வைக்கமும், 'பெரியார்' ஈ.வெ.ராவும்;
எதிர்ப்பு முகாம்களுக்கு தாரை வார்த்து ஏமாறும் தமிழ்நாட்டு இந்துத்வா?
ஈ.வெ.ரா தொடர்பான எனது நிகழ்கால நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத, லண்டனில் வாழும் எனது நண்பர் தொல்காப்பியன்,
'அவசியம் கேட்க வேண்டியது. பல தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் உள்ளன.'
என்ற முன்னுரையுடன், கீழ்வரும் காணொளியை எனது பார்வைக்கு அனுப்பி வைத்தார்.
நானும் திராவிட இயக்கத்தவன் தான் என்ற காமராசர் | பேரா. நாகநாதன் |
Prof. Naganathan | வைக்கம் போராட்டம்;
ஈ.வெ.ராவை அறிவுபூர்வமாக விமர்சித்து வந்த, விமர்சிப்பதில் ஆர்வமுள்ள இந்துத்வா ஆதரவாளர்கள் அனைவரும் அதே காரணத்தால் - 'அவசியம் கேட்க வேண்டியது. பல தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் உள்ளன.' -
மேற்குறிப்பிட்ட காணொளியைக் காணுமாறு நான் பரிந்துரை செய்திறேன்.
மேற்குறிப்பிட்ட காணொளியைப் பார்த்த பின், அவருக்கு கீழ்வரும் மடல் அனுப்பினேன்.
'புலவர் இமயவரம்பனை மு.கருணாநிதி அன்பழகன் போன்றவர்களோடு ஒப்பிட்டதே பெரும் தவறாகும்.
பல அரிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
ஈவெராவின் தமிழ் அடையாளம் அழிப்பு பற்றியவற்றை தவிர்த்து வழிபாட்டு போக்கை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
1944க்கு முந்தைய ஈ.வெ.ரா பயணத்திற்கும், 1944க்கு பிந்தைய ஈ.வெ.ரா பயணத்திற்கும் உள்ள வேறுபாடு கணக்கில் கொள்ளப்பட்டவில்லை.
1925 வைக்கம், 1938
இந்தி எதிர்ப்பு போல, 1944க்குப்பின் முன்னெடுத்த போராட்டங்கள், குறிப்பாக தி.க வை கிட்டத்தட்ட மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி முடித்து வைத்த, தி.மு.க '
indirect' பலன் பெற்ற 1950களில் நடந்த சாதி ஒழிப்பு சட்ட எரிப்புப் போராட்டம் சொதப்பலானது கணக்கில் கொள்ளப்படவில்லை.
1967க்குப் பின், ஈ.வெ.ரா ஏன் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கி முனிவராக விரும்பினார்?
முதல்வர் அண்ணாவை சந்தித்த கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தியிடம், தமது கட்சியினரின் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாமல் விரைவில் மரணமடைய விரும்புவதாக ஏன் அண்ணா தெரிவித்தார்.
அண்ணமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடம் முதல்வர் அண்ணா ஈ.வெ.ரா வழியில் செல்லுமாறு அறிவுறுத்தியதைக் குறிப்பிட்டவர்,
அங்கு மு.க முதல்வராகி டாக்டர் பட்டம் பெறுவதை எதிர்த்து போராடிய மாணவர்களில் இறந்த உதயகுமாரின் தந்தையை மிரட்டி, 'இறந்தது என் மகனல்ல' என்று நீதிமன்றத்தில் சொல்ல வைத்த அநீதியைப் பற்றி குறிப்பிடாதது ஏன்?
இது தொடர்பாக ஒரு பதிவு எழுதலாமா என்றும் யோசித்து வருகிறேன்'
அதற்கு கீழ்வருமாறு அவரிடமிருந்து பதில் வந்தது.
‘உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுகின்றேன். எல்லா விமர்சனங்களும் (விஷமத்தனமானவை தவிர்த்து) வரவேற்கப் பட வேண்டும்.’
'பெரியார்' கொள்கையாளராக நான் பயணித்த காலத்தில், 'பெரியாரியலுக்கு' எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில், 'விஷமத்தனமானவை’ என்று எதையும் ‘தவிர்த்து' எனது வாதங்களை முன் வைத்ததில்லை.
'விஷமத்தனமானவை’ 'உணர்ச்சிபூர்வமாக இழிவு படுத்துவை' என்பதாக எனக்குத் தெரிந்தாலும், அவற்றுள் ஏதேனும் புதிய தகவல் இருக்கிறதா? என்ற தேடலுடனேயே பயணித்தேன். அவற்றிற்கு எதிர்வாதம் வைத்த போதும், ' விஷமத்தனமானவை, உணர்ச்சிபூர்வமாக இழிவு படுத்துவை' என்ற அடிப்படையில் அவற்றை மறுத்ததுமில்லை. இன்றும் எனது ஆய்வுகள் தொடர்பான விவாதங்களிலும் அதே அணுகுமுறையில் தான் பயணித்து வருகிறேன்.
'விஷமத்தனமானவை’ என்பதற்கு மேற்குறிப்பிட்ட காணொளியிலேயே நான் உதாரணம் காட்ட முடியும்.
'பெரியார்' இயக்கத்தில் நுழைந்த பின் தான், இழிவுக்கு இலக்கணமான நபர்களுடன் பழகும் அனுபவங்கள் எனக்குக் கிட்டின, என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அதே நேரத்தில், வேறு வகையில் எனக்கு சந்திக்க வாய்ப்பு கிட்டியிராத அபூர்வமான அரிய மனிதர்களையும், நான் சந்திக்கும் வாய்ப்புகளும் கிட்டின. அத்தகைய வெகு சிலரில் ஒருவர் புலவர் இமயவரம்பன் ஆவார். தமிழில் புலவர் பட்டம் பெற்று, தமக்கு குடும்பத்தில் ஒதுக்கப்பட்ட சொத்துடன், விரும்பி ஈ.வெ.ராவிற்கு உதவியாளராகி, திருமணம் செய்து கொள்ளாமல், ஈ.வெ.ராவிற்கே தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இமயவரம்பன் ஆவார்.
1969இல் முதல்வராகி, 'அறிவியல் ஊழலை' அறிமுகப்படுத்தி, தாம் டாக்டர் பட்டம் பெறுவதை எதிர்த்து போராடிய மாணவர்களில் இறந்த உதயகுமாரின் தந்தையை மிரட்டி, 'இறந்தது என் மகனல்ல' என்று நீதிமன்றத்தில் சொல்ல வைத்த அநீதியை தமிழ்நாட்டில் அரங்கேற்றிய தி.மு.க தலைவர் கருணாநிதியையும்;
'கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டால், எனது மனைவி கூட என்னை மதிக்க மாட்டாள்' என்று அறிவித்து, பின் தமது சுயலாப அரசியலுக்காக அதிலிருந்து தடம் புரண்ட அன்பழகனையும்;
ஈ.வெ.ராவுக்கு கிடைத்த அரிய மனிதரான இமயவரம்பனுக்கு சமமாக, மேற்குறிப்பிட்ட காணொளியில் வெளிப்பட்ட பகுதியானது; 'விஷமத்தனமானவை’ என்பதற்கு உதாரணமாகும். ஆனால் அதை மட்டுமே முன்வைத்து, மேற்குறிப்பிட்ட காணொளியில் வெளிப்பட்ட தகவல்கள் எல்லாம் 'விஷமத்தனமானவை’ என்று முடிவு செய்ய முடியாது.
ஈ.வெ.ரா அவர்கள் 'பெரியார்' என்ற பிம்பத்தில் சிக்கி, அவரின் வெளிப்படையான சாராம்சத்தை விட்டு, எவ்வளவு தூரம் விலகி, எந்தெந்த 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணித்து வருகிறார்கள்? என்ற கேள்வியும், துக்ளக் இதழில் எனது கட்டுரைகள் வெளிவருவது தொடர்பாக, முன்பு தொல்கப்பியன் வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்து மூலமும் வெளிப்பட்டது.
"பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பதைப் பொதுவாக வெளிப்படையாகச் செய்வது யாருக்குச் சாதமாக முடியும் என்று யோசிக்க வேண்டும்."
நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், சென்னை 'பெரியார் திடலிலும்', திருச்சி 'பெரியார் மாளிகையிலும்',
1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களில் மூழ்கி வியந்து வாழ்ந்த காலம், இன்றும் நினைத்தாலும் இன்பம் தர வல்லதாகும். 1967
வரை ஈ.வெ.ரா அவர்கள் தமது பிறந்த நாளில் வெளியிட்ட அறிக்கைகளை, இன்றும் அறிவு
நேர்மையுள்ள 'பெரியார்' எதிர்ப்பாளர்களும் படிக்க நேர்ந்தால் வியப்பு எய்துவார்கள்.
'திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பதைப் பொதுவாக வெளிப்படையாகச் செய்வது’ என்ற 'தவறினை' நடைமுறையாக்கி, கொள்கை எதிரிகளே பிரமிக்கும் வகையில் துணிச்சலுடன் பயணித்தவர் ஈ.வெ.ரா என்பதை, மேலே குறிப்பிட்ட சான்றுகள் எல்லாம் எனக்கு உணர்த்தின.
"அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பது; பொதுவாக வெளிப்படையாகச் செய்வது' என்ற இருவேறு அணுகுமுறையில் பயணித்த தேசிய, பொதுவுடமை கட்சிகளை எல்லாம், தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் ஓரங்கட்டியதன் விளைவாகவே;
ஈ.வெ.ரா அவர்களின் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை ஆதரித்து தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் 1952 முதல் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியில், காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற முடியாமல் தோற்ற வரலாறு அரங்கேறியது.
அவ்வாறு ஈ.வெ.ராவின் ஆதரவில் தமிழ்நாட்டில் கட்சிகள் தேர்தலை சந்தித்த வலிமையையும், இன்று 'பெரியார்' கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள வலிமையையும் ஒப்பிடுவதானது, அரிய பாடங்களைத் தர வல்லதாகும்.
(‘ஈ.வெ. ரா -வின் வெளிப்படையான சாராம்சத்தை விட்டு விலகி, 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிக்கிறார்களா? 'பெரியார்' பிம்பம்' ஈ.வெ.ராவின் சமாதியாகுமா?’;
‘'பெரியார்' ஈ.வெ.ராவிற்குப் பின், நானறிந்த வரையில், தமிழில் 'அநாகரீகம்' என்ற அடையாளத்தில் உள்ள சொற்களை பயன்படுத்திய, 'ஊழல்' குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆவார். இருவருமே தாம் பயன்படுத்திய அந்த சொற்களுக்கு, அறிவுபூர்வமான விளக்கமும் தந்துள்ளனர். உதாரணமாக, தான் பயன்படுத்திய ''பொர்க்கி'
(porki) என்ற சொல்லானது, 'ஆபாசமாக, வன்முறை தொனியில், அச்சுறுத்தும் வகையில், பேசி விட்டு, எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிபவர்' (One
of the ways to recognise a porki is if his or her language is vulgar hard porn,
threatens violence but runs away on retaliation ) என்று சுப்பிரமணியசுவாமி தமது 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட' கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் ''பொர்க்கி'
(porki) தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், ''பொர்க்கி'
(porki) விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும். 'பெரியார்' ஈ.வெ.ரா-வையும், சுப்பிரமணிய சுவாமியையும், அவர்களின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இணையத்தில், 'உணர்ச்சிபூர்வமாக' இழிவுபடுத்தும் போக்கில் ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா, சுப்பிரமணிய சுவாமி ஆகிய அந்த இரண்டு பேருமே சுயநலத்தில் பணம் சம்பாதிக்க பொதுவாழ்வில் இருந்தவர்கள் அல்ல. எனவே 'பொதுவாழ்வு வியாபாரிகளும்', அவர்களின் எடுபிடிகளும், அந்த இருவரையும் கண்டிக்க அருகதை அற்றவர்கள், என்பதும் என் கருத்தாகும்.
(‘ஈ.வெ.ரா, ராஜாஜி தோற்ற 'இடத்தில்', சு.சுவாமி ஜெயிப்பாரா?’; http://tamilsdirection.blogspot.com/2017/02/)
'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று ஈ.வெ.ரா எவ்வாறு முடிவு செய்தார்? (‘'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்’; http://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html)
இன்று இந்துத்வா ஆதரவாளர்களில் எச்.ராஜா, ராஜிவ் மல்கோத்ரா உள்ளிட்ட இன்னும் பலர் ஈ.வெ.ராவை தெரிந்தோ தெரியாமலோ இழிவுபடுத்தி வருகிறார்கள்.
'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று ஈ.வெ.ரா எவ்வாறு முடிவு செய்தார்? (‘'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்’; http://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html)
இன்று இந்துத்வா ஆதரவாளர்களில் எச்.ராஜா, ராஜிவ் மல்கோத்ரா உள்ளிட்ட இன்னும் பலர் ஈ.வெ.ராவை தெரிந்தோ தெரியாமலோ இழிவுபடுத்தி வருகிறார்கள்.
(‘Rajiv
Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics
-EVRamaswamy’; Why it may accelerate the breaking of Tamilnadu from India?’; http://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html)
அவர்களின் பார்வைக்கு கீழ்வருவது உரியதாகும்.
காஞ்சி 'ஆச்சார்யா' சந்திரசேகர சங்கராச்சாரியார் தமிழ்நாட்டு மக்களை ஈர்க்க, ஈ.வெ.ரா அவர்களை முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு சுப்பிரமணியசுவாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
The following evidence suggest
that Subramanian Swamy may be emulating E.V.R, as advised by Kanchi
‘Parmacharya’.
“Ironically, in one of his
tutorials to me by Parmacharya, God on earth, he said Periyar EVR had kept his
vow to his parents to maintain the ancestral temple in Erode, which temple
received first prize for the best maintained temple for years. Parmacharya also
told me to learn from Periyar EVR how one man can change the thinking of crores
of people with nothing but ideas.”
(‘‘Periyar’ parties’ ipso facto rejection of
EVR; LTTE Prabakaran replacing ‘Periyar’ E.V.R in Tamilnadu?’;
'இந்திய விடுதலையை' நிராகரித்து, பிரிவினை கோரிக்கையுடன் பயணித்த ஈ.வெ.ரா அவர்களை உணர்ச்சிபூர்வமாக கண்டித்ததில், எச் ராஜாவுக்கு முன்னோடியாக பிரதமர் நேரு இருந்திருக்கிறார். அது போன்ற கண்டனங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானத்தை'
(Nation Building) சீர் குலைத்து, பிரிவினை முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுத்து வந்துள்ளன.
சீனப் போருக்குப் பின், தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த பிரதமர் நேரு, பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ராவின் பிரிவினை கோரிக்கையைக் குறிப்பிட்டு, கோபமாக 'இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' என்று பேசினார். அதற்குப் பின் நடந்த 1967 தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் கட்சியானது, இன்றுவரை திராவிடக்கட்சிகளின் வாலாகவே பயணித்து வருகிறது.
(‘எச் ராஜாவுக்கு முன்னோடியான பிரதமர் நேரு? தமிழ்நாடானது மீட்சிப் பாதையில் முன்னேற தொடங்கி விட்டது.’;
தமிழ்நாட்டில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த அடிப்படையில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணித்ததாகக் கருதி, மீண்டும் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்கவேண்டும்;
என்று பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம் முயலும் வரை;
தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் வேர் பிடிக்க முடியாது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இந்துத்வா வேர் பிடித்தாலும், தமிழக பா.ஜ.க வேர் பிடிக்க முடியாது.’
என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
வைக்கம் போராட்ட வீரர் ஈ.வெ.ராவிற்கும், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் முக்கியமானவையாகும்.
1944க்கு முந்தைய, ஆக்கபூர்வமான சமூக தள விளைவை (Social Polarization) சிதைத்து, அழிவுபூர்வ சமூக தள விளைவில், தமிழும், தமிழர்களும் சீரழிந்து வருகிறார்களா? என்ற ஆய்வை, விருப்பு வெறுப்பற்ற, எவரையும் இழிவுபடுத்தும் உள்நோக்கமின்றி, அறிவுபூர்வமாக முன்னெடுப்பதில் தான், தமிழின், தமிழர்களின் மீட்சி அடங்கியுள்ள்து, என்பது என் கருத்தாகும்.
(‘தமிழும், தமிழர்களும்,சீரழிய, 'பாதகமான சமூக மடை மாற்றம்' காரணமா?’;
https://tamilsdirection.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html)
இன்று சாதி அடிப்படையில் புறக்கணிப்பதைப் பகிரங்கமாக எந்த கட்சியும் ஆதரிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது எவ்வாறு தீண்டாமையை எதிர்த்து, கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்துள்ள வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெளிவுபடுத்தியுள்ளார்.
(https://www.indiatoday.in/india/story/rss-does-not-believe-in-caste-discrimination-mohan-bhagwat-1343836-2018-09-19 )
தேசியவாதியாக, பாரதியார் பாடலைப் பாடிக்கொண்டு ஈ.வெ.ரா முக்கிய பங்காற்றிய வைக்கம் போராட்டம் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்திய புத்தகத்தினை விமர்சித்து, வரவேற்க வேண்டியவைகளை வரவேற்று பாராட்ட வேண்டிய தமிழக பா.ஜ.கவும் அதன் ஆதரவு சக்திகளும் எமாந்து அப்புத்தகத்தை
இன்று சாதி அடிப்படையில் புறக்கணிப்பதைப் பகிரங்கமாக எந்த கட்சியும் ஆதரிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது எவ்வாறு தீண்டாமையை எதிர்த்து, கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்துள்ள வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெளிவுபடுத்தியுள்ளார்.
(https://www.indiatoday.in/india/story/rss-does-not-believe-in-caste-discrimination-mohan-bhagwat-1343836-2018-09-19 )
தேசியவாதியாக, பாரதியார் பாடலைப் பாடிக்கொண்டு ஈ.வெ.ரா முக்கிய பங்காற்றிய வைக்கம் போராட்டம் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்திய புத்தகத்தினை விமர்சித்து, வரவேற்க வேண்டியவைகளை வரவேற்று பாராட்ட வேண்டிய தமிழக பா.ஜ.கவும் அதன் ஆதரவு சக்திகளும் எமாந்து அப்புத்தகத்தை
(‘வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?’;
இந்துத்வா எதிர்ப்பு முகாம்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து பயணித்து வருகின்றன. மேற்குறிப்பிட்ட எனது ஆய்வு முடிவிற்கான நிகழ்காலச் சான்றாகவே மேற்குறிப்பிட்ட காணொளி வெளிவந்துள்ளது.
‘சமூகத்தில் எதையும் கறுப்பு – வெள்ளையாகவே, அல்லது வெற்றி – தோல்வியாகவே, இரட்டை இலக்க அணுகுமுறையில்
(Binary) பார்ப்பதானது, நமது வாழ்க்கையையே அந்த சமூக இரட்டை இலக்க சிறையில் சிக்க வைத்துவிடும்.’
ஆய்வுகளின் அடிப்படைகளில் வெளிவரும் எந்த நூலையும் 'இந்துத்வாவிற்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா?' மற்றும் அது போல 'பெரியார் ஈ.வெ.ரா'விற்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா?' என்பது போன்ற இரட்டை இலக்க (Binary)
முறையில் அணுகும் சமூக நோயிலிருந்து தமிழ்நாட்டை முதலில் விடுவிக்க வேண்டும்.
அதுவரை இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டு முகாம்களும் பொதுவாழ்வு வியாபாரிகளிடம் சிக்கி சீரழிவதைத் தடுக்க முடியாது. அது தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியையும் தாமதப்படுத்தும்.
பாதுகாக்கப்பட வேண்டியது; ஈ.வெ.ராவின் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் கேள்விகள் கேட்கும் ஆராய்ச்சியே; 'உணர்ச்சிபூர்வ' எதிர்ப்புகளை, 'அறிவுபூர்வமாக' சந்தித்த அணுகுமுறைகளே; 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாத அவரது கொள்கைகளையல்ல.
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html)
பாதுகாக்கப்பட வேண்டியது; ஈ.வெ.ராவின் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் கேள்விகள் கேட்கும் ஆராய்ச்சியே; 'உணர்ச்சிபூர்வ' எதிர்ப்புகளை, 'அறிவுபூர்வமாக' சந்தித்த அணுகுமுறைகளே; 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாத அவரது கொள்கைகளையல்ல.
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html)
No comments:
Post a Comment