தி.க கொடி, மே தினம் போன்ற இன்னும் பல;
கட்சிகளின் பொய்களில் இருந்து தமிழ்நாடு விடுதலை?
இசை ஆராய்ச்சியில் ஈடுபடும் முன், நான் 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்த காலத்தில் ஒரு வித்தியாசமான நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.
நான் 'பெரியார்' இயக்கத்தில் ஈடுபடும் முன், எனது சமூக வட்டத்தில் அகநேர்மையுள்ள மனிதர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தார்கள். நான் பணியாற்றிய கல்லூரிகளில், நீதிக்காக நான் முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாம் பிரமிக்கும் வகையில் வெற்றிகளை ஈட்டியது. எனவே அந்தந்த கல்லூரிகளில் நானும், எனது நண்பர்களும் ஆக்கபூர்வமான சமூகப்பொறியியல் வினையூக்கிகளாகப்
(Social Engineering Catalysts) பங்களித்து வந்தோம்.
ஒரு மனிதர் எந்த கட்சியையும், கொள்கையையும் ஆதரிப்பது அவரின் உரிமையாகும். கட்சி, கொள்கை போன்றவை எல்லாம் மேக்ரோஉலக தொடர்புள்ளவையாகும். ஆனால் அந்த மனிதர் எந்த அளவுக்கு உண்மை, நேர்மை போன்ற தனிமனித ஒழுக்கத்துடன், அல்லது அதற்கு எதிரான வகையில் வாழ்வது, என்பதானது, அவர் வாழுமிடம், மணியாற்றுமிடம் போன்ற மைக்ரோஉலகத்துடன் தொடர்புள்ளவையாகும்.
தாம் ஆதரிக்கும் மேக்ரோஉலக தொடர்புள்ள கட்சி, கொள்கை போன்றவற்றில் வெளிப்படும் பொய்களையும், பொய்கள் என்று தெரிந்த பின்பும், மனசாட்சியை அடகு வைத்து, அவற்றை ஆதரிப்பவர்கள் எல்லாம் அகநேர்மை இழந்தவர்கள் ஆவார்கள். எந்த கட்சியாக இருந்தாலும், அவ்வாறு அகநேர்மை இழந்து பயணிப்பவர்கள் எல்லாம், இன்று தமிழ்நாட்டின் மைக்ரோஉலகத்தில் அசிங்கப்படும் போக்கும் அதிகரித்து வருகிறது.
அவ்வாறு அகநேர்மையை இழக்க வேண்டிய நெருக்கடியை, 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்த காலத்தில் தான் முதன் முதலாக சந்தித்தேன்.
1925 முதல் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களை எல்லாம் நெருக்கமான நண்பர் போல நேசித்து மூழ்கியிருந்த காலம் அது. திராவிடர் கழகத்தின் கொடி எவ்வாறு உருவானது? என்பது குறித்த தகவல்கள் எல்லாம் மிகவும் விளக்கமாகவே, அந்த இதழ்களில் வெளிவந்திருக்கிறது. அவற்றில் இடம் பெறாத ஒன்றை, தி.மு.க தலைவர் கருணாநிதி வெளிப்படுத்தி வந்ததானது, எனது கவனத்தினை ஈர்த்தது.
என்னை விட அவற்றில் ஆழ்ந்த புலமையுள்ள தஞ்சை மருதவாணனிடம் அது பற்றி கேட்டேன். ஒரு முறை மேடையில் தரையில் ஈ.வெ.ரா அவர்கள் அமர்ந்திருக்க, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தமது ரத்தத்தின்
(Blood) மூலமாக எவ்வாறு தி.க கொடி உருவானது? என்று விளக்கியிருக்கிறார். அப்போது ஈ.வெ.ரா தமது கைத்தடியால் தரையைத் தட்டி , 'பொய், பொய்' என்று சொல்லி இருக்கிறார். அதன் பின்னும், அதே பொய்யை மீண்டும் மீண்டும் கருணாநிதி வெளிப்படுத்தி வந்துள்ளார்.
குடிஅரசு இதழ்களின் மூலமாக அது பொய் என்று அறிந்த பின்னும், அந்த பொய்யை மறுக்காமல் நான் 'பெரியார்' ஆதரவாளராக நீடித்தால்;
நான் அகநேர்மை இழந்து வாழ்வதாகாதா? என்று யோசித்தேன்.
நீதிக்கட்சியானது 1944இல் திராவிடர் கழகமாக மாறிய பின், நீதிக்கட்சியின் கொடிக்கு பதிலாக, புதிய கொடி உருவாக்குவது பற்றிய ஆலோசனைகளில், பின் கொடியை வடிவமைக்க உருவான குழுக்களில் யார் யார் இடம் பெற்று, எவ்வாறு கொடி உருவானது? என்பது பற்றிய தகவல்களை எல்லாம், அதன்பின், குடி அரசு இதழ்களில் இருந்து தொகுத்தேன். அவ்வாறு தொகுக்கும் போது, அந்த காலக்கட்டத்தில், குடிஅரசு இதழில் ஊழியராக பணியாற்றிய 'திருவாரூர் மு.கருணாநிதி' அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தமது ஊரில் சிகிச்சை எடுத்து வந்த சிறிய செய்தி ஒன்றும் என் கண்ணில் பட்டது.
பின் குடிஅரசு இதழ்களில் வெளிவந்தவைகளைத் தொகுத்து, அடுத்து வெளிவர இருந்த 'பெரியார் பிறந்த நாள்' மலரில் வெளியிட வைத்தேன். நான் தீவிரமான 'பெரியார்' ஆதரவாளராக, 'மார்க்சிய- லெனினிய-பெரியாரியல்' புலமையாளராக, பயிற்சி வகுப்புகள், 'விடுதலை, உண்மை, The
Modern Rationalist' இதழ்களில் கட்டுரைகள், 'புதிய ஜனநாயகம், கேடயம்' போன்ற மார்க்சிய லெனினிய இதழ்களுடன் கருத்துப்போர், என்று பல வகைகளில் பங்களித்துக் கொண்டிருந்த காலம் அது.
மேற்குறிப்பிட்ட தி.க கொடி உருவான வரலாறு பற்றிய தொகுப்பானது, 'பெரியார் பிறந்த நாள்' மலரில் வெளிவந்த பின் தான், எனக்குள் 'எனது அகநேர்மையை இழப்பதா?' என்று நடைபெற்ற சோதனையில் நான் வெற்றி பெற்றேன். மேற்குறிப்பிட்ட வெளியீடு தொடர்பாக, கீழ்வருமாறு சுருக்கமாக பதிவு செய்துள்ளேன்.
‘'தி.க கொடி உருவான வரலாறு' பற்றி மலரில் வெளிவந்த கட்டுரைக்காக, ('பெரியார்' இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில், ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது) 'குடி அரசு' அலுவலகத்தில் பணியாற்றிய 'மு.கருணாநிதி' அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது ஊரில் மருத்துவ சிகிச்சையில் இருந்த சிறிய செய்தியும், அந்த காலக்கட்ட இதழ்களில் வெளிவந்திருக்கிறது.’
(‘திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், சிறையுண்ட தமிழ் ?’;
http://tamilsdirection.blogspot.com/2017/12/tamil-chair-2.html)
அண்ணாவிற்கு பின், சாகும் வரை, அண்ணா கொடுத்த முக்கியத்துவம் இன்றி, அவமானங்களை பற்றி கவலையின்றி, 'அய்யா' ('பெரியார்') வாழ்ந்து மறைந்ததாக, மறைந்த தி.க.பொருளாளர் கா.மா.குப்புசாமி என்னிடம் தெரிவித்தார்.
தமது கடைசி காலத்தில் லெனின் 'அனுபவித்த' அவமானங்களுடன், ஈ.வெ.ரா சந்தித்த அவமானங்களை ஒப்பிட்டு, அந்த அவமானங்களை 'ஏற்படுத்திய' சமூக செயல்நுட்பங்களை (Social Mechanism) ஆராய்வதன் மூலம், பொதுவாழ்வில் 'புரட்சி, சீர்திருத்தம்' போன்றவற்றை முகமூடிகளாக பயன்படுத்தி, 'சமூக கிருமிகள்' எவ்வாறு வளர முடிந்தது? 'பெரியார் முகமூடியில்', பொதுவாழ்வு 'வியாபாரத்திற்கு', 'முதலில்லா மூலதனமாக' பயன்பட்ட, 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' வரிசையில் 'ஊழல் ஒழிப்பு' எப்போது சேர்ந்தது? திருடர்களே திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, தமிழ்நாட்டில் எப்போது 'விதைக்கப்பட்டு', இப்போது 'அறுவடை'யில் உள்ளது? அதில் 'அந்நிய சூழ்ச்சி வலை' எப்போது இணைந்தது? என்பதற்கான விடைகளை பெறலாம்.

அண்மையில் கீழ்வரும் தகவலும் எனது கவனத்தை ஈர்த்தது.
'மே முதல் நாளை விடுமுறை நாளாக அறிவித்தது’ என்று பலமுறை கருணாநிதி கூறியிருக்கிறார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே பலமுறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும், கருணாநிதி அதையே திரும்பத் திரும்பச் சொல்வதை விடவில்லை."
(‘மே தினம் விடுமுறை முதலில் அறிவித்தது யார்’;
எம்.ஜி.ஆர் புதிதாக அ.தி.மு.க தொடங்கிய காலத்தில் சசிகலா குடும்பத்தினர் தமது பங்களிப்புகளை, ஜெயலலிதா மறைவிற்குப் பின், ஊடகத்தில் வெளிப்படுத்தினார்கள். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையிலும், பின்னர் ஜெயலலிதா உயிருடன் இருந்தது வரையிலும் வெளிப்படுத்தாத தகவல்கள் அவையாகும். அவை பொய்களே என்பதை எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர்கள் மறுத்ததும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் மைக்ரோஉலகத்தில் சமூகத்தின் அடிமட்டத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள தி.மு.க கட்சிக்காரர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க கட்சிக்காரர்களுக்கும் உள்ள இரு வேறு செல்வாக்குகளுக்கும், பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) இருக்கும் பண்பு ரீதியிலான வேறுபாடுகள் இருப்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
தமிழ்நாட்டில் பொதுவாக எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் வாழும் இடமான மைக்ரோஉலகத்தில், அவர்களால் ஆதாயம் பெற்று வாலாட்ட வேண்டிய அவசியம் இல்லாதவர்கள், அவர்களை எல்லாம் மதிக்கிறார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் தத்தம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளலாம். நானறிந்த வரையில், அத்தகையோருடன் உரையாடும் கட்சிக்காரர்கள் எல்லாம், தத்தம் கட்சிகளின் பொய்களையும், குறைகளையும் வக்காலத்து வாங்காமல் ஒப்புக்கொண்டே உரையாடுகிறார்கள்.
ஆனால் மேக்ரோஉலகத்தில், திராவிடக்கட்சிகளில் செல்வாக்கான புள்ளிகளுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, ‘இந்துத்வா ஆதரவு வீரர்களாக’ வலம் வந்தவர்களும் இருக்கிறார்கள். அது போல, நிகழ்காலத்தில் 'மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் திராவிட முன்னேற்ற கழகம்' நிற்பதாகக் கருதும் ஏமாளிகளும் இருக்கிறார்கள்.
வாஜ்பாய் அரசிற்கு அளித்து வந்த ஆதரவை அன்றைய முதல்வர் ஜெஜெ வாபஸ் பெறுவதாக அறிவித்தார். உடனே முரசொலி மாறன் பாராளுமன்றத்தில் பா.ஜ.க ஆட்சியைக் காப்பாற்ற ஆற்றிய உரையின் நகலை வாங்கி படித்தால் தான், தி.மு.க தமது இந்துத்வா எதிர்ப்பை அரசியல் சுயலாப பேரங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தி வந்துள்ளது? என்பது தெளிவாகும்.
மேற்குறிப்பிட்ட போக்குகளின் தொகுவிளைவாக, மைக்ரோஉலகத்தில் தமது அடித்தளத்தை இழந்தே, ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், விலை போன ஊடகங்களின் ஆதரவுடன் வெளிச்சம் போட்டு வருகிறார்கள்..

அவ்வாறு வெளிச்சம் போட்டு பயணித்து வரும், எந்தெந்த கட்சிகளில் கொரோனா மூலமாக யார், யார், கீழ்வருமாறு சிக்கி, கோமாளிகளாக வெளிப்பட்டு வருகிறார்கள்? என்று மைக்ரோஉலகத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து ரசிக்கலாம்.
தன்மானமிழந்து அதிவேகப்பணக்காரராகி காசுக்குத் துதிபாடும் பரிவாரங்களுடன் முக்கியத்துவப் போதையில் மிதந்தே வாழ்ந்த வாழ்வியல் புத்திசாலிகள் எல்லாம், கொரோனா தனிப்படுத்தலில்;
பணத்திற்காக தமக்கு மேல் உள்ளவர்களுக்கு வாலாட்ட முடியாமலும், அந்த தன்மானக்கேட்டினை ஈடு செய்து கொள்ள, தம்மிடம் ஆதாயத்திற்காக பலர் தம்மிடம் வாலாட்ட வைத்து மகிழ முடியாமலும்;
தமக்கு தெரியாமல் வேறு யாரும் தலைமைக்கு வாலாட்டி, கட்சியில் நமக்குள்ள முக்கியத்துவம் கீழிறங்குமா? என்று தெரிந்து கொள்ள முடியாத குழப்பத்திலும்;
கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்திரவினை பின்பற்றுவதில் என்னென்ன சிக்கல்களைச் சந்தித்து, எத்தகைய மனநோய்களுக்குள்ளாகிறார்கள்? என்பதெல்லாம் இனி தான் வெளிப்படும்.
(https://tamilsdirection.blogspot.com/2020/03/blog-post_27.html)
நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடும் வகையில் வாழ வேண்டுமானால், அதற்கான உணவு, உடல்பயிற்சியுடன், தீய எண்ணங்களுக்கு இடமில்லாத நல்ல மனதும் அவசியமாகும். (https://www.youtube.com/watch?v=W81CHn4l4AM&t=2s) கூடுதலாக, நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள கூட்டங்களைத் தவிர்த்தல், சமூக இடைவெளி, கைக்குலுக்குவதைத் தவிர்த்தல் போன்ற சமூக ஒழுக்கங்களுடன் வாழ்பவர்களை மட்டுமே கொரொனா உள்ளிட்ட தொற்றுகள் தீண்டாது. மைக்ரோஉலகத்தில் வாழும் மனிதர்களுக்கே இவை எல்லாம் எளிதில் சாத்தியமாகும். கொரொனா மூலமாக, அந்த சாத்தியமும் வளர்ந்து வருகிறது.
மைக்ரோஉலகத்தில் தமது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள, தத்தம் கட்சிகளின் பொய்களை ஒப்புக்கொண்டு சமாளிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக, விழித்துக்கொண்டு தம்மை திருத்திக் கொள்ளாத கட்சிகளை எல்லாம் விரைவில் சமூக கல்லறைக்கு அனுப்பும் போக்கும் கொரோனா மூலமாக அதிகரித்து வருகிறது. எனவே கட்சிகளின் பொய்களில் இருந்து, தமிழ்நாடு விடுதலை பெறும் காலமும் நெருங்கி வருகிறது. அதன் மூலமாக, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியும் நிச்சயமாகி வருகிறது.

No comments:
Post a Comment