Tuesday, December 10, 2019


'காலனிய' மனநோயாளிகளும்

'திராவிட' மனநோயாளிகளும்

(தி பிரிண்டிங் ஹவுஸ், திருச்சி; ph: +91-0431-2420121; 
Email: tphtrichy@gmail.com;   www.theprintinghousetrichy.com) 

திருப்பு முனையில் தமிழ்நாடு; எதிரெதிர் முகாம்களில் அறிவுபூர்வ அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நூல்: செ..வீரபாண்டியன் (வெற்றிமணி)

பொருளடக்கம்:

முன்னுரை   
                                                                                                                       
அத்தியாயம் 1 கறுப்புவெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்
 
அத்தியாயம் 2. இசையில் ' தீண்டாமை'    காலனியத்தின்நன்கொடையா?   

அத்தியாயம் 3.  புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'   
                       
அத்தியாயம் 4.  மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?

அத்தியாயம் 5. தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?                                                                                                  

அத்தியாயம் 6.  1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்; .வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியாதவறா? (1)                                                                                        

அத்தியாயம் 7.  1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்; .வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியாதவறா? (2); 

1938 & 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கு இடையில் இருந்த பண்பு வேறுபாடுகள்?                                                

அத்தியாயம் 8.  வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு                     

அத்தியாயம் 9.  மரணப்படுக்கையில் இருந்து, 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (1)         

                         
அத்தியாயம் 10. 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (2)

'தமிழ் அடையாள அழிப்பிற்கு' பாரதிதாசனின் பங்களிப்பு?       

அத்தியாயம் 11.  'தமிழ் தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும் பாரதிதாசனும் (3)

அறிவுபூர்வமாக விமர்சிப்பதில், பாரதிக்கு ஒரு நீதி? பாரதிதாசனுக்கு வேறு நீதியா

அத்தியாயம் 12. 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்                             

பிற்சேர்க்கை -1.  எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்                                      

பிற்சேர்க்கை 2. 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு, இன்று  எப்படி இருக்கிறது?  
                        
இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938க்கும் 1965க்கும்   என்ன வேறுபாடு?  
    
பிற்சேர்க்கை 3. Fringe Mechanism derailing the Indian Nation Building Process 

பிற்சேர்க்கை 4. 'அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி (Cognitive skills development) நன்றாக இருக்கும்' உலக ஆய்வுகள் வெளிப்படுத்திய சான்றுகள்    
                                                                                                     
பிற்சேர்க்கை 5. மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்; 'மாதொரு பாகன்' எழுப்பும் கேள்விகள்                                                                                                                                            
பிற்சேர்க்கை 6. பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?    
                                                             
பிற்சேர்க்கை 7. தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்   
                   
பிற்சேர்க்கை 8. .வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமதுயோக்கியதை '                                                                             

பின் அட்டை:

பெரியார்.வெ.ரா பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும், முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பிறர் பார்வையில் உணர்தல்(empathy) என்ற போக்கைக் கடைபிடித்து அறிவுபூர்வ அணுகுமுறையை ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.”

– ‘1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு, இன்று எப்படி இருக்கிறது? இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938க்கும் 1965க்கும்   என்ன வேறுபாடு? (நூலின் உள்ளே)

திருப்பு முனையில் உள்ள தமிழ்நாட்டில், எதிரெதிர் முகாம்களில் உள்ளவர்கள் இடையில் அறிவுபூர்வ விவாதங்கள் நடைபெறும் சூழலும் கனிந்து வருகிறது. இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், நான் 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்துள்ளேன். 'பெரியார்' கட்சிகள்,, மார்க்சிய லெனினிய குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளுடன், எனது அளவுக்கு அறிவு, அனுபவம் உள்ளவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லை; நானறிந்தது வரையில்.  எனவே மேற்குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நூல் வெளிவருகிறது

செ..வீரபாண்டியன் (வெற்றிமணி),
இசைத்தகவல் தொழில்நுட்பப் புலமையாளர்,
(Music Information Technologist) http://drvee.in/


No comments:

Post a Comment