Thursday, December 7, 2017

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' (2);


நல்லவேளை, பிரியும் ஆபத்திலிருந்து தமிழ்நாடு தப்பித்தது


சர்வதேச அரசியல் வரலாற்றுப் போக்குகளில், சங்கிலித் தொடர் போல, ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுப் போக்கும், இன்னொரு நாட்டின் வரலாற்றுப் போக்குடன் தொடர்புடையது;

என்பதை விளக்கும் உதாரணமாக;

தனித்தமிழ்நாடு கோரிக்கையுடன், வியட்நாம் போரில் அமெரிக்கா பெற்ற தோல்வி கொண்டிருந்த தொடர்பினை, அடுத்து பார்ப்போம்.

‘நெருக்கடி காலத்தில், தி.. தலைவர் கி.வீரமணி ஆதரவு போக்கில் பயணித்த‌,  கும்பகோணம் ஸ்டாலின், கோவை.இராமகிருட்டிணன், இரத்தினகிரி உள்ளிட்ட பலர்இந்திரா காந்தியின்  நெருக்கடி ஆட்சி காலத்தில், தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு சில முயற்சிகள் செய்து, தி.மு. தலைவர் கருணாநிதிக்கும் அழுத்தம் கொடுத்தனர்.

முதல்வராயிருந்த கருணாநிதி, 'அமெரிக்காவின் ஆதரவுடன் தனித்தமிழ்நாடு' அறிவிப்பதை பரீசிலித்து, விவாதித்து, 'வியட்நாமில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு', அமெரிக்காவின் இராணுவ உதவியானது, இது போன்ற முயற்சிக்கு கிடைக்காது ' என்று கருத்து தெரிவித்திருப்பதை, 'வீக்கிலீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ளது. (http://www.thehindu.com/news/national/dmks-rajaram-asked-diplomat-whether-us-would-back-tamil-nadu-secession/article4599541.ece)

அதாவது சர்வதேச அரசியலில், அமெரிக்காவிற்கு எதிரான சோவியத் ரஷ்யா அரசு சார்பாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பயணித்த சூழலில்;  

வியட்நாம் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்தால், இன்று தனித்தமிழ்நாடு உருவாகியிருக்க வாய்ப்பிருந்திருக்கிறது;

என்பதை மேலே குறிப்பிட்ட சான்று உணர்த்துகிறது. வியட்நாம் போரில் அமெரிக்கா பெற்ற தோல்வியின் காரணமாக, தி.மு.க தலைவரின் குடும்ப ஆட்சியில் முழுவதுமாக சிக்கும் ஆபத்திலிருந்து, தமிழ்நாடு தப்பித்திருக்கிறது;

சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் விமானவிபத்தில் மர்மமான முறையில் இறந்ததன் காரணமாகவும், நேருவுக்கும் ராஜாஜிக்கும் இருந்த பனிப்போர் காரணமாகவும், 1947இல்  இந்தியாவிலிருந்து 'திராவிட நாடு' பிரியும் ஆபத்திலிருந்து, தமிழ்நாடு ஏற்கனவே தப்பித்ததைப் போலவே. (‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; 
http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html)

தி.கவில் உள்ளவர்களின் அழுத்தத்தில், தி.மு.க தலைவர் பரிசீலித்த 'தனித்தமிழ்நாடு' கோரிக்கைக்கு, தமிழ்நாடு மக்களிடையே எந்த அளவுக்கு ஆதரவு இருந்தது? அல்லது ஊழலின் கேடயமாக 'தனித்தமிழ்நாடு' கோரிக்கையும், தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பிற்கு உள்ளானதா? என்ற கேள்விகளை, நெருக்கடி காலத்தில், தி.மு.க ஆட்சியை கலைத்த பின், வெளிப்பட்ட 'சிக்னல்கள்' எழுப்புகின்றன.

நெருக்கடி காலத்தில், தி.மு.க ஆட்சியைக் கலைத்து, தி.க/தி.மு.க தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக.

அதற்குப்பின் எம்.ஜி.ஆர் ஆட்சியில், 'பெரியார்' ஈ.வெ.ராவின் நூற்றாண்டு விழா கொண்டாடிய  காலக்கட்டத்தில் தான், என்னைப் போன்றவர்கள் 'பெரியார்' இயக்கத்தில் நுழையும் போக்கு அரங்கேறியது.

ஆனைமுத்துவின் 3 தொகுப்புகளையும் தஞ்சை இரத்தினகிரியிடம் பெற்று, முழுவதும் ஆழ்ந்து படித்தேன். அந்த காலக் கட்டத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும், தீவிரமான 'பெரியார்' எதிர்ப்பாளராகவும், 'மார்க்சிய', 'இந்திய தேசிய' ஆதரவாளராகவும் பயணித்த பேரா.அ.மார்க்ஸ் எழுப்பிய எதிர்க் கேள்விகளுக்கான விடைகளை, காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ உள்ளிட்ட இன்னும் பலரின் நூல்களில் மூழ்கி தேடியதானது, என்னை மார்க்சிய‍ - லெனினிய புலமையாளனாக்கியது.

ஈ.வெ.ரா அவர்களின் நிலையை, நான் 'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' நிலைப்பாடாக விளங்கி, அந்த திசையில் பயணிக்க தொடங்கினேன்.

தமிழகமெங்கும் தமிழக அரசு நடத்திய, பிரமிக்கும் வகையில் மக்களை ஈர்த்த, பெரியார் நூற்றாண்டு விழா 'பெரியார் வாழ்க்கை ஒலி ஒளி மேடை' நிகழ்ச்சிகள் எல்லாம், தி.மு.க வெறுப்பிலிருந்து, 'பெரியாரை' மீட்டதன் விளைவாக, 'பெரியார்' கட்சிகள் புத்துயிர் பெற்றன; 'பெரியாரின்' கடைசி கால பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை விட, அதிக அளவில், குறிப்பாக இளைஞர்கள், தி.க பொதுக்கூட்டங்களில் பங்கேற்றனர். தி.மு.க ஆதரவு போக்கில் பயணித்த, தி.க மேடைகளில் பங்கேற்ற, என்னைப் போன்ற பேராசிரியர்களை எல்லாம், எம்.ஜி.ஆர் அரசு பழிவாங்கவில்லை; அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில் பேரா.தீரன் போன்றவர்கள் எல்லாம் பணி நீக்கத்திற்கு உள்ளானார்கள்; தி.மு.க ஆதரவு போக்கில், தி.க பயணித்ததால், நாங்கள் தப்பித்தோம். 1970களில் தி.மு.க ஆட்சியில் எழுச்சியுடன் எண்ணற்ற பள்ளி அசிரியர்கள் பங்கேற்ற போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டு, சிறையிலிருந்த ஆசிரியர்கள் மன்னிப்பு மடல் கொடுத்து விடுதலையானார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியில் பலமுறை கல்லூரி ஆசிரியர் போராட்டத்தில், என்னைப் போன்று சிறை சென்ற ஆசிரியர்கள் எல்லாம், ஒவ்வொரு முறையும் போராட்டம் வெற்றி பெற்றே விடுதலை ஆனோம்.

நெருக்கடி காலக்கட்டத்தில், 'தனிதமிழ்நாடு' கோரிக்கையை ஆதரித்து, இரத்தினகிரி, கும்பகோணம் ஸ்டாலின், கோவை.இராமகிருட்டிணன் உள்ளிட்ட பலர் மேற்கொண்டிருந்த முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டு வியந்தேன்.

நெருக்கடி காலத்திற்குப் பின், அரங்கேறிய எம்.ஜி.ஆர் ஆட்சியில்;

‘அதன்பின், அந்த – தனிதமிழ்நாடு-  சூடு அணையாமல் பாதுகாத்ததில், எனது பங்களிப்பும் இருந்தது.

'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு', 'வஞ்சிக்கப்படும் விவசாயம்', இரண்டுமே எனது தலைமையில் தொகுக்கப்பட்டு, தி. வெளியீடுகளாக வந்தவையாகும். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' கண்காட்சியானது, கி.வீரமணி ஆதரவுடன், தி. சார்பில் செலவு செய்து, இரத்தினகிரி, புலவர் இமயவரம்பன் ஒத்துழைப்புடன், திருச்சி பெரியார் மாளிகையில் ஒரு குழு 'அர்ப்பணிப்பு' உணர்வோடு பணியாற்றி உருவாக்கியதாகும். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' கண்காட்சியில், மின் இணைப்புகள் கொண்ட ஒவ்வொரு 'போர்டும்' ( Card Board with small bulbs) , அதன் உள்ளடக்கமும் (content), எனது மேற்பார்வையில் உருவானவையாகும்;

அதனை தமிழ்நாடெங்கும் கண்காட்சியாக நடத்தியதில் கோவை.இராமகிருட்டிணன் முக்கிய பங்கு ஆற்றினார்.

அறிவுபூர்வபோக்கிற்கு உணர்ச்சிபூர்வ போதைகள் கட்டுப்பட்ட திசையில் பயணித்த அந்த சூடானது, பின்னர் தடம் புரண்டு, ஏமாந்தவர்களை காவு கொடுத்து, 'அதிவேக அதீத' பணம் சம்பாதித்த, புதுப்பணக்காரர்கள் பலர் உருவாக காரணமானது. சில தி.மு.க அமைச்சர்கள் ம‌த்திய அரசை மிரட்ட,  'தனித்தமிழ்நாடு கோரிக்கை'யை அவ்வப்போது பயன்படுத்தியதானது, அதனை மக்களிடமிருந்து அந்நியமாக்க உதவியது.

ஊழலையும், ஊழல் குடும்ப ஆட்சியையும் அரங்கேற்றிய தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதி, தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கு புரவலராக இருந்து பயணித்ததைப் போலவே;

ஜெயலலிதா ஆட்சியில், பிரிவினைக்கட்சிகளின் புரவலராக  (சசிகலா) நடராஜன் பயணித்தார், என்பதை கீழ்வரும் சான்றானது வெளிப்படுத்தியுள்ளது.

‘MN is known for his pro-Tamil chants and secret funding to pro-Tamil groups in the state.   During the agitations in 2008 and 2009 against the Srilankan army - LTTE war, MN was found hobnobbing with pro Eelam groups so much so that he even participated in hall meetings and public rallies organised by the Pro-Tamil groups.’ ; http://whispersintamilnadu.blogspot.in/2011/12/sasikalas-ouster-m-natarajans-game-plan.html  
.
அதாவது தமிழ்நாட்டில் ஊழல் பேராசையில் கிரானைட், தாது மணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் எல்லாம் சூறையாடப்பட்டு, அச்சுறுத்தியும் கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்து, ஊழல் சுனாமியில் ஆங்கிலவழி தனியார் பள்ளிகள் பெருகி, தமிழ்வழிக்கல்வியையும், தமிழையும் சீரழித்து, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் போக்குகளுக்கு காரணமான பிதாக்களே, தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைக் கட்சிகளின் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்;’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )

தமிழ்நாட்டில் 'அமாவாசை செயல்நுட்பத்தில்' பிரிவினைப் போக்குகள் சிக்கியது அறியாமலும், 'பிரிவினை' புரவலர்களின் யோக்கியதை தெரியாமலும், பயணித்த ஈழ விடுதலை போக்கில்; 

தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்த விடுதலைப் புலிகள் இயக்கம்.' 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html) ;

முள்ளிவாய்க்கால் போன்ற அழிவை சந்தித்ததானது; அறிவுபூர்வ பாரபட்சமற்ற விமர்சனத்திற்கு உள்ளாவதை இனியும் தடுக்க முடியுமா? 
(http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html) தலைவர்கள் வழிநடத்திய பயணம் வெற்றியில் முடிந்தால், அத்தலைவர்களை பாராட்டுவதைப் போலவே; பிரபாகரன் ஆனாலும், அண்ணா ஆனாலும்; 'பெரியார்' ஈ.வெ.ரா ஆனாலும் சரி;  தோல்வியில் முடிந்தால், கண்டிக்காவிட்டாலும், திருக்குறள் (471) வழியில் அறிவுபூர்வ‌ விமர்சனம் செய்து, பாடங்கள் கற்று, திருந்தி, பயணிப்பது தானே, வெற்றிக்கான வழியுமாகும்.

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான்இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கியதையும்;

முந்தைய பதிவில் விளக்கியிருந்தேன்.

இசை இயற்பியல் (Physics of Music)  ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய தெளிவின்றி, .வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது வரவேற்க வேண்டியதாகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html )

தாய்மொழி, தாய்மொழி நாடு உள்ளிட்டு ஒரு மனிதரின் வாழ்வியல் அடையாளக் கூறுகளின் மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் மெனக்கெடும் முதல் முயற்சியானது, அந்த மனிதரின் அகத்தில் தொடங்கி, புறத்தில் வெளிப்படுவதே ஆக்கபூர்வமான வெற்றிக்கு வழி வகுக்கும். அதற்கு மாறாக, தாய்மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி பேசி, அந்த வழிமுறையை 'பெரியார்' .வெ.ரா சீரழித்த போக்கில், அகத்தில் சீரழியாத அவரையும், அவர் போன்றவர்களையும் ஓரங்கட்டி, அகத்தில் சீரழிந்தவர்களின் பிடியில், 'தனித்தமிழ்நாடு' கோரிக்கையானது சிக்கி, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்து விட்டது என்பது எனது ஆய்வு முடிவாகும். மீட்சிக்கான முயற்சியை, ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் தத்தம் அகத்திலிருந்து துவங்கினால் தான், மீட்சிக்கும் வழி கிட்டும். அகத்தில் நல்ல எண்ணங்களோடு பயணிப்பவர்கள் எல்லாம், எவ்வாறு நல்ல உடல் நலத்தோடு வாழ்வார்கள்? புறத்தில் நம்பமுடியாத அளவுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்துவார்கள்? என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ள காலக்கட்டம் இதுவாகும். 
(https://www.google.co.in/search?dcr=0&ei=fDMtWurND8WGvQSM8YqwBQ&q=ted+talks+joe+dispenza&oq=ted+talks+joe&gs_l=psy-ab.1.0.0l8.6254.14476.0.18370.4.4.0.0.0.0.190.729.0j4.4.0....0...1c.1.64.psy-ab..0.4.728...0i131k1j0i67k1.0.Dd5Ugf_hYsg & http://theintentionexperiment.com/the-purifying-effect-of-love-the-lake-biwa-intention-experiment-part-2.htm )

1983 சூலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை ஆதரித்து பேசியவர்கள்/எழுதியவர்கள் எல்லாம், முதலில் அன்றைய பிரதமர் இந்திராவின் இந்தியாவும், பின்னர் உலக ஆதிக்க சக்திகளும் பின்னிருந்து இயக்கிய 'ஈழ விடுதலை பொம்மலாட்டத்தில்' வெளிப்பட்ட 'தனித்தமிழ்நாடு நகைச்சுவை காட்சிகளில்’,  புரிந்தும் புரியாமலும் இடம் பெற்றவர்கள் ஆவர்; நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும்.

அந்த பொம்மலாட்டம் பற்றியும், அந்த நகைச்சுவைகள் பற்றியும் அறிவுபூர்வமாக விவாதிக்காமல்;

உணர்ச்சிபூர்வ போதையில், பெரும்பாலும் முதல் தலைமுறையாக படித்த கிராம பின்னணியுள்ள இளைஞர்களில் சிலர் ;

பெரும்பாலும் 1990 களில் பிறந்தவர்கள்;

இப்போது குக்கிராமங்களிலும் ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளிகள் ஊடுருவி விட்டதால், பின்னர் பிறந்தவர்கள் அது போன்ற 'தனித்தமிழ்நாடு' உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டது;

…………………………………………………………. ஒரு தாய்மொழிநாடானது தனி தாய்நாடாக இருப்பதும், அல்லது ஒரே தாய்நாட்டில் உள்ள பல தாய்மொழி நாடுகளில் ஒன்றாக இருப்பதும்;

அந்த ஒற்றுமைக்கான வரலாற்று ரீதியிலான பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளையும், சர்வதேச அரசியல் தொடர்பான வரலாற்றுப் போக்குகளையும் பொறுத்த ஒன்றாகும்.

'வந்தது வளர்த்து, வருவது ஒற்றி' என்ற சிலப்பதிகார (அரங்கேற்று காதை) வரிகள் உணர்த்தியபடியும்;

தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, தாய்மொழி நாடாகிய தமிழ்நாட்டை சீரழித்த அரசியல் தாதாக்களின் கருவியாக பயன்பட்டு வந்துள்ள பின்னணியில்;

அஸ்ஸாம் வழியில் தமிழ்நாடு பயணிப்பதே புத்திசாலித்தனமாகும். ‘பிரிவினைக்காக போராடிய மாணவர் தலைவர் தான், இன்று அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியில் முதல்வர் ஆவார். வடகிழக்கு மாகாண‌ங்களில், முன்பு பிரிவினைவாத கட்சிகளில் இருந்து, இன்று பா.ஜ.கவில் சேர்ந்தவர்கள் பெற்று வரும் முக்கியத்துவம் காரணமாக, நீண்ட காலமாக பா.ஜ.கவில் இருந்தவர்களிடையே, முணகல் வெளிப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கவலையில்லாமல், தமிழக பா.ஜ.க வானது, திராவிடக் கட்சிகளின் பாணியில் ஆளுயர மாலை, மலர்க் கிரீடம், குழு அரசியல் என்று தொடர்ந்து பயணிப்பதில், எந்த சிக்கலும் இல்லை.’
(http://tamilsdirection.blogspot.com/2017/08/its-mad-mad-mad-tamilnadu.html ); 'பெரியார் கட்சிகள்' எல்லாம் அறிவுபூர்வ விமர்சனமின்றி, உணர்ச்சிபூர்வ 'இந்துத்வா எதிர்ப்பில்', திராவிட ஊழல் ஒட்டுண்ணி 'பெரியார் சமூக கிருமிகளை' ஊக்குவித்து, மக்களிடமிருந்து அந்நியமாகி வருவதால்.

தமிழையும், தமிழ் உணர்வினையும் பிரிவினைக் கட்சிகளின் 'ஏகபோகமாக' கருதிக் கொண்டு, திராவிடர்/திராவிட/தமிழர் கட்சிகளில் சுயலாப நோக்கமின்றி பயணித்த தியாகிகளையும், பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணித்தவர்களையும் பிரித்து அணுகும் அறிவுபூர்வ பார்வையின்றி, ஒன்றாக கருதி, உணர்ச்சிபூர்வமாக‌ கண்டிக்கும், இழிவுபடுத்தும் போக்கில், தமிழக பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களே சிக்கி, பயணிப்பது மாறாத வரையில், அஸ்ஸாம் வழியில் தமிழ்நாடு பயணிப்பதற்கும் வாய்ப்பிருக்காது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

மேற்கத்திய வரலாற்றுப் பின்னணியில் உருவான 'நேஷன்' (Nation), மற்றும் 'நேஷ்னலிசம்' (Nationalism) போன்றவற்றை, தமிழில் 'தேசம்' மற்றும் 'தேசியம்' என்று இறக்குமதிகள் செய்து, அந்த கருத்தாக்கங்களின் அடிமைகளாகவும், இந்திய மொழிகளையும், பாரம்பரிய பண்பாடுகளையும் இழிவாகவும் கருதி, பயணிப்பவர்களுக்கு (‘Are the seculars & liberals in India, losing the hopes for social survival? The Semantic Trap of the ‘Western Paradigm Prison’ ; http://veepandi.blogspot.sg/2017/07/ );

இவை எல்லாம் புரியாத புதிர்களாக இருந்தால், வியப்பில்லை.’
( ‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; 
http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html

வரலாற்று மொழியியலில் (Historical Linguistics)  சொற்களின் பொருள் திரிபுகள் பற்றிய ஆய்வுகளின் பின்னணியில்; (https://en.wikipedia.org/wiki/Semantic_change )

தமிழில் 'இனம்',' சாதி', 'தேசியம்'  போன்ற சொற்களில் நிகழ்ந்துள்ள மேற்கத்திய/மார்க்சிய பொருள் திரிதலின்,  சமூக வரலாற்று காரணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி;

'திராவிடர்/திராவிட' அடையாள குழப்பத்தில், 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கானது முடிந்து,

தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மை மூலங்களிலிருந்து (ancient sources) நிகழ்கால சமூக தேவைகளுக்கு ஏற்ற வகையில் 'வளர்த்து';

'தமிழ் அடையாள மீட்சி'யானது, பரிமாற்ற பலன் பெறும் போக்கில், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாகும் சமூக செயல்நுட்பமானது, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, தமிழ்நாட்டில் அரங்கேறும் காலமானது, அதிக தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment