் நிபந்தனைக்கு உட்பட்டு தேர்ந்தெடுத்து அனுமதிக்கும் வடிப்பான் (Conditional Filter) போன்றே, தொல்காப்பியம் வெளிப்படுத்திய‌ 'ஒரீஇ' செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியல் கட்சிகளின் வாடையில்லாமல் பயணிப்பவர்களே மிக அதிகமாகும். எனவே அத்தகையோர் எல்லாம் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தான், எனது சமூக சுவாசம் தொடர்புடைய சமூக வெளியை உருவாக்கி, நான் பாதுகாத்து வருகிறேன்.

.வெ.ராவின் 'தமிழ் வேர்க்கொல்லி நோயால் திரிந்த' தமிழ்நாட்டில், ‘கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நேர/ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க, 'நான் அனுமதித்துள்ள மனிதர்களைத் தவிர, என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ எவரும் பேச முடியாது. ஈமெயில் மூலமாக மட்டுமே எவரும் தொடர்பு கொள்ள முடியும்' என்ற வரையறை மூலமாகவே அதனைப் பாதுகாத்து வருகிறேன்
(http://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_21.html)

மேக்ரோஉலக பிரபலமாகும் வாய்ப்புகளை ஒதுக்கி, அந்த உலக நபர்கள் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத வடிப்பான்களுடன்

சாமான்யர்களின் மைக்ரோஉலகத்தில், சாமான்யர்கள் மட்டுமே எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில், சாமான்யர்களில் ஒருவராக வாழ்வதன் மூலமாக;

சமூக மூச்சுத்திணறலுக்கு இடமில்லாத, சமூக சுவாசத்திற்கான திறந்த காற்றோட்டம்  உள்ள சமூக வெளியில்  வாழ்வது எவ்வளவு சுகமானது? என்பதை அனுபவித்தால் மட்டுமே விளங்கும்.

பொது இடங்களில் தம்மை பிரபலமாக அடையாளம் காணாமல் சாமான்யராக அணுகியதால் ஏமாற்றத்திற்கும் சோகத்திற்கும் உள்ளான பிரபலங்களுக்கு எல்லாம், மேற்குறிப்பிட்ட சுகம் விளங்காது. 'மினிஸ்டர்' (minister) பதவியை இழந்த பின்னும், சாகும் வரை தம்மை தமது சமூக வட்டத்தில், 'மினிஸ்டர்' என்றே அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்பவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 'பிரபல சமூக மூச்சுத்திணறலை' ஒருவகை போதையாக அனுபவித்த பலரின் கடைசி காலமானது, அந்த முக்கியத்துவம் இழந்து சாமான்யராக வாழ முடியாத சோகத்தில் மரணத்தைத் தழுவிய கதையாகவே முடிந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம் பெற்று, அவர் மறைவிற்குப்பின், 'பெரியார்' கட்சிகளில் சேர்ந்த ஆனூர் ஜெகதீசனை நான் அறிவேன். உரையாடல், உடை, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட எதிலும் முன்னாள் அமைச்சர் என்ற முக்கியத்துவம் இன்றி அவர் எளிமையாக, விதி விலக்காக, வாழ்ந்ததையும் நான் அறிவேன்.

பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக செயல்நுட்பத்தினையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடக்கி விட்டன. பல நிபுணர்களின் கருத்துப்படி, உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஒரு வருடத்திற்கும் மேலாகலாம். அது இன்னும் அதிகமாக நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சமூகக் கொரோனா நோய்க்கிருமிகளான பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூகசெயல்நுட்பத்தின் முடக்கம் காரணமாக, அவர்களின் ஆட்டங்கள் அடங்குவதும் நிச்சயமாகி வருகிறது

தமிழ்நாட்டில்இனி ஆதாயத்திற்கு வாலாட்டும், காலை வாறும், முதுகில் குத்தும் தமிழர்களே 'திராவிட அரசியலின்' - அதே போக்கில் பயணிக்கும் தேசியக் கட்சிகளின் - ஆதரவாளர்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது; தன்மானமுள்ள தமிழர்கள் எல்லாம் அப்போக்கிலிருந்து வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டது.’

அவ்வாறு வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கு என்பதே, அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சமூக மூச்சுத்திணறலை (Social Suffocation) உணரத் தொடங்கியுள்ளதன் 'சிக்னல்' ஆகும்.

'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம், தலித், பொதுவுடமை, மனித உரிமை, பெண்ணுரிமை' உள்ளிட்டு இன்னும் பலமுகமூடிகளுடன் வாழும் பொதுவாழ்வு வியாபாரிகள் எவரும், மது சமூக வட்டத்தில் நுழைய முடியாத (ஒரீஇ) வடிப்பான்களுடன் வாழ்பவர்கள் எல்லாம், 'பேரினமாக' ஒன்று சேரும்ஒரீஇசமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் உள்மறையாக (Latent) வளர்ந்து வருகிறது

எனவே பலவகைத்திருட்டுத்தமிழர்களைப் பாதுகாத்து வரும் சமூகப்புழுதிகள் எல்லாம், சமூகக்கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாக, சமூக குப்பைத்தொட்டிக்கு போகும் காலம் நெருங்கி விட்டது.

No comments:

Post a Comment