Friday, March 13, 2020

தமிழ்நாடு குடும்பங்களின் ஆட்சியில் இருந்து விடுதலை ஆவது எப்போது?



மக்களின் எழுச்சி ரஜினியின் பார்வைக்கு எப்போது வரும்? (1)

 

.தி.மு. ஆட்சி முடிவுக்கு வந்த மறுநாளே ரஜினி கட்சி தொடங்குவார்!’ - தமிழருவி மணியன் ; https://www.vikatan.com/news/politics/157796-rajini-will-be-start-party-when-aiadmk-regime-end-says-tamilaruvi-manian
 
மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்குப் பின், கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்;

தமிழருவி மணியன் அறிவிப்பினை ஆராய்ந்தால்,   ரஜினியின் கட்சி கானல் நீரா?’; 

'என்ற பதிவில், கீழ்வரும் கணிப்பினையும் வெளியிட்டேன்.

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு முன், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்த போது, அந்த ஆலையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தி.மு.-வின் பங்களிப்பினை விளக்க முற்பட்டிருந்தால், அந்த போராட்டமானது, துப்பாக்கி சூட்டில் உயிர்கள் பலியாகும் அளவுக்கு, பெரிய போராட்டமாக வளர்ந்திருக்குமா?  அந்த பகுதியில் உள்ள தி.மு. வலைப்பின்னல் மூலமாக, துவக்கத்திலேயே, அந்த போராட்டமானது, சீர்குலைந்து பிசி பிசுத்திருக்குமா? 'அந்த' சூட்சமம் தெரியாமல், ரஜினியைக் கட்சி ஆரம்பிக்குமாறு தூண்டி வரும் தமிழருவி மணியன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையில், அந்த போராட்டத்திற்குப் பின் ரஜினி தூத்துக்குடிக்கு சென்று, மருத்துவமனையில் அரங்கேற்றப்பட்ட நாடகம் மூலமாக அவமதிக்கப்பட்டாரா? என்ற கேள்விகளை ஆராயாமல், ரஜினி தமது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய முடியுமா?

..,தி.மு. ஆட்சியை இழப்பதற்கு வாய்ப்பில்லை.

"தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய .தி.மு.. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்" என்று தமிழருவி மணியன் அறிவித்திருப்பதானது;

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது.

எனது கணிப்புக்கு மாறாக, ...தி.மு. தோற்று,  பிரமிக்கும் வகையில் தி.மு. வெற்றி பெற்றால், பின் தி.மு. ஆட்சியில் அமர்வது நிச்சயமாகி விடும். அதன்பின் தி.மு. ஆட்சியை எதிர்த்து, புதுக்கட்சி  தி.மு.கவின் நேரடி அல்லது மறைமுக ஒப்புதலின்றி தாக்குப்பிடிக்க  முடியாது. அதிலும் சசிகலா குடும்பக் கட்சியின் ஆதரவோடு, தி.மு. ஆட்சியைப் பிடித்தால்:

1996 தேர்தலுக்கு முன் ரஜினி எச்சரித்தபடி, 'கடவுள் நினைத்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது'. எனவே தமிழருவி மணியன் அறிவித்துள்ளது தான், ரஜினியின் நிலைப்பாடு என்றால், 'ரஜினியின் கட்சி கானல் நீராகவே முடியும்' என்பது எனது கணிப்பாகும்.’

வைகோதான் முதல்வராக வேண்டுமென்று நினைத்தேன், இதை ரஜினியிடமே கூறியிருக்கிறேன் என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார். (https://tamil.samayam.com/latest-news/state-news/tamilaruvi-manian-says-i-thought-vaiko-wanted-to-be-the-chief-minister/articleshow/74545195.cms)

சசிகலாவை 'வீரமங்கை வேலு நாச்சியார்' என்று பாராட்டிய வைகோவை, ரஜினி மூலமாக முதல்வராக்கி, மீண்டும் சசிகலா குடும்பத்தில் தமிழ்நாடு சிக்குவதற்காகவே தமிழருவி மணியன் பாடுபடுகிறாரா?  வைகோ பற்றிய அடியில் உள்ளகுறிப்பினைப் படித்தால், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினிக்கு எந்த அளவுக்கு அபாயகரமான ஆலோசகர்கள்? என்பது தெளிவாகும். துக்ளக் சோ மறைந்த பின் தான், இது போன்ற ஆலோசகர்கள் ரஜினிக்கு வாய்த்திருப்பார்கள், என்பது எனது யூகமாகும். வைகோவை விட பன்மடங்கு திறமைசாலியான முதல்வர் .பி.எஸ் என்பது எனது கருத்தாகும். 

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், முதல் முறையாக கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் பிடியில் இருந்து விலகிய ஆட்சியானது, தற்போது நடைபெற்று வருகிறது

சென்னையில் 12 மார்ச் 2020 அன்று ரஜினி அளித்த பேட்டியில் கீழ்வரும் பகுதிகள் இந்த விவாதத்திற்கு உரியவை ஆகும். (https://www.dinamalar.com/news_detail.asp?id=2500378)

"என் வருங்கால அரசியல் எப்படி இருக்கும்; நான் அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விளக்க, முண்னோட்டமாக, கட்சி ஆரம்பிக்கும் முன், இதை சொல்லி விட்டால், அவர்களுக்கும் தெளிவு வரும். எனக்கும் அந்த அதிர்வுகள், எப்படி இருக்கும் என, தெரியும்; உங்களை புரிந்து கொள்ளவும் உதவும். அதற்காக தான், இந்த சந்திப்பு............  

மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்; இப்போது இல்லை. அவருடைய வாரிசு என்பதை, நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம். வாழ்வா, சாவா என்ற நிலை. பணபலம், ஆள்பலம் கட்டமைப்பு என, உள்ளனர். எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் உள்ளனர். இன்னொரு பக்கம் கையில், ஆட்சியோடும், அந்த குபேரனோடும் கஜானாவையே கையில் வைத்துள்ளனர். நிறைய கட்டமைப்போடு காத்திருக்கின்றனர். இதற்கு நடுவில், ரசிகர்களையும், சினிமா புகழை மட்டும் வைத்து ஜெயிக்க முடியுமா? இந்த கொள்கைகளை சொன்னால், அது எடுபடவில்லை என்றால், உங்களை எல்லாம், நான் பலிகடா ஆக்குவது தானே அர்த்தம்.............தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக, இந்த புரட்சி வெடிக்க வேண்டும். நான் ஒரு துரும்பு தான். இது, நடக்கவில்லை என்றால், நானும் தேர்தலில் போட்டியிட்டு, 15 சதவீதம் ஓட்டை பிரிக்க, நான் வர வேண்டுமா; தேவையில்லை. மற்றவர்கள், எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், பரவாயில்லை. எனக்கு என்ன, 50 வயதா... இப்போது விட்டால், அடுத்த தேர்தலில் பிடிப்பதற்கு; எனக்கு, 71 வயது. உடலில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன; பிழைத்து வந்துள்ளேன். அடுத்த தேர்தலில், எனக்கு, 76 வயது. அப்போது, என் கொள்கையை சொல்வதை விட, இப்பவே சொல்கிறேன், ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை, மூலை முடுக்கெல்லாம், மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இதை ஏற்று, உருவாகும் மக்களின் எழுச்சி, எனக்கு தெரிய வேண்டும்; அப்போது நான் வருகிறேன். இது, இந்தியா முழுக்க பரவ வேண்டும். கட்சியில், அதிக பதவிகள் நீக்கப்பட வேண்டும். இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். கட்சி வேறு, ஆட்சி வேறு இருக்க வேண்டும். இந்த புரட்சி நடக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறேன். தயவு செய்து, என் விளக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். செய்வீர்கள் என, நம்புகிறேன். அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்பவும் இல்லை" - ரஜினி

தமிழ்நாட்டில் தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே அடிமட்டத்தில் மக்களுடன் தொடர்புடைய வலைப்பின்னல் இருக்கிறது. 'அந்த' வலைப்பின்னலைத் தாண்டி, எந்த கிராமத்திலும் புதிதாக ஒரு கட்சி வேர் பிடிக்க வேண்டுமானால், 'அந்த' மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்று, தமது 'வலிமையை' நிரூபித்தாக வேண்டும். 1967க்குப் பின், அந்த வலைப்பின்னலானது எவ்வாறு உருவானது? என்ற சமூக செயல்நுட்பத்தினையும்

இப்போதுள்ள கட்சியாக இருந்தாலும், புதிதாக தொடங்கப்படும், கட்சியாக இருந்தாலும், அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும், சமூக செயல்நுட்பத்தினையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்

மேற்குறிப்பிட்ட வலைப்பின்னல் தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, ரஜினி தமது கட்சியைத் துவங்கினால், 'புத்திசாலி அரசியல் கொள்ளையர்கள்' அதை முன்கூட்டியே 'நுகர்ந்து', தமது செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் ..மன்றம் வேர் பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள்; பேரம் பேசி தமது கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிப்பார்கள்;

வாய்ப்பு கிடைத்தால், ரஜினிக்கு 'வாலாட்டி', ரஜினியின் கட்சிக்குள் நுழைந்து, செல்வாக்கு பெறும் போக்கில்.

அத்தகைய சூழலில், ஒப்பிட்டளவில் மதிக்கத்தக்க அடிமட்டத் தொண்டர்கள் அதிகமுள்ள ...தி.மு. கட்சியானது, எம்.ஜி.ஆர் பாணியில், ஜெயலலிதாவின் துணிச்சலுடன் பயணித்தால், தமிழ்நாட்டை குடும்ப ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டு, மீட்சியை நோக்கி தமிழ்நாடு பயணிப்பது சாத்தியமாகும்..

வரும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் பிரமிக்கும் வகையில் ...தி.மு.கவிற்கு சாதகமானால், 'அந்த' திசையில் அந்தக் கட்சி பயணிக்கவும் வாய்ப்பிருக்கிறது. (http://tamilsdirection.blogspot.com/2019/05/10.html)

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பிரமிக்கும் வகையில் ...தி.மு. வெற்றி பெற்றிருக்கிறது

முன்னாள் முதல்வர்கள் முக ஜெஜெ ஆட்சியை விட அதிக ஊழல் இப்போது இல்லை. அதிக லாபம் தரும் தொழில் சினிமா அபகரிப்பு ஆபத்தும் இப்போது இல்லை. கொலை அச்சுறுத்தல் மூலமாக தனியார் சொத்து அபகரிப்பும் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் இருந்த தாங்க முடியாத மின்வெட்டு இப்போது இல்லை

கருணாநிதி முதல்வராக இருந்த போது கீழடி தடயம் வெளிப்பட்டும், இந்த ஆட்சியில் தான் அகழாய்வு நடைபெற்று வளர்ந்து வருகிறது. தொல்லியல் துறைக்கு அதிக ஒதுக்கீடு புதிய அருங்காட்சியகங்கள். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்; நேர்மையான அதிகாரிகள் செயல்பட இருந்த தடைகள் குறைந்து வருகின்றன. மக்கள் போராட்டங்கள் மனிதாபிமனத்தோடு அணுகப்படுகின்றன. கோவையில் குடிபோதைக்காரனால் விபத்தில் மனைவியை பறி கொடுத்த மருத்துவர் ரமேஷ் போராட்டம் தொடங்கியவுடனேயே காவல் துறை துணையுடன் பிணத்தை வலுக்கட்டாயமாகமருத்துவ மனைக்கு அனுப்பி. தடியடி மூலம் கூட்டத்தை கலைத்து, ஊடகங்களில் அந்த செய்தி வெளியாவதும் தடுக்கப்பட்டிருக்கும். விபத்துக்குக் காரணமான டாஸ்மாக் கடை அகற்றப்பட்டிருக்காது, முக ஜெஜெ ஆட்சிகளில். மீண்டும் திமுக, சசிகலா பிடியில் தமிழ் நாடு சிக்குவது, அக்கேடுகள் திரும்ப வழி வகுக்கும்.

சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை ஆன பின், தமிழ்நாட்டில் பெரிய மாற்றங்கள் நிகழும்;

என்று சுப்பிரமணியசுவாமி அறிவித்துள்ளார். சிறை செல்லும் முன் தமது காலில் விழுந்த ஆளுங்கட்சி முக்கிய நபர்கள் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஆட்சியை அவரிடம் ஒப்படைக்க மாட்டார்கள்;

அடிமட்ட ...தி.மு. தொண்டர்களின் மனநிலையைப் புரிந்து, ஜெஜெ பாணியில் இடைத்தேர்தலில் பிரமிக்க வைக்கும் வெற்றிகளை ஈட்டிய பின்னர்.

எனவே சசிகலா மூலமாக ...தி.மு. பிளவுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதன்பின் சசிகலா கட்சி தி.மு.கவிடம் பேரம் பேசி, தி.மு. அணியில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது.  

இமாலய வெற்றி பெற்ற 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்பட துவக்க காட்சிகளில் வில்லன் நம்பியாருக்கு பயந்த கோழையாக இருந்த எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சிகளில் வீரத்துடன் வெளிப்பட்டு நம்பியாருக்கு உரிய பாடம் புகட்டுவார். அது போல கூவத்தூரில் சசிகலாவுக்குப் பயந்த கோழைகளாக இருந்தவர்களில் யார், யார், சசிகலா மீண்டும் வரும்போது, வீரமானவர்களாக வெளிப்படப் போகிறார்கள்? என்று நாம் ஆவலுடன் காத்திருப்போம்; வீரமான எம். ஜி.ஆர்களைப் பாராட்டுவதற்காக.

பா.. வின் புதிய தலைவரான எல்.முருகன் பதவி ஏற்றவுடனேயே தி.மு.கவின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிகிறது. (https://www.kalaignarseithigal.com/politics/2020/03/11/know-about-l-murugan-who-appointed-as-tamilnadu-bjp-state-president) இது ஒரு நல்ல அறிகுறியாகும்

ஏனெனில் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில், அவரின் சமரசமற்ற தி.மு. எதிர்ப்பே, தி.மு.கவை மீண்டும் ஆட்சி அமைப்பதைத் தடுத்து வந்தது. ...தி.மு.கவைத் தவிர, பா.. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தி.மு. அணியில் இடம் பெற்றும், சில பா.. தலைவர்கள் அன்றும் இன்றும் தி.மு. தலைவர்களுக்கு நெருக்கமாக வெளிப்பட்டும், தி.மு. எதிர்ப்பு வாக்கு வங்கியின் நம்பிக்கை இழப்புக்கு உள்ளானார்கள்.  தமிழக பா..கவின் புதிய தலைவரை தி.மு. எதிர்ப்பதன் மூலமாக, அந்த இழப்பில் இருந்து தமிழக பா.. மீள்வதற்கு உதவியுள்ளது.

தி.மு. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகளில் இருந்த போது, தொல்லியல் துறைக்கு ஒதுக்கிய நிதிகளை விட, கூடுதலாக மோடி ரசும், தமிழக அரசும் போட்டி போட்டு அதிக நிதியை ஒதுக்கி, கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வுகள் புது வேகத்துடன் வளரத் தொடங்கியுள்ளன. எனவே  கீழடி தொடர்பாக வெளிப்பட்ட மோடி எதிர்ப்பு அலையானது, மோடி ஆதரவு அலையாக மாறி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தால்(சிஏஏ) முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பாதிப்பு தான் என திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்துள்ளார்.பின் ஏன் முஸ்லீம்கள் மட்டும் போராடுகிறார்கள்? போராடாத இந்துக்கள் முட்டாள்களா? இந்தியாவில் உள்ள எவரின் குடியுரிமையையும் பறிக்காது; உரிய பாஸ்போர்ட், விசா இன்றி இந்தியாவில் குடியேறியவர்களிலும் முஸ்லீம்களாக இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், இந்திய சட்டம் அனுமதிக்கும் தகுதி உள்ளவர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை வழங்கும் சட்டம் ஏற்கனவே உள்ளது. அந்த சட்டப்படி பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லீம்கள் உள்ளிட்டு கூடுதலாக  ஈழ அகதிகள் உள்ளிட்ட பல வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழ்ங்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக அண்டை முஸ்லீம் நாடுகளில் வாழும் இந்துக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருவதை ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அறிவார்களா? இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கட்தொகை அதிகரித்து வருகையில், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை முஸ்லீம் நாடுகளில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் ஸ்டாலின் அறிவாரா? அந்த சூழ்நிலையில் அந்நாடுகளில் இருந்து இந்தியாவில் நுழைந்து பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் தானே, குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. அது இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் எந்த முஸ்லீம் குடியுரிமையைப் பறிக்கும்? அதுகூடதெரியாமல் போராடும் முஸ்லீம்கள் முட்டாள்கள் இல்லையா? நல்லவேளையாக, முஸ்லீம்களிலும் தெளிவுள்ள முஸ்லீம்களின் குரல் வலுக்கத்தொடங்கியுள்ளது. அதன் காரணமாக, முட்டாள்த்தனமாக, குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 

என்னுடைய குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்று திமுக பொருளாளர் மு..ஸ்டாலின் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன் உறுதிபட அறிவித்துள்ள நிலையில்

ஸ்டாலினுக்கு அடுத்த முக்கியத்துவம் வெளிச்சத்தில் உதயநிதியை முன்னிறுத்தி, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை தி.மு.க சந்திக்க இருக்கிறது;

தமிழக வாக்காளர்களின் மறதியில் நம்பிக்கை வைத்து. எனவே வரும் தேர்தல்களில் தி.மு.கவிற்கு ஆர்.கே.நகர்ப்பாணி அதிர்ச்சி காத்திருக்கிறது. 

'தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திடஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்;

என்று தி.மு. தலைவர் ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் அரசியலில் காமெடியனாகி விட்டார்.

மேற்குறிப்பிட்ட பின்னணியில், சசிகலா கட்சியானது தி.மு.கவுடனும்,  சசிகலாவை ஒதுக்கிய ...தி.மு. தமிழக பாஜகவுடனும் எதிரெதிர் அணியாக பயணிக்கத் தொடங்கும் போது தான்;

சசிகலாமற்றும் கருணாநிதி குடும்பங்களின் ஆதிக்கத்தில் 1969 முதல், எம்.ஜி.ஆர் காலம் தவிர்த்து, ஜெயலலிதாவின் மரணம் வரை நிகழ்ந்த அவலங்கள் எல்லாம் தேர்தல் குவியத்தில் வரும். அப்போது ரஜினி எதிர்பார்க்கும் அலையானது நிச்சயம் உருவாகும்

தி.மு. எதிர்ப்பு அணியில் வேட்பாளர்களும், முதல்வர் வேட்பாளரும் ரஜினி குறிப்பிட்ட தகுதிகளோடு களத்தில் இறங்கும்போது, ரஜினி அவர்களை ஆதரிக்கும் நெருக்கடியும் கூடும். அப்போது ரஜினி கட்சி ஆரம்பித்து, அக்கூட்டணியின் ஆலோசகராக அங்கம் வகிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கல்லூரி மாணவர்கள் படிக்கிற காலத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது;

பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போராட்டங்கள் தொடர்ந்தால், தமிழ்நாடு உருப்படாது;

என்று துணிச்சலாக .வெ.ராவிற்குப் பின் அறிவித்த ஒரே தலைவர் ரஜினி ஆவார்
(‘Why Rajni may be the modern avatar of E.V.R?’;  

'தேர்தல் என்ன சாதாரண விஷயமா; பொண்டாட்டி தாலி விற்று, வீடு விற்று, கடன் வாங்கி வருவான் இல்லையா... அதனால் முன்பே சொல்லி விடலாம் என நினைத்தேன். ஒத்துக் கொள்ளவில்லை என்றால், ஒதுங்கி விடலாம் என இருந்தேன். ஆனால், மற்றவர்கள், 'இதெல்லாம் ஒரு சாக்கு' என்பர். பலர் பலவிதமாக பேசுவர். 'கோழை, பயந்து விட்டார்' என்பர். அந்த மாதிரி கெட்டப் பெயர் வேண்டாம் என்று தான், அரசியலுக்கு வர எண்ணினேன். ஆனால், வந்தால் இப்படி இருக்கிறது... இப்போது என்ன செய்வது; அதனால் தான் முன்பே சொல்லி விடலாம் என, நினைத்தேன்.' 

என்று ரஜினி மேலே குறிப்பிட்டுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். சர்க்காரியா கமிசன் குறிப்பிட்ட 'அறிவியல் ஊழலை' தி.மு. அறிமுகபடுத்தியதால் வந்த விளைவு இது.  

இன்று முதல்வர் .பி.எஸ் நினைத்தாலும் தமது கட்சியில் உள்ளூர் செல்வாக்குள்ள ஊழல் பேர்வழிகளை அகற்ற முடியாது; தி.மு. இருக்கும் வரையில். எனவே தமிழ்நாட்டில் தி.மு. இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது. தி.மு. இல்லாத தமிழ்நாட்டில் ஊழலைக் காப்பாற்றும் சமூக செயல்நுட்பம் இருக்காது. அதனை நெருக்கடி கால தமிழ்நாடு நிரூபித்திருக்கிறது. நேரடி கருணாநிதி குடும்பக்கட்டுப்பாட்டில் தி.மு.கவும், மறைமுக சசிகலா கட்டுப்பாட்டில் ...தி.மு.கவும் பயணித்ததே தமிழ்நாடு ஊழல் சுனாமியில் சிக்கியதற்கு காரணங்கள் ஆகும்.

எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா - கருணாநிதி குடும்பங்களின் அரசியலுக்கு எதிராக, தேர்தலுக்கு முன் உருவாகும் அலையை ரஜினி உணர்ந்து, தி.மு. எதிர்ப்பு அணிக்கு ஆலோசகராகப் பங்களிக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு குடும்பங்களின் ஆட்சியில் இருந்து விடுதலை ஆவதும் நிச்சயமாகி வருகிறது.


குறிப்பு:   

.'காவிரியில் கர்நாடக அரசு அணைகள் கட்டிக் கொள்வதில் ஆட்சேபணையில்லை'என்று முதல்வரான கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்த போதும்;

ச்சத்திவை அன்றைய பிரதமர் இந்திரா தாரை வார்த்ததற்கு துணை போன போதும்;

வைகோ தி.மு.கவில் இருந்து கொண்டு, லைஞர் புகழ் பாடிய பேச்சுக்கள் வெளிவந்திருக்கின்றன.

பின் தி.மு.கவை விட்டு, பலர் தீக்குளிக்க வெளியேறிய போது, பேசிய பேச்சுக்கள்;

அதன்பின் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து பேசிய பேச்சுக்கள்;
தடாவில் தன்னை கைது செய்த, முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பேசிய பேச்சுக்கள்;
பின் அதே ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்து பேசிய பேச்சுக்கள்;

தா.கிருட்டிணன் கொலைக்குப் பின், மதுரையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அழகிரியைக் கண்டித்து பேசிய பேச்சுக்கள் (https://www.youtube.com/watch?v=wdqbVYKpIHs  );

பின் பாராளுமன்ற தேர்தலின் போது, அழகரியுடன் நேசமாகி, ஆதரவு கோரிய பேச்சுக்கள்;

என்று தமிழ்நாட்டில் அரசியலில் குட்டிக்கரணங்கள் அடித்ததில், முதல் இடம் வைகோவிற்கு இருந்தால் வியப்பில்லை.

அந்த அளவுக்கு குட்டிக்கரண புகழ் பெற்ற வைகோ அண்மையில்;
தமிழ்நாடு என் தாய்நாடு. இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடுஎன்ற கருத்தினை வெளியிட்டிருக்கிறார்

நீட் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளில், உணர்ச்சிபூர்வ பாதகப் போக்கினைத் தவிர்த்து, ஆக்கபூர்வ புத்திசாலித்தன போக்கில் அணுகுவது பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தினை, மத்திய அரசின் உள்துறை மனித வள மேம்பாட்டு துறை, சட்டத்துறை, ஆகிய துறைகளின் ஆமோதிப்புடன், சுகாதாரத் துறையை அடைந்த பின், சந்தித்த குளறுபடிகளால்;

உச்சநீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பு வந்தது, என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன

மத்திய அரசு துறைகளுக்கிடையில், அதிலும் அவசரமான சூழலில், இது போன்ற தவறுகளுக்கு வாய்ப்புகள் இருப்பது, மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகித்த கட்சியின் தலைவரான வை.கோவிற்கு தெரியாதா

தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கவா, உள் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டத்துறை ஆகிய மூன்று துறைகள் ஒப்புதல் வழங்கினர்

புத்திசாலித்தனமாக, மத்திய அரசிடம் அதற்கு நிவாரணமாக, அடுத்து சில வருடங்களுக்காவது விதிவிலக்கு வழங்கும் சட்டபூர்வ வாய்ப்புகளை ஆராயுமாறு அழுத்தம் கொடுத்து காரியம் சாதிப்பது புத்திசாலித்தனமா
மாறாக, வைகோ மேலே குறிப்பிட்ட காணொளியில் தெரிவித்துள்ளவாறு பிரிவினை பேசி, அதைக் கெடுப்பவர்கள் எல்லாம் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கும் வரை, தமிழ்நாட்டிற்கு உருப்படியாக ஏதும் சாதிக்க முடியுமா? (‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  .வெ.ரா’;  

No comments:

Post a Comment