Friday, July 3, 2020


.வெ.ரா அண்ணாவிடம்; அண்ணா கருணாநிதியிடம்; கருணாநிதி எம்.ஜி.ஆரிடம்; எம்.ஜி.ஆர் பிரபாகரனிடம்; பிரபாகரன் சீமானிடம்;


எவ்வாறு ஏமாந்தார்கள்? பிம்ப வழிபாட்டில் இருந்து தமிழ்நாடு விடுபடுமா?




'சிங்கத்தின் குகையில் சிலந்தி கூடு கட்ட முடியாது' என்கிறாரே கருணாநிதி. அது சரியா?'

பல வருடங்களுக்கு முன், துக்ளக் இதழில் மேற்குறிப்பிட்ட கேள்வி வெளிவந்தது. அதற்கு சோ தமக்கே உரிய கிண்டலான பாணியில்

'சிங்கத்தின் முதலெழுத்து 'சி'. சிலந்தியின் முதலெழுத்து 'சி'.  அவ்வளவு தான்' என்று பதில் வெளியிட்டார்.

அதைப் படித்தவுடன், எனது தேடலில் வெளிப்பட்டவை:

'குகை வாழ் மிருகங்கள்' பட்டியலில் சிங்கம் இல்லை. அதன் வாழுமிடம் புதர். சிலந்தி மனிதர்களைப் போல, சிங்கம் புலி போன்றவைகளுக்கு பயப்படாது. பயங்கரமான மனிதர்கள், மிருகங்கள் வாழுமிடங்கள் உள்ளிட்ட எந்த இடமாக இருந்தாலும், தமக்கு தொந்திரவில்லாத, இரைக்கு வாய்ப்புள்ள இடத்தில் சிலந்தி  கூடு கட்டும்.

மேற்குறிப்பிட்ட தேடலே, கீழ்வரும் பதிவிற்குக் காரணமானது.

'பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் தமக்கு தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க மிகவும் முயற்சி செய்தும் வெற்றிபெறவில்லை' என்று அண்ணா வெளிப்படுத்திய தகவல், அவரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

என் மதிப்பிற்குரிய இரண்டு தமிழாசிரியர்களான மணி திருநாவுக்கரசு, மோசூர் கந்தசாமி முதலியார் இருவரும் மிகவும் பாடுபட்டனர், எனக்கு இலக்கணம் கற்பிக்க! நான் தமிழின் இனிமை பற்றி மட்டுமே அறிந்து கொள்ள முடிந்தது. இலக்கணப் பயிற்சியில் என்னை வெற்றி பெறச் செய்வதிலே எனது இரு ஆசிரியர்களும் வெற்றி பெற முடியவில்லை." என்று கூறினார் அண்ணா. (பக்கம் 24; பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, தமிழ் நிலையம் 2008)

இலக்கண அறிவின்றி, செவி மூலம் உணரும் ஓசை அறிவின் அடிப்படையில் பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்ததற்கு அண்ணாவே காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். உதாரணமாக; சிங்கம் குகை வாழ் மிருகமா? குகையாய் இருந்தாலும், வீடாய் இருந்தாலும் தொந்திரவற்ற சுவரில் சிலந்தி கூடு கட்டதா? சிங்கத்தைப் பார்த்தவுடன் மனிதர்கள் பயப்படுவதை போல, சிலந்தி, கொசு உள்ளிட்ட சிறிய பூச்சி வகைகள் பயப்படுமா? என்ற அறிவுபூர்வ ஆராய்ச்சியின்றி; 'சிங்கத்தின் குகைக்குள் சிலந்திகள் கூடு கட்டிவிடக்கூடாது' என்று தி.மு.கவினரின் எழுத்துக்களிலும், பேச்சுகளிலும் வெளிப்படுவதானது;

பாரதி பாணி உணர்ச்சிபூர்வ‌ போதையை அரசியலில் வளர்க்க, பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கிற்கு மிகவும் உதவியது. பாரதியின் படைப்புகளைப் போல, அண்ணாவின் படைப்புகளில் இலக்கணப் பிழை உள்ளதா, இல்லையா என்பது பற்றி எவரும் ஆராய்ச்சி மேற்கொண்டதாக தகவல் இல்லை. (‘வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; 

மேற்குறிப்பிட்ட சோ பாணியில், அண்மையில்  துக்ளக் (1-7-2020) இதழில் வெளிவந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் கீழ்வரும் கேள்வி - பதிலானது, இந்தப் பதிவிற்கான தூண்டுதல் ஆனது.

கே: நாம் தமிழர் கட்சியில் அதிகளவு இளைஞர்கள் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறதே! இது எதைக் காட்டுகிறது?

: .வெ.ரா.வை தமிழர்களின் தலைவர் என்று ஏற்காத இளைஞர்கள், தமிழகத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பி.கு.: சீமான் .வெ.ரா.வை தமிழர்களின் தலைவர் என்று ஏற்க மறுத்தவர் 
(தந்தி டிவி 28.5.2015, https://www.youtube.com/watch?v=zvFElBdtlc4)

1944இல் .வெ.ரா அவர்கள் தி. தொடங்கி, அண்ணாவிடம் ஏமாந்தார்; தி.மு. தோன்றியது.

1949இல் அண்ணா அவர்கள் தி.மு. தொடங்கி, கருணாநிதியிடம் ஏமாந்தார்; 1969 முதல் அது கருணாநிதியின் குடும்பக்கட்சியானது.

கருணாநிதி அதற்கு உதவிய எம்.ஜி.ஆரிடம் ஏமாந்தார்; 1972இல் .தி.மு. தோன்றியது.

1960களில் பிரிவினை கோரிக்கையை கைவிட்டபோது, அண்ணா  'பிரிவினைக்கான காரணங்கள்' தொடர்கின்றன' என்று அறிவித்து, பிரிவினைத் தீயானது, அணையாமல் இருக்க வழி செய்து கொண்டார். அதன் காரணமாக, 1980களில் எம்.ஜி.ஆர் பிரபாகரனிடம் ஏமாந்தார்.

பிரபாகரன் தன் கடைசி காலத்தில் கொளத்தூர் மணியின் பரிந்துரை பேரில் சீமானை சந்தித்ததன் விளைவாக,

இன்று வை.கோ, நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் போன்றவர்களை பின் தள்ளி, விடுதலைப்புலி ஆதரவு இளைஞர்களை ஈர்த்து வரும் சீமானிடம் பிரபாகரன் ஏமாந்த‌து வெட்ட வெளிச்சமாகி விட்டது.

.வெ.ரா அண்ணாவிடம் எவ்வாறு ஏமாந்தார்? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்
(.வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, .வெ.ராவிற்கே எமனாக ?’; 

அண்ணா கருணாநிதியிடம் எவ்வாறு ஏமாந்தார்? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்  தமக்குள்ள அதிகாரத்தை, தமது ஊழல் உள்ளிட்ட பலகீனங்களுக்கு சேவகம் செய்ய முயற்சிக்கும்போது, அவர்களை அகற்றும் அளவுக்கு அந்த வலிமை இருக்க வேண்டும்.

1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

1969இல் முதல்வரான கருணாநிதி 'அறிவியல் ஊழல்' சாதனை புரிந்து அண்ணாவை வெற்றி கொண்டார்.

அடுத்து  கருணாநிதி எவ்வாறு  எம்.ஜி.ஆரிடம் ஏமாந்தார்? என்ற ஆராய்ச்சியின் மூலமே, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கான திறவுகோலை கண்டுபிடிக்க முடியும்;

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

'பராசக்தி'-இன் ரசனையானது, தமிழ்நாட்டிற்கு பாதகமானதா? சாதகமானதா?; 

ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம்?;

மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியில் எம்.ஜி.ஆர் பிரபாகரனிடம் எவ்வாறு ஏமாந்தார்?; பிரபாகரன் சீமானிடம் எவ்வாறு ஏமாந்தார்? என்ற கேள்விகளுக்கான விடைகள் தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழிகாட்டும்.

எம்.ஜி.ஆர் பிரபாகரனிடம் ஏமாந்ததற்கு அண்ணாவே காரணமாவார்.

'அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் சுடுகாடு' என்று அறிவித்து பயணித்தது தி.மு..

1960களில் பிரிவினையை  தி.மு. கைவிட்டபோது, அண்ணா  'பிரிவினைக்கான காரணங்கள்' தொடர்கின்றன' என்று அறிவித்து, பிரிவினைத் தீயானது, அணையாமல் இருக்க வழி செய்து கொண்டார்.

அந்த பிரிவினை சூடானது, சாகும் வரை 'பெரியார்' .வெ.ராவின் பேச்சுக்கள்/எழுத்துக்கள் மூலமாகவும், தி.கவில் இருந்த சிலராலும் பாதுகாக்கப்பட்டு வந்தது.

.வெ.ராவிற்குப்பின், அந்த பிரிவினை சூடானது எவ்வாறு பலரின் பங்களிப்பால் பாதுகாக்கப்பட்டது? அதில் எனது பங்களிப்பும் எவ்வாறு இருந்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

1983இல் சென்னை பாண்டி பஜாரில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பிரபாகரனும் ராகவனும் 'புளோட்' (PLOTE) தலைவர் உமா மகேசுவரனை சுட்ட நிகழ்ச்சியின் மூலமாக, ஈழ விடுதலைப் போராட்டமானது எவ்வாறு தமிழ்நாட்டில் தடம் பதிக்கத் தொடங்கியது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு; 'தமிழ் ஈழம்'‍  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark)’;

'பத்துத்தடவை பாடை வராது' என்று உசுப்பி, எண்ணிறந்தோர் ஈழ விடுதலைக்குப் பலியாகும் வகையில் கவிதைகள் எழுதி பிரபலமான காசி ஆனந்தன், 1980களின் பிற்பகுதியில், திருச்சி பெரியார் .வெ.ரா கல்லூரிக்கு வந்திருந்த போது, ஈழ விடுதலைக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தெரிவித்த கீழ்வரும் கருத்தானது, எனக்கு மறக்க முடியாத அதிர்ச்சியானது.

'பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் நாங்கள் தமிழ் ஈழம் பெறுவது நிச்சயமாகி விட்டது. அவ்வாறு தமிழ் ஈழம் தனி நாடான பின்னர், நாங்கள் தனித்தமிழ்நாடு பெற உதவுவோம் என்று எதிர்பார்க்காதீர்கள்'

அதன்பின் 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறர்களா?' (மார்ச் 1988) உள்ளிட்ட பல (திருச்சி பெரியார் மையம்) வெளியீடுகளின் அபாய எச்சரிக்கைகளைப் புறக்கணித்தே விடுதலைப்புலிகள் பயணித்தார்கள்.

தலைவர்கள் வழி நடத்திய பயணம் வெற்றியில் முடிந்தால், அத்தலைவர்களை பாராட்டுவதைப் போலவே; பிரபாகரன் ஆனாலும், அண்ணா ஆனாலும்; 'பெரியார்' .வெ.ரா ஆனாலும் சரிதோல்வியில் முடிந்தால், கண்டிக்காவிட்டாலும், திருக்குறள் (471) வழியில் அறிவுபூர்வ‌ விமர்சனம் செய்து, பாடங்கள் கற்று, திருந்தி, பயணிப்பது தானே, வெற்றிக்கான வழியுமாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2017/12/2.html)

தமிழ்நாட்டில் முளை விட்டு 'தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' பாதை மாறிய பிரிவினைப் போக்கும், எவ்வாறு சங்கமமாமகி தமிழ்நாட்டையும் சீரழித்து, அதன் தொடர் விளைவாக முள்ளிவாய்க்கால் அழிவில் முடிந்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html)

சர்வதேச அரசியல் சூழ்ச்சிகள் பற்றிய புரிதல் இன்றி, நான் உள்ளிட்டு பலர் 'தனித்தமிழ்நாடு போதையில்' பிரபாகரனிடம் ஏமாந்தது போலவே, எம்.ஜி.ஆரும் பிரபாகரனிடம் ஏமாந்தார்.

எம்.ஜி.ஆர் போலவே பிரபாகரனிடம் ஏமாந்த நான், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ்நாட்டின் மீட்சிக்கான வழிகளை பதிவு செய்துள்ளேன்.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில் கருணாநிதியின் குடும்ப அரசியல் வீழ்ந்து கிடந்ததற்கு, எம்.ஜி.ஆர் ரசிகர்களும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும், எனது ஆய்வு முடிவாகும்.

தஞ்சை ராமையதாஸின் சுருதி சுத்தத்திற்கு இலக்கணமாகும் (எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பது) பாடல்களில் ஒன்றாகிய 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற எம்.ஜி.ஆர் திரைப்படப்பாடலை பின்பலமாகக் கொண்டு வெளிவந்துள்ள வெற்றிப்படமே 'LKG' ஆகும்.

தமிழரின் தர அடையாளத்தின் (bench mark), புலமையின், ரசனையின் மீட்சிக்கு எம்.ஜி.ஆர் ரசனையை எவ்வாறு வளர்த்தெடுப்பது? என்ற திசையை 'LKG’ போன்ற திரைப்படங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

சமூக வானிலை விற்பன்னர்களைக் காறித் துப்பும், மேற்குறிப்பிட்ட நடுத்தர மற்றும் ஏழைகளில் பெரும்பாலோர் எம்.ஜி.ஆர் ரசனையில் பயணிக்கிறார்கள்.

மாணவர்களிலும், இளைஞர்களிலும் துணிச்சலாக பயணிப்பவர்களே 'LKG', 'சூது கவ்வும்' போன்ற இன்னும் பலஇளம் இயக்குநர்களின் குறைந்த பட்ஜெட் வெற்றிப் படங்களின் ரசனையில் பயணிக்கிறார்கள்.

இரண்டு வகை ரசனைகளும் சங்கமம் ஆகும் போது தான்;

தமிழ்நாடானது தன்மானம் மிக்கவர்களின் நாடாக வெளிப்படும். 'காலில் விழும் கலாச்சாரத்தை' ஊக்குவித்து வந்த‌ ஊழல்வாதிகள் ஒழிவார்கள்;

ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் தமிழ்நாடு மீளும். 
(‘தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கு எம்.ஜி.ஆர் ரசனையை வளர்த்தெடுக்கும் சமூக செயல்நுட்பம்?’; 

.வெ.ரா அண்ணாவிடம் ஏமாறும் அளவுக்கும்; அண்ணா கருணாநிதியிடம் ஏமாறும் அளவுக்கும்; கருணாநிதி எம்.ஜி.ஆரிடம் ஏமாறும் அளவுக்கும்; சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையே நெருக்கம் இருந்தது.

அது போன்ற நெருக்கம் பிரபாகரனுக்கும் சீமானுக்கும் இடையே இருந்ததாகத் தெரியவில்லை.

1983 சூலையில் இனக்கலவரம் வெடித்த போது சீமானின் வயது 17. இன்று சீமானின் கட்சியில் அந்த வயதுள்ள இளைஞர்கள் இருக்கக் கூடும். சீமான் உள்ளிட்டு இன்று விடுதலைப்புலி ஆதரவாளர்களாகப் பயணிப்பவர்கள் எல்லாம் 1983 சூலை முதல் 2009-இல் முள்ளிவாய்க்கால் அழிவு வரை, எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன பங்களிப்பு வழங்கினார்கள்? என்பதற்கான உண்மையான சான்றுகளை ஆராய்ந்தால் தான், அவர்கள் சுயலாப நோக்கின்றி ஈழ விடுதலைக்கு பங்களித்தவர்கள் பட்டியலில் வருவார்களா? அல்லது பிரபாகரனை பிம்பமாக்கி தொடங்கிய பொதுவாழ்வு வியாபாரம் மூலமாக வளர்ந்த 'புது(லி)ப்பணக்காரர்கள்' பட்டியலில் வருவார்களா? என்பது தெரியும்.

ஜெயலலிதாவை 'பால்கனி பாவை' என்று இன்னும் ஆபாசமாக வர்ணித்து, பின் பிழைப்பிற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த, (மரணம் அடைந்ததால், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ள) காளிமுத்துவும்; (http://www.thehindu.com/news/cities/chennai/Five-sent-to-jail-in-33-year-old-Robin-Mayne-case/article14028554.ece?homepage=true?w=alstates) விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவர் ஆவார். அதாவது தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின், (சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.

தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், மலைகள் உள்ளிட்ட கனிவளங்களை ஊழல் பேராசையில் சூறையாடி, கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தனியார்ச்சொத்துக்களை அபகரித்த அநியாயங்களை எதிர்க்காமலும், வாய்ப்பு கிடைத்தால் அக்கொள்ளையர்களுடன் நேசமான உறவு கொண்டு, வெளியில் தெரிந்தும் தெரியாமலும் 'உதவிகள்' பெற்றும், இன்றும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவு கட்சிகள் எல்லாம், அதே பிரபாகரன் வழியிலேயே பயணிக்கிறார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம். 

பெரியார் கட்சிகள் .வெ.ராவை பிம்பமாக்கியதன் தொடர்ச்சியாக, பெரியார் பிம்பத்தை பின் தள்ளி பிரபாகரன் பிம்பத்தில் தமிழ்நாடு எவ்வாறு சிக்கியது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘‘Periyar’ parties’ ipso facto rejection of EVR; LTTE Prabakaran replacing ‘Periyar’ E.V.R in Tamilnadu?’; 

இன்று சீமான் உள்ளிட்டு 'பெரியாரை' விமர்சித்து வரும் பிரபாகரன் ஆதரவாளர்கள் எல்லாம், பிரபாகரன் தொடர்பாக நான் முன்வைத்துள்ள விமர்சனங்களை இதுவரை சந்தித்தார்களா? இனியாவது சந்திப்பார்களா?

இன்று நாம் வாழும் சமுகத்தில் உள்ள நல்ல மற்றும் தீய விளைவுகளும், அழிந்து வரும், முளை விடும், வளர்ந்து வரும் கொள்கைகளும், அத்தகையோர் எல்லாம் கடந்த காலத்தில் பொதுவாழ்வில் செல்வாக்கு செலுத்தி வாழ்ந்ததன் விளைவுகள் ஆகும். அவற்றை அடையாளம் கண்டு ஏற்கவும், ஒதுக்கவும் மேற்கொள்ளப்படும் ஆய்வானது, சம்பந்தப்பட்ட தலைவர்களை தனிப்பட்ட முறையில் எடை போடும் ஆய்வினின்றும் வேறுபட்டதாகும்.

மேலே குறிப்பிட்டவாறு கடந்த கால தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் எடை போடுவதற்கும், அவர்களின் கொள்கைகளை 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி எடைபோடுவதற்கும், உள்ள வேறுபாட்டினை மறந்து;

இரண்டும் கெட்டானாக எடை போட்டு, அவர்களை பாராட்டுவதும், தூற்றுவதும் அறிவுபூர்வ அணுகுமுறையாகாது. 

தனிப்பட்ட முறையில் பிரபாகரன் என்ற பிம்பத்தை விடுத்து பிரபாகரனை எடை போட்டால், அவர் மோசமான முன்னுதாரணமாக வெளிப்படுவார். அது தொடர்பாக, என்னை விட அதிக தகவல்கள் தெரிந்த, விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் துவக்கியவர்களில் ஒருவரான ராகவன் அவற்றை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

தனிப்பட்ட முறையில் பெரியார் என்ற பிம்பத்தை விடுத்து .வெ.ராவை எடை போட்டால், பிரமிக்க வைக்கும் அளவுக்கு தனி மனித நேர்மையில் சிறந்த முன்னுதாரணமாக வெளிப்படுவார்;

என்பதையும் நான் பதிவு செய்துள்ளேன். இன்றும் சீமான் கட்சி, பெரியார் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு அனைத்துக்கட்சிகளிலும் உள்ள தலைவர்களின், தொண்டர்களின் யோக்கியதையை ஆராய உதவும் சிறந்த அளவுகோலையும் .வெ.ரா வழங்கியுள்ளார்

மேற்குறிப்பிட்ட அளவுகோலின்படி சீமானின் யோக்கியதை என்ன? என்பது அவரின் மனசாட்சிக்கே தெரியும். அவரின் .வெ.ரா பற்றிய கீழ்வரும் விமர்சனம் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

"இப்படி எத்தனையோ பெருமை இருக்கும்போது பெரியார் மண் என்று அடக்குவது தவறு. பெண் விடுதலைக்குப் பெரியார் மட்டும் தான் போராடினாரா. சாதி ஒழிப்புக்கு எதிராகப் பலரும் போராடி இருக்கும்போது ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதும் தவறு தான்."  சீமான் 

இன்று .வெ.ராவை விமர்சிப்பவர்களில் பெரும்பாலும் இரண்டும் கெட்டானாக விமர்சித்து வருபவர்கள் யார்? அவ்வாறு .வெ.ராவை விமர்சிப்பவர்களில் பிரபாகரனை விமர்சிக்கும் துணிச்சலின்றி கோழைகளாக பயணிப்பவர்கள் யார்? என்று ஆராய்ந்தால், அந்தப் பட்டியலில் சீமான் முதல் இடத்தில் இருந்தால் வியப்பில்லை. 

அது போல 1980கள் தொடங்கி, பிரபாகரனிடம் நெருக்கமாக இருந்த நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன், வைகோ, உள்ளிட்ட இன்னும் பலர் அடங்கிய பட்டியலில் சீமானுக்கு கடைசி இடம் கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறியே.

அத்தகைய நிலையில் உள்ள சீமானிடம் எவ்வாறு பிரபாகரன் ஏமாந்தார்?

மேற்குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களை எல்லாம் பின் தள்ளி, இன்று நாம் தமிழர் கட்சியில் அதிகளவு இளைஞர்கள் சேர்ந்ததற்கான காரணங்களில்;

சினிமா கவர்ச்சியில் சேர்ந்தவர்களைத் தவிர்த்து, மற்ற இளைஞர்கள் யார்? என்று ஆராய வேண்டும்.

ஒழுங்காகப் படித்து நேர்மையான சுய சம்பாத்தியத்துடன் சீமானின் தயவின்றி வாழ்ந்து கொண்டு, எந்த சுயலாபமின்றி நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளவர்கள் எவராவது இருந்தால், அவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு, நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாட்டில் உள்ள செல்வாக்கினைக் கணிக்க முடியும்.

.வெ.ரா.வை தமிழர்களின் தலைவர் என்று ஏற்க மறுத்து அவரை இரண்டும் கெட்டானாக விமர்சித்து வரும் சீமான், பிரபாகரனை விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்ட தலைவராக ஏற்றுக்கொண்டு பயணிப்பது சரியா?

என்ற கேள்வியைச் சந்திக்க மறுக்கும் நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் எல்லாம் 'பிரபாகரன் போதையில்' பயணிப்பதாகவே கருத முடியும்.

'தமிழ் உணர்வு, சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' உள்ளிட்ட இன்னும் பல உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில், தமிழ்நாட்டின் ஏரிகளும், ஆறுகளும், மலைகளும், தாது மணலும், பிற கனி வளங்களும் குடும்ப ஊழல் பேராசைக்கு இரையானதை கண்டு கொள்ளாத அளவுக்கு குடும்ப ஊழல் பாதுகாப்பு அரண்களாகப் பயணித்த கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்க இயலாத நோஞ்சான் கட்சிகள் ஆகும். சீமானின் கட்சியானது அந்த வரிசையில் இடம் பெறுமா? இல்லையா? என்பது சீமானின் மனசாட்சிக்கே வெளிச்சம்
(https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html)

தலைப்பில் உள்ள சங்கிலியில் இடையில் உள்ளவர்கள் மூலமாக, .வெ.ரா அவர்கள் சீமானிடம் ஏமாந்துள்ளதன் விளைவாகவே, மேற்குறிப்பிட்ட துக்ளக் கேள்வி - பதில் வெளிவந்துள்ளது.

அந்த சங்கிலியின் தொடக்கமாக இருந்த‌ அண்ணா மூலமாக அறிவு பூர்வமற்ற உணர்ச்சிபூர்வ கவர்ச்சித்தமிழில் பேசுவது எவ்வாறு அரங்கேறியது? என்பதற்கான சான்றினை தொடக்கத்தில் பார்த்தோம். அதன் காரணமாகவே,  'நோஞ்சான் நோயில்' தமிழ்ப்புலமை சிக்கியது

அதன் தொடர்விளைவாக உலக அளவில் தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகி வருகிறது

'தமிழினத்தின் அடையாளம் கவிஞர் வைரமுத்து' என்று அறிவித்துள்ள சீமானுக்கு, அவரால் திரை இசைத்தமிழுக்கு விளைந்துள்ள கேடுகள் பற்றி தெரியுமா

வைரமுத்து 'நோஞ்சான் தமிழ்ப்புலமை நோயில்' சிக்கியவரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது தெரியுமா?

அறிவு பூர்வமற்ற உணர்ச்சிபூர்வ கவர்ச்சித்தமிழ் போக்கினைத் தொடங்கி வைத்தவர்  அண்ணா. அதன் வளர்ச்சிப்போக்கில் சிக்கியுள்ள‌ சீமான் மூலமாக, அது முடிவுக்கு வருவதாதனது, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லதாகும்.

.வெ.ராவின் கொள்கைகளை, அவர் வலியுறுத்தியபடி 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாமல், 'பெரியார் போதை' தமிழ்நாட்டில் வளர்ந்ததானது, சீமான் போன்றவர்களுக்கு சாதகமாகி விட்டது. 

எனவே பிரபாகரன் சீமானிடம் ஏமாந்ததற்கு, 'பெரியார் பிம்பம்' பாணியில் 'பிரபாகரன் பிம்பம்' வளர்ந்ததே முக்கிய காரணமாகும்.

பிம்ப வழிபாட்டில் இருந்து தமிழ்நாடு விடுபட்டு, பாரபட்சமற்ற அறிவுபூர்வ விமர்சன திசையில் பயணிக்கும் வரையில், அந்த போக்கு தொடரும்.

எனது தலைமுறை போல, இன்றைய இளைய தலைமுறை கவர்ச்சித்தமிழில் ஏமாறாது. மேலும் இது டிஜிட்டல் யுகம். எனவே அந்த போக்கானது, கொரோனா பாணியில், எதிர்பாராத அளவுக்கு சீக்கிரம் முடிய வாய்ப்பிருக்கிறது. அதற்கு கொரோனாவும் சமூக வினையூக்கியாகப் பங்களிக்க வாய்ப்பிருக்கிறது.

'கொரோனா தடுப்பு' நோக்கத்திற்காக, அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் மூலமாக‌, தமிழ்நாட்டில் 1967க்கு முன் இருந்த சுய பொது ஒழுக்கம் மீண்டும் நடைமுறைக்கு வருவதானது நல்ல சமூக அறிகுறியாகும். 
(‘கொரோனா மூலமாக அமுலாகும் 'சமூக‌ ஒரீஇ'; பொது ஒழுக்கத்தில் வளரும் தமிழ்நாடு’; 


குறிப்பு:

1944இல் 'பெரியார்' .வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:

தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம், நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம், என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா, திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில் கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும் நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது, சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக 'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் இசை ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன்.

நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமான,  பேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama  & ‘Rajini Rajasingham Thiranagama  : Unforgettable Symbol of Sri Lanka’s Tamil Tragedy’  By D.B.S. Jeyaraj; 
http://dbsjeyaraj.com/dbsj/archives/33112  

பின் பல வருடம் கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?' என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது. "There is a state government of its own there. There are political parties. The state is prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த , ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில் மறைந்தார்
(https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html)

No comments:

Post a Comment