Thursday, October 3, 2019

வெறுப்பு அரசியலில் சிக்கிய பிராமணர்களும், பிராமணரல்லாதோரும்;


தி.மு. தலைவர் கருணாநிதியின் 'சமூக கீரி - பாம்பு சண்டை' (1)



வெறுப்பு அரசியலில் சிக்கிய 'பெரியாரிஸ்டுகளுக்கு', வட நாட்டில் நடக்கும் 'இராம லீலா'விற்கு எதிராக, தமிழ்நாட்டில் 'இராவண லீலா' நடத்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது 'சாடிஸ்ட்' (Sadist; https://en.wikipedia.org/wiki/Sadistic_personality_disorder) வகையைச் சார்ந்ததா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1949 முதல் 1967 வரை பிராமணர்களை விட அண்ணா உள்ளிட்ட தி.மு. தலைவர்களை எல்லாம் அதிகமான கடுஞ்சொற்களால் .வெ.ரா கண்டித்தது தெரியாமல், அது போலவே, .வெ.ராவிற்கு எதிரான வெறுப்பு அரசியலில் சிக்கிய பிராமணர்களுக்கு, .வெ.ராவின் படத்தை செருப்பால் அடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியானது 'சாடிஸ்ட்' வகையைச் சார்ந்ததா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்

.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்தது வரை, 'இராவண லீலா' நடத்தியது கிடையாது.

(வடநாட்டில் நடைபெறும் 'இராமலீலா' நிகழ்ச்சியை நிறுத்துமாறு 'மணியம்மை அனுப்பிய மடலுக்கு) இந்திரா காந்தியிடமிருந்து எந்த விதப் பதிலும் வராததால் 1974ஆம் ஆண்டு பெரியார் முதலாமாண்டு நினைவு நாளை வடநாட்டு எதிர்ப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு போராட்ட நாளாக அறிவித்து அதில் இராமன் உருவம் கொளுத்தப்படும் என அன்னை மணியம்மையார் அறிவித்தார்.... 24-டிசம்பர் 1974 அன்று திட்டமிட்டபடி இராவண லீலா நடை பெற்றது...இராமன், இலட்சுமணன், சீதைஉருவங்கள் தீயிடப்பட்டன.

அதற்காக மணியம்மையார், (கும்பகோணம் தி. தோழர்) ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் 6 மாதம் தண்டனை விதித்தது. 6 மாதச் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் பட்டது. 7 மாத விசாரணைக்குப் பின் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்'. (https://aasifblogs.wordpress.com/2016/10/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/)

தி.மு. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, சென்னை பெரியார் திடலில் மணியம்மை 'இராவண லீலா' நடத்த முனைந்த போது, பொதுநலனில் அக்கறை உள்ள முதல்வராக இருந்திருந்தால், அந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே மணியம்மையையும் கூட இருந்த 'பெரியாரிஸ்டுகளையும் கைது செய்து, திருமண மண்டபத்தில் வைத்து மாலையில் விடுதலை செய்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அப்போது முதல்வர்களாக இருந்திருந்தால், அதைத் தான் செய்திருப்பார்கள். ஆனால் கருணாநிதியோ இராமர் உருவ பொம்மையை முழுவதுமாக எரிக்க அனுமதித்தார்; பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலில் சிக்கிய 'பெரியாரிஸ்டுகளுக்கு', .வெ.ரா அவர்கள் காலத்தில் கிடைக்காத மகிழ்ச்சி கிட்டியது.

அவ்வாறு சென்னை பெரியார் திடலின் உள்ளே 'இராவண லீலா' தொடங்கியது முதல் முடிந்தது வரையில், பெரியார் திடல் நுழைவு வாயிலுக்கு எதிரில், பிராமண நாவலாசிரியர் 'தீபம்' நா.பார்த்தசாரதி தமது ஆதரவாளர்களுடன், 'பெரியார்' படங்களை கரங்களில் செருப்பால் அடிக்கும் 'போராட்டத்தினை'(?) நடத்தினார்கள்; காவல் துறையின் முழுப்பாதுகாப்புடன்; .வெ.ராவிற்கு எதிரான வெறுப்பு அரசியலில் சிக்கிய பிராமணர்களுக்கு, .வெ.ரா அவர்கள் வாழ்ந்த காலத்தில் கிடைக்காத மகிழ்ச்சியானது, முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கிட்டியது.

மேற்குறிப்பிட்டவாறு மகிழ்ச்சி அடைந்த 'பெரியாரிஸ்டுகளுக்கு', காவல்துறை பாதுகாப்புடன் பிராமணர்கள் .வெ.ரா படங்களை செருப்பால் அடிக்க அனுமதித்த முதல்வர் கருணாநிதி மீது கோபப்பட்டதாக தெரியவில்லை.

அது போலவே, மேற்குறிப்பிட்டவாறு மகிழ்ச்சி அடைந்த பிராமணர்களுக்கு, இராமர் உருவ பொம்மையை முழுவதுமாக எரிக்க அனுமதித்த முதல்வர் கருணாநிதி மீது கோபப்பட்டதாக தெரியவில்லை.

முரசொலியில் (8.10.1954) கருணாநிதி "“டெல்லியிலே நடக்கும் ராமலீலாக்களை எதிர்த்து தென்னாட்டிலும், ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்என்று எழுதினார். அவரின் எச்சரிக்கையை செயல்படுத்தியவர்கள் மீது முதல்வராக இருந்த கருணாநிதி வழக்கு தொடுத்தார். ஆனால் அதே நாளில், அதே நேரத்தில் சென்னை பெரியார் திடலின் முன், .வெ.ரா அவர்களின் படத்தினை செருப்பால் அடித்தவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளார். 'இராவண லீலா' சாதனையை பெருமையாக எழுதும் 'பெரியார்' ஆதரவாளர்கள் அதனை மறைத்து இன்று வரை எழுதி வருவது உண்மையா? இல்லையா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.

காலனி ஆட்சிக்கு முன், வடநாட்டில் நடந்த 'இராம லீலா'விற்கு தமிழ்நாட்டில் ஏதும் எதிர்ப்பு இருந்ததா? பின் காலனி ஆட்சியில் உருவான 'திராவிடர் கழகம்' ஏன் எதிர்க்கத் தொடங்கியது? காலனி சூழ்ச்சியில் தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லின் பொருளானது திரிக்கப்பட்டு (Semantic distortion), 'race' என்ற ஆங்கிலச்சொல்லின் பொருளானது திணிக்கப்பட்டு, 'திராவிடர்' என்ற சொல் அரங்கேறியதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் 'இராம லீலா'விற்கு எதிர்ப்பு அரங்கேறியது; என்பது எனது ஆய்வு முடிவாகும்; அறிவுபூர்வ மறுப்புகளை எதிர்நோக்கி.

அது மட்டுமல்ல, புராணங்கள் என்பவை எல்லாம் பல பரிமாணங்கள் கொண்டவையாகும்.

அதனை மேற்கத்தியப் பகுத்தறிவு அணுகுமுறையில் ஏன் விளங்கிக் கொள்ள முடியாது? என்பதையும் விளக்கியுள்ளேன்.
(‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html)

புராணங்களில் சிவன், விஷ்ணு உள்ளிட்ட இன்னும் பல கடவுள்கள் தமக்குள் மோதிக்தொண்டது தொடர்பான பல கதைகள் உண்டு. உதாரணமாக சிவன் விஷ்ணுவுடன் மோதி வென்றதற்கும் கதைகள் உண்டு (https://hinduism.stackexchange.com/questions/2219/why-did-lord-shiva-fight-with-lord-vishnu).

அது போலவே, இராவணன் ஏன் இராமனுடன் மோதி தோற்க வேண்டும்? என்பது தொடர்பாகவும் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.

ஏழு முறைகள் முயற்சித்து முக்தி அடையும் வாய்ப்பினைத் தவிர்த்து, மூன்றாவது முயற்சியில் முக்தியடையும் வாய்ப்ப்பினை தேர்ந்தெடுத்ததால் தான், இராவண அவதாரம் எடுக்க நேரிட்டது.
(In the Bhagavata Purana, Ravana and his brother, Kumbhakarna, were said to be reincarnations of Jaya and Vijaya, gatekeepers at Vaikuntha, the abode of Vishnu and were cursed to be born in Earth for their insolence.

These gatekeepers refused entry to the Sanatha Kumara monks, who, because of their powers and austerity appeared as young children. For their insolence, the monks cursed them to be expelled from Vaikuntha and to be born on Earth.

Vishnu agreed that they should be punished. They were given two choices, that they could be born seven times as normal mortals and devotees of Vishnu, or three times as powerful and strong people, but as enemies of Vishnu. Eager to be back with the Lord, they choose the latter one. Ravana and his brother Kumbhakarna were born to fulfill the curse on the second birth as enemies of Vishnu in the Treta Yuga.

அவ்வாறு முக்தியடைய பூமியில் பிறந்த இராவணன் எரிக்கப்படும் நிகழ்ச்சியானது, இராவணன் முக்தியடைவதன் தொடக்கமே ஆகும்.

இராவணனை 'பிராமணர்' என்று அறிவித்து, வடநாட்டில் பிராமணர்கள் இராவணனை வழிபட்டு வருவது தொடர்பான சான்றுகளும் வெளிவந்துள்ளன.

‘Even though Ramayana describing Ravana as a demon king and symbol of evil; still he is worshiped in several places. There are some Shiva temples where Ravana is worshiped.

The Kanyakubja Brahmins of Vidisha district worship Ravana.


Ravana also worshiped by Hindus of Bisrakh, who claim their town to be his birthplace.

The Sachora Brahmins of Gujarat also claim to descend from Ravana, and sometimes have "Ravan" as their surnames.

Saraswat Brahmins from Mathura claim Ravana as a saraswat brahmin as per his lineage. (https://en.wikipedia.org/wiki/Ravana#Etymology)

'இராம லீலா' கொண்டாட்டங்கள் காலனி ஆட்சிக்கு முன்பிருந்தே, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பின்றி நடந்து வருவதாகும்.

According to Norvin Hein, a professor of Divinity and of Religious Studies specializing on Indology, Ramlila were in vogue before 1625, at least in North India between 1200 and 1500 CE, but these were based on Valmiki's Ramayana.’ 

இப்போது நடக்கின்ற மோடி ஆட்சியில், 'இராம லீலாவை' யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டும் என்ற முயற்சியைத் தொடங்கினால், தமிழ்நாட்டில் எவ்வளவு எதிர்ப்புகளும் போராட்டங்களும் வெடிக்கும்? என்பதை விளக்க வேண்டியதில்லை.

தி.மு. தலைவர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் (பின்னர் மகன் மு. அழகிரி), .ராசா, டி.ஆர்.பாலு அமைச்சர்களாக இருந்த காலத்தில், மன்மோகன் சிங் அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போது, யுனெஸ்கோ 'இராம லீலாவை' அங்கீகரித்த அற்விப்பு வெளிவந்தது 
(‘The Ramlila festivities were declared by UNESCO as one of the "Intangible Cultural Heritage of Humanity" in 2008.’; (https://en.m.wikipedia.org/wiki/Ramlila)

அவ்வாறு யுனெஸ்கோ 'இராம லீலாவை' அங்கீகரித்தது தொடர்பாக, மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் -தி.மு. கூட்டணி அரசை எதிர்த்து, தமிழ்நாட்டில் 'பெரியார்' கட்சிகள் போராட்டம் நடத்தினார்களா

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, .சிதம்பரம் 'இந்தி தினம்' கொண்டாடி இந்தியில் இந்தியை ஆதரித்து பேசிய போது, எவ்வாறு தமிழ்நாட்டில் அதை எதிர்த்துப் போராடவில்லையோ, அது போலவே அமைதி காத்தார்களா?

கீழ்வரும் செய்தியைப் படித்த போது, பிராமணர்களிலும் பிராமணரல்லாதோரிலும் கணிசமானவர்களை பரிமாற்ற வெறுப்பு நோயில் சிக்க வைத்து, ‘சமூக கீரி - பாம்பு சண்டைகாட்டி, தமிழ்நாட்டை ஏமாற்றி, சர்க்காரிய கமிசன் குறிப்பிட்ட 'அறிவியல் ஊழலை' முதல்வராக இருந்த கருணாநிதி வெற்றிகரமாக செயல்படுத்தினாரா? என்ற கேள்வி தோன்றியது.

கீரியையும், பாம்பையும் சண்டை போட வைப்பதாக சொல்லும் வித்தைக்காரன், கடைசி வரை அப்படியொரு சண்டையை நடத்தவே மாட்டான். இன்றைய .தி.மு.. அம்மா அணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையிலான மோதல் இத்தகையதுதான்

பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும், திராவிட மனநோயாளித்தனத்தின் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.('திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?’; 
http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html)

ஊழல்வழி ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தாய்மொழி தமிழைக் காவு கொடுத்தும்; ஏரிகள், கால்வாய்கள், கிரானைட், தாது மணல், உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்களை கொள்ளையடித்தும்; ஊழல் துணிச்சலில், சட்டத்தின் மீது பயமின்றிகங்கை அமரன் தொடங்கி சத்யம் தியேட்டர்ஸ் வரை தனியார் சொத்து அபகரிப்பு, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்து வரும் போக்கிற்கும், காரணமான அரசியல் கொள்ளையர்களை எதிர்க்காமல் பயணிப்பதில், 'திராவிடர் கழகமும்'(மற்ற 'பெரியார்' கட்சிகளும்), 'பிராமணர் சங்கமும்' ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html)

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்தால், 'திராவிடர்', 'தமிழ்', 'இனம்', 'சாதி' தொடர்பான தமது புரிதலை எவ்வாறு திருத்திக் கொண்டிருப்பார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் வளர்ந்துள்ள 'சமூக கீரி பாம்பு சண்டை'யானது, எவ்வாறு குடும்ப ஊழல் அரசியலுக்கு துணை புரிந்து வருகிறது? என்பதையும் அவர் கண்டுபிடித்துக் கண்டித்திருப்பார்.

இனி தமிழ்நாட்டில் 'சமூக கீரி - பாம்பு சண்டை' எடுபடாது. ஏனெனில் இது டிஜிட்டல் யுகம். இன்றைய படித்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் கவர்ச்சிகர பேச்சிலும் எழுத்திலும் ஏமாற மாட்டார்கள்; எனது தலைமுறையில் ஏமாந்தது போல.


குறிப்பு :

'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்றார் .வெ.ரா; இந்து முஸ்லீம் கிறித்துவ கடவுள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும்.

ஆனால் கற்பிக்கப்படாமல் அவரவர் அறிவு அனுபவங்களால் உணர்ந்த கடவுளை .வெ.ரா எதிர்க்கவில்லை; சமூகத்திற்கு கேடின்றி, அக்கடவுளை வழிபடுவதையும் அவரவர் தனிப்பட்ட உரிமையாக மதித்தவர் .வெ.ரா; என்பதற்கு சான்றுகள் உண்டு. அதனை 'பெரியார்' கட்சித் தலைவர்கள் மறுப்பதை நான் வரவேற்கிறேன்; அறிவுபூர்வ விவாதத்தினை எதிர்நோக்கி.

அது போலவே, 2014 ஏப்ரலில் வெளிவந்த கீழ்வரும் பதிவு தொடர்பாக, எந்த பெரியாரிஸ்டிடம் இருந்தும் மறுப்பு வரவில்லை; இனி வந்தாலும் ஆவலுடன் வரவேற்பேன்.
‘Experiencing God, the Infinite, through Resonance’; http://veepandi.blogspot.com/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html

1 comment:

  1. அருமையான, ஆழமான ஆய்வு.இங்கு திட்டமிட்டுத் தமிழையும், தமிழ் பண்பாட்டையும், தமிழர்களையும் கேவலப்படுத்தி தமிழ் இன உணர்வு வராமல், திராவிடர் என்ற மாயையில்
    சிக்க வைத்து விட்டார்கள் திக மற்றும் திமுக தலைமையும் இரண்டாம் கட்டத் தலைவர்களும்.ஏன் பல தமிழறிஞர்களும் உடன்பட்டு/ அனுசரித்து சென்றதை ஆய்வு செய்ய வேண்டும்.அத்துடன் எதிராக போராடிய தமிழறிஞர்கள் வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்.
    சாந்தன்.கு

    ReplyDelete