Monday, June 8, 2020


தமிழ்நாட்டின் சமூக இசையின் சோகம் எவ்வாறு தோன்றியது?


எம்.ஜி.ஆர் என்ற தனித்துவமான சமூக இசை ? (1)




உலகில் உள்ள எந்த இசையும் கீழ்வரும் செயல்நுட்பத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட இசையின் ரசனைக்கேற்ப, இசையின் துவக்கம் முதல் இறுதி வரை;

ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கும் இறுக்கத்தை (Tension) உருவாக்கிபின் அதனை தீர்த்து (Resolution), அடுத்தடுத்து புதுப்புது இறுக்கம் உருவாக்கல் பின் தீர்த்தல் என்ற போக்கில் முழு இசைக்குமான பொது இறுக்கத்தை உருவாக்கி, பின் முடிவில் அதனை தீர்த்தல்;

என்ற அடிப்படையிலேயே இசை அமைத்தல் (Music Composing) நடைபெறுகிறது.

இறுக்கம் உருவான பின் அதனை தீர்த்தல் மூலம் முடிப்பது, என்பதானது இசையின் போக்கு ஆகும்.

‘Tension and release’ refer to the build-up of musical intensity that eventually dissolves and relaxes. For the listener, a moment of unrest in the music creates an expectation for its resolution and an anticipation for the drama to resolve. Tension and release keep the music moving forward. 

அந்த இசை நுட்பத்தையே, சிலப்பதிகாரம் கீழ்வருமாறு விளக்கியுள்ளது.

'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, 65)

அது போல சமூகத்தில் உருவாகும் இறுக்கங்களும் தீர்க்கப்படுவதானது, சமூகத்தின் போக்கு ஆகும்.

சமூக இயற்கையின் போக்கில் வெளிப்படும் இறுக்கங்கள் தொடர்பாகவும்;

அந்த இறுக்கங்கள் எவ்வாறு உருவாகி வளர்ந்து வந்து நிகழ்கால நிலையை அடைந்தன?

என்பதை அந்த சமூகத்தின் சான்றோர்கள் உணர்ந்து, சமூகத்திற்கு நலன் பயக்கும் நோக்கில் 'வருவதை' கணித்து, அவ்வாறு 'வந்ததை' அதற்கேற்ற வகையில் 'வளர்த்து, வருவதை ஒற்றி', சான்றோர்களின் வழிகாட்டுதலில் பயணிக்கும் சமூகம் வளரும்.

அந்த இறுக்கங்கள் எவ்வாறு உருவாகி வளர்ந்து வந்து நிகழ்கால நிலையை அடைந்தன?

என்பது தொடர்பான புரிதலில் உள்ள குறைபாடுகள் அல்லது தலைவர்களாக உள்ளவர்களிடம் உள்ள குறைபாடுகள் காரணமாக, 'வந்ததை வளர்க்கும்' முயற்சியில் புதிய இறுக்கங்கள் உருவாகலாம். புரிதலில் உள்ள குறைபாடுகள் காரணமாக உருவான புதிய இறுக்கங்களின் போக்கில் புதிய தலைவர்கள் வெளிப்படலாம். புதிய  தலைவர்களின் சுயலாபப் போக்கில் உருவான இறுக்கங்களை தீர்ப்பதிலும் அது போன்ற சுயலாபப் போக்கானாது செல்வாக்கு செலுத்தலாம். அது போன்ற சமூக இசையானது சமூகத்திற்குக் கேடாகவும், அது போன்ற தலைவர்களுக்கு சாதகமாகவும் அமையும். அவ்வாறு சமூக இசையில் சோகம் தோன்றி வளர்ந்து உச்சத்தைத் தொட்ட பின்னர், அது மறைந்து சமூக இசையில் இன்பம் தோன்றுவதும் சமுக இயற்கையின் போக்கு ஆகும்.

அது போன்ற சமூக இசை ஆராய்ச்சிக்கு உகந்த களமாக தமிழ்நாடு இன்று இருக்கிறது.

சுமார் 50 வருடங்களுக்கு முன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து மாணவர்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தில் மாணவர் உதயகுமார் அநியாயமாக உயிரிழந்து, அவரது தந்தை அச்சுறுத்தலுக்கு இலக்காகி, "இறந்தது என் மகனல்ல" என்று விசாரணையில் தெரிவித்த கோலம் அரங்கேறியது. அதே போன்ற சம்பவமானது, இன்று யார் முதல்வராக இருந்தாலும், நடக்க, தமிழ்நாடு அனுமதிக்காது, என்பதை எவராலும் மறுக்க முடியாது'உதயகுமார் நம் குடும்பப் பிள்ளை' என்று 'ஏம்பதைஸ்' (empathize: understand and share the feelings of another) பண்ணாமல், எனது தலைமுறையில் பலர் தி.மு. ஆதரவாளர்களாகப் பயணித்தார்கள். இன்று அவ்வாறு பயணித்தால், பொதுமக்கள் காறித் துப்புவார்கள்;

மாணவர்களும், இளைஞர்களும், நடுத்தர மற்றும் ஏழைகளில் பெரும்பாலோரும் துணிச்சலாக வெளிப்படையாகவும், வசதியாக வாழ்பவர்களில் பெரும்பாலோர் மனதுக்குள்ளும்.

சுமார் 100 வருடங்களுக்கு முன் நடந்த வைக்கம் போராட்டத்தில், வெளிப்பட்ட தமிழ்நாட்டின் நிலையானது, அடுத்த 50 ஆண்டுகளில், 1970களில் தலைகீழானது. அதற்கடுத்த 50 ஆண்டுகளில், இன்று மீண்டும் தலைகீழாகி, இரண்டு தலைகீழ்களுக்குப்பின், தமிழ்நாடு நேராகத் தொடங்கியுள்ளது.

அரசின் ஒடுக்குமுறையால் தடுமாறிக் கொண்டிருந்த வைக்கம் போராட்டமானது, காந்தியின் ஒப்புதலுடன், தமிழ்நாடு காஙகிரஸ் தலைவராக இருந்த .வெ.ரா மற்றும் வரதராஜுலு நாயுடு உள்ளிட்ட இன்னும் பல தலைவர்களும் தமிழ்நாட்டுத் தொண்டர்களும் பங்கேற்ற பின்னர் வெற்றியை ஈட்டியது. அதன்பின் .வெ.ரா, ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்களின் தவறான முடிவுகள் காரணமாகவே, கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் போன்றவர்களின் பிடியில் தமிழ்நாடு கிக்க நேரிட்டது.

கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த .வெ.ராவும் மற்றும் ராஜாஜி உள்ளிட்ட பல பிராமண மற்றும் பிராமணரல்லாத தலைவர்களும், அனைத்து சாதி மத சாமான்யத் தமிழர்களும் பிரமிக்க வைக்கும் வகையில் எவ்வாறு பங்களித்தார்கள்? என்பதை எல்லாம் உரிய சான்றுகளுடன் 'வைக்கம் போராட்டம்' (பழ.அதியமான்) நூல் விளக்கியுள்ளது. அவ்வாறு 1920களில் இருந்த தமிழ்நாடு, நூறு ஆண்டுகளுக்குப் பின், 1944இல் திராவிடர் கழகம் தோன்றியதன் விளைவாக, இன்று எவ்வாறு உள்ளது?

சாதி, மத, மொழி, வட்டார அடிப்படைகளில் வெறுப்பு அரசியலை முன்னிறுத்தி கட்சிகளின் எண்ணிக்கையும், அதன் மூலமாக வளமாகும் தலைவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்டர்நெட்டில் தகவல் சேகரித்து கோவில் விழாவில் நகை திருடி மாட்டிக் கொண்டபெண்கள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த திருடிகளும் முட்டாள்த்தனமாக மாட்டிக்கொள்ளாமல், அதிவேகப் பணக்காரர் ஆகி, அரசியலிலும் நுழைந்து பிரமிக்கும் வகையில் பணத்திலும் செல்வாக்கிலும் வளர்ந்தால், கட்சித் தலைவர்களும் பிரபல பத்திரிக்கையாளர்களும் போட்டி போட்டு தரிசித்து நெருக்கமாக முயற்சித்திருப்பார்கள்.

1944க்கு முன் தமிழ்நாட்டில் தலைவர்களின், சிலைகளின், பிம்ப வழிபாடு இருந்ததில்லை. எந்த கொள்கையாளராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும், அவரிடம் வெளிப்பட்ட உண்மை, நேர்மை, புலமை போன்றவற்றின் அடிப்படையிலேயே மதிக்கப்பட்டார்கள்; சுயமரியாதை இயக்கத்தில் இருந்த பெரும்பாலோர் அவ்வாறே ஆத்திகர்களாலும் மதிக்கப்பட்டார்கள்

1925இல் .வெ.ரா அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறியதன் விளைவே 1944இல் திராவிடர் கழகம் தோன்றியது; 1949இல் தி.மு. அதன் தொடர்ச்சியாகவே உருவானது.

காந்தியின் ஒப்புதல் கிடைத்திருந்தால், 1925க்கு முன் நடந்தவைக்கம் போராட்டத்தில் .வெ.ரா பங்கேற்றிருந்த காலத்தில், இந்து மகா சபையும் அவருடன் சேர்ந்து போராடியிருக்கும். (பக்கம் 119, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்). அந்த காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தோற்றுவிக்கப்படவில்லை

‘From the point of view of justice, dharma and humanism, fighting untouchability is a duty and we Hindus should completely eradicate it.’- Savarkar 

அன்றைய இந்து மகா சபை பாணியில் தான், .வெ.ரா அவர்கள் தேசிய திசையில் பயணித்தார் என்பதைக் .வெ.ரா அவர்கள் வைக்கம் போராட்டதின்போது வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்து உணர்த்துகிறது
(‘வைக்கமும், 'பெரியார்' .வெ.ராவும்; எதிர்ப்பு முகாம்களுக்கு தாரை வார்த்து ஏமாறும் தமிழ்நாட்டு இந்துத்வா?’; 
https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_25.html

'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.' 
(பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்)

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால், அதே திசையில் தான் .வெ.ரா அவர்கள் பயணித்திருப்பார். தி., தி.மு. போன்ற கட்சிகள் உருவாகியிருக்காது.

வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓய்வு நேரங்களில் ராட்டையில் நூல் நூற்றார்கள்; இந்தி மொழி கற்றார்கள்; தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தொண்டர்கள் உள்ளிட்டு.  அவ்வாறு .வெ.ராவால் எதிர்க்கப்படாத விருப்பஇந்தியை, 1937இல் முதல்வராக இருந்த ராஜாஜி கட்டாயமாக்கியதன் விளைவாக, தமிழ்நாடானது இந்தியை எதிர்த்ததோடு நிற்காமல், .வெ.ரா தலைமையில் 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 'தனித்தமிழ்நாடு' பிரிவினை கோரிக்கையும் முதன் முதலாக வெளிப்படும் விளைவில் முடிந்தது.

அதே ராஜாஜியும் அண்ணாவும் கூட்டு சேர்ந்து 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்; மாணவர்களைத் தூண்டி, பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் கேடாகும் வகையில். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை .வெ.ரா எதிர்த்து, போராட்டக்காரர்களால் அவமதிக்கப்பட்டார். 1925க்கு முன் நடந்த வைக்கம் போராட்டத்திலும், 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் வெளிப்பட்ட .வெ.ராவின் சமூக ஆற்றலானது, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏன் வற்றி, அவர் அவமதிக்கப்படும் விளைவில் முடிந்தது1920களில் கேரளாவில் வைக்கம் போராட்டத்தில் பிரமிக்க வைக்கும் வகையில் வெளிப்பட்ட .வெ.ராவின் செல்வாக்கானது, 1944இல் தி.கவும், 1949இல் தி.மு.கவும் தோன்றியதன் விளைவாக,‌ தமிழ்நாட்டில் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவமானகரமாகும் அளவுக்கு எவ்வாறு வற்றியது? என்ற விவாதமானது இனியும் இருட்டில் நீடிப்பது தமிழ்நாட்டிற்குக் கேடாகும்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் போல பொதுவாழ்வின் மூலமாக சொத்து சேர்த்தவர்கள் என்று .வெ.ரா, ராஜாஜி, அண்ணா மூவர் மீதும் அவர்களின் கொள்கை எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த மூவரும் பொதுவாழ்வில் மேற்கொண்ட தவறான முடிவுகள் காரணமாகவே, மேற்குறிப்பிட்ட நால்வர்கள் பிடியில் தமிழ்நாடு சிக்க நேரிட்டது. இடையில் வந்த எம்.ஜி.ஆர் மூலமாகவே தமிழ்நாட்டின் மீட்சிக்கான திசையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்? என்பதையும் நான் விவாதித்துள்ளேன்
(‘ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில்; எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம்?’; 

ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலே குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ அந்த பயணத்தின் முடிவில் அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது. ஒரு சமூகம் நன்மைகளை அனுபவிக்கும் போது, சமூகத்தை வழி நடத்திய தலைவர்கள் பாராட்டு பெறுகிறார்கள். அந்த சமூகம் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்கும்போதுஅந்த தலைவர்களை உணர்வுபூர்வமானவர்கள் கண்டிப்பார்கள். அந்த தலைவர்களின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களும், அவர்களின் உணர்வு போதைத் தொண்டர்களும் அதை 'துரோகம்' என்று கூக்குரல் எழுப்புவதும் உண்டு. அந்த மோசமான விளைவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அந்த தலைவர்கள் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன தவறுகள், தமது பயணத்தில், புரிந்தார்கள் என்பதை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்வார்கள்
(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html)

சுமார் 100 வருடங்களுக்கு முன் நடந்த வைக்கம் போராட்டத்தில், வெளிப்பட்ட தமிழ்நாட்டின் நிலையானது, அடுத்த 50 ஆண்டுகளில், 1970களில் தலைகீழானது. அதற்கடுத்த 50 ஆண்டுகளில், இன்று மீண்டும் தலைகீழாகி, இரண்டு தலைகீழ்களுக்குப்பின், தமிழ்நாடு நேராகத் தொடங்கியுள்ளதானது;

ஜெயலலிதா, கருணாநிதி, நடராஜன் போன்றவர்கள் இல்லாத சூழலில்;

ஏற்கனவே ஓடி வந்த ஓட்டத்தில் இன்னும் எவ்வளவு தூரம் ஓடிய பின் நின்று, அதன்பின் நேராக ஓடத் தொடங்கும்? தமிழ்நாடு மீண்டும் விரைவில் நேராக ஒட, அதற்கான தாமத  காலத்தினை சிறுமமாக்கும் சமூக செயல்நுட்பத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பது

சமூக விசைகள் (Social Forces) எவ்வாறு தோன்றி வளர்ந்து மறைகின்றன? தனி மனிதர்கள் எவ்வாறு நல்ல அல்லது தீய தலைவர்களாக தோன்றி வளர்ந்து மறைகிறார்கள்ரசனைக்கும் சமூக விசைகளுக்கும் இடையே எவ்வாறு தொடர்பு உள்ளது? என்பது போன்ற கேள்விகள் தமிழ்நாடு தொடர்பான சமூக இசை ஆராய்ச்சிக்கு உதவும். அதன் மூலமாக, எம்.ஜி.ஆர் என்ற தனித்துவமான சமூக இசை பற்றிய வெளிச்சம் கிடைக்கும்.


(வளரும்)

No comments:

Post a Comment