நோவாம் சோம்ஸ்கியிடமிருந்து தமிழ்ப்புலமையாளர்கள் கற்க வேண்டிய பாடங்கள்? (1)
நல்லவேளை, விவேகானந்தர் தமிழராகப் பிறக்கவில்லை
நவீன மொழியியல் மற்றும் மனித உரிமை என்ற இரு வேறு துறைகளிலும், உலக அளவில் புகழ் பெற்ற நோவாம் சோம்ஸ்கி 92 வயதிலும் வெளிப்படுத்தி வரும் சுறுசுறுப்பு எனக்கு நம்ப முடியாத அதிசயமானது.
அது தொடர்பான, எனது அனுபவங்களையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘நோவாம் சோம்ஸ்கியும், தொல்காப்பியமும்’;
'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான எனது ஆய்வானது ‘Musical Phonetics in tholkAppiam’
என்ற தலைப்பில், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழில் வெளிவந்துள்ளது.
(2013 December- The Journal of the International Institute
of Tamil Studies,Chennai;
எந்த பரிந்துரையும் இன்றி, முன்பின் தெரியாத நான் அனுப்பிய மடலுக்கு நோவாம் சோம்ஸ்கி பதில் போட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினார். மேற்குறிப்பிட்ட எனது ஆய்வுக்கட்டுரையினை அவர் படித்து வெளிப்படுத்திய கருத்தானது, தொல்காப்பியத்தின் முக்கியத்துவத்தினை உலக மொழியியல் மற்றும் இசை ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல வல்லதாகும்.
‘Very intriguing. I hope all of this can become part of an
emerging discipline of ‘musical linguistics’
என்று 23 செப்டம்பர் 2018இல் நோவாம் சோம்ஸ்கி எனக்கு எழுதிய பதிலில் வெளிப்படுத்தினார்.
2013லிருந்து நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நோவாம் சோம்ஸ்கியின் அங்கீகாரமானது எனக்கு கூடுதல் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கியது.
‘https://musictholkappiam.blogspot.com/’
என்ற இணையதளத்தினை 2013 பிப்ரவரியில் தொடங்கி, தொடர்ந்து அது தொடர்பான ஆய்வுகளை வெளியிட்டு வந்துள்ளேன்.
‘உலக தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களில், தொல்காப்பியம் அடிப்படையில் 'இசை மொழியியல்'
(Musical Linguistics) ஆய்வுப் புலம்’ (http://tamilsdirection.blogspot.com/2016/08/linguistics-musical-linguistics.html)
என்ற பதிவினை 2016 ஆகஸ்டில் வெளியிட்டேன்.
அதைத் தொடர்ந்து:
Musical Linguistics in
Tholkappiam’(in Tamil) by Dr.Vee (Website: http://drvee.in/)
on 28.07.2018 in
Penang (Malaysia)
‘தமிழகப் பல்கலைக்கழகங்களின் 'மொழியியல்', 'இசை' துறைகள் 'வாலாக' பயணிக்கலாமா? மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்'’; (http://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html)
என்ற பதிவினை 2018 செப்டம்பரில் வெளியிட்டேன்.
நோவாம் சோம்ஸ்கி எனக்கு எழுதிய பதில் 23 செப்டம்பர் 2018-இல் கிடைத்ததை மேலே குறிப்பிட்டுள்ளேன். அம்மடல் கிடைத்த பின்னர், அம்மடலையும் வெளியிட்டு;
'குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil
Musicology) தொடர்புள்ளவையா?' என்ற தலைப்பில், 2018
அக்டோபரில் கீழ்வரும் பதிவையும் வெளியிட்டேன்.
மேற்குறிப்பிட்டவை எல்லாம் லண்டனில் வாழும் நண்பர் தொல்காப்பியன், அவருக்கு நெருக்கமான அமெரிக்காவில் ஃபெட்னா அமைப்புடன் தொடர்புடைய நண்பர்கள், ஆஸ்திரேலியா சிட்னியில் வாழும் சைவைப் பெரியவர் மாணிக்கம் அர்ச்சுனமணி மற்றும் அவரின் நண்பர்கள், மலேசியா பினாங்கில் வாழும் பேரா.சிவக்குமார், சிங்கப்பூரில் வாழும் பேரா.அருண்மகிழ்நன் மற்றும் அவரின் நண்பர்கள் என்று உலக அளவில் பல தமிழ் ஆர்வலர்களின் பார்வைக்கு சென்றவை ஆகும்.
தமிழ்நாட்டில் நான் பெற்ற வித்தியாசமான அனுபவங்களையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது கண்டு பிடிப்புகளுக்கு 1996இல் நான் மேற்கொண்ட திருக்குறளில் தமிழ் இசையியல் தொடர்பான ஆய்வுகள் திறவுகோலாக (Key)அமைந்தன. தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய எனது திருக்குறள் ஆய்வுகள் பற்றிய சில அனுபவங்களை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html
& http://tamilsdirection.blogspot.com/2017/12/tamil-chair-2.html)
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், எனது 'திருக்குறளில் தமிழ் இசையியல்' (Tamil Musicology in Thirukkual) ஆய்வினை மேற்கொண்ட போது கசப்பான அனுபவங்களுக்கு உள்ளானேன்.
'CAT’ ((Competency, Accountability and Transparency -CAT)) தொடர்பான முறையான விசாரணை மூலமாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிப்பட வாய்ப்புள்ள வகையில், சென்னையில் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட செம்மொழி நிறுவனம் காத்திருக்கிறது.
முறையான விசாரணை மூலம், அதன் பரிந்துரையில், உரிய விதிகளின்படி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படும் நாளை எதிர்பார்க்கிறேன். அதன்பின், சட்டப்படியான முறையில், வாங்கிய நிதியைத் திருப்பிக் கொடுத்து, எனது ஆய்வுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி, அந்நூலை வெளியிட எண்ணியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post_11.html?m=1)
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு மின்மடல் அனுப்பினாலும், கொரியர் மூலம் அனுப்பினாலும் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. ஒரு பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மட்டும் தனக்கு இசை தெரியாது என்று ஆய்வுக் கட்டுரையைத் திருப்பி அனுப்பினார். அந்த கட்டுரையில் யாப்பிலக்கணத்தின் இசைப் பரிமாணம் பற்றிய தகவல்கள் இருந்தன. தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும் ‘இசை’ என்ற சொல்லை 'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும் என்பது தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?

மேற்குறிப்பிட்ட எனது திருக்குறள் ஆய்வு தொடர்பாக வெளிவந்த கட்டுரையினை, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, எனது நண்பர் ஒருவர், தமிழ்நாட்டில் எளிமையாக வாழும் மதிக்கத்தக்க ஆழ்ந்த தமிழ்ப்புலமையாளரிடம் அவர் படிப்பதற்காக கொடுத்தார். அவர் அதை மேலோட்டமாக பார்த்து விட்டு, திருப்பிக் கொடுத்து விட்டார். ஆர்வமற்ற போக்கினை வெளிப்படுத்தியதால், அவர் திருப்பி கொடுத்த கட்டுரையினை எனது நண்பர் வாங்கிக் கொண்டார்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு லண்டனில் வாழும் எனது நண்பர் மேற்குறிப்பிட்ட திருக்குறள் ஆய்வுக்கட்டுரையினை, மேற்குறிப்பிட்ட தமிழ்ப்புலமையாளருக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினார். மேற்குறிப்பிட்ட அனுபவத்தினை அவரிடம் விளக்கினேன். அமெரிக்காவில் வாழும் அவரது நண்பரின் விருப்பம் அது, என்று தெரிவித்தார். எனவே எனது மேற்குறிப்பிட்ட கட்டுரையினை கொரியர் மூலமாக, மேற்குறிப்பிட்ட தமிழ்ப்புலமையாளருக்கு அனுப்பி வைத்தேன். பின் அவர் எனது ஆய்வினை மிகவும் பாராட்டி எனக்கு மடல் எழுதினார். நான் நொந்து போனேன். தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய எனது ஆய்வுக்கட்டுரையினை, எனது நண்பர் நேரில் சந்தித்து கொடுத்தபோது அற்பமாக தெரிந்த அதே கட்டுரையானது, அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலர் பரிந்துரையின் பேரில் தான் ஆழ்ந்து படிக்கப்பட்டு அதே புலமையாளரால் பாராட்டப் பெற்றது; என்பது எனக்கு மறக்க முடியாத அனுபவமானது.
ஆக தமிழ்நாட்டு புலமையாளர்கள் எனது ஆய்வுகளை ஒரு பொருட்டாக மதித்து, படித்து பாராட்ட வேண்டுமானால், அது வெளிநாட்டில் வாழும் செல்வாக்கான தமிழ் ஆர்வலர்களின் பரிந்துரைகள் வேண்டும்.
அதில் கூடுதலாக இன்னொரு விநோதமும் உண்டு.
விவேகானந்தரின் சொற்பொழிவைக் கேட்டு அமெரிக்கவில் வாழும் வெள்ளையர்கள் பாராட்டிய பின் தான், இந்தியாவில் விவேகானந்தரின் கருத்துக்களுக்கு வரவேற்பு வெளிப்பட்டது. ஆனால் எனது தமிழ் தொடர்பான பல்துறை ஆய்வுகளை அமெரிக்காவில் வாழும் நோவாம் சோம்ஸ்கி, கனடாவில் வாழும் ஸ்டீவன் பிரவுன் (http://neuroarts.org/), லண்டனில் வாழும் ரிச்சர்ட் வெட்டஸ் (https://en.wikipedia.org/wiki/Richard_Widdess),
சிங்கப்பூரில் வாழும் ஜான் சார்ப்லி (http://www.johnsharpley.com/Biography.html)
உள்ளிட்ட வெள்ளையர்கள் பாராட்டிய பின்பும், தமிழ்நாட்டில் எந்த செல்வாக்கான தமிழ் அறிஞரோ, அமைப்புகளோ இதுவரை வரவேற்று, அந்த ஆய்வுகள் மூலமாக புதிய தொழில் வியாபார வாய்ப்புகள் உருவாக்கும் முயற்சிகளையும் ஆதரிக்காதது ஏன்? என்பது மர்மமாக நீடிக்கிறது.
தமிழ்நாட்டு புலமையாளர்களுக்கு வெளிநாட்டு அறிஞர்கள் எனது ஆய்வுகளைப் பாராட்டியது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அமெரிக்காவில் உள்ள பெட்னா போன்ற செல்வாக்குள்ள தமிழ் அமைப்புகளோ, அது போன்ற அமைப்புகளில் உள்ள செல்வாக்கான தமிழ் ஆர்வலர்களோ பாராட்டினால் தான், தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் எனது ஆய்வுகளை வரவேற்பார்களா? அவர்களின் வரவேற்பின்றி, தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எனது ஆய்வுகளை ஆதரிக்கும் எண்ணம் வர வாய்ப்புண்டா?
இல்லையென்றால், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத,ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வாறு வெளிப்பட்டது?
விபரமறிந்தவர்கள் விளக்கினால் நன்று.
விவேகானந்தர் இந்தியராக இருந்ததால் தப்பித்தாரா? நான் தமிழ்நாட்டு தமிழராக இருப்பதாலும், இந்தியாவில் வித்தியாசமாக தமிழ்நாடு இருப்பதாலும்
இந்த நிலை நீடிக்கிறதா?
ஆம் என்றால், நல்லவேளை, விவேகானந்தர் தமிழராகப் பிறக்கவில்லை.
தமிழராகப் பிறந்து, தமிழ் இலக்கியங்கள் மீது தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமையே, கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு அழைக்காமல் அவமதிக்கவில்லையா?
தனி மனிதராயிருந்தாலும், சமூகமாயிருந்தாலும், 'தமக்குள் இருக்கும் தீதிற்கான காரணங்களை' அடையாளம் கண்டு அகற்றாமல், தீதில் இருந்து விடுதலை பெற முடியாது. நன்றையும் ஈர்க்க முடியாது.
(http://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post_11.html)

(வளரும்)
No comments:
Post a Comment