Monday, June 15, 2020


எம்.ஜி.ஆர் என்ற தனித்துவமான சமூக இசை ? (2)


'பராசக்தி'-இன் ரசனையானது, தமிழ்நாட்டிற்கு பாதகமானதா? சாதகமானதா?



ஒரு மனிதரின் ரசனை என்பதை, அவரின் மனதில் உள்ள தேவைகள் மற்றும் ஈடுபாடுகளே தீர்மானிக்கின்றன. சமூகத்தில் அவர் ஏற்று பயணிக்கும் அடையாளமும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றன.

நானறிந்தது வரையில், தமிழ்நாட்டில் தேசிய அடையாளத்தில் பயணித்தவர்கள் பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களாகப் பயணித்தார்கள். 1967க்கு முன், மாணவர்களிலும் தி.மு.கவால் ஈர்க்கப்படாதவர்கள் பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களாகப் பயணித்தார்கள்.

அரைகுறை படிப்பாளிகளில், தம்மை 'அறிவாளியாக' கருதிக் கொண்டு வாழ்ந்தவர்களில் பலரும், தி.மு.கவால் ஈர்க்கப்பட்ட மாணவர்களும், இரு பிரிவுகளான ரசிகர்களாக வெளிப்பட்டார்கள். எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் ஒரு பிரிவாகவும்எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்காமல், கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்களையும், எஸ்.எஸ்.ராசேந்திரன் போன்றவர்கள் நடித்த‌ தி.மு. ஆதரவு படங்களை பார்த்து ரசித்தவர்கள் இன்னொரு பிரிவாகவும் வெளிப்பட்டார்கள்.  

கிராமங்களில் எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்களிடம் பழகிய அனுபவங்கள் எனக்கு உண்டு. பொதுவாக, படித்தவர்களை விட, எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்களிடம் இருந்த நேர்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது உண்டு.

1967க்கு முன் நானறிந்தவர்களில், கல்லூரி வாசலை மிதிக்காத அரைகுறை படிப்பாளிகளில், தம்மை 'அறிவாளியாக' கருதிக் கொண்டு வாழ்ந்தவர்களில் பலர் தி.மு.கவால் ஈர்க்கப்பட்டார்கள். என்னைப் போன்று 1967க்கு முன் மாணவர்களாக இருந்தவர்களில் தமிழ் ஆர்வலரில் பலர் தி.மு.கவால் ஈர்க்கப்பட்டார்கள்.

காமராஜர் ஆதரவுப் போக்கில் பயணித்த என் தந்தையும், அவரது நண்பர்களும், தி.மு. பேச்சாளர்களை சமுகத்திற்குக் கேடான இழிவானவர்களாகக் கருதி, என்னைப் போன்றமாணவர்கள் 'முதிர்ச்சியின்றி', அவர்களின் 'கவர்ச்சிகர' பேச்சுக்களில் 'மயங்கி' இருப்பதாக கருதி இருந்தார்கள். அதே நேரத்தில், பெரியவனான பின், என்னைப் போன்றவர்கள் திருந்தி விடுவோம், என்று கருதி, உயர்நிலைப்பள்ளி/கல்லூரி மாணவர்களாயிருந்த என்னைப் போன்றவர்களுடன், எனது தந்தை உள்ளிட்ட பெரியவர்கள் எல்லாம்;

எங்களுடன் அவ்வப்போது விவாதித்து, அந்த தவறானப் போக்கிலிருந்து விடுவிக்க முயற்சிக்காமல்,‌ 'அலட்சியமாக' இருந்தார்கள்
(https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_13.html)

1967க்கு முன், தி.மு. ஆதரவாளர்களில் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்காமல், கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்களையும், எஸ்.எஸ்.ராசேந்திரன் போன்றவர்கள் நடித்த‌ தி.மு. ஆதரவு படங்களை பார்த்து ரசித்தவர்கள் உண்டு.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பெரும்பாலும் தற்குறிகளாகவும், அரைகுறை படிப்பாளிகளாகவுமே பெரும்பாலும் இருந்தார்கள். என்னைப் போல கல்லூரி மாணவராக இருந்து கொண்டு, எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருந்தவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே இருந்தார்கள்.

ஒரு மனிதரின் ரசனை என்றால் என்ன? என்ற தேடலில் கிடைத்தவை.

'ரசனை என்பது துளு மற்றும் சமஸ்கிருதம் மொழி சொல்லாகும்.. இதனை.. அழகை அதன் ரசத்தை உணர்வது என்று பொருளாகும்.. இதற்கு சிறந்த தமிழ்சொல் என்றால். முருகியல் உணர்ச்சி என்பதை சொல்லலாம்..'

'ரசனை என்பது இறச்சனை என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு வடிவம் ஆகும். விருப்பத்தைக் குறிக்கும் இறைச்சி என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணுமாறு தோன்றும்.
இறைச்சி (=விருப்பம்) >>> இறச்சனை >>> இறசனை >>> ரசனை.'

நாயைப் புலால் மணமே இல்லாமல் வளர்ப்பவர்கள் உண்டு. ஆனால் பிறந்து வெளிவந்த குட்டியானாலும் சரி பத்து வருடம் அசைவ வாசனையே இல்லாமலிருக்கும் நாயானாலும் சரி மாமிசத்தை மணம் காட்டினால் வந்து கவ்விக்கொள்ளும். அதன் உணவு அது என அதன் மூளைக்குத்தெரியும். பலசமயம் ரசனை என்பது இப்படித்தான்.’ 

ஒரு மனிதரிடம் வெளிப்படுகின்ற ரசனை என்பதானது, அவரைப் பற்றிய, அவர் வாழும் சமுகத்தைப் பற்றிய அரிய தகவல்களைக் கொண்ட சமூக சிக்னலாகும் (Social Signal). அந்த ரசனையை வெளிப்படுத்தும் அவரின் செயல்பாடுகள் எல்லாம், அவரின் சமூக விசைகள் (Social Forces) காரணமாகவே வெளிவருகின்றன.

சமூக விசைகள் (Social Forces) எவ்வாறு தோன்றி வளர்ந்து மறைகின்றன?

மனிதர்களின் செயல்பாடுகளுக்கான ஊற்றுக்கண்களாக அவர்கள் உணரும் தேவைகள் (Needs), அந்த தேவைகள் எல்லாம் அவர்கள் மனதில் தூண்டும் ஈடுபாடுகள் (Interests), அந்த ஈடுபாடுகள் தூண்டும் அவர்களின் செயல்பாடுகள்;

ஆகியவை எல்லாம் மனிதர்களின் மூளையில் முளை விட்டு வளர்பவை ஆகும்.

மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும்ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் (மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன.

அந்த மனிதரிடமுள்ள ஆற்றலின் அடிப்படையில், அவரின் செயல்பாடுகள் மூலமாக வெளிப்படுவதே அவர் தொடர்புள்ள சமூக விசையாகும்.

ஒரு தனி மனிதரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரின் அறிவு அனுபவ அடிப்படைகளில், அவரின் மனத்தில் உள்ள 'தேவைகள்' அடிப்படைகளில் அவரின் மனத்தில் தோன்றும்ஈடுபாடுகள்' பெறும் மாற்றங்களின் காரணமாக, அவரின் சமூக ஆற்றலும் அவரின் பிறப்பு முதல் இறப்பு வரை மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அவரின் சமூக ஆற்றல் மூலமாக வெளிப்படும் சமூக விசைகளும் அவ்வாறு இயக்கத்தன்மையிலேயே (dynamic) செயல்படுகின்றன.

நான் உயர்நிலைப்பள்ளி மாணவராக 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றேன். பின் 1966 முதல் 1968 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டேன். 1967க்குப்பின் தி.மு. ஆட்சியில் அந்த போராட்டம் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை அறிவேன். பின் 1970களின் துவக்கத்தில், முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மிகுந்த எண்ணிக்கையில் பள்ளி ஆசிரியர்கள்  சிறை புகுந்த போராட்டமானது நிச்சயம் வெற்றி பெறும், என்று கல்லூரியில் என்னுடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள் தெரிவித்த போது, அது தோல்வியில் முடியும் என்று நான் மட்டுமே கணித்தேன். மன்னிப்பு மடல் கொடுத்து சிறையில் இருந்து ஆசிரியர்கள் விடுதலை ஆன போது, எனது கணிப்பு சரியானது குறித்து, கல்லூரியில் சக ஆசிரியர்கள் வியந்தார்கள்.

நான் கல்லூரியில் பணியில் சேர்ந்தது முதல் பணி ஓய்வு பெற்று விலகியது வரையில், நான் பணியாற்றிய இடங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றது, தலைமை தாங்கியது, பல முறை சிறை சென்றது; என்ற போக்கில் பயணித்தேன். மாணவராக, கல்லூரி ஆசிரியராக நான் பங்கேற்ற போராட்டங்களில் தாமாகபங்கேற்றவர்களின், வாலாக பங்கேற்றவர்களின், பயந்து ஒதுங்கியவர்களின் புத்தக ரசனை, சினிமா ரசனை போன்றவற்றையும் இயன்ற அளவு கவனித்தே பயணித்தேன்.

நானறிந்தவரையில் (1967க்கு முன் தி.மு.கவிலும்) எம்.ஜி.ஆரைக் கேலி செய்தவர்களும் சிவாஜி ரசிகர்களாகப் யணித்தவர்களிலும் பெரும்பாலோர்,  சமூக முதுகெலும்பு முறிந்த சுயநலபுத்திசாலிகளாக’(?) வெளிப்பட்டார்கள்.

தி.மு.கவை கருணாநிதி தமது குடும்பக் கட்சியாக மாற்ற முடிந்ததற்கு அத்தகையோரும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும்;

அதற்கு எதிரான போக்கானது எம்.ஜி.ஆர் மூலமாக வெளிப்பட்டு, எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில், அந்த குடும்ப அரசியல் வீழ்ந்து கிடந்ததற்கு, எம்.ஜி.ஆர் ரசிகர்களும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும், எனது ஆய்வு முடிவாகும்

சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் ரசனை என்பதானது;

ரசிப்பவருக்கும் ரசிக்கப்படும் கலைக்கும் இடையில் ஆழ்ந்த பங்கேற்பு (deep engagement), 'ஏம்பதி' (empathy: கற்பனையாக மற்றவர் உள்ளத்தில் புகுந்து அவர் உள்ளக் கிளர்ச்சியை அறிதல்), கூட்டுச்செயல்பாடு (collaboration) இன்றி சாத்தியமாகாது.

It’s impossible to create an ASC (art for social change) piece without deep engagement, empathy and collaboration with those who will be involved. 

இன்றும் ..தி.மு. நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆரின் சமூக உள்ளடக்கமுள்ள பாடல்கள் மூலமாக, அந்த ரசனையானது சமூக உயிர்ப்புடன் நீடிக்கிறதுபிறரின் துயரத்தை 'ஏம்பதைஸ்' (empathize: understand and share the feelings of another) மூலம் உணர்தலானது, அந்த ரசனையில் இருந்தது. ஆனால் தி.மு.கவினரின் ரசனையில் அது இல்லை என்பதற்கான சான்றினை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

...தி.முகவிற்கும் தி.மு.கவிற்கும் இடையில் இருந்த பண்பு வேறுபாடுகள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

எம்.ஜி.ஆருக்குப்பின், ஜெயலலிதா தலைமையானது எவ்வாறு எம்.ஜி.ஆர் பாதையில் இருந்து தடம் புரண்டு, அதுவே ஜெயலலிதாவின் மர்ம மரணதிற்கு காரணமானது? என்பதையும் விளக்கியுள்ளேன்

ஒரு சமூகமானது எந்த திசையில் பயணிக்கிறது? என்று கணிக்க உதவுவது ரசனையாகும்.

தமிழில் வெளிவரும் புத்தகங்களையும், இதழ்களையும் காசு கொடுத்து, வாங்கி படிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவார்கள். திரைப்படங்களின் வெற்றிகளுக்கு காரணமான மாணவர்களும், இளைஞர்களும், பெரும்பாலான சாமான்யர்களும் தமிழ் வாசிப்பு ரசனையுடன் தொடர்பின்றி பயணிப்பவர்கள் ஆவார்கள். தி.மு. வளர்ந்த போக்கிற்கு முக்கிய பங்கு வகித்த தமிழ் வாசிப்பு ரசனையுடனும், மேடைப்பேச்சு ரசனையுடனும் தொடர்பின்றி அத்தகையோர் பயணித்த போக்கிற்கும், மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தி.மு. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களை அனுமதிக்க மறுத்த போக்கிற்கும், ஆர்.கே.நகர் தேர்தலில், ஆளுங்கட்சி உடைந்த நிலையில், ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் தி.மு. டெபாசீட் இழந்த போக்கிற்கும் தொடர்பு உள்ளதா? என்ற ஆராய்ச்சிக்கும் உதவக்கூடிய வகையில் வெளிவந்து, வசூலிலும் சாதனைப் படைத்து வரும் படம் 'LKG' ஆகும்
(https://tamilsdirection.blogspot.com/2019/02/normal-0-false-false-false-en-us-x-none_26.html)

1967க்குப் பின் அரங்கேறிய திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் கோவில்கள் கொலை, கொள்ளை கூடாரமாக மாறியதை;

1952இல் வெளிவந்த 'பராசக்தி' படத்தை ரசித்து, தி.மு.கவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களில் பெரும்பாலோர் எதிர்க்கவில்லையென்றால்,

அந்த 'பராசக்தி'-இன் ரசனையானது, தமிழ்நாட்டிற்கு பாதகமானதா? சாதகமானதா? அனைத்து சாதிகளும் அர்ச்சகராகும் கோரிக்கையை ஆதரிப்பவர்களில், அதே சமூகக் கேடான 'ரசனை' போக்கில் யார்? யார்? பயணித்து வருகிறார்கள்?

1944-இல் 'திராவிடர் கழகம்' மூலம், 'இனம்', 'சாதி' திரிந்து, திராவிடர்/திராவிட/தமிழர் அடையாளக் குழப்பமானது வளர்ந்தபோக்கில், அந்த சமூகக் கேடான‌ 'குருட்டுப் பகுத்தறிவு ரசனை' வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்களிடம் இயல்பாக வெளிப்பட்ட 'ஏம்பதி'யானது (empathy: கற்பனையாக மற்றவர் உள்ளத்தில் புகுந்து அவர் உள்ளக் கிளர்ச்சியை அறிதல்), மேற்கத்திய வழிபாட்டில் பயணித்த, படித்தவர்களிடம் எந்த அளவுக்கு பலகீனமாகி, அவர்களை சுயநல மனித மிருகங்களாக பயணிக்கச் செய்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் இன்று, குறிப்பாக 'புது பணக்காரர்களில்', எத்தனை பேருக்கு 'கலை உணர்வு' (art sense) இருக்கிறது? அரசியலை, 'பொதுவாழ்வு வியாபாரமாக்கி'யதன் விளைவாக, தமிழ்நாட்டில் கலைகள் எல்லாம், சமூகத்திற்கு கேடான திசையில், சரியான 'கலை உணர்வு' என்ற மாலுமியின்றி, வெறும் பொழுது போக்காக, பாலியல் வக்கிர வன்முறை உணர்வுகளின்  'தீனியாகசீரழிந்து வருகிறதா? 'கலை உணர்வு' வறண்டதால், 'ரசனையும்', 'மதிப்பும்' (Value), 'எந்த வழியிலும்', பணம் ஈட்டும் திறமைகளை நோக்கி குவிந்ததா? மேற்கத்திய பொருளில் 'இனம்' மற்றும் 'சாதி' திரிந்து, விளைந்த அடையாளச் சிதைவானது, 'ரசனையும்', 'மதிப்பும்', சீரழிய, எந்த அளவுக்கு பங்களித்துள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2016/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

மேலே குறிப்பிட்ட‌ 'ஏம்பதி' போக்கில் இருந்த எம்.ஜி.ஆர் ரசனையில் இருந்து வேறுபட்டு, 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற பேரில் .வெ.ராவின் 'காட்டுமிராண்டித் தமிழைக் கவர்ச்சித்தமிழாக' மாற்றிய திசையில், 'பராசக்தி' ரசனைப் பயணித்ததா? 'காட்டுமிராண்டித் தமிழையும்' ஏற்றுக்கொண்டு, தமிழ்ப்புலவர்களின் பெயர்களை தமது குடும்பப் பிள்ளைகளுக்கு இட்டுப் பயணிக்கும் இரட்டை வேடப் போக்கிற்கும் அது வழி வகுத்ததா? அத்தகைய 'யோக்கியத் தமிழர்களின்' ஆதரவில், ஊழல் வளர்ந்த வேகத்தில், ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தமிழின் மரணப்பயணமும், 'அதிவேகப் பணக்காரர்களும்' வளர்ந்தனவா? அதன் தொடர்விளைவாகவே தமிழர்களில் பெரும்பாலோரின் 'நேர்மை வழிகாட்டி(Ethical Compass) தடம் புரண்டதா? அதுவே தமிழரின் தர அடையாளத்தின் (bench mark), புலமையின், ரசனையின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா?

தஞ்சை ராமையதாஸின் சுருதி சுத்தத்திற்கு இலக்கணமாகும் (எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பது) பாடல்களில் ஒன்றாகிய 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற எம்.ஜி.ஆர் திரைப்படப்பாடலை பின்பலமாகக் கொண்டு வெளிவந்துள்ள வெற்றிப்படமே 'LKG' ஆகும்

தமிழரின் தர அடையாளத்தின் (bench mark), புலமையின், ரசனையின் மீட்சிக்கு எம்.ஜி.ஆர் ரசனையை எவ்வாறு வளர்த்தெடுப்பது? என்ற திசையை 'LKG’ போன்ற திரைப்படங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.


(வளரும்)

No comments:

Post a Comment