Thursday, May 14, 2020


நோவாம் சோம்ஸ்கியிடமிருந்து தமிழ்ப்புலமையாளர்கள் கற்க வேண்டிய பாடங்கள்? (2)


நோவாம் சோம்ஸ்கியின் 'உலக மொழி இலக்கணம்';


எதிர்ப்புகளுக்கு விடையளிக்கும் சாத்தியம் தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில்?



இன்றுவரை உலகில் உள்ள மொழியியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலும், நிராகரிக்கப்படாமலும், ஆராய்ச்சி நிலையிலும், விவாத நிலையிலும் நோவாம் சோம்ஸ்கியின்அனைத்து இயற்கை மொழிகளுக்குமான பொது இலக்கணம்’ (Universal Grammar - UG) உள்ளது.

உலகில் உள்ளமொழிகளுக்கான 'உலக மொழி இலக்கணம்' (Universal Grammar: https://en.wikipedia.org/wiki/Universal_grammar) தொடர்பாக நோவாம் சோம்ஸ்கி முன்வைத்த கருத்தினை ஆதரித்தும் எதிர்த்தும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன

நோவாம் சோம்ஸ்கியின் கருத்துக்கு எதிராக, 'பொருள் சார்பற்ற (non-semantic) அமைப்புகளின் (structures) அடிப்படையில், எவ்வாறு ஒரு உலக இலக்கணம் இருக்க முடியும்?' என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்தில் உள்ள யாப்பிலக்கணமானது 'பொருள் சார்பற்ற (non-semantic) அமைப்புகளின் (structures) அடிப்படையில், எவ்வாறு ஒரு உலக இலக்கணமாகஇருக்கிறது?'

என்பதை சிங்கப்பூரில் நான் ஆற்றிய உரையின் கீழ்வரும் காணொளி விளக்கியுள்ளது.
The Origins of Tamil Classical Music by Dr Vee - Part 1 of 2; https://www.youtube.com/watch?v=7lGtWcwS7Ww&t=13s

நோவாம் சோம்ஸ்கியின் 'உலக மொழி இலக்கணம்' நிலைப்பாட்டிற்கு எதிராக வெளிப்பட்டு வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் சாத்தியமானது, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில் உள்ளது. அதனை 2 பிப்ரவரி 2019 மடலில் கீழ்வருமாறு குறிப்பிட்டு அவருக்கு அனுப்பினேன்.

Musical Linguistics rules for poems discovered in the ancient Tamil grammar tholkAppiam, are non-semantic and music related rules for poems, and hence applicable to the musically rendered poems in world languages.

The unique phonetic dimensions of the Sanskrit letters and the rules of joining the letters in pANini’s Ashtadhyayi, led to the development of the modern linguistics.

The unique phonetic dimensions of the Tamil letters and the rules of joining the letters for composing the poems in tholkAppiam, will lead to the development of the musical linguistics. The above rules of joining the letters for composing the poems are non-semantic and hence language-independent, but musical structure dependent.

I can very well foresee the convergence of the logic in Ashtadhyayi employed in the modern linguistics, and the logic in tholkAppiam to be employed in the musical linguistics, in the future research;

addressing the criticisms of Chomsky’s universal grammar (UG)
(http://thebrain.mcgill.ca/flash/capsules/outil_rouge06.html   & https://dlc.hypotheses.org/1269     ) and proving that “that structure-dependence follows from principles of universal grammar that are deeply rooted in the human language faculty”.   

விவாதத்தில் உள்ள தமது ஆய்வு முடிவிற்கு ஆதரவாக வரும் கருத்துக்களை வரவேற்பதே புலமையாளர்களிடம் வெளிப்படும் போக்காக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிட்ட எனது மடலுக்கு சோம்ஸ்கியிடமிருந்து வந்த மடல் என்னை திகைப்பில் ஆழ்த்தியது.

Thanks for sending.  Beyond my competence to express an opinion.’

எனக்கு முன்பு எழுதிய மடல்கள் ஒன்றில், சமஸ்கிருதத்தில் புலமையுள்ள தமக்கு தமிழ் பற்றி ஒன்றும் தெரியாது, என்று நோவாம் சோம்ஸ்கி தெளிவுபடுத்தினார். மேற்குறிப்பிட்ட எனது விளக்கம் சரியா, தவறா, என்று ஆராய்ந்து கருத்து தெரிவிக்க வேண்டுமானால்;

மொழியியல், தமிழ் மட்டுமின்றி, 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) பற்றிய அறிவும் வேண்டும்.

எனவே சோம்ஸ்கிக்கு மேற்குறிப்பிட்டது, அவரின் புலமை தொடர்புள்ள புலங்களுக்கு அப்பாற்ப்பட்டதாகும். அதனை அவ்வளவு பெரிய உலகப்புகழ் பெற்ற அறிஞர் சாமான்யனான என்னிடம் ஒப்புக்கொண்டது அவருக்கே பெருமையே ஆகும்.

அது போன்ற சிக்கலை, எனது முனைவர் பட்ட தொடக்க காலத்தில் நானும் சந்தித்துள்ளேன்.

இசையில் கூட, அதற்கென தனிப்பயிற்சி இன்றி, என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவை நிறைய உண்டு. 1990களில், எனது முனைவர் பட்ட நெறியாளரிடம் (Guide) தாளம் பற்றிய புத்தகத்தைப் படித்து, ஐயங்கள் கேட்ட போது, 'சார், மிருதங்கம் போல, ஏதாவது ஒரு தாளக்கருவி நீங்கள் வாசிக்க கற்று கொண்டால் தான், உங்கள் ஐயங்களை நான் தெளிவுபடுத்த முடியும்' என்றார். ஏற்கனவே 'கிடார்', 'ஆர்மோனியம்' முறையாக ஆசிரியரிடம் கற்றிருந்த நான், பின் ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் தான், எனது ஐயங்கள் தெளிவாகி, மேற்கொண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்கு அதுவே வழியானது.

அடுத்து 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான எனது கண்டுபிடிப்பிற்கு ஆதரவானஒரு ஆய்வுக்கட்டுரையானது, எனது தேடலில் கிட்டியது

அக்கட்டுரையில் உள்ள தொடர்புள்ள பகுதியைக் குறிப்பிட்டு, நான் சோம்ஸ்கிக்கு 13 மார்ச் 2020-இல் அனுப்பினேன். அதற்கு கீழ்வருமாறு மறுநாளே பதில் வந்தது.

‘Sounds plausible, but I don’t know enough to have a useful opinion.’

'நோவாம் சோம்ஸ்கியின் 'உலக மொழி இலக்கணம்' நிலைப்பாட்டிற்கு எதிராக வெளிப்பட்டு வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் சாத்தியமானது, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில் உள்ளது.';

என்பதானது 'நம்பத்தகுந்தது' (plausible) என்று நோவாம் சோம்ஸ்கியே ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிரூபிக்க வேண்டுமானால், இந்தியாவில் ..டி (IIT) போன்ற தரம் மிக்க உயர்க்கல்வி நிறுவனங்களில், அல்லது சிங்கப்பூரில் உள்ள NUS/NTU பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையினைத் துவங்கி, எனது மேற்பார்வையில் ஆய்வுகள் நடைபெற்றாக வேண்டும்.


தொல்காப்பியம் தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரையினை நோவாம் சோம்ஸ்கி படித்து ஏற்கனவே வெளிப்படுத்திய கருத்தானது, தொல்காப்பியத்தின் முக்கியத்துவத்தினை உலக மொழியியல் மற்றும் இசை ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல வல்லதாகும்.


Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical linguistics’ 

எனது ஆய்வுகளை இணையம் வழியாக அறிந்து, மலேசியாவில் வாழும் பேரா.சிவக்குமார் வற்புறுத்தலின் பேரில், பினாங்கில் 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

Musical Linguistics in Tholkappiam’(in Tamil) by Dr.Vee (Website: http://drvee.in/)
on 28.07.2018 in Penang (Malaysia)

அது போல, சிங்கப்பூரில் வாழும் பேரா.அருண் மகிழ்நன் வற்புறுத்தலின் பேரில், சிங்கப்பூரில் ' 'The Origins of Tamil Classical Music’  என்ற தலைப்பில் உரையாற்றினேன்.


நான் அடிப்படையில் இயற்பியல் பேராசிரியர் (Physics Professor); 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும்; இன்று 'இசைத்தகவல் தொழில்நுட்பப் புலமையாளராக' (Music Information Technologist) பயணித்தாலும்.

தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள தமிழ் அறிஞர்களின், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைகள் இன்றி, தமிழக அரசானாலும் சரி, மத்திய அரசானாலும் சரி;

இந்தியாவில் ..டி (IIT) போன்ற தரம் மிக்க உயர்க்கல்வி நிறுவனங்களில், அல்லது சிங்கப்பூரில் உள்ள NUS/NTU பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையினைத் துவக்க சில கோடி ரூபாய்களை ஒதுக்க சாத்தியமில்லை.

ஆனால், வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டிலும் செல்வாக்குள்ள தமிழ் அறிஞர்களின், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைகளின் பேரில்,

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத,ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வாறு வெளிப்பட்டது
(https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_8.html

என்ற கேள்விகளுக்கு விடைகள் தெரியாத வரையில்;

'நோவாம் சோம்ஸ்கியின் 'உலக மொழி இலக்கணம்' நிலைப்பாட்டிற்கு எதிராக வெளிப்பட்டு வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் சாத்தியமானது, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில் உள்ளது.';

என்பதானது 'நம்பத்தகுந்தது' (plausible) என்று நோவாம் சோம்ஸ்கியே ஏற்றுக்கொண்டிருந்தாலும்;

உலக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் எல்லாம், சந்தைப்படுத்தக் கூடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்குவதற்கும், உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் இசைத் துறைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கும் வாய்ப்புகள் இருந்தாலும்;

தமிழக அரசானாலும் சரி, மத்திய அரசானாலும் சரி;

இந்தியாவில் ஐ.ஐ.டி (IIT) போன்ற தரம் மிக்க உயர்க்கல்வி நிறுவனங்களில், அல்லது சிங்கப்பூரில் உள்ள NUS/NTU பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையினைத் துவக்க சில கோடி ரூபாய்களை ஒதுக்க சாத்தியமில்லை.

நோவாம் சோம்ஸ்கி தமது மொழியியல் புலமையையும், அரசியல் தொடர்பான செயல்பாடுகளையும் தனித்தனியாகவும் ஒன்றையொன்று பாதிக்காத வகையிலும் பயணித்து வருகிறார். (Chomsky endeavors to keep his family life, linguistic scholarship, and political activism strictly separate from one another, calling himself "scrupulous at keeping my politics out of the classroom"; 
https://peoplepill.com/people/noam-chomsky/)


நானும் அது போலவே, எனது ஆராய்ச்சிகளையும் பொது அரங்கில் எனது நிலைப்பாடுகளையும், தனித்தனியாகவும் ஒன்றையொன்று பாதிக்காத வகையிலும் பயணித்து வருகிறேன்.

ராஜாஜி, .வெ.ரா, அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாபிரபாகரன், சசிகலா, ஸ்டாலின் உள்ளிட்டு தமிழ்நாட்டின் போக்கின் மீது செல்வாக்கு செலுத்திய, நானறிந்த அனைவர் மீதும், நான் விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். மோடி அரசின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டுவதால், என்னை 'பார்ப்பனக் கைக்கூலி' என்று விமர்சித்த 'பெரியார்' ஆதரவாளர்கள் மீது கோபப்பட்டதுமில்லை. மோடி அரசில் வெளிப்படும் தவறுகளையும், தமிழக பா.. தலைவர்களில் சிலர் வெளிப்படுத்தி வரும் தவறான கருத்துக்களையும் விமர்சித்துள்ளேன். அண்மையில் நான் வெளியிட்ட 'காலனிய மனநோயாளிகளும், திராவிட மனநோயாளிகளும்' (http://tamilsdirection.blogspot.com/2019/12/normal-0-false-false-false-en-us-x-none.html) புத்தகமானது, இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டு எதிரெதிர் முகாம்களிலும் வரவேற்கப்படவில்லை. அதில் எனக்கு வருத்தமும் இல்லை.

அதே நேரத்தில், மேற்குறிப்பிட்ட எனது நிலைப்பாடுகள் காரணமாக, வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டிலும் செல்வாக்குள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும், கடந்த சுமார் 15 வருடங்களாக தமிழ் தொடர்பான எனது கண்டுபிடிப்புகளை எல்லாம் புறக்கணித்திருந்தால், அது நோவாம் சோம்ஸ்கி சந்திக்காத, நான் சந்தித்து வரும் தனித்துவமான சிக்கலாகும்புலமையின் வளர்ச்சிக்குக் கேடான அது போன்ற சிக்கலில், 1967க்குப்பின் தமிழ்நாடு சிக்கியது போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும், உலகில் எந்த ஜனநாயக நாடும் சிக்கியதாகத் தெரியவில்லை. அது இனியும் நீடிப்பதானது, தமிழின் வளர்ச்சிக்கு கேடாகும்

வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாட்டுடன், வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி, வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டிலும் செல்வாக்குள்ள தமிழ் அறிஞர்களும் தமிழ் அமைப்புகளும் செயல்பட்டு வருகிறார்களா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரமும் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் 'பெருமைகள்'(?) மூலமாக, தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம் வெளிப்படுவதற்கும், அத்தகைய செயல்பாடும் ஒரு காரணமா? என்ற கேள்வியும் அந்த விவாதத்தில் இடம் பெற வேண்டும்
(http://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html?m=0 & 
http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

என்னை அறிவுபூர்வமாக விமர்சிப்பவர்களை மட்டுமே எனது சமூக வட்டத்தில் அனுமதித்தும், எனது ஆய்வுகளை அறிவுபூர்வமாக விமர்சிப்பவர்களை மட்டுமே எனது ஆய்வு வட்டத்தில் அனுமதித்தும் வாழ்ந்து வருகிறேன்.

அது போலவே, வேண்டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடின்றி, என்னைப் பாராட்டுபவர்களாயிருந்தாலும், தமிழ் மற்றும் தமிழ்நாட்டில் நலன்களுக்காக எனது பார்வையில் படும் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், நல்லதாக வெளிப்படுபவைகளை, முன்பின் தெரியாதவர்களாயிருந்தாலும், என்னால் இயன்றவரை ஊக்குவித்தும் வந்துள்ளேன்.

அத்தகைய எனது போக்கின் காரணமாகவோ, அல்லது எனக்கு தெரியாத வேறு காரணத்தினாலோ, தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் என்னை இதுவரை கண்டுகொண்டதில்லை.

எனது பிற கண்டுபிடிப்புகள் மூலமாக பாராட்டுகளின் சிறையில் சிக்காமல் 

சமூக மூச்சுத்திணறலுக்கு (Social Suffocation) இடமில்லாதநல்ல சமூக சுவாசத்திற்கான (social breathing) சமூக வெளியில் (Social Space) நான் வாழ்ந்து வருகிறேன்

இயற்கையின் போக்கில், என் மூலமாக வெளிப்பட்டு வரும் (unfunded) கண்டுபிடிப்புகளுக்கு நான் ஓர் ஊடகமே (Medium), என்ற தெளிவுடன் நான் பயணிக்கிறேன். உள்ளார்ந்த ஈடுபாடு (Passion) தரும் இன்பம் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே, அது விளங்கும்

உலக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் எல்லாம், சந்தைப்படுத்தக் கூடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்குவதற்கும், உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் இசைத் துறைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கும் வாய்ப்புகள் சுமார் 15 வருடங்களாக தாமதமாகியுள்ளது.

நான் இருக்கும் காலத்திலேயே 'இசை மொழியியல்' துறை உருவாகி, நான் ஒரு ஆய்வுக்குழுவினைப் பயிற்றுவித்தால் தான், எனக்குப் பின்னும் ஆய்வுகள் வேகமாக முன்னேறும்; ஏற்கனவே சுமார் 15 வருடங்கள் தாமதமாகியிருந்தாலும். இல்லையென்றால், எனக்குப்பின், தும்பை விட்டு விட்டு, வாலைப் பிடிக்க கூட முடியாமல் தொடரும் அவலமே வெளிப்படும்.

நோவாம் சோம்ஸ்கியின் 'உலக மொழி இலக்கணம்' தொடர்பான எதிர்ப்புகளுக்கு விடையளிக்கும் சாத்தியம் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட, தமிழைத் தவிர்த்த வேறு எந்த இந்திய‌ மொழியின் இலக்கணத்தில் இருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியிருந்தால், தமிழுக்கு நேர்ந்துள்ள தாமதமானது அந்த மொழிகளுக்கு வெளிப்பட்டிருக்குமா?

இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு நான் என்ன வழிகாட்ட முடியும்?


'ஆராய்ச்சிக்கு செலவழிக்கும் ஆற்றல் மற்றும் நேரங்களை விட, தன்மானம் இழந்து, செல்வாக்கான நபருக்கு வாலாட்டுவதில் பயிற்சி பெற, அதில் விற்பன்னர்களைத் தேடி கண்டுபிடித்து பயிற்சி பெறுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் அதிகமாக செலவிடுங்கள்', என்று நான் சந்தித்த தாமதங்களையே சான்றுகளாக்கி அறிவுறுத்துவதா? தமிழ் ஆராய்ச்சிக்கு இதுவரை இருந்த தன்மானக்கேடான சுற்றுச்சூழல் அமைப்பு (ecosystem) ஆனது, 'முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்குப் பின் தலைகீழாக மாறப் போகிறது. எனவே நம்பிக்கையோடு உங்களின் ஆராய்ச்சிக்கே உங்களின் ஆற்றல் மற்றும் நேரங்களை செலவிடுங்கள்.' என்று அறிவுறுத்துவதா?

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்குப் பின், அந்த தாமதம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களின் ஆட்சிகளில் வெளிப்படாத ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வருவதானது, நான் எதிர்பார்க்காத ஒன்றாகும். ஆனாலும் அதே ஏமாளித்தனத்தில் தொடர்ந்து தமிழ்நாடு பயணிக்காது என்பதும், படித்த தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் விரைவில் அதை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்பதும் எனது கணிப்பாகும். அதற்கு சமூகப் பொறியியல் வினையூக்கியாகவே (Social Engineering Catalyst) நான் இனியும் தொடர்வேன்.

No comments:

Post a Comment