Sunday, May 3, 2020


கொரோனாவிற்குப் பிந்தைய உலகத்தில்,


இசைத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்?


இசையைக் கேட்டு ரசித்த (passive) ரசனையில் இருந்து


இசை வாசித்து, இசை உருவாக்கி மகிழும் செயல்பூர்வ (proactive) திசையில், இசை ரசனையும் மாற்றம் பெறுமா?



தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் முன்னணியில் உள்ள மூத்த மற்றும் இளம் இசை அமைப்பாளர்கள் உள்ளிட்டு;

அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் மூலமாக, தமிழ்நாட்டில் வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், தமது வாழ்வை அசை போட்டு நெறிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் இப்போது கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று ஓய்வதற்கு இரண்டு வருடங்கள் கூட ஆகலாம், என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுவாக தொற்று நோய்த்தடுப்பு மற்றும் தொற்றுநோய்க்கான மருந்துக்கான ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தாலும், அவற்றை பரிசோதனைக்கு (clinical trials) உட்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கும் சில வருடங்கள் ஆகலாம். அவ்வாறு பயன்பாட்டிற்கு வந்த பின்னர், லாப நோக்கில், அரைகுறையாக பரிசோதனைகளை முடித்து, சந்தைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான மருந்து நிறுவனங்களும் உள்ளன. பல வருடங்களாகப் பயன்படுத்தப்பட்ட பின்னர், ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தி, சந்தையில் இருந்து அகற்றப்பட்ட மருந்துகளும் உண்டு

எனவே கொரோனா தொற்று நோய்த்தடுப்பு மற்றும் தொற்றுநோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தைக்கு வந்தாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் தான், ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே கொரோனாவிற்கு முன் இருந்த உலகத்தில் இருந்து, மிகவும் மாறுபட்ட திசையில் தான், கொரோனாவிற்குப் பிந்தைய உலகம் பயணிக்கப்போகிறது. அது தொடர்பான கணிப்புகளும் வெளிவந்துள்ளன

பொதுவாக ஏர்கண்டிசன் அறைகளிலும் அரங்குகளிலும் நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன

மேற்குறிப்பிட்ட கணிப்புகளின்படி, சமூக இடைவெளிக்கான இருக்கைகளுடன் மாற்றியமைக்கப்பட்டாலும், திரையரங்குகள் வருமானம் ஈட்டுவதில் சிரமங்கள் அதிகரிக்கும்திரையரங்குகளின் காலம் முடிந்து விடப்போவதாகவும், கணிப்புகள் வெளிவந்துள்ளன.

‘Movie theatres, on the other hand, are looking more like an endangered species thanks to COVID-19.’ (https://blooloop.com/covid-19-movie-theatre-disappear/)

எனவே ஹாலிவுட் உள்ளிட்ட திரைத்தொழில்கள் எல்லாம், 'ஆன் லைன்' (Online) வர்த்தகத்தையே நம்பி செயல்பட வேண்டிய மாற்றங்களுக்கு உள்ளாகும். பெரிய பட்ஜெட் படங்களின் காலமானது முடிவுக்கு வந்து விடும்.

இப்போது வெளியிடும் நிலையில் உள்ள திரைப்படங்களை திரை அரங்குகளில் வெளியிடும் வாய்ப்பானது, எவ்வளவு காலம் தாமதமாகும்? பின்னணி இசைச்சேர்ப்பு முடியாத திரைப்படங்களுக்கான பணிகளை முடிக்க, எவ்வளவு கால தாமதம் ஆகும்?

இடையில் கடனில் மூழ்கும் தயாரிப்பாளர்களால், பாதியில் கைவிடப்படும் திரைப்படங்களுக்கும் வாய்ப்பு உண்டா?

போன்ற இன்னும் பல கேள்விகள் எல்லாம், இசை அமைப்பாளர்களின் வருமானங்களையும், வாய்ப்புகளையும், வருங்காலத்தையும் பாதிக்கக்கூடிய கேள்விகள் ஆகும்.

கூடுதலாக, இசைக்கச்சேரிகள் நடத்த திட்டமிட்டிருந்த இசை அமைப்பாளர்களுக்கு கீழ்வரும் சிக்கலும் கூடியுள்ளது.

கொரோனாவிற்குப்பின் தொடங்கும் பொருளாதார நடவடிக்கைகளில் கடைசியாகவே மேடைக்கச்சேரிகள் அனுமதிக்கப்படலாம். அவ்வாறு அனுமதிக்கப்படுவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். அவ்வாறு அனுமதித்தாலும், முகக்கவசம், வெப்பநிலை சோதனை, சமூக இடைவெளி போன்ற கெடுபிடிகளுடன் தான் அனுமதிக்கப்படும். எனவே மேடைக்கச்சேரிகள் கொரோனாவிற்குப் பின், இசைக்கலைஞர்களுக்கு பழைய பாணி வருமானம் தருவதற்கு வாய்ப்பு குறைவாகும்.

‘Even as other businesses like restaurants or retail slowly re-emerge, and workers begin to restart the economy, the concert industry could take well over a year or more to look anything like what we’re used to.When shows hopefully resume in 2021, promoters will likely treat the disease like another security measure at the gates: temperature checks, mandatory face masks or even on-site COVID-19 testing are all potential measures in the future.’ 

கொரோனாவிற்குப் பிந்தைய உலகத்தில் இசைத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்? என்று முன்கூட்டியே கணித்து, அதற்க்கேற்றார்ப்போல் தம்மை மாற்றி வளர்த்துக் கொள்பவர்களே, முந்திக்கொண்டு வெற்றி பெற்றவர்களின் வரிசையில் இடம் பெறலாம்.

அரங்குகள் இன்றி, நேரடி இணைய ஒளிபரப்பில் இசைக்கச்சேரிகளுக்கான சந்தை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது

For the past month, though, Miller has played all his shows from the small office he built in his garage in upstate New York, allowing his audiences to enjoy his songs without fear of Covid-19.
“Thank you for coming to my house, and thank you for letting me come to your house,” Miller says during the 45-minute show for Coombie and the rest of the audience. 

ஏற்கனவே பிரபலமான பாடல்களை உருவாக்கிய இசை அமைப்பாளர்களில் ஆர்வமுள்ளவர்கள், அரசு அனுமதிக்கும் சமூக இடைவெளியுடன் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து;

அல்லது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் அந்தந்த இசைக்கலைஞர்கள் அவரவர் இல்லத்தில் இருந்து இசைக்க, அவற்றை சேர்த்து, நேரடி இணைய ஒளிபரப்பு இசைக்கச்சேரிகளை இசை அமைப்பாளர்கள் வழங்கலாம். கட்டணம் செலுத்திய ரசிகர்கள் அதனை இணையவழியில் ரசிக்கலாம். பின் அதே நிகழ்ச்சியை, மிகவும் குறைந்த கட்டணத்தில் மறு இணைய ஒளிபரப்பு செய்யலாம்.

கொரோனாவிற்குப் பின் இசைத்துறை எந்த திசையில் பயணிக்கும்? என்பது தொடர்பான முக்கிய சிக்னலும் வெளிப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியுடன், பொதுவில் கூடுவதைத் தவிர்த்து வாழ வேண்டிய நெருக்கடியில், இசை தொடர்பான தேவைகளை நிறைவு செய்வதில் தற்சார்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோன தொற்று காலத்தில், எல்லா விற்பனைகளும் சரிவைச் சந்தித்து வரும் வேளையில், இசைக்கருவிகள் மற்றும் சாதனங்களின் விற்பனை அதிகரித்து வருவதை, கீழ்வரும் சான்றுகள் வெளிப்படுத்தியுள்ளன.

Due to a HUGE increase in online orders however, processing orders is taking 3 business days. We endeavour to dispatch them as quickly and safely as possible. 

With time to spare, musical beginners are diving in by purchasing instruments for the first time and signing up for lessons. Tuerk says Reverb is currently welcoming an influx of new buyers. “We’re seeing an increase in acoustic guitar, synthesizer, keyboard, and pro audio orders,” he says. “Based on the types of gear they’re purchasing, many of these new buyers appear to be beginners.”

Defying the economic downturn, online business is booming for Apple’s GarageBand music software, as well as Sweetwater, Guitar Center, Reverb, and other retailers. 

அதாவது தமது இடத்தில் இருந்தபடி, தமக்குப் பிடித்த இசைக்கருவிகளை கற்று வாசித்து இன்புறும் போக்கு அதிகரிக்கப் போகிறது.

இசைக்கலைஞர்கள் தமது வருமானத்தை பாதுகாக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.

Music producer Appiah Dankwah, known popularly as Appietus, urged musicians to seek different ways to go about their music business, and was hopeful that this would get better shortly. 

எனவே பிரபலமான இசைக்கலைஞர்கள் தமது வருமானத்திற்காக இணைய வழி இசை வகுப்புகள் நடத்தும் வாய்ப்புகளும் கூடி வருகின்றன. அவ்வாறு உருவாகும் புதிய இசை மாணவர்களுக்கு இசையியல் (musicology) உள்ளிட்ட கூடுதல் பயிற்சிகளுக்காக, அனுபவம் மிக்க இசை ஆசிரியர்களிடம் இணையம் மூலமாக கற்கும் வாய்ப்புகளும் கூடி வருகின்றன.

எனவே உலக அளவில் இசையைக் கேட்டு ரசித்த (passive) ரசனையில் இருந்து, இசை வாசித்து, இசை உருவாக்கி மகிழும் செயல்பூர்வ (proactive) திசையில் இசை ரசனையும் மாற்றம் பெறத் தொடங்கியுள்ளது.

அவ்வாறு வாசிக்கப் பழகியவர்கள் எளிதில் வாசித்து இன்புறும் புதிய இசைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் வாய்ப்பும் கூடி வருகிறது.

நேரடி இணைய ஒளிபரப்பில் இசைக்கச்சேரிகளுக்கான சந்தையைத் தக்க வைத்துக்கொள்வதற்கும்;

இணையவழி விற்பனையில் புதிய இசைகள் மூலமாக வருமானத்தைப் பெருக்கவும்,

தாம் உருவாக்கிய இசையை இணையவழியில் மாணவர்கள் கற்று வாசிப்பதற்காகவும், அதன் மூலமான வருமானத்தை அதிகரிக்கவும்;

புதிய இசைகளை உருவாக்கும் இசை அமைப்பாளர்கள் எல்லாம், கொரோனாவிற்கு பிந்தைய உலகத்தில் வளரப்போகின்றவர்கள் ஆவார்கள்.

உலகில் வெளிப்படும் இசை ரசனைகளின் தேவைகளை அடையாளம் கண்டு, புதிய இசைகளை உருவாக்கும் நுட்பங்களை எல்லாம், எனது இசை ஆராய்ச்சிகளின் மூலமாக நான் கண்டறிந்துள்ளேன். எனது ஆற்றலும் நேரமும் இசை ஆராய்ச்சிகளுக்கே செலவிடுவதே, நான் விரும்பி ஏற்று பயணித்து வரும் வாழ்க்கையாகும். எனவே திரை இசை அமைப்பாளராகும் வாய்ப்பானது, எதிர்பார்க்காமலேயே என்னைத்தேடி வந்த போதும், கொஞ்சம்  கூட சலனமின்றி அதனைத் தவிர்த்தே பயணித்து வருகிறேன். (குறிப்பு கீழே)

2018 சூலையில் கம்போடியா நாட்டில் உள்ள ஆங்கோர் வாட் கோவிலுக்கு சென்றிருந்தேன். அந்நாட்டு 'xylophone' இசைக்கருவியில் வாசிக்கக்கூடிய இசையை நான் உருவாக்கி, கணினியில் பதிவு செய்து கொண்டு சென்றேன்.

Heritage Hub, Cambodian Living Arts, Siem Reap என்ற மையத்தில் அந்த கருவியை வாசிக்கக்கற்று தரும் மூத்த இசை ஆசிரியர் மற்றும் அந்த மையத்தின் மேலாளர் முன்னிலையில், அந்த இசைக்கருவியில் வாசிப்பதற்காக நான் உருவாக்கிய இசையை, எனது மடிக்கணினியின் துணையுடன் இசைக்குறிப்புகளுடன் (Music Notes) இசைக்கச் செய்தேன். பிரமித்து என்னைப் பாராட்டிய அந்த இசை ஆசிரியரும், மேலாளரும், நான் இசை அமைத்த நுட்பத்தைக் கற்றுத்தருமாறு கோரினார்கள். எனக்கு வாய்ப்பு கிட்டும்போது, அங்கு சென்று சில வாரங்கள் தங்கி அதை சொல்லித் தரும் எண்ணமும் உள்ளது.

'கட்டிடமானது உறைந்த இசையாகும்' (Architecture is frozen music) என்ற அடிப்படையில், அந்த உறைந்த இசையைப் பிரித்தெடுக்கும் 'லாஜிக்கைக்' (Logic) கண்டுபிடிக்க, கி.முவில் வாழ்ந்த விட்ரிவியஸ் முதல், நவீன உலகத்தில் செனாக்ஸிஸ் உட்பட பலர் முயற்சித்தனர். அம்முயற்சிகளின் தொடர்ச்சியாக, நான் ஆலோசகராக செயல்பட்ட குழு மூலமாகக் கண்டுபிடித்து, காப்புரிமை (patent) பெற்று, ஆய்வு இதழிலும் வெளியிட்டுள்ளோம்.

The Logic of Defreezing the Music from the Building Architecture, started from Vitruvius (80 -15 BC), and pursued by  Iannis Xenakis, among many others in the modern era, was finally discovered by Dr.Vee, as the Project Consultant of the on-going R & D project at National Institute of Technology, Trichy, India, with patent and published in SCI journal ‘Multimedia Tools and Applications – Springer‘ 

'இசை அமைத்தல்' என்பது ஓர் இசைக்கட்டிடம் (Musical Building) கட்டுவதைப் போன்றதே ஆகும்.  அந்த நுட்பத்தில், உலகில் எந்த வகை இசையையும், அல்லது புதிய ரசனைகளுக்கான புதிய வகை இசைகளையும் உருவாக்க முடியும்

கொரொனாவிற்குப் பிந்தைய உலகத்தில், கட்டிடக் கலைஞர் (Building Architect) போலவே, இசைக்கட்டிடக் கலைஞர்களாக (Musical Building Architects)  தம்மை வளர்த்துக் கொள்ளும் இசை அமைப்பாளர்களே (Music Composers) வெற்றி பெற முடியும்.

எனவே அந்த நுட்பத்தின் மூலமாக, கொரோனாவிற்குப் பிந்தைய உலகத்தில் இசை அமைப்பாளர்கள் புதிய இசைகளை உருவாக்க முடியும்.

அதனை செயல்பூர்வமாக நிரூபிக்க, நான் உருவாக்கிய இசைகளில் ஒன்றையே, மேற்குறிப்பிட்டவாறு கம்போடியாவில் இசை ஆசிரியர் முன்னிலையில் நிகழ்த்தினேன்(Listen ‘Angkor 2020’ in http://muxel.sg/)

அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் மூலமாக, தமிழ்நாட்டில் வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவர்களில், தமது வாழ்வை அசை போட்டு நெறிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுள்ள இசை அமைப்பாளர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். (Email: pannpadini@gmail.com) அவர்களின் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் ஏற்ற வகையில், அவர்கள் புது இசைகளை உருவாக்க நான் ஆலோசகராக துணை புரியலாம். அதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மூலமாக, மேற்குறிப்பிட்ட நுட்பம் அவர்களுக்கு படிப்படியாக விளங்கும். ஓரளவு பிரபலமான மூத்த மற்றும் இளம் திரை இசை அமைப்பாளர்களுக்கே நான் முன்னுரிமை கொடுக்க எண்ணியுள்ளேன். ஏனெனில் அவர்களில் ஆர்வமுள்ளவர்கள் அதன் பயன் மதிப்பை உணர்ந்த பின்னர், அதனை உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் தூதர்களாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. 

எனது இசை ஆராய்ச்சிகள் மூலமாக வெளிவந்த கண்டுபிடிப்பின் மூலமாக, கொரோனாவிற்கு பிந்தைய உலகத்தில் இசை அமைப்பாளர்களும், அவர்கள் மூலமாக இசைத்துறையும் பலன் பெறுவதே எனது இலக்காகும்.‌


குறிப்பு:

இசைக் கருவிகளின்றி கணினி மூலம் (1996 சமயம்) நான் உருவாக்கிய இசைக்குப் பொருத்தமான பாடல் வரிகளுடன், 2011இல் (இசை படித்திராத) ஒரு கல்லூரி மாணவருக்கு பயிற்சி கொடுத்து, அவர் படித்த  கல்லூரி  நிகழ்ச்சியில் பாட வைத்தேன். பின்னணி இசை கணினியிலிருந்து 'பெருக்கி' (amplifier) மூலம் ஒலிக்க, 'மைக்' முன் அந்த மாணவர் பாடினார். பாட்டு முடிந்தவுடன், அந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர்-'பசங்க'  திரைப்பட இயக்குநர்-   பாண்டிராஜ் தாமாகவே மேடையில் ஏறி, மைக்கைப் பிடித்து, 'இந்த பாடல், இசைக்கருவிகளுடன் ரெக்கார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவு செய்து கேட்டால், எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 'சுப்பிரமணியபுரம்' படத்தில் 'ஹிட்' ஆன 'கண்கள் இரண்டால்' என்ற பாட்டு அளவுக்கு 'ஹிட்' ஆகும். எனது அடுத்த படத்திற்கு இசை அமைப்பாளரை முடிவு செய்து விட்டேன். எனவே எனது அதற்கடுத்த படத்திற்கு, என்னை இசை அமைப்பாளர்" என்று அறிவிக்க ஒரே கைதட்டல். நிகழ்ச்சி முடிந்ததும், அவர் வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து, ‘திரைத் துறை எனக்கு சரி வராது, எனது இசை ஆய்வுகளே எனக்குப் போதும்' என்று சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தேன்

No comments:

Post a Comment