Friday, December 15, 2017

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' (3);

அரசியல் தற்கொலைப் பாதையில், பிரிவினைக் கட்சிகள் பயணிக்கிறார்களா?



முகநூலில் வெளிவந்த கீழ்வரும் கருத்தும், படமும் எனது கவனத்தை ஈர்த்தது.
அரசால் இயற்கையையே ஏவ முடியும் என்ற உண்மையை இப்போதுதான் புரிந்து கொண்டேன்.

இந்த விளக்கெண்ணெய்கள் தான் போராளிகளாம்..!”


இந்தியாவில் தேசிய பேரிடர் மீட்பு மையமானது, பிரதமர் மோடி ஆட்சியில், ஆளுங்கட்சி/எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்ற வேறுபாடின்றி, பிரமிக்கும் வகையில் கடலோர மாநிலங்களில் புயல் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பாடங்கள் கற்று, பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.( http://www.ndma.gov.in/images/guidelines/cyclones.pdf  &  http://www.ndma.gov.in/en/ ;  
"The Indian Navy, India Coast Guard, Indian Air Force, have rescued fishermen from Tamil Nadu and Kerala too. Per the letter from Tamil Nadu Chief Secretary, missing Tamil Nadu fishermen is 97. Rescue operations are continuing," she said in a tweet, saying at least 71 fishermen have been rescued from Tamil Nadu so far.
"The Coast Guard is at it, with all its strength to rescue the rest. Hoping for good news soon," she tweeted.; http://www.tribuneindia.com/news/nation/cyclone-ockhi-kerala-fishermen-launch-their-own-rescue-operation/507532.html  & https://www.youtube.com/watch?v=e20WBa_dXLk
)
பாதிக்கப்பட்ட மீனவர்கள் பற்றிய தகவல்களை எந்த அளவுக்கு சரியாக சம்பந்தப்பட்ட மாநில அரசோ, மீனவர் அமைப்புகளோ, சமூக ஆர்வமுள்ள எவருமோ தருவதைப் பொறுத்தே, மீட்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருக்கும்.

கேரளாவில் மாநில அரசு மீது அதிருப்தியடைந்த மீனவர்கள் கூட, மாநில முதல்வரையோ, நிதானம் இழந்து பிரதமரையோ இழிவுபடுத்தாமல், கண்டிக்காமல்; மாயமான மீனவர்களை தேடும் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். (http://www.tribuneindia.com/news/nation/cyclone-ockhi-kerala-fishermen-launch-their-own-rescue-operation/507532.html )

தமிழ்நாட்டில் ஒரு திராவிடக்கட்சி சார்பு தொலைக்காட்சியானது, குமரி மாவட்டத்தில் புயல்  வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களை பேட்டி கண்ட போது;

'ஆர்.எஸ்.எஸ் இளைஞர்கள் தான் உடனே உதவிக்கு வந்தனர்; வேறு யாரும் வரவில்லை' என்று தெரிவித்த போதும்;

செய்தியில் 'ஆர்.எஸ்.எஸ்'என்பதை நீக்கி, வெறும் 'இளைஞர்கள்' மட்டுமே உதவி செய்வததாக ஒளிபரப்பினார்கள்.

ஒரு பேரிடர் நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நம்மால் இயன்ற உதவிகளை புரிவதில் தான், மனிதாபிமானமுள்ளவர்களின் முழு கவனமும் இருக்கும். உதவ இயலவில்லையென்றால், சும்மா இருப்பதே நல்லது. அதை விடுத்து, அந்த பிரச்சினையை, தமது பொதுவாழ்வு வியாபாரத்திற்கு பயன்படுத்தும் நபர்கள் எல்லாம் மீடியா வெளிச்சத்திற்கு வரும்போது;

அத்தகையோரை கண்டிக்காமல் விடுவதானது, அந்த சமூகத்திற்கே கேடாக முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் பிரதமரைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் எல்லாம்;

பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு என்னென்ன உதவிகள் புரிந்தார்கள்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது பாராட்டும் வகையில் உதவிகள் புரிந்து வரும் சூழலில் (http://samvada.org/2017/news-digest/rss-swayamsevaks-in-relief-and-resuce-operations-during-ockhi-cyclone/ )

கடலில் காணாமல் போன மீனவர்கள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட கடல் வழிகள் பற்றிய தகவல்களை திரட்டி, தேடலில் ஈடுபட்டுள்ள மாநில, மத்திய அரசுகளில் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளை அணுகினார்களா? அதில் சுணக்கம் காட்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்களா?

கப்பற்படை, கடலோர காவல்படை உள்ளிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு துணை புரிந்தார்களா? தேடுதல் வேட்டையில் உள்ள குறைகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்களா?

ரஷ்யா, சீனா உள்ளிட்டு தத்தம் நாடுகளில் கடலில் புயலில் சிக்கிய மீனவர்களை தேடும் வழிமுறைகளில், இந்தியாவில் தேசிய பேரிடர் மீட்பு மையத்தின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, ஏதேனும் குறைகள் கண்டு தெரிவித்தார்களா?

மேலே குறிப்பிட்ட முயற்சிகளில் ஈடுபடாமல், பிரதமர் மோடியை, மேலேயுள்ள படத்தில் உள்ளவாறு இழிவுபடுத்தி போராடுவது அறிவுடைமையாகுமா? படித்த மாணவர்களும், இளைஞர்களும் இது பற்றி என்ன நினைப்பார்கள்?

இன்றுள்ள படித்தமாணவர்களும், இளைஞர்களும், 'பிரமிக்கும்' வகையில் தாம் பங்களித்த;

வெள்ள நிவாரண உதவிகளையும் சரி;

தமக்குள் நிதி திரட்டி, நன்கு படிக்கும் ஏழை மாணவர்களை அரசு பள்ளிகளில் தேர்வு செய்து, தொடர்ந்து புரிந்து வரும் உதவிகளையும் சரி;

தமது கல்லூரிக்கு அருகாமை கிராம மக்களின் தேவையை உணர்ந்து, தமது நண்பர்களுடன் சேர்ந்து நிதி திரட்டி, 'சமுதாயக் கூடம்' கட்டித் ந்தது போன்ற இன்னும் பல தமிழ்நாடெங்கும் மீடியா பார்வையில் தெரிந்தும், தெரியாமலும் நடந்து வரும் உதவிகளும் சரி;

வெளியில் தெரிவித்து 'புகழ்' தேடுவதை அநாகரீகமாக கருதி, பயணித்து வருவதை அறிந்து, வியந்து, அவர்களையே எனக்கு முன்னுதாரணமாக கொண்டு, நான் பயணித்து வருகிறேன்.

வெறுப்பு அரசியலை வெறுத்து, நடைமுறை சாத்தியமான ஆக்கபூர்வ வழிமுறைகளை ஆதரித்தே சாதாரண மக்களும், குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் தேசிய பேரிடர் மீட்பு மையத்தின் செயல்பாடுகளை அறிந்த மாணவர்களும், இளைஞர்களும் மேலே குறிப்பிட்டவாறு பிரதமரை இழிவுபடுத்துவதை ஏற்றுக் கொள்வார்களா?

அதிலும் 'இனம்' என்ற சொல்லையும், 'இனப்படுகொலை' என்ற சொல்லையும், இவ்வாறு அறிவற்ற முறையில் பயன்படுத்துவதை, ஏளனம் செய்ய மாட்டார்களா?

தமிழில் ' இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்த காலனிய சூழ்ச்சியில் .வெ.ரா அவர்கள் சிக்கி, 'தமிழர்' அடையாளத்தில் குழப்பத்தை அரங்கேற்றி , திராவிடர் கழகம்' தொடங்கியதன், அபத்தமான தொடர்ச்சிக்கு சான்றாகவே மேலே குறிப்பிட்ட படம் இருக்கிறது. (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

உண்மையில் படத்தில் குறிப்பிட்டுள்ள போராட்டத்தை முன்னெடுத்த இயக்கத்தில்;

பாரபட்சமற்ற அறிவுபூர்வ பார்வையுடையவர்கள் யார் இருந்தாலும், அவர்களின் பார்வைக்கு கீழ்வருவது உரியதாகும்.

இந்திராகாந்தி அரசின் உளவு வலைப்பின்னலில் ஆதாயம் பெற்று, 'ஊதி பெருத்த' ஈழ விடுதலை குழுக்கள் எல்லாம்,  ஒருவரையொருவர் 'துரோகி'யென அசிங்கப்படுத்திய சூழலில்;

'டெலோ', 'புளோட்', 'ஈபிஆர்எல்எஃப்', 'ஈரோஸ்' போன்ற அமைப்புகளில் ஈழ விடுதலைக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான போராளிகளையும், தலைவர்களையும் ஈவிரக்கமின்றி, கைகளை தூக்கி சரணடைந்தவர்களையும் சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் ஆவர்; ராஜபட்சேயும், இலங்கை அரசும் அல்ல; இன்றுவரை நியாயம் கேட்க நாதியில்லாத வகையில்.

இதில் வினோதம் என்னவென்றால்;

மேலே குறிப்பிட்ட இயக்கங்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களில் எவரும் மேற்குறிப்பிட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு போராடவில்லை; அவர்களில் யார்? யார்? பின் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக மாறி, இன்று சீமான், திருமுருகன், 'பெரியார்' கட்சிகளில் பயணிக்கிறார்கள்? மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள போராட்டத்தில் பங்கேற்றார்கள்? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

தலைவர்கள் வழிநடத்திய பயணம் வெற்றியில் முடிந்தால்,

அத்தலைவர்களை பாராட்டுவதைப் போலவே; பிரபாகரன் ஆனாலும், அண்ணா ஆனாலும்; 'பெரியார்' .வெ.ரா ஆனாலும் சரிதோல்வியில் முடிந்தால், கண்டிக்காவிட்டாலும், திருக்குறள் (471) வழியில் அறிவுபூர்வவிமர்சனம் செய்து, பாடங்கள் கற்று, திருந்தி, பயணிப்பது தானே, வெற்றிக்கான வழியுமாகும்;’ ( http://tamilsdirection.blogspot.in/2017/12/2.html   )

பிரதமர் மோடியும், அன்றைய முதல்வர் ஓபிஎஸும், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது  மேற்கொண்ட அணுகுமுறையானது;

இந்திய விடுதலைக்குப்பின், வெளிப்பட்ட பிரமிப்பூட்டும் அணுகுமுறையாகும்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ முதல்வராக இருந்திருந்தால், சென்னை மெரினாவில் துவங்கிய ஜல்லிக்கட்டு போராட்டமானது, முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும்;

என்று முகநூலில் வெளிவந்துள்ள கீழ்வரும் கருத்தும் சரியே ஆகும்.

 ‘ 1. ‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவை மட்டுமே குற்றம் சொல்லும் சொந்தங்களுக்கு...,’ 

2. '
நண்பர்களே
தற்போது மெரினாவில் மைக் பிடித்த நண்பர்கள் முதல்வரை வாடா போடா என்று ஒருமையில் பேசி வருகின்றனர் 

கூட்டம் கூடிவிட்டதால் நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாமா நண்பர்களே
இந்த போராட்டமே அம்மாவோ ஐயாவோ இருந்திருந்தால் நடைபெற்றிருக்குமா 
காவல்துறை உதவியில்லாமல் நடைபெற்றிருக்குமா

சிந்தியுங்கள்'
( ‘ 1938  -  1965  -   2017’ ; http://tamilsdirection.blogspot.in/2017/01/1938-1965.html )

‘ 'சமூக விரோதிகளும்', அவர்களின் சுயரூபம் தெரியாமல் அவர்களை பின்பற்றும் 'உணர்ச்சிபூர்வ' மாணவர்களும், மறைந்திருந்து காவல் துறையை தாக்கி உசுப்பி விட்டு, காவல் துறை நிதானமிழந்து வன்முறையை கையாளும் போக்கினை, தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, எவ்வாறு 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து வேறுபட்டது? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘1938  -  1965  -   2017’; http://tamilsdirection.blogspot.in/2017/01/1938-1965.html ) 'தனித்தமிழ்நாடு' போதையில் தேசியக் கொடியை அவமதிப்பவர்களையும், பா..கவில் உள்ள 'சமூக பிரிவினை' போக்குள்ளவர்களையும், 'அடையாளம்' கண்டு எதிர்க்கும் மாணவர்களும், 2017 ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். (chttps://www.facebook.com/arasezhilan/videos/10206226398337784/ ) இந்திய அரசியல் சட்ட எரிப்பு, தேசியக் கொடி அவமதிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு உள்ளிட்டு எந்த போராட்டமாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்கும் ஊறு விளைவிக்காமல், வன்முறைக்கு இடம் கொடுக்காமல், நீதி மன்றம் வழங்கும் தண்டனையை எதிர் வழக்காடாமல் ஏற்று, அனுபவித்து பயணித்தவர் .வெ.ரா ஆவார். 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தில் ஊடுருவி, தேசியக் கொடியை அவமதித்து, போராட்டத்தில் இருந்த மாணவர்களால் கண்டிக்கப்பட்ட 'தனித்தமிழ்நாடு', 'பெரியார்' ஆதரவாளர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எல்லாம், .வெ.ராவின் போராட்ட அணுகுமுறையை மக்கள் மன்றத்தில் அசிங்கப்படுத்திய சமூக குற்றவாளிகள் ஆவர்.

கவர்னர் கையெழுத்திட்டு சட்டம் நிறைவேறிவிட்டது. மாணவர்கள் போராட்டம் சரித்திரம் படைத்து விட்டது. ஆனால் அதைக் கொண்டாட முடியாமல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது மனதை வலிக்கச் செய்கிறது. கடைசி நாள் வரை அமைதியாக இருந்த மாணவர்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்? போலீசார் நினைத்திருந்தால் முதல் நாளிலேயே மெரினாவில் கூடவிடாமல் போராட்டக்காரர்களை அடித்து விரட்டி இருக்க முடியும். அவர்கள் கடைசி நாள் வரை பாதுகாப்பு அளித்தனர். கலவரத்துக்கு காரணம் யார்? என்பது மர்மமாக இருக்கிறது. முதல்வரும், பிரதமரும் முயற்சி எடுத்ததால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி நிரந்தர சட்டம் நமக்கு கிடைத்தது. இதற்காக அவர்கள் இருவருக்கும் நன்றி. அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு வெற்றி விழா நடத்தி இனிப்புகள் வழங்கி இருவரையும் பாராட்டுவோம். மாணவர்கள் யாரேனும் பிரதமர், முதல்வரை தவறாகப் பேசி இருந்தால் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். மாணவர்களைக் கைது செய்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.” ( http://tamil.oneindia.com/news/tamilnadu/ragava-lawrence-statement-on-the-end-jallikkattu-protest-272719.html ) என்ற ராகவா லாரன்ஸின் கருத்தை நான் வரவேற்கிறேன்.  (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_27.html )

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டு எந்த தலைவரின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் அறிவுபூர்வமாக யார் விமர்சித்தாலும், அவர்கள் மட்டுமே மக்களால், குறிப்பாக மாணவர்களால், இளைஞர்களால் மதிக்கப்படுவர்.

எந்த தலைவரையும் இழிவுபடுத்தி கண்டிப்பவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், அவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கப்படுவர்;அந்தந்த கட்சியின் வளர்ச்சிக்கு எமனாகவே அவர்கள்  பங்களிப்பர்.

அந்த திசையில் தான் தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியுள்ளது. விழித்துக் கொண்டவர்கள் தப்பிப்பார்கள். மற்றவர்கள் உணர்ச்சிபூர்வ முட்டாள்களாக பொதுஅரங்கில் ஓரங்கட்டப்பட்டு, பொதுவாழ்வில் சருகாகி, உதிர்வார்கள்

No comments:

Post a Comment