Sunday, December 17, 2017

அசாத்திய துணிச்சலுடன் .வெ.ராவின் தியாகம் நிறைந்த பொதுவாழ்வு மூலம் உருவான சமூக ஆற்றலின் திசை மாற்றம்;


'பெரியார்' .வெ.ரா, அண்ணா தோல்விகளின் மூலம் (Source) ?


இன்றைய தமிழ்நாட்டில்,  ‘தமக்கான ஆதாய வாய்ப்புள்ள மனிதர்களை தேடி சென்று, அவர்களை ஈர்க்கக் கூடிய, தம்மிடம் உள்ள திறமைகளை 'வெளிச்சம்' போட்டு, 'வாலாட்டுவதும்';

ஆதாயம் குறையும் போது, 'வாலாட்டுவதையும்' குறைப்பதும்;

ஆதாயமற்ற மனிதர்களை மட்டம் தட்டி, 'முற்போக்கு யோக்கியராக' தம்மை முன்நிறுத்தி,  தம்மை உயர்த்திக் கொள்வதும்;

'திராவிட மன நோயாளிகளிடம்'  வெளிப்பட்ட தனித்துவ (Unique) கூறுகளாகும்.’

1944இல் ‘திராவிடர் கழகம்' தோன்றுவதற்கு முன், தமிழ்நாடு எப்படி இருந்தது?

தம் மீதான விமர்சனத்தை ஒட்டாமல், வெட்டாமல், அப்படியே வெளியிட்டு, அதனருகே தமது விளக்கத்தை வெளியிடுவதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும்.

தாம் பாராட்டும் நபர் மீது, பொது அரங்கில் வெளிப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்படியே குறிப்பிட்டு, அதையும் மீறி தமது பாராட்டுதலுக்கான நியாயத்தை வெளியிடுவதற்கும்;

தாம் கண்டிக்கும் நபர் மீது, பொது அரங்கில் வெளிப்பட்டுள்ள பாராட்டுகளை எல்லாம் அப்படியே குறிப்பிட்டு, அதையும் மீறி தமது கண்டனத்திற்கானநியாயத்தை வெளியிடுவதற்கும்;

 அசாத்திய துணிச்சல் வேண்டும்.

அதெல்லாம் சாத்தியமா? என்று ஐயப்படுபவர்கள் எல்லாம், 1944இல் திராவிடர் கழகம் துவங்குவதற்கு முன்;

1925 முதல் 1944 வரை வெளிவந்த‌  ' குடிஅரசு' இதழில் .வெ.ரா அவர்கள் எழுதி வெளிவந்தவைகளை படிக்கலாம்.

உலக அளவில், நானறிந்தது வரையில், எந்த தலைவரும் அந்த துணிச்சலை வெளிப்படுத்தவில்லை. அது தவறு என்று எவரும் உரிய சான்றுகளின் அடிப்படையில் அறிவித்தால், திருத்திக் கொள்வேன்.

இன்று  தமது சொந்த வாழ்விலும், தமது சமூக வட்டத்திலும் இழிவான சமரசங்களையும், மேற்கொண்ட சுயலாப கணக்குகளையும் மறைத்து, 'செல்வாக்கான சமூக வலைப்பின்னலின்' துணையுடன், 'முற்போக்காக' வலம் வரும் அறிவுஜீவிகளுக்கு அந்த துணிச்சல் வருமா? தமது கொள்கைக்கு எதிரான தலைவர்களை உணர்ச்சிபூர்வமாகஇழிவு படுத்தி கண்டித்து பயணிக்கும் கட்சித் தலைவர்களுக்கும், அந்த துணிச்சல் வருமா?

நான் பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில், அந்த 'குடி அரசு' வழியைப் பின்பற்றி, மார்க்சிய - லெனினிய குழுக்களுடன் அறிவுபூர்வ விவாதத்தினை மேற்கொண்ட காலத்தில்;

' புதிய 'ஜனநாயகம்' ' கேடயம்போன்ற இதழ்களில் வெளிவந்தவைகளை அப்படியே வெளியிட்டு, அதற்கான மறுப்பையும் வெளியிட்டேன்; ' உண்மை' இதழில்; அந்த காலக்கட்டத்தில் அந்த அளவுக்கு 'விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி,  'உண்மை' பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் அனுமதித்ததால்.

அதே போல, பழனி அருகே உள்ள கிராமங்களில், மார்க்சியலெனினிய குழு 'அறிவு ஜீவி' ஒருவருடன், ' பெரியார்' ஆதரவு இளைஞர்கள் முன்னிலையில் விவாதம் நடத்தியிருக்கிறேன். மார்க்சிய லெனினிய 'மக்கள் யுத்தம்' குழுவின் கொள்கை வெளியிடான 'வர்க்கப் போராட்டத்தின் கேந்திரமான கண்ணி' என்ற நூலினை பேரா.கேசவனிடம் பெற்று, பின் அந்நூல் தொடர்பான விமர்சனங்களை எழுதி, அவரிடம் கொடுத்தேன். இன்றுவரை பதில் இல்லை.

இன்று .வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' அவரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி வெளியிட்டு வரும் பதிவுகளுக்கும்;

அறிவுபூர்வ மறுப்புகளை 'பெரியார்' கட்சிகளிடம் எதிர்பார்க்கிறேன். எனது பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் எதையும் அகற்றியதில்லை. நூலாக வெளியிடும் வாய்ப்பு நேரும் போது;

1944க்கு முந்தைய .வெ.ரா வழியில், எனது பதிவுகளுக்கு எதிரான மறுப்புகளையும் சேர்த்தே வெளியிடுவேன்; சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடு.

அவர்கள் அனுமதிக்கவில்லையெனில்; அவர்களின் அந்த மறுப்பு வெளிவந்த நூல்/இதழ் முகவரியை குறிப்பிட்டு, அதையும் படிக்குமாறு பரிந்துரைப்பேன்.

'திருச்சி பெரியார் மையம்' மூலமாக, அதனையும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளேன். (குறிப்பு கீழே)

'பெரியாரியலா? மார்க்சியமா?' என்ற தலைப்பில்,1991இல் 'திருச்சி பெரியார் மையம்' சார்பில் வெளிவந்த நூலின் முடிவுரையில்;

"இந்நூலை படித்து முடித்தவர்கள் கீழ்வரும் இரு நூல்களை அவசியம் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
1. 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வு' - தோழர் அருணன்
2. 'தி.கவின் சாதிய வெறியும், தி.மு.கவின் ஆதரவும்'  - தோழர் தீக்கதிர் முத்தையா “

அவ்வாறு அசாத்திய துணிச்சலுடன் .வெ.ரா அவர்கள் பயணித்ததாலேயே, தமிழ்நாட்டில் மற்ற எந்த தலைவரையும் விட, மிக மிக அதிகமான சமூக ஆற்றலை தமது பொதுவாழ்வு பயணத்தில், அவரால் சேர்க்க முடிந்தது.

சமூக ஆற்றல் தொடர்பான விளக்கத்திற்கு:  (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html    )

ஒரு தலைவரின் பயணத்தில் சேமிக்கப்பட்டு வரும் சமூக ஆற்றலானது, அந்த தலைவரின் பயணத்தில் திசை திரும்பி, தவறான மனிதர்களின் கூட்டு உருவாகும்போது, அதே சமூக ஆற்றல் மூலமாக அந்த தலைவரும் அவரின் நோக்கமும் பலியாகும்;

என்பதற்கு லெனினின் கடைசி காலமானது, வரலாற்று சான்றாகி விட்டது. ( http://www2.york.psu.edu/~grh2/contra/docs/2_3_4.pdf  & https://www.theguardian.com/film/2001/apr/05/artsfeatures  )

லெனினுடன் ஒப்பிடுகையில், பொதுவாழ்வில் வெறுத்து 'முனிவராக' விரும்புவதாக அன்றைய முதல்வர் அண்ணாவிடம் தெரிவிக்கும் அளவுக்கு, .வெ.ரா அவர்கள் சந்தித்த தோல்வியும்;

அந்த தோல்விக்கு மூல காரணமான திசையில் பயணித்த அண்ணா, 1967இல் முதல்வரான பின், அந்த தவறை உணர்ந்து, ஆனால் திருத்த முடியாத அளவுக்கு 'சூழ்நிலைக் கைதியாகி' மனம் வெறுத்து மரணமடைய விரும்பும் அளவுக்கு சந்தித்த தோல்வியும்;

லெனின் சந்தித்த தோல்வி போலவே கொடுமையானது ஆகும்; துவக்கத்தில் குறிப்பிட்ட 'திராவிட மனநோயாளிகளின்' ஆதிக்கத்தில் தமிழ்நாடானது சிக்கும் அளவுக்கு. தமது 'முற்போக்கு' பேச்சை, எழுத்தை, 'நம்பி' தம்மிடம் பழகுபவர்களை, தமது 'வியாபார' மற்றும் 'சுயநல செல்வாக்கு'க்கு, மனசாட்சியின்றி 'காவு கொடுக்கும்',  'அறிவு ஜீவிகளும்' அதில் அடக்கம்.

'இனம்' என்ற தமிழ்ச் சொல்லின் பொருளானது காலனிய சூழ்ச்சியில் சிக்கி, 'திராவிடர்' என்ற சொல்லானது அரங்கேறி, அந்த காலனிய சூழ்ச்சியில் .வெ.ரா அவர்கள் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கியதன் மூலமாக‌;

நேர்மையான சுய சம்பாத்தியம் மூலம் வாழ வழியும்/மனதும் இல்லாதவர்களுக்கு, தமிழ்நாட்டில் மதிப்புடன் கூடிய பொதுவாழ்வு வியாபாரமானது, காங்கிரசில் இருந்ததை விட, அதிக சாத்தியமுள்ளதாக உருவாக வழி  ஏற்பட்டது.

அந்த அபாயத்தை உணர்ந்து, 1948 தூத்துக்குடி மாநாட்டில் எச்சரித்த .வெ.ரா, அதிலிருந்து சறுக்கி, பின் நடந்த மாநாட்டில் அண்ணாவை சாரட்டில் உட்கார வைத்து, ஊர்வலத்தில் நடந்து, பின் அதனாலும் பலனில்லை என்று உணர்ந்து,

சொத்தை பிரதானமாக கருதி, அன்றிருந்த இந்து சட்டப்படி ஒரு பெண்ணை வாரிசாக்க இருந்த ஒரே வழியில், மணியம்மையை மணம் முடிக்க,

1949இல் தி.மு. தோன்றியது முதல் 1967இல் ஆட்சியை பிடிக்கும் வரை, மேலே குறிப்பிட்ட 1948 தூத்துக்குடி மாநாட்டு எச்சரிக்கையை இன்னும் தீவிரமாக்கி, பயணித்தார்.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான திசையில் 1965இல் அரங்கேறிய இந்தி எதிர்ப்பு போராட்டமானது, .வெ.ராவின் எதிர்ப்பினை சுவடின்றி அழித்து, அவரை அவமானப்படுத்தியதன் மூலம்; (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

.வெ.ராவின் தியாகம் நிறைந்த பொதுவாழ்வு காரணமாக உருவான சமூக ஆற்றலானது, அவரது 1944 தவறான திசை திரும்பல் காரணமாக, அவரையே பழி வாங்கியதானது, வெட்ட வெளிச்சமானது. அதன் தொடர்ச்சியே மேலே குறிப்பிட்ட .வெ.ரா மற்றும் அண்ணா ஆகியோரின் தோல்விகளாகும்.

மார்க்சிய லெனினிய புலமையுடன் 'பெரியார்' கொள்கையாளராக பயணித்து, பின்னர் 'ஈழ விடுதலையும்' 'பெரியார்' கொள்கையும், பொதுவாழ்வு வியாபார மூலதனங்களாக மாறிய போக்கினை உணர்ந்து, வெறுத்து, இசை ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டேன்.

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான்இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.

இசை இயற்பியல் (Physics of Music)  ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய தெளிவின்றி, .வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது வரவேற்க வேண்டியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/12/1-music-informationtechnologist-inputs.html )

1948 தூத்துக்குடி மாநாட்டு எச்சரிக்கையிலும், 1949 முதல் 1967 வரை அதை இன்னும் வேகமாக்கி முன்வைத்த எச்சரிக்கைகளிலும்;

பொதுவாழ்வில் ஏற்பட்ட பாதக விளைவுகளை தான் .வெ.ரா அவர்களால் கண்டுபிடித்து வெளிப்படுத்த முடிந்ததே ஒழிய;

அதன் மூலகாரணமான 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சியை அவர் கண்டுபிடிக்கவில்லை.

இசை இயற்பியல் (Physics of Music) ஆய்வுக்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தியதன் மூலமாகவும்;

.வெ.ராவின் மறைவிற்குப் பின், பொதுவாழ்வு வியாபாரத்தின் வளர்ச்சிப் போக்கில் உருவான 'பெரியார் சமூக கிருமிகளை' 'திருச்சி பெரியார் மையம்' மூலம் நான் கண்டுபிடித்ததன் மூலமாகவும்;

அந்த மூல காரணத்தையும், 'திராவிட' பொதுவாழ்வு வியாபார சமூக செயல்நுட்பத்தையும் (http://tamilsdirection.blogspot.in/2013/10/   & http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html );
 நான் கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறேன்.

1944 முன் வெளிவந்த 'குடி அரசு' வழியில், அதற்கு எதிரான கருத்துக்களை, நான் வரவேற்கிறேன்.

சுயலாப நோக்கின்றி, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம் இரண்டையும் திருக்குறள் (423) வழியில் படித்து, உண்மையை உணர்ந்து, தமது பயணத்தை நெறிப்படுத்திக் கொள்வதானது அவர்களுக்கும் நல்லது; தமிழ்நாட்டிற்கும் நல்லது. அது மட்டுமல்ல, 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா, வ.உ.சி உள்ளிட்டு எண்ணற்றோர், தத்தம் அறிவு, அனுபவ அடிப்படைகளில், திராவிடர்/திராவிட, தேசிய, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மூலமாக புரிந்த தியாகங்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபார மூலதனங்களாக பயன்பட்டு வருவதற்கும், முடிவு கட்ட வேண்டாமா?

குறிப்பு :

இன்று இந்துத்வாவை எதிர்த்து வரும் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவியான திரு.அருணன் அவர்கள், 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வு' என்ற தலைப்பில், மார்க்சிஸ்ட் கட்சியின் 'தீக்கதிர்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளியிட்டார். அதற்கு மறுப்பாக, திரு.கி.வீரமணியை ஆசிரியராக கொண்ட 'உண்மை' இதழில், 15 - 11 - 1983 முதல் 01  -06 - 1984 வரை, நான் எழுதிய தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. எனது கட்டுரைகள் வெளிவந்த காலக்கட்டத்தில்,  'தீக்கதிர்' இதழில்,1984 பிப்ரவரியில் திரு.அருணன் எழுதியகட்டுரைகள் வெளிவந்தன. அது தொடர்பான எனது மறுப்பு கட்டுரைகள், திரு.கி.வீரமணியை ஆசிரியராகக் கொண்ட 'விடுதலை' இதழில் 26 - 02 - 1984 முதல் 06  - 03 - 1984 வரை, வெளிவந்துள்ளன.

திரு.அருணன் எழுதிய கட்டுரைகளையும், அவை தொடர்பான எனது மறுப்பு கட்டுரைகளையும் ஒரே புத்தகமாக வெளியிட திரு.அருணன் சம்மதிக்க தயாரா? என்ற கேள்வியை, கடைசியாக வெளிவந்த எனது கட்டுரையில் எழுப்பியிருந்தேன்.

எனது இசை ஆராய்ச்சிகளின் அடிப்படையில், .வெ.ரா அவர்களின் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை, எனது பதிவுகளின் மூலமாக வெளிப்படுத்தி வரும் இந்த காலக் கட்டத்திலும்;

மேலே குறிப்பிட்டவாறு ஒரே புத்தகமாக வெளியிட, எனது சம்மதத்தினை, இந்துத்வாவை எதிர்ப்பதில் ஒன்றுபட்டுள்ள திரு.அருணன் அவர்களுக்கும், திரு.கி.வீரமணி அவர்களுக்கும், இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html )

No comments:

Post a Comment