'அந்த'(?) ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்' (2) ?
ஆர்.கே.நகர் வாக்காளர்களை குறை சொல்லும் முன், நமது யோக்கியதை எப்படி?
தமது
தோல்விக்கு மக்களை குறை சொல்லும் கட்சித்
தலைவர்களும் சரி, திரைப்பட இயக்குநர்களும்
சரி, அந்த தோல்வியினுள் புதைந்துள்ள
'வெற்றிக்கான சிக்னல்களை' திருக்குறள் (573 ) வழியில் பார்க்கத் தெரியாமல், தோல்வி திசையிலேயே தொடரும் குருடர்கள் ஆவார்கள்;
என்பதற்கு
நிகழ்கால தமிழ்நாட்டில் பலர் உதாரணங்களாக வலம்
வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு
முன், 'முடிவு எப்படி இருக்கும்?' என்று எனது நண்பர் கேட்டார்.
'பண
விநியோகத்தைப் பொறுத்து, தினகரனோ அல்லது இரட்டை இலையோ வெற்றி பெற்றாலும்,
தி.மு.க
3 ஆவது இடத்திற்கு வரும். டெபாசீட் போனாலும் வியப்பில்லை' என்று சொன்னேன்.
ஊடகங்களில்
வந்த செய்திகளின்படி, ஆளுங்கட்சி சார்பில் பண விநியோகம் நடைபெற்றதை
கண்கொத்தி பாம்பு போல கண்காணித்து, புகார்கள்
கொடுத்த தி.மு.கவினர்,
அந்த அளவுக்கு தினகரன் சார்பில் நடைபெற்றதை கண்டுகொள்ளவில்லை என்பது எனது கருத்து. அதுவே
தினகரன் ஜெயலலிதாவை விஞ்சும் வெற்றியை பெற காரணமானது.
பணத்திற்கு
அப்பாற்ப்பட்டு தி.மு.கவிற்கு சாகும்
வரை ஓட்டு போடும் வாக்கு வங்கியானது, சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவர். தி.மு.கவில்
தலைமை கட்டளையிட்டாலும், போன ஆட்சியில் 'சம்பாதித்த'(?)
பணத்தில் ஒரு பகுதியை மனமுவந்து
செலவு செய்பவர்கள் எண்ணிக்கையும் குறைவு; கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆட்சிக்கு வரும் கனவில் அதிகமாக செலவு செய்து ஏமாந்துள்ள சூழலில். அந்த அடிப்படையிலேயே, மேலே
குறிப்பிட்ட கணிப்பை நான் வெளிப்படுத்தினேன்.
ஜெயலலிதாவின்
மறைவிற்குப்பின் 'ஆதாயமின்றி' வாழும் அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் விதி விலக்கின்றி;
சசிகலாவை எதிர்த்து
'புரட்சி'கரமாக வெளிப்பட்ட பின், ஓ.பி.எஸ்,
தலைமையை
ஏற்றுக் கொண்டிருந்தார்கள், ஈ.பி.எஸ்
இணைப்பிற்கு முன்னர் வரையிலும். (http://tamilsdirection.blogspot.in/2017/02/digital-age-2017.html
)
இணைப்பிற்குப்
பின் ஓ.பி.எஸ்
முதல்வராகாமல், துணை முதல்வராகி, ஈ.பி.எஸ் முன்னிலைப்படுத்தப்பட்டு
பயணித்த போக்கில், அடிமட்ட தொண்டர்கள் ஆதரவுப் போக்கில் சலிப்பு வெளிப்பட ஆரம்பித்தது.
பணத்திற்கு விலை போகாத அந்த
ஆதரவும், நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களிலேயே அதிகம்.
ஆர்.கே.நகரில்
முதலில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்ட குற்றச் சாட்டின் அடிப்படையில் தேர்தலை ரத்து
செய்த தேர்தல் கமிசன்,
தினகரனை கைது
செய்து, பின் ஜாமினில் வெளிவந்த பின்னும், குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயரைக்
கூட சேர்க்காமல்;
வாக்குக்காக
பணம் கொடுத்த, வாங்கிய எவர் மீதும், நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமல்;
மீண்டும் தேர்தலை
நடத்தி;
முதல் முறை
கொடுத்த பணம் ஈட்டிய வாக்குகளுடன், மீண்டும் 'குக்கர்' வாக்குகளும் சேர்ந்து, தினகரன்
'அபார' வெற்றி பெற்றதில், வியப்புண்டோ? தேர்தல் முடிவுகளுக்கு முன் வெளிவந்த 'துக்ளக்'இதழிலும்,
இதே கணிப்பு வெளியாகி உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா
மர்மமான முறையில் அப்போல்லோவில் சேர்ந்து, சுமார் 70 நாட்களுக்கும் அதிகமாக அந்த மர்மமானது
நீடித்து, 'மர்மமாகவே' மரணம் அடையும் வரை,
ஜனநாயகத்தின்
தூண்களும், மீடியா வெளிச்சத்தில் உள்ள முற்போக்கு/பிற்போக்கு எழுத்தாளர்களும் கண்களை
மூடிக்கொள்ளாமல், மேலே குறிப்பிட்ட 'ஜனநாயக அவமானம்' சாத்தியமாகியிருக்குமா?
ஜனநாயகத்தைக்
காப்பாற்றுவதில், அவர்களுக்கு இல்லாத அக்கறையானது, ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு எப்படி
வரும்?
முந்தையப் பதிவில்
குறிப்பிட்டுள்ளவாறு, 'அந்த'(?) ஓட்டப்பந்தயத்தில்
சிக்கியவர்கள் எவருக்கும் ஆர்.கே.நகரில் பணத்துக்காக வாக்களித்தவர்களை குறை சொல்லும்
அருகதை உண்டா?
மனசாட்சியை
அடகு வைத்து, வெளியில் தெரியாத 'ஆதாயங்களோடு' பலன் அனுபவித்த கட்சிகளின் தலைவர்களும்,
ஊடகங்களும், எழுத்தாளர்களும், பணத்துக்காக ஓட்டு போட்ட வாக்காளர்களை குறை சொல்ல முடியுமா?
அதே நேரத்தில்,
1996 முதல் இன்றுவரை கோப அலையில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியவர்களும்;
கோப அலை இல்லாத
காலங்களில், வாக்குக்கு பணம் வாங்கும், 'அதே' வாக்காளர்கள் தான் என்பதை மறுக்க முடியுமா?
ஆர்.கே.நகர்
வாக்காளர்கள் மீது குற்றம் சொல்வதற்கு முன், கீழ்வரும் கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும்.
'திருமங்கலம்
ஃபார்முலாவை'அமுலாக்கி வெற்றிப் பாதையில் பயணித்த தி.மு.க, பின் நடந்த பொதுத் தேர்தலில்,
அந்த ஃபார்முலாவை அமுலாக்கியும் தோற்றது ஏன்?
அந்த ஃபார்முலாவை
இன்னும் வளர்த்து, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெயலலிதா, அடுத்து
நடந்த சட்டசபை பொது தேர்தலில் (காங்கிரஸ் புண்ணியத்தில்) மயிரிழையில் தப்பித்து ஆட்சி
அமைத்தது ஏன்?
அதற்கு விடை
காண வேண்டுமானால், 1969இல் முதல்வராகி ஆட்சியை இழந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்
உயிரோடு இருந்தது வரை, ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை?
பின் தி.மு.க
மீது மக்களுக்கு இருந்த வெறுப்பையும் மீறும் அளவுக்கு;
கங்கை அமரன்,
பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார்
சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்து:
மலைகள், காடுகள்,
தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு;
அதன் உச்சக்கட்டமாக,
'வளர்ப்பு மகன் திருமணம்' மூலம் சசிகலா குடும்ப புண்ணியத்தில் வளர்ந்த கோபம் மூலமாகவே,
1996இல் மீண்டும் தி.மு.க தலைவர் கருணாநிதி முதல்வராக முடிந்தது;
இடையில்
1989இல் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், அந்த கட்சி இரண்டாக உடைந்ததில் ஆட்சிக்கு வந்து,
பின் சேர்ந்ததும் ஆட்சியை இழந்த பின்னணியில்.
தி.மு.க தலைவர்
கருணாநிதி, சோனியாவை சந்தித்த பின், சிறையிலிருந்த கனிமொழியும், ராசாவும் ஜாமினில்
வெளியே வந்ததை சந்தேகத்துடன் பார்த்தவர்கள் எல்லாம்;
பிரதமர் மோடி,
சென்னையில் தி.மு.க தலைவரை சந்தித்த பின், 2ஜி வழக்கில் அவர்கள் விடுதலையானதையும்,
சந்தேகத்துடன் பார்த்தால், அதை குறை சொல்ல முடியுமா?
நோட்டா வாக்குகளை
விட பா.ஜ.க குறைந்த வாக்குகள் வாங்கியதற்கு அதுவும் ஒரு காரணம் என்பது எனது கருத்து.
தமிழக பா.ஜ.க தமிழ்நாட்டில் ஆளுயர மாலை, மலர்க் கிரீடம், ஆதாய தொண்டர்களை, திராவிடக்
கட்சிகளின் பாணியில் 'பராமரித்து வரும்' குழுத் தலைவர்கள் மூலம், திராவிடக் கட்சிகளின்
பாணியில் செயல்படுவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html
)
எனவே ஆர்.கே.நகர்
வாக்காளர்களை குறை சொல்லும் முன், நாம் ஒவ்வொருவரும் மனசாட்சிக்குட்ப்பட்டு நமது யோக்கியதையையும்
சுயபரிசோதனை செய்தாக வேண்டும். ( http://tamilsdirection.blogspot.in/2016/10/blog-post.html
)
(வளரும்)
No comments:
Post a Comment