Thursday, May 28, 2020


‘நானும் திராவிட இயக்கத்தவன் தான் என்ற காமராசர் | பேரா. நாகநாதன்;


 உரை மீதான இன்னொரு விமர்சனம்



இசை ஆய்வுக்கு முன், 'பெரியார்' இயக்கத்தில் மார்க்சிய லெனினிய பெரியாரியல் புலமையாளனாக நான் பங்களித்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்

நிகழ்காலத்தில் நானறிந்தது வரையில், தமிழ்நாடு தொடர்பாகவும், 'திராவிடர், திராவிட' கட்சிகளின் வரலாறு தொடர்பாகவும், சமூக அக்கறையுடனும் அறிவு நேர்மையுடனும் தமது புலமையை வளர்த்து வரும் 'பெரியார்' ஆதரவாளர் பொ.முருகானந்தம் ஆவார். எனது வாதங்களில் வெளிப்படும் குறைகளைத் தயங்காமல் அவர் சுட்டிக்காட்டி, நான் திருத்திக்கோண்டதும் உண்டு. எனது கடந்த கால புலமையில் இருந்து, அவரின் ஐயங்களை அவர் தெளிவுபடுத்திக் கொண்டதும் உண்டு. அவர் பற்றி கீழ்வருவதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

'நேர்மையான சுயசம்பாத்தியத்துடன், பணம், புகழ் ஈட்டும் உள்மறைத்திட்டமின்றி, உண்மையான சமூக அக்கறையுடன், பெரும்பாலும் எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்தினை முன்வைக்கும் அவரின் சமூக அக்கறையை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே எனது ஆய்வுப்பணிகளிக்கிடையில், அவரைப் போன்றவர்களுக்கும் நான் நேரம் ஒதுக்குகிறேன்.' 

கீழ்வரும் காணொளி தொடர்பான எனது கருத்தினை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(வைக்கமும், 'பெரியார்' .வெ.ராவும்; எதிர்ப்பு முகாம்களுக்கு தாரை வார்த்து ஏமாறும் தமிழ்நாட்டு இந்துத்வா?
https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_25.html).  

அவரின் கருத்தினை, நானே அவரிடம் கேட்டு வாங்கி இங்கு பதிவு செய்கிறேன். 'காந்தி பொம்மைகள்' உடைக்கும் போராட்டத்தை .வெ.ரா அறிவித்தாரே ஒழிய, அப்போராட்டத்தை நடத்தவில்லை' என்பது உள்ளிட்டு அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் எல்லாம் சரியே.

நானும் திராவிட இயக்கத்தவன் தான் என்ற காமராசர் | பேரா. நாகநாதன் | Prof. Naganathan | வைக்கம் போராட்டம்;’



பேரா.நாகநாதன் உரை மீதான கருத்து:


1.ஒரு ஆய்வு நூல் குறித்த உரையில் அந்நூல் குறித்து ஓரளவு பேசிவிட்டு பெரும்பகுதி பெரியார் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளையும்திராவிட இயக்கச் செய்திகளையும் அதிகமாக முன் வைத்துள்ளார்.

2.இவர் குறிப்பிடும் பல செய்திகள் திராவிட இயக்க நூல் வாசிப்பாளர்களுக்கு பழைய செய்திகள்தான். புதியவர்கள், நூல் வாசிப்பு குறைந்தவர்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம்.

3.பகத்சிங்காந்திபெரியார் குறித்த செய்திகள் 30 ஆண்டுகளுக்கு முன் சுபவீ அவர்கள் எழுதியபகத்சிங்கும்இந்திய அரசியலும்நூலில் வந்தவைதான். அப்போது அவர் மாலெ ஆதரவாளர். பெரியார் சுதந்திரநாளை துக்கநாள் என அறிவித்தது அவரது இயக்க செயல்பாட்டில் ஒரு கரும்புள்ளி என எழுதி இருந்தார்.

4.பச்சையப்பன் கல்லூரி நிகழ்வில் படியேற பெரியார் தன்னம்பிக்கையுடன் முயன்று பார்த்திருக்கலாம். ஆனால் மனித முயற்சிக்குதான் முக்கியத்துவம் என்ற அடிப்படையில் இருந்திருக்குமா  என்பது தெரியவில்லை.

பெரியார் சாய்வு நாற்காலியில் உட்காருவது சோம்பல்தனமானது என கருதி பயன்படுத்துவதில்லை என்பதான பதிவை முகநூலில் படித்துள்ளேன்.

அடுத்து,

அறிவியல் வளர்ச்சியை நாம் பயன்படுத்தி இயந்திரங்களின் மூலம் உடலுழைப்பைக் குறைத்துகொள்ள வேண்டும் என எழுதியதைப் படித்து இருக்கிறேன்.

5.காந்தி பிம்பவழிபாட்டின் தீமை கருதி, காந்தி பொம்மைகளை உடையுங்கள் என பேசியும்எழுதியும் இருக்கிறார். உடைக்கும் போராட்டத்தை அறிவித்த மாதிரி தெரியவில்லை.

காந்தி சிலையை உடைத்ததாகவும் தெரியவில்லை. காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரிடம் நேரிடையாக விவாதித்த செய்திகளும் உண்டு.

மதவெறியால் காந்தி கொல்லப்பட்டதால் இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டும் என்றார்சான்று :


6.கம்யூனிஸ்டு தலைவர் இராமமூர்த்தி அவர்களை பெரியாரே பாராட்டிய பதிவுகள் உண்டு. தேர்தலில் ஆதரித்த செய்தியும் வரலாற்றில் உண்டு. இராமமூர்த்தி அவர்களும் பெரியாரின் மீது கொண்டுள்ள மதிப்பை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவரை பார்ப்பனர் சார்பாளர் என பெரியார் காலத்தில் யாரும் பேசியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அண்ணாவிற்கு நெருக்கமான நண்பராக இருந்து இருக்கிறார்.

7. 'நீதிக்கட்சி வைக்கம் போராட்டத்தை முழுமனதோடு ஆதரிக்கவில்லை' என்று  நூலில் உள்ளது என்கிறார் பேரா.நாகநாதன்அது எதிர்ப்பிலும் வராது, ஆதரிக்கவில்லை என்ற கணக்கிலும் வராதே.

ஆனால் பேரா.நாகநாதன் பேசும்போது நீதிக்கட்சிக்கு எதிரான மனநிலையை கேட்பவர்களிடம் உருவாக்குகிறார்.

8. இட ஒதுக்கீடு நீதிக்கட்சி காலத்தில் பார்ப்பனர் உட்பட 100% வழங்கப்பட்டது சரியான விகிதாசார முறைதானே.

9.காமராஜரை 1967 வரை ஆதரித்து வந்தார் பெரியார். பெரியார்  லேபிளை பயன்படுத்தும் உரிமை திமுக-வைப் போல் காமரஜருக்கும் உண்டு தானே.

10.ராஜாராம் மோகன்ராய் சதியை எதிர்க்க தனது அண்ணியைக் கட்டாயபடுத்தி தீயில் தள்ளிவிடப்பட்டது காரணம் என்றாலும்,( பெரியாருக்கு அரசியல் அறிமுகம் ராஜாஜியால் என்பதை கவனம் கொள்ள வேண்டும்)

அவர் பெண்கல்விவிதவை மணம், சதி எதிர்ப்பு  உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பெரியார் பிறப்பதற்கு முன் பல்வேறு எதிர்ப்புகளை மீறியே செய்தார்.

அதில் சட்ட ரீதியான வெற்றியும் பெற்றார். வேத, உபநிடதங்களை ஆங்கிலம்வங்காள மொழியில் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்தார்

இவற்றைப் பாராட்டி பெரியாரும்அண்ணாவும் பேசிய எழுதிய பதிவுகள் உண்டு.
.
11.தமிழ்நாட்டுப் பிராமணர்கள் mischief ஆக நடந்து கொண்டார்கள் என்கிறார். போராட்டத்தில் கலந்து கொண்ட பிராமணர்கள் பற்றிய செய்திகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளது என்பதை மறைக்கிறார் நமது பேராசிரியர்.நாகநாதன் அவர்கள்.

12.ஒரு ஆய்வு நூலை அறிமுகப்படுத்தும் போதும், அம்மேடையை தனது கட்சி பிரச்சார மேடையாக  மாற்றும்  ஆளுமைக்காக பேராசிரியரைப் பாராட்டலாம்.

எனது குறிப்பு:

வைக்கம் போராட்டத்தை ராஜாஜி உள்ளிட்டு பல தமிழ்நாட்டு பிராமணர்கள் ஆதரித்த சான்றுகளும் வெளிப்பட்டுள்ளன; 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டதையும் அவ்வாறு ஆதரித்த சான்றுகள் வெளிப்பட்டுள்ளன
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html

.வெ.ரா அவர்களின் 'திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ராஜாஜியும், அவர் செல்வாக்கில் இருந்த பிராமணர்களும் ஆதரித்தார்கள்.
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html)

அவற்றில் எல்லாம், தமிழ்நாட்டுப் பிராமணர்கள் mischief ஆக நடந்து கொண்டார்கள் என்கிறாரா, பேராசிரியர்.நாகநாதன். அந்த 'mischief' பூச்சாண்டியைக் காட்டி, தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோரையும் பிராமணர்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றி, தி.மு. தலைவர்  அரங்கேற்றிய 'சமூக கீரி - பாம்பு சண்டை'யில், இனியும் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியுமா
(‘தி.மு. தலைவர் கருணாநிதியின் 'சமூக கீரி - பாம்பு சண்டை'’; 
http://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html) 

No comments:

Post a Comment