Wednesday, May 20, 2020


உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது (2);


 'சங்கத்தமிழன்' வெளிப்படுத்திய தவறான தகவல்கள்



கர்நாடக இசையான தமிழிசை | Tamil Music or Carnatic Music |ஆரியத்திருட்டு-19’; 

'சங்கத்தமிழன்  TV,  

எனது கவனத்தினை ஈர்த்தது. அதில் கீழ்வரும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

1.    கர்நாடாகாவுக்கும் கர்நாடக இசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

2.    கர்நாடக இசையின் பிதாமகனாகப் போற்றப்படுவது தியாகராஜரைத்தான்

3.    தமிழ்நாட்டில் இருந்து உருவானது தான் கர்நாடக இசை.

4.    முத்துத்தாண்டவர் தான் முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தவர்.

5.    எந்தெந்த தமிழ் கீர்த்தனைகளை (முத்துத்தாண்டவர் தேவாரத்த்தில் இருந்து காப்பியடித்து தியாகராஜர் அவற்றை தெலுங்கு பாடல்களாக மாற்றினார், என்பதை தமிழிசை அறிஞர் எஸ்.ராமநாதன் ஒரு பட்டியல் வெளியிட்டு, அதைப் பாடியும் காண்பித்தார்.

6. தமிழிசையில் இருந்து தான் இந்துஸ்தானி இசை பிறந்தது’, என்பதை, இந்துஸ்தானி இசை மேதைகளை வரவழைத்து, 6 வருடங்களில் 7 இசை மாநாடுகளை நடத்தி ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்தார்.

7.    சுருதிகள் 24 (?) என்று ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்தார்.

8. தமிழ்ப்பண் தான் ராகமாக மாற்றப்பட்டது, என்பது தொடர்பாக ஆபிரகாம் பண்டிதர் முன்வைத்த கேள்விகளுக்கு பிராமண இசைக்கலைஞர்களிடம் இருந்து பதில் வரவில்லை.  

9. நாட்டுப்புற இசையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம் தான் தமிழிசை. அதைக் காப்பியடித்து தான் கர்நாடக சங்கீதம், என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


10.இன்றைக்கு கர்நாடக இசையில் பயன்படுத்தும் அனைத்து வாத்தியங்களும் தமிழர்களுடையது தான்

11. சிலப்பதிகாரத்தை அடியொற்றி எழுதியது தான் சங்கீத ரத்னாகரம்.

12.  ஏழு சுரங்களில் தமிழ் ''-வுக்கு பதிலாக வடமொழி '' உச்சரிப்பைப் புகுத்தி அதற்காக பல கட்டுக்கதைகளை எழுதினார் சங்கீத ரத்னாகரம் நூலாசிரியர் சாரங்கதேவர்.

13.'அகராதிகளும் சொற்களஞ்சியங்களும்   இசைத்தமிழுக்கு இல்லை' என்பதற்காக மம்மது 'தமிழிசைப் பேரகராதி' என்ற நூலை வெளியிட்டார்.

14. தமிழிசையைத் திருடிய தெலுங்கு பிராமணர்கள் முதல் முதலாக‌ 'கர்நாடக சங்கீதம்' என்ற சொற்களைப் பயன்படுத்தினார்கள்.

15. தியாகராஜர், முத்துச்சாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி மூவரும் தான், தமிழிசையைத் திருடி 'கர்நாடக இசை' என்று பேர் வைத்தார்கள்.

16. பிராமணர்களாக இல்லாதவருக்கு கர்நாடக இசை மறுக்கப்படுகிறதுடி. எம் கிருஷ்ணா  என்ற பிராமணர் இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்

17. எல்லா இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் பிராமணர்களாகத்தான் இருந்தார்கள். இதை உடைச்சு எங்களுக்கும் இசை வரும் என்று இளையராஜா நிரூபித்தார். பிராமணர்கள் ஒதுக்கிய நாட்டுப்புற இசையைத் தான் பல படங்க:ளுக்கு இசை அமைத்தார் இளையராஜா.

18. நமது இசையைத் திருடி நம்மைக் கற்றுக்கொள்ள விடாமல் தடுக்கிறார்கள் பிராமணர்கள்

' 'ஆங்கோர் வாட்' தமிழனின் 'அடையாளம்' என்று அறிவித்திருப்பதானது அறிவு வரை எல்லைகளைத் தாண்டிய துணிச்சலா? தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட வெளிப்பட்ட உயர்வு வெளிப்பாடா?' என்பதை ஏற்கனவே விவாதித்துள்ளேன்

அதையும் விஞ்சும் முட்டாள்த்தனத்தினை மேற்குறிப்பிட்ட காணொளி வெளிப்படுத்தியுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பான விளக்கத்தினை இங்கு பார்ப்போம்.

1.    கர்நாடாகாவுக்கும் கர்நாடக இசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

2.    கர்நாடக இசையின் பிதாமகனாகப் போற்றப்படுவது தியாகராஜரைத்தான்

3.    தமிழ்நாட்டிலிருந்து உருவானது தான் கர்நாடக இசை.

என்பவை எவ்வாறு தவறாகும்? என்பதை கீழ்வரும் சான்றுகள் நிரூபிக்கும்.

இன்றைய கர்நாடக இசைக்கல்வி முறையை உருவாக்கியவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புரந்தரதாசர். அவர் தியாகராஜர், முத்துச்சாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவருக்கும், தமிழிசை மும்மூர்த்திகள் மூவருக்கும் முன்பே கர்நாடக மாநிலத்தில் பிறந்து வாழ்ந்தவர். அவர் தான் கர்நாடக இசையின் பிதாமகனாகப் போற்றப்படுபவர்
(Purandara Dāsa (1484 to 1564 AD); Purandara dasa systemized the method of teaching Carnatic music which is followed till the present day; he is rightly regarded as ‘Sangeeta Pitamaha’; His composing style namely the second letter rhyme (dvitiyakshara prasa) had a strong influence on subsequent generation of composers including Thyagaraja. It is on record that Saint Thayagaraja (who took birth a couple of centuries later) adored Dasa and endeared him as his ‘manasika guru’ on the advice of his mother; 
http://www.purandara.org/about-purandara.html)


His musical scheme was followed by all subsequent great composers of south India like Venkatamakhi Kshetrajna, Tyagaraja, Muthuswami Dikshitar etc.;
http://www.kamat.com/indica/faiths/bhakti/purandara.htm)

அது மட்டுமல்ல, புரந்தரதாசர் சாதி அமைப்புக்கு எதிராக துணிச்சலுடனும் பயணித்தவர் ஆவார்.
Purandara Dāsa  was against the caste system, and believed true caste was based on character, not on birth. 

அடுத்து கீழ்வரும் கேள்விகளைப் பார்ப்போம்.

4.    முத்துத்தாண்டவர் தான் முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தவர்.

5.    எந்தெந்த தமிழ் கீர்த்தனைகளை தேவாரத்தில் இருந்து காப்பியடித்து தியாகராஜர் அவற்றை தெலுங்கு பாடல்களாக மாற்றினார், என்பதை தமிழிசை அறிஞர் எஸ்.ராமநாதன் ஒரு பட்டியல் வெளியிட்டு, அதைப் பாடியும் காண்பித்தார்.

முத்துத்தாண்டவருக்கு முன்பே கர்நாடக மாநிலத்தில் பிறந்து வாழ்ந்தவர்  புரந்தரதாசர் . புரந்தரதாசருக்கு முன்பேயே ஆந்திராவில் பிறந்து வாழ்ந்தவர் அன்னமாச்சாரி. அவர் உருவாக்கிய கீர்த்தனைகளே கர்நாடக இசையில் பிரபலமானது.

Tallapaka Annamacharya (22 May 1408 – 4 April 1503) ; The musical form of the keertana songs that he composed, which are still popular among Carnatic music concert artists; https://en.wikipedia.org/wiki/Annamacharya)

'முத்துத்தாண்டவர் தான் முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தவர்.' என்று சொல்லி விட்டு;

'தமிழ் கீர்த்தனைகளை தேவாரத்தில் இருந்து தியாகராஜர்  காப்பியடித்தார்' என்று சொல்வது முரண்பாடு இல்லையா? கீர்த்தனைகள் தேவாரத்தில் இருந்ததா? இல்லையென்றால், தியாகராஜர் கீர்த்தனைகளுக்காக ப்யன்படுத்திய 'இசை அமைப்புகள்' (Musical structures) தேவாரத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா? தேவாரப் பண்களில் இருந்து இராகங்கள் பெறுவதில் உள்ள தவறுகளை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். ('தவறான திசையில் தமிழிசை ஆர்வம்'; 

அந்த அளவுக்கு அபத்தமாக கருத்து தெரிவிக்கக்கூடியவர் அல்லர் பிராமணரான எஸ்.ராமநாதன். எனவே உரிய ஆதாரங்கள்  இன்றி இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதானது, அவரை அவமதிப்பதாகும்.

அடுத்து, கீழ்வரும் கேள்வியை ஆராய்வோம்.

6.    தமிழிசையில் இருந்து தான் இந்துஸ்தானி இசை பிறந்தது’, என்பதை, இந்துஸ்தானி இசை மேதைகளை வரவழைத்து, 6 வருடங்களில் 7 இசை மாநாடுகளை நடத்தி ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்தார்.

ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்' நூலில் அல்லது அவரது பிற நூல்களில் இருந்து, இதற்கு ஆதாரம் காட்டுமாறு நான் கோரிய போது, 'ஆனந்த விகடன்' இதழில் அக்கருத்தை வெளிப்படுத்தியவரிடமிருந்து, கீழ்வரும் பதில் எனக்கு வந்தது.

'அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தர நான் கூகுள் இணைய தளம் அல்ல என்பதை பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.'

அமுதா பாண்டியன், மம்மது உள்ளிட்டு மேற்குறிப்பிட்ட கருத்துக்கு, ஆபிரகாம் பண்டிதரின் நூல்களில் இருந்து எவராவது ஆதாரங்களை வெளிப்படுத்தினால், அதற்கு நன்றி தெரிவித்து, அவற்றை நான் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

நா.மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' நூலில்,

'தமிழிசை (தென்னிந்திய இசை - கர்நாடக இசை) மற்றும் இந்துஸ்தானி இசை (வட இந்திய இசை) இரண்டும் ஒரே இசை முறையின் இரு பிரிவுகள்." 

என்று வெளிப்பட்ட கருத்தானது எவ்வாறு தவறானது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது (1); தமிழ் இசைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?’; 

(வளரும்)

No comments:

Post a Comment