Monday, May 18, 2020


உணர்ச்சிபூர்வமாக தமிழ்நாட்டின் சமூக வெளியை (Social Space)


கூறு போட்டு பயணிப்பதில் உள்ள ஆபத்துக்கள்



கொரோனா நோய் தொற்றுப் பரவலும், மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீடும்!’ (http://siragu.com/) என்ற கட்டுரையானது எனது பார்வைக்கு வந்தது. அதனை அனுப்பியவருக்கு கீழ்வரும் கருத்தினை அனுப்பி வைத்தேன்.

புள்ளி விபரங்கள் தொடர்பான உரிய சான்றுகளுடன் இது போன்ற அறிக்கைகள் வெளிவந்தால், அச்சான்றுகளின் உண்மைத்தன்மையை ஆராய உதவும். பிரதமர் மாநில முதல்வர்களுடன் அவ்வப்போது கலந்தாலோசித்ததை குறிப்பிடாதது சரியல்ல. உலகமே இந்தியாவைப் பாராட்டி வருவதை குறிப்பிடாததும் சரியல்ல. முஸ்லீம்கள் சுகாதாரப் பணியாளர்களை தாக்கியது, சோதனையைத் தவிர்க்க தலைமறைவானது, மருத்துவ மனைகளில் நர்சுகளிடமும் மருத்துவர்களிடமும் ஒழுங்கீனமாக நடந்தது போன்றவற்றை எல்லாம் துவக்கத்திலேயே ஸ்டாலின் கி.வீரமணி போன்றவர்கள் கண்டித்திருந்தால், அவர்கள் அடங்கி அதனால் அதிகரித்த தொற்றிலிருந்து தமிழ்நாடு தப்பித்திருக்கும்.’

அவர் கீழ்வரும் கருத்தினை எனக்கு அனுப்பி வைத்தார்.

இன்றைய அரசியல் என்பது தான் ஆதரிக்கும் கட்சிகளின் நிறைகளை பெரிதாக்கிக் காட்டுவதும்குறைகளை மறைப்பதுமாக இருக்கிறது.

இது பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் போக்காக இருக்கிறது.

ஒருவரை ஒருவர் குறைகளைக் கூறி அதோடு தங்களது நிறைகளை ஒப்பிட்டு பரப்புரை செய்வதும்தான் நடந்துவருகிறது.

உங்களைப் போன்றோர் விதிவிலக்காக உள்ளனர். அதையும் ஒதுக்கி எதிர்நிலையில் பார்க்கும் தன்மையே மேலோங்கி உள்ளது.

மேற்குறிப்பிட்டது தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை அவருக்கு அனுப்பினேன்.

பாஜகவில் இடிப்பார்களாக சிலர் செயல்பட்டு வருவது தொடர்பான சான்றுகளை நேரம் கிடைக்கும் போது தொகுத்து அனுப்புகிறேன். அது மற்ற கட்சிகளிலும் வளர வேண்டும்.’


மேற்குறிப்பிட்டது தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை அவர் எனக்கு அனுப்பினார்.

'இந்தியாவிலோ அல்லது உலகில் எந்த நாடுகளிலாவது மக்கள் நலன் சார்ந்து  இடிப்பார்களாக சிறுபிரிவினர் இருக்கிறார்களா?

அவர்கள் சொன்னால் அதை பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் (மக்கள்அரசு,கட்சிகள்) நிலை உள்ளதா?

சங்க காலத்தில் அப்படி ஒரு நிலை இருந்ததா?

உங்கள் அனுபவத்தில் இதுதொடர்பான செய்தி உண்டா? ஐயா.'

மேற்குறிப்பிட்டது தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை அவருக்கு அனுப்பினேன்.

சங்க காலத்தில் அப்படி ஒரு நிலை இருந்ததா? என்பது பற்றி பதில் சொல்ல இயலாது. அது தொடர்பாக படித்த பின்பே சொல்ல முடியும்.

'இந்தியாவிலோ அல்லது உலகில் எந்த நாடுகளிலாவது மக்கள் நலன் சார்ந்து  இடிப்பார்களாக சிறுபிரிவினர் இருக்கிறார்களா?

அவர்கள் சொன்னால் அதை பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் (மக்கள்,அரசு,கட்சிகள்) நிலை உள்ளதா?' என்பது தொடர்பாக,

கீழ்வரும் பதிவு வெளிச்சம் தரலாம்.

நாடு பயணிக்கும் போக்கில்:
நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?’ http://tamilsdirection.blogspot.com/2016/07/blog-post.html

'அதிகாரம்' (power) தொடர்பான கீழ்வருவது போன்ற கட்டுரைகள் கூடுதல் வெளிச்சம் தரலாம். நேரம் கிடைக்கும்போது, நானும் வெளிச்சம் பெற முயன்று வருகிறேன்.

மேற்குறிப்பிட்ட கருத்து பரிமாற்றமானது, எங்கள் இருவரின் சொந்த பிரச்சினை அல்ல. நேர்மையான சுயசம்பாத்தியத்துடன், பணம், புகழ் ஈட்டும் உள்மறைத்திட்டமின்றி, உண்மையான சமூக அக்கறையுடன், பெரும்பாலும் எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்தினை முன்வைக்கும் அவரின் சமூக அக்கறையை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே எனது ஆய்வுப்பணிகளிக்கிடையில், அவரைப் போன்றவர்களுக்கும் நான் நேரம் ஒதுக்குகிறேன். 'பெரியார்' கட்சிகள், மார்க்சிய லெனினிய குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளுடன், எனது அளவுக்கு அறிவு, அனுபவம் உள்ளவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லை. அந்த அறிவு அனுபவங்களின் அடிப்படையில், மேற்குறிப்பிட்டது போன்ற நபர்களுக்கு நேரம் ஒதுக்குவதை எனது சமுகக்கடமையாகவே கருதி, என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகிறேன்; தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்காக.

பணம், புகழ் ஈட்டும் உள்மறைத் திட்டமின்றி, உண்மையான சமூக அக்கறையுடன் பயணிப்பவர்களை தமது நிலைப்பாட்டிற்கு எதிரானவர் என்பதற்காகவோ, அல்லது அவர் சார்ந்த சாதி, மதம், மொழி, நாடு போன்ற இன்னும் பல காரணங்களுக்காகவோ, வெறுப்பது என்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க அநாகரீகமாகும்.

இசை ஆராய்ச்சிக்கு முன், நான் 'பெரியார்' ஆதரவாளராகப் பயணித்த காலத்தில், "பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா..மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார்." என்பதையும்;

"எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை. எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால். பணம் ஈட்ட, 'சமூகக் கிருமிகளாக' (திருக்குறள், பொருள்; அதிகாரம்:92) வாழ்பவர்களை (குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்டு), என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், ஒதுக்கி வாழ்கிறேன்." என்பதையும் கீழ்வரும் பதிவில் வெளியிட்டுள்ளேன்.

அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்காமல், உணர்ச்சிபூர்வமாக தமிழ்நாட்டின் சமூக வெளியை (Social Space) ஈழ விடுதலைக் குழுக்கள் கூறு போட்டு பயணித்ததை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

1983 சூலை இனப்படுகொலைக்குப் பின், தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் கரம், கிராமம் என்ற வேறுபாடின்றி, தாமாகவே கொதித்தெழுந்து, பல வாரங்கள் அந்த கொதிப்பு நீடித்ததை நேரில் அனுபவித்தவன் நான். அந்த கொதிப்பில் உருவான ஆதரவாளர்கள் பலத்துடன், விடுதலைப் புலிகள், PLOTE, EPRLF, TELO, EROS      போன்ற பல ஈழ விடுதலைக்குழுக்கள்,  தமிழ்நாட்டை தததம் ஆதரவு மண்டலங்களாகக் கூறு போட்டுக் கொண்டனர். அத்துடன் ஆயுதப்பயிற்சிகள், புத்தகங்கள், இதழ்கள் வெளியிடுதல், கண்காட்சிகள் நடத்துதல் உள்ளிட்டு பலவேறு வழிகளில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். அக்குழுக்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களிடையே ஆங்காங்கு மோதல்கள் நடந்த சம்பவங்களும் உண்டு

அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்காமல், உணர்ச்சிபூர்வமாக தமிழ்நாட்டின் சமூக வெளியை (Social Space) ஈழ விடுதலைக் குழுக்கள் கூறு போட்டு பயணித்ததால் வந்த விளைவாகவே, ஈழவிடுதலையானது, சாண் ஏறி  முழம் சறுக்கின கதையானது.

முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின், சில 'பெரியார்' ஆதரவாளர்கள் 'விடுதலைப்புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறார்களா? (மார்ச் 1988) உள்ளிட்ட, விடுதலைப்புலிகளை எச்சரித்த, 'திருச்சி பெரியார் மையம்' வெளியீடுகளை ஊன்றி படித்ததாகக் கேள்விப்பட்டேன். 'தத்தம் கொள்கைகளை, செயல்பாடுகளை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தாமல், சந்தர்ப்பவாதம் சமரசம் சாகசம் ஆகிய பலகீனங்களுக்கு உட்படும் விடுதலை முயற்சிகள் சர்வதேச சூழ்ச்சி வலைக்கு எளிதில் பலியாகும் அபாயம் உண்டு,' என்ற எச்சரிக்கையும் மேற்குறிப்பிட்ட நூலில் வெளிவந்திருக்கிறது.

இன்று தமிழ்நாட்டில் 'தமிழ்த்தேசிய, பெரியார், தலித்' போன்ற இன்னும் பல அடிப்படைகளில், தமிழர்களின், தமிழ்நாட்டின், தமிழின் மீட்சிக்காக செயல்படுவதாக அறிவித்துள்ள கட்சிகள் எல்லாம்;

மேற்குறிப்பிட்ட ஈழவிடுதலைக் குழுக்களைப் போலவே, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்காமல், உணர்ச்சிபூர்வமாக தமிழ்நாட்டின் சமூக வெளியை (Social Space) கூறு போட்டு பயணித்து வருகிறார்களா? என்ற விவாதத்தினை அரங்கேற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறேன்அவ்வாறு சமூக வெளியைக் கூறு போட்டுப் பயணித்ததில் வெளிப்பட்ட  இடைவெளிகளைப் பயன்படுத்தியே, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில் வெளிப்பட்டதா? அதனை மேற்குறிப்பிட்ட கட்சிகளில் எவராவது கண் விழித்துப் பார்த்தார்களா?
 (http://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_8.html)

உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் தமிழையும், தமிழ் இசையையும் சிக்க வைத்து, உலக அளவில் அவைக் கேலிப்பொருளாகி வருவதற்கு, இது போன்ற கேடான இடைவெளிகள் பயன்பட்டு வந்துள்ளனவா
(http://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html?m=0)

அதன் தொடர்ச்சியாகவே, உலக அளவில் சமஸ்கிருதம் பெற்று வரும் முக்கியத்துவம் அளவுக்கு, தமிழும் பெறுவதற்கான வாய்ப்புகள் முடங்கியுள்ளனவா?
(https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_4.html)

அத்தகைய இடைவெளிகளை ஏற்படுத்தும் வகையில், தமழ்நாட்டின் சமூகவெளியை, பிரச்சினைகள் மற்றும் அவை மூலம் ஈர்க்கப்பட்டவர்கள் மூலமாக கூறுபோட்டு எதிரெதிராக பயணிக்கும் கட்சிகள் எல்லாம், 'தமிழ்' என்று வெளியில் முழங்கிக்கொண்டு, தத்தம் குடும்பப்பிள்ளைகளை எல்லாம் விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கில வழியில் படிக்க வைப்பதிலும்;

தமிழ்வழிக்கல்வியின் மரணத்திற்குக் காரணமாகி, தமிழ்நாட்டின் கனிவளங்களை சூறையாடிய ஊழல் சுனாமியின் பிதாக்களை எதிர்க்காமலும், வாய்ப்புகள் கிடைத்தால் நேசமாகி பயணிப்ப‌திலும் ஒன்றுபட்டிருக்கிறார்களா?

'தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின், (சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.' 

தி.மு. தலைவர் கருணாநிதி அல்லது (சசிகலா) நடராஜன் போன்றோரை நேரடியாகவோ  அல்லது மறைமுகமாகவோ ஆதரித்து, பலன்கள் பெற்று பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், விடுதலைப்புலிகள் பாணியில், தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி அரசியல் தற்கொலைப் போக்கில் பயணிப்பவர்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் சில தலைவர்களுக்கு இடையில் உள்ள பரிமாற்ற தொடர்புகளை அறிந்தால், குருட்டுத்தனமாக இந்துத்வா எதிர்ப்பு அல்லது ஆதரவு போக்கில் பயணிப்பதன் முட்டாள்த்தனம் புரியும்.

மேக்ரோஉலகத்தில், திராவிடக்கட்சிகளில் செல்வாக்கான புள்ளிகளுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, ‘இந்துத்வா ஆதரவு வீரர்களாகவலம் வந்தவர்களும் இருக்கிறார்கள். அது போல, நிகழ்காலத்தில் 'மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் திராவிட முன்னேற்ற கழகம்' நிற்பதாகக் கருதும் ஏமாளிகளும் இருக்கிறார்கள்.

வாஜ்பாய் அரசிற்கு அளித்து வந்த ஆதரவை அன்றைய முதல்வர் ஜெஜெ வாபஸ் பெறுவதாக அறிவித்தார். உடனே முரசொலி மாறன் பாராளுமன்றத்தில் பா.. ஆட்சியைக் காப்பாற்ற ஆற்றிய உரையின் நகலை வாங்கி படித்தால் தான், தி.மு. தமது இந்துத்வா எதிர்ப்பை அரசியல் சுயலாப பேரங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தி வந்துள்ளது? என்பது தெளிவாகும்

நெருக்கடி கால ஆட்சி வரலாற்றில் பாடம் படிக்காமல், குருட்டுத்தனமான இந்துத்வா எதிர்ப்பில், அதுவும் தி.மு. ஆதரவு போக்கில் பயணிப்பவர்கள் எல்லாம் கீழ்வருவதை கவனத்தில் கொண்டு, தம்மை திருத்திக் கொண்டு பயணித்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.

நெருக்கடி கால ஆட்சியில், தி.மு., தி. உள்ளிட்ட கட்சிகளின் பெரும்பாலான தலைவர்களை சிறையில் அடைத்தும், அடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு;

தமிழ்நாட்டில் நெருக்கடி கால ஆட்சியில் ஊழல் பெருமளவு குறைந்தது மட்டுமின்றி, வழக்கத்திற்கு மாறாக, இரயில்களும் கால தாமதமின்றி ஓடும் அளவுக்கு  வெளிப்பட்ட மாற்றங்களே முக்கிய காரணங்களாக அமைந்தன.

பிரதமர் மோடி அரசானது, தமிழ்நாட்டில் ஊழல் பிரமீட்டினை ஒழித்தால், அந்த வரலாறு திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. 'திராவிட ஊழல் பாதுகாப்பு மையங்கள்' பா..கவிலும் இருந்தால், அது சாத்தியமாகுமா? சாத்தியமாகாது எனில், இயற்கையின் போக்கில், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு சுனாமி உருவானால், அதில் ('பெரியார் சமூக கிருமிகளும்' கூட குளிர் காயும் அளவுக்கு, இந்துத்வா எதிர்ப்பினை 'சமூக கோளக்கொல்லை பொம்மையாக்கி வரும்) திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து பா..கவும் சுவடின்றி அழிவதிலிருந்து தப்பிக்க முடியுமா
(‘நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில்; கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, ஏன் சிக்க நேர்ந்தது?’;
http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

வெறுப்பு அரசியலில் சிக்கி, ‘சமூக கறுப்புவெள்ளைநோயுடன் பயணிப்பவர்கள் எல்லாம், தமது விடுதலையை ஏமாற்றுப் பேர்வழிகளிடம் காவு கொடுத்துப் பயணிக்கும் 'மனித எந்திரர்கள்' ஆவார்கள்
(http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html)


'அதிகாரம்' (power) பற்றிய புரிதலும், 'விடுதலை' (freedom) பற்றிய புரிதலும், 'நாம் எவ்வாறு இருக்க முடியும்?' என்பது தொடர்பான தெளிவைத் தரும். 'அரசின் அதிகாரம் மட்டுமே சமூகத்தில் செயல்படும் அதிகாரம்' என்று மயங்காமல், முன்கூட்டியே அதிகாரம் பற்றிய வரையறைகளை உருவாக்கி, அதற்குள் சிக்காமல், சமூகத்தில் வெளிப்பட்டுவரும் அதிகாரங்களை 'நுகர்ந்து', அவை பயணிப்பதைப் பின்பற்றி ஆராய்ந்து அறிவதன் மூலமாக, 'நாம் எவ்வாறு இருக்க முடியும்?' என்பது தொடர்பான வரைஎல்லைகளை வரையறுக்க முடியும்


Foucault’s bet was that people are likely to win more for freedom by declining to define in advance all the forms that freedom could possibly take. That means too refusing to latch on to static definitions of power. Only in following power everywhere that it operates does freedom have a good chance of flourishing. Only by analysing power in its multiplicity, as Foucault did, do we have a chance to mount a multiplicity of freedoms that would counter all the different ways in which power comes to define the limits of who we can be.; 

'எந்தப் பக்கம் செல்வாக்கு காற்று அடிக்கிறது? என்று 'நுகர்ந்து'(?) அந்தப்பக்கம் ஒட்டிப்பயணித்த, 'சமூகப்புழுதி' மனிதர்களை எல்லாம், பிரபாகரன், ஜெயலலிதா, கருணாநிதி, சசிகலா, ஸ்டாலின் போன்றவர்கள் ஊக்குவித்த அவலத்தையும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்

மேற்குறிப்பிட்ட கட்சிகளில் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்கள் உதவியில் பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணிப்பவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் அகநேர்மையை இழக்காமல் பயணிப்பவர்களில் விட்டில் பூச்சிகளாக எவரும் பலியாகி விடக்கூடாது, என்ற கவலை எனக்கு இருக்கிறது. இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் அறிவுபூர்வமாக பயணிக்க விரும்புவர்களின் பங்களிப்பானது, ஆக்கபூர்வ திசையில் பயணிக்க இந்த பதிவு உதவலாம்

தன்முனைப்பையும், தனிமனித முக்கியத்துவத்தையும் ஓரங்கட்டி, கூட்டு முயற்சியாக, இந்த விவாதமானது வளர வேண்டும். அது தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும்.


குறிப்பு: பிரதமர் மோடியை ஆதரித்துக் கொண்டே இடிப்பார்களாக செயல்படுவது தொடர்பான சான்றுகள்:


Referring to cow vigilante groups running amok and killing alleged “cow smugglers, the non-arrest of a BJP MLA in Unnao after festering accusations of rape for more than a year, Kathua – where an eight-year-old girl was raped and brutally killed – and the protests led by some self-proclaimed Hindu groups against the J&K police were seen as the result of direct encouragement from the BJP leadership, etc;

Editorial Director, Swarajya, R Jagannathan had warned the govt led by PM Modi;

‘if you do not control the Hindu part of the agenda, the fringe will run away with it and define you. Seen in this sense, the efforts by Modi’s enemies to build a narrative of aggressive majoritarianism by the Sangh parivar are succeeding’ ; ‘ Kathua Lessons For Modi-Shah: If You Don’t Drive The Agenda, The Fringe Will’ ; 
https://swarajyamag.com/politics/kathua-lessons-for-modi-shah-if-you-dont-drive-the-agenda-the-fringe-will



‘Determined action against political scamsters would have put the opposition in disarray. However, the failure to do so has created a Frankenstein monster that threatens to not only smash BJP but also destroy India.’; 


Arun Jaitley-run Finance Ministry delays Sanction for Prosecution again of five officers, co-accused of Chidambaram in Aircel-Maxis case ; 
https://www.pgurus.com/arun-jaitley-run-finance-ministry-delays-sanction-for-prosecution-again-of-five-officers-co-accused-of-chidambaram-in-aircel-maxis-case/


துக்ளக் இதழில் சோ ஆசிரியராக இருந்து போதும், குருமூர்த்தி ஆசிரியராக இருக்கும் இப்போதும், பா..கவிலும், மோடி ஆட்சியிலும் வெளிப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டி, இடிப்பாராக துக்ளக் இதழ் பயணித்து வருவதை, துக்ளக் வாசகர்கள் அறிவார்கள்.


'இடிப்பார்கள்' இன்றி பயணிக்கும் தமிழ்நாட்டு கட்சிகள் எல்லாம், திருக்குறள்(448) எச்சரித்தவாறு கெட்டு மடிவதைத் தவிர்க்க முடியுமா?

No comments:

Post a Comment