Sunday, June 14, 2020


துக்ளக் தூண்டியுள்ள விவாதம்;


தமிழ்நாடு 'பெரியார் மண்'? 

தமிழ்நாடு  'தமிழ் மண்'? எது சரி?




இந்துத்வா முகாம்களை அச்சுறுத்தும் நோக்கில், 'தமிழ்நாடு பெரியார் மண்' என்ற வாதத்தினை தி. மற்றும் தி.மு. உள்ளிட்ட இன்னும் பல கட்சிகள் எல்லாம் அவ்வப்போது எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 'சாதி' என்ற சொல்லின் பொருளைத் திரித்து, சமூக உயர்வு - தாழ்வு நோயும், 'தீண்டாமை'யும் காலனி சூழ்ச்சியில் அறிமுகமாகி, அதன் தொடர் விளைவாகவே 1967க்குப்பின்;

தலித் முதல் பிராமணர்கள் வரை தத்தம் சாதிகளில் 'பெரிய' மனிதர்களாக வலம் வந்தவர்கள் எல்லாம்

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா கால்களில் விழுந்த தன்மானக்கேடான நாடாக தமிழ்நாடு இருக்கிறது. இது 'பெரியார் மண்' என்பதானது .வெ.ராவை அவமதித்ததாகும்

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் அவமதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக
(https://tamilsdirection.blogspot.com/2020/03/blog-post.html)

'பெரியார் மண்' தொடர்பாக, துக்ளக்கில் வெளிவந்த கட்டுரையானது எனது கவனத்தினை ஈர்த்தது. (குறிப்பு கீழே). அதில் கீழ்வரும் பகுதி முக்கியமானதாகும்.

'கி.வீரமணி கூறுவது உண்மையானால், .வெ.ரா. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதுவும் இன்றுதான், பெரியார் மண் ஆகியிருக்கிறது. தமிழைப் புறக்கணித்தால்தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து, அடித்து கூறி வந்திருக்கிறார் .வெ.ரா..'

தமிழ்நாட்டில் (குக்கிராமங்களிலும்) விளையாட்டுப்பள்ளி முதல் ஆங்கிலவழிக்கல்வியில் துவங்கி இன்று கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாதவர்கள் அதிவேகமாக அதிகரித்து வருகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன், தமக்கு நெருக்கமான, அப்போது சற்று வசதி குறைவான உறவினரின் குழந்தையை தமது வீட்டில் வைத்து, ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளியில் சேர்த்து;

'அம்மா, அப்பா' தெரியாமல், 'மம்மி, டாடி'யுடன், 'uniform, neck tie, Shoes' வாங்கிக் கொடுத்து, அடிப்படைக்கல்வி வரை தாம் படிக்க வைத்ததை, சில மாதங்களுக்கு முன் பெருமையுடன் நினைவு கூர்ந்து என்னிடம் விளக்கிச் சொன்னார் ஒரு பெண்மணி.

வசதி வர ஆரம்பித்தவுடன், அந்த குழந்தையின் பெற்றோர்கள் தமது வீட்டிலேயே படிக்க வைத்து, வருடங்கள் ஓடி, இன்று அந்த குழந்தை கல்லூரி மாணவராகி விட்டார். இன்று அதிக வசதியுடன் வாழும் பெற்றோர் தம்மை மதிக்கவில்லையென்றாலும், இன்று கல்லூரி மாணவராயிருக்கும் 'அந்த' குழந்தைக்கு தம் மீது வளர்த்த பாசம் இருக்கும்;

என்பதையும், அதே பெருமையுடன் விளக்கினார்.

சில வாரங்களுக்கு முன் உறவினர் குடும்ப நிகழ்ச்சியில், 'அந்த' பெற்றோர்களுடன் 'அந்த' கல்லூரி மாணவரும் வந்திருக்கிறார். தமது பெற்றோர்களைப் போலவே, அந்த மாணவரும், தம்மை விட ஒப்பீட்டளவில் வசதி குறைவான நிலையில் இன்றுள்ள அந்த பெண்மணியுடன் பேசுவதைத் தவிர்த்து உதாசீனப்படுத்தியுள்ளனர்.

அதனையும் அந்த பெண்மணி என்னிடம் வருத்தத்துடன் விளக்கினார்.

குழந்தைகள் ஆரம்பப்பள்ளி வரையில் தாய்மொழிவழியில் படிக்காத காரணத்தால், தமிழ்நாட்டில் அவர்களும், அவர்களின் பெற்றோர்களும் 'சுயநல மனித மிருகங்களாக' நடமாடுவது பற்றிய எனது அனுபவங்களை எல்லாம் ஏற்கனவே அவ்வப்போது நான் அவரிடம் விளக்கியிருந்தேன். அவரது மேலே குறிப்பிட்ட அனுபவமும் அந்த வகையையேச் சாரும் என்று நான் சொன்னவுடன், தாமதமின்றி, "ஆமாம் சார், அது தான் காரணம்' என்று உடனே அவர் ஒப்புக்கொண்டார்

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.’;  .வெ.ரா;  தாய்ப் பால் பைத்தியம்என்ற நூலிலிருந்து.

'The death of language, Language Attrition' போன்றவை தொடர்பான ஆய்வுகளை அறிந்தவர்களுக்கு மட்டுமே, மேற்குறிப்பிட்ட கருத்தானது, எவ்வாறு 'தமிழ் வேர்க்கொல்லி' ஆகும்? என்பது விளங்கும்.   

தமது அறிவுவரை எல்லைகள்(intellectual limitations) தெரியாமல், .வெ.ரா அவர்கள் மேலே குறிப்பிட்ட கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். .வெ.ராவுக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்கள், மேலே குறிப்பிட்ட கருத்து தவறு என்பதை ஏன் விளக்கி, அவருக்கு தெளிவை ஏற்படுத்தவில்லை? என்ற கேள்வியானது, இனியும் இருளில் நீடிக்கலாமா?

அவருக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், அவர் அறிவுபூர்வ விமர்சனத்தை வரவேற்றிருந்தாலும்;

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.’

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)
ஆக பயணித்தார்; முந்தைய பதிவில் விளக்கியபடி, ' தமிழ்  அடையாள அழிப்புக்கு' வழி வகுத்து
(‘காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்’;

'தமிழ் இலக்கியங்கள் மற்றும் தாய்மொழித்தமிழ்' பற்றிய .வெ.ராவின் நிலைப்பாடு என்ன? என்பதை முதலில் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த நிலைப்பாடு சரியா? தவறா? என்பதை, அவைதொடர்பாக உலகில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும். அது போன்ற விவாதத்தில் .வெ.ரா என்ற மனிதரை எடை போடுவதற்கு இடமில்லை. அவ்வாறு எடை போட வேண்டுமென்றால், அவருக்குக் கிடைத்த உள்ளீடுகளின் அடிப்படையில் அவரின் நிலைப்பாடு சரியே என்பது எனது கருத்து. ஆனால் இன்று வெளிவந்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில் அந்த நிலைப்பாடு தவறு என்பதும், 'தமிழ் அடையாள அழிப்புக்கு' வழி வகுத்துள்ளது என்பதும் எனது கருத்து.

மேற்குறிப்பிட்ட எனது கருத்து தொடர்பாக கீழ்வரும் பின்னூட்டம் வந்தது.

'அவர் வாழ்ந்த சம காலத்தில் மொழி குறித்து மபொசிபெருஞ்சித்திரனார்அண்ணா போன்றோர் விளக்கத்தை பெரியார் ஏற்கவில்லை.

நன்னன்சாமி.சிதம்பரனார், பொன்னம்பலம், பாவாணர் போன்றோரின் செயல்பாடுகள் அவரின் கவனத்திற்கு வராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

உள்ளீடுகள் கிடைக்கவில்லை என ஏற்கமுடியாது ஐயா.

நடப்பில் பெரியார் சொன்னது சரிதான் என்றே நியாயப்படுத்தி வருகிறார்கள்.'

அவ்வாறு நியாயப்படுத்தி வருகின்ற 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், மூளை வளர்ச்சியில் தாய்மொழியின்  முக்கியத்துவம் மற்றும் தாய்மொழிக்கும் மனிதரின் அடையாளத்திற்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் தமிழில் பரவலாக வெளிவரும்போது அவர்கள் மாறலாம்.

தமிழ் தொடர்பாக ஈவெரா முன்வைத்த கேள்விகளுக்கு, மேற்குறிப்பிட்டநபர்களில் எவரேனும் சரியான விளக்கம் தந்ததாகத் தெரியவில்லை. தந்திருந்தால், அதனை எனக்கு தெரியப்படுத்துபவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவ்விளக்கத்தினை நான் ஆராய இயலும்.

தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்)  மரணப்பயணத்தோடு, தமிழர்கள் அகத்தில் பெற்று வரும் சீரழிவையும், அதனால் தமிழ்நாடு புறத்தில் பெற்றுவரும் சீரழிவையும் , தாமதமின்றி தடுக்க வேண்டிய காலக்கட்டம் இது. தவறினால், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம், முன் நிபந்தனையாகி விடும்.

தமக்கு இப்போதிருக்கும் செல்வம், செல்வாக்கு, வசதிகளுடன் தமது காலத்தை பெரியார் கட்சிகளின் தலைவர்கள் கழித்து விடலாம். ஆனால் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணத்தை முன்நிபந்தனையாக்கிய குற்றவாளிகளாக அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதை தடுக்க முடியாது. எனது ஆய்வுகள் அடிப்படையில் தெளிவு பெற்று, 2005 முதல் நான் மட்டுமே, நானறிந்த வரையில், தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வரும் அடிப்படையில், இந்த அபாய அறிவிப்பை முன் வைக்கிறேன்
(‘தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம் முன் நிபந்தனையாகி விடுமா?’; 
https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html)

தமிழ்நாடு  'தமிழ் மண்' ஆக இருந்தால் தான், தமிழர்கள் மானமும் அறிவும் உள்ளவர்களின் நாடாக இருக்க முடியும்.

அதற்கு மாறாக, தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத, பெரியவர்களை மதிக்கவும் தெரியாத மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் 'சுயநல மனித மிருகங்களாக' நடமாடும் நாடாகவே, 'தமிழ்ச்சனியனை' ஓழித்து வளரும் 'பெரியார் மண்' ஆக நீடிக்குமானால்;

'பெரியார் மண்' என்ற சுவடே இல்லாமல், 'தமிழ் மண்' ஆக தமிழ்நாட்டை மீட்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.


குறிப்பு:

இன்று தான் பெரியார் மண்ணாக மாறிய தமிழகம்

தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிற நிலைதான் உள்ளதுஎன்கிறாரே கி. வீரமணி என்று கேட்டிருக்கிறார் பாப்பான்குளத்திலிருந்து .மாடக்கண்ணு என்ற வாசகர்.

கி.வீரமணி கூறுவது உண்மையானால், .வெ.ரா. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதுவும் இன்றுதான், பெரியார் மண் ஆகியிருக்கிறது. தமிழைப் புறக்கணித்தால்தான் தமிழர்கள் மானம், பகுத்தறிவு ஆகியவை உள்ளவர்களாக ஆக முடியும் என்று தொடர்ந்து, அடித்து கூறி வந்திருக்கிறார் .வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய .வெ.ரா.வின் அந்த உயர்ந்த கருத்துக்களை வீரமணி படிக்கவில்லை என்பது நிச்சயம். .வெங்கடேசன் என்கிற இளைஞர், பெரியாரின் மறுபக்கம் பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு) என்கிற தலைப்பில் தமிழ், தமிழர்கள், தமிழறிஞர்களைப் பற்றி .வெ.ரா.வின் கருத்துக்களை பல புத்தகங்களிலிருந்து தொகுத் தெடுத்து ஒரு இணைய தளத்தில் கொடுத்திருக்கிறார். வீரமணி சுலபமாகப் படிக்க அதை இங்கு கொடுக்கிறோம்.

தமிழும் தமிழரும்என்ற நூலில், .வெ.ரா., தமிழ்மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன். தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள், பெரிதும் 100-க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது, வெறும் தமிழ் வித்வான்களாக.... தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்து விட்டதனால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விட, தமிழ்மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி" என்று தமிழ் படித்தால் பகுத்தறிவு இருக்காது, மானமுள்ள தமிழர்கள் உருவாக மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார் .வெ.ரா..

தான் தமிழை என்றும் மனதார ஆதரித்ததில்லை என்பதை அழகாகக் கூறுகிறார் .வெ.ரா. இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில், அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்குச் சிறிது இடம் கொடுத்து வந்தேன்" என்கிறார் .வெ.ரா.. தமிழ், தமிழறிஞர்களைப் பற்றிய .வெ.ரா.வின் தொடர்ந்த அசைக்க முடியாத கருத்துகளையும் வெங்கடேசன் தொகுத்துக் கொடுத்திருக் கிறார். தமிழ் காட்டு மிராண்டிக் காலத்துமொழி" (பெரியார் .வெ.ரா. சிந்தனைகள் II-ஆம் தொகுதி) தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) சமூக எதிரிகள்" (நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்) தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?" இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே." (பெரியார் .வெ.ரா. சிந்தனைகள் II-ஆம் தொகுதி) - என்பதெல்லாம்தான் தமிழ், தமிழறிஞர்கள் பற்றி .வெ.ரா.வின் முடிவான கருத்து. ஆங்கில வாசனையே இல்லாமல், எதற்கும் பயன்படாத, நியூசென்ஸான தமிழை மட்டும் படித்து விட்டு, முற்போக்கு எதிரிகளாக இருக்கும் தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பதை எப்படி .வெ.ரா. ஒப்புக் கொள்வார்.

.வெ.ரா. விரும்பியபடி தமிழ், தமிழர், தமிழ்நாடு அனைத்தும் வெறுத்து புறக்கணிக்கப்பட்டால்தான், அது பெரியார் மண். தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று கி.வீரமணி ஒப்பாரி வைப்பது, அவருக்கு, .வெ.ரா.வின் கருத்துக்கள் தெரியாது என்பதையே காட்டுகிறது. இந்தப் பதிலை மட்டும் அவர் படித்தால், அவருடைய அறியாமை நீங்கி, தமிழ்மண் பெரியார் மண்ணாகி விட்டது என்று மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார் வீரமணி.
- எஸ்.குருமூர்த்தி (துக்ளக் 03 - 06 – 2020)

No comments:

Post a Comment