Friday, December 1, 2017

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' (Tamil Chair) (2);


 திராவிட அரசியலில், சுயமரியாதைக்குக் கேடான வகையில், சிறையுண்ட தமிழ் ?


இயன்றவரை மீடியா வெளிச்சத்தை தவிர்த்து, சாதாரண மனிதராக வாழ்வதன் காரணமாக, சில வித்தியாசமான அனுபவங்களை, நான் சந்தித்திருக்கிறேன். அதில் ஒன்றினை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் உள்ள அறிஞர்களின் ஊக்கமூட்டும் ஆர்வத்தை ஈர்த்துள்ள, தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது ஆய்வுகள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html). தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது கண்டு பிடிப்புகளுக்கு 1996இல் நான் மேற்கொண்ட திருக்குறளில் தமிழ் இசையியல் தொடர்பான ஆய்வுகள் திறவுகோலாக (Key)அமைந்தன.

அந்த ஆய்வுகள் தொடர்பான விளக்கங்களுக்கு
http://musicresearchlibrary.net/omeka/items/show/2512


அதன்பின் நடந்த ஒரு சம்பவம் தான் திராவிட அரசியலில் திருக்குறள் சிறைபட்டிருக்கிறதோ? என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்தியது. அந்த காலக் கட்டத்தில் ஒரு திரைப்பட இயக்குநரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம் எனது திருக்குறள் ( 821) ஆய்வில் உரையாசிரியர்கள் அனைவரின் உரைகளும் தவறு என்று வெளிப்பட்டிருப்பதைத் தெரிவித்தேன். உடனே அவர் தன் வீட்டில் இருந்த கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையை எடுத்துப் பார்த்தார். அவரது உரையும் தவறு என்று எனது ஆய்வில் வெளிப்பட்டது அவருக்கு ஏமாற்றமானது. ஆக கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையைத் தவறு என்று வெளிப்படுத்தும் ஆய்வு கலைஞர் கருணாநிதிக்கு எதிரான ஆய்வாக அணுகும் போக்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. நியூட்டனின் பல ஆய்வுமுடிவுகள் அவருக்குப் பின் வந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் தவறு என்று வெளிப்பட்டது நியூட்டனுக்கு எதிரான ஆய்வாக அறிவியல் உலகில் கருதப்படவில்லை. மாறாக அது அறிவியல் வளர்ச்சியாகவேக் கருதப் பட்டது. ஆனால்  திராவிட அரசியலில் சிக்கிய தமிழ்நாட்டில் அது உணர்ச்சிபூர்வமாக, சம்பந்தப்பட்ட தலைவருக்கு எதிராகக் கருதப்படும் நிலை உள்ளதா? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாகும்.  'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என்ற நூல் வெளியிட்ட தமிழ் அறிஞர்,தான் சாகும் வரை, தமிழ் ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்தது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ ( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அதே போக்கில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், எனது 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வினை மேற்கொண்டது தொடர்பான கசப்பான அனுபவங்களில் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

எனது ஆய்வின் இறுதியில், அதன் தகுதி பற்றிய முடிவிற்கான நேர்காணல் குழுவின் தலைவராக இருந்தவர்;

ஆய்வு கட்டுரைகளில் ஒன்றில்;

(சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ள, யாழ் தொடர்பான) 'வார்த்தல்' என்ற சொல்லை உரக்கப் படித்து, 'CASTING' பற்றிய 'வார்தல்' என்ற சொல்லிற்குப் பதிலாக, 'வார்த்தல்' என்று பிழையாக போட்டிருக்கிறீர்கள்; என்று சற்று கோபமாக கேட்டார்.  நான் பொறுமையாக, அது யாழ் தொடர்பான சொல் என்று விளக்கினேன்.

தமிழ் இசையில் புதிதாக நான் கண்டுபிடித்தவைகளை படித்தவாறே, சற்று எரிச்சலாக;

"மம்மது போன்ற இசை அறிஞர்கள் உங்களின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொண்டார்களா?"என்று கேட்டார்.

அதற்கு உண்மையான கீழுள்ள விளக்கத்தை தெரிவித்தால், அதனை 'அதிக பிரசங்கித்தனம்' என்று கருதி, இன்னும் கோபப்படுவார், என்பதால் பதில் சொல்லவில்லை.

பல வருடங்களுக்கு முன், நான் கல்லூரி முதல்வராக பணியாற்றிய காலத்தில், ஒரு முறை மம்மது தொலைபேசியில் பேசினார். அவரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது'Ancient Music Treasures- Exploration for New Music' என்ற எனது புத்தகத்தை அன்பளிப்பாக பெற்றதாகவும், 'இசையின் இயற்பியல்'(Physics of Music) பற்றி என்னிடம் நேரில் பாடம் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அது போலவே, மறைந்த தமிழ் இசை அறிஞர் வீ..கா சுந்தரமும், எனது ' தமிழிசையின் இயற்பியல் (Physics of Tamil Music)' முனைவர் பட்ட ஆய்வேட்டினைப் படித்த பின், 'இசையின் இயற்பியல்பற்றி என்னிடம் நேரில் பாடம் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நேர்க்காணல் குழு தலைவராக‌, அவர் ..டி(I.I.T) யில் பொறியியல் பேராசிரியர்(https://inae.in/expert-search/index.php/s-mohan) எப்படி தமிழ் இசையியல் (Tamil Musicology)  தொடர்பான நேர்காணலில் பங்கேற்று, அபத்தமாக கேள்விகள் கேட்டார்? என்று வியந்தேன். திருக்குறள் இசையியல் (Musicology) 'சாவி' (Key) துணையுடன் மேற்கொண்ட‌, தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' (Musical Linguistics) தொடர்பான எனது கண்டுபிடிப்பானது, சமஸ்கிருதத்தில் பாணினியின் இலக்கண நூலுடன் தொடர்புடைய 'சிவ சூத்திரங்களுக்கு' (https://en.wikipedia.org/wiki/Shiva_Sutras) பொருந்தும் வாய்ப்பிருப்பதை கண்டு, வியந்து, அதனை நேர்க்காணலில் துவக்கத்தில் குறிப்பிட்டேன். அவரோ மிகுந்த எரிச்சலுடன் அதை புறக்கணித்தார், தமிழ்நாட்டில் உள்ள அறிவுபூர்வ பார்வையற்ற உணர்ச்சிபூர்வ இந்துத்வா எதிர்ப்பு மனநோயில், அவரும் சிக்கியிருக்கிறாரோ என்ற ஐயத்தை, அந்த புறக்கணிப்பானது,  எனக்குள் ஏற்படுத்தியது. எந்த மனித அடையாளத்திற்குள்ளும் உள்ள முரண்பாடுகளை அணுகி வரும் நான், 'இந்துத்வா' முகாமிற்குள் உள்ள உணர்ச்சிபூர்வமற்ற அறிவுபூர்வ கூறுகளை அடையாளம் கண்டு ஆதரித்து வருவது போல; (http://tamilsdirection.blogspot.sg/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு' முகாமிற்குள் அடையாளம் கண்டவர்கள் பெரும்பாலும் நடு/கீழ் மட்டத்தில் உள்ளவர்களே ஆவர். எனவே மேலே குறிப்பிட்ட மேல் மட்டத்தில் உள்ளவரிடம்,  'அந்த மன நோய்' தொடர்பான ஐயம் எனக்குள் எழுந்ததில் வியப்பில்லை.

அடுத்து நேர்க்காணல் குழுவில் இருந்த ஒரு ஆங்கிலப் பேராசிரியர்(?), 'சுரம்', 'சுருதி', 'அத்தம்' போன்ற சொற்களுக்கு, லெக்சிகன் விளக்கத்திற்கு மாறாக, தமிழிசையியல் தொடர்பான எனது கண்டுபிடிப்புகளை படித்து, சற்று கோபமாக, நான் சிறுபிள்ளைத்தனமாக பதிவு செய்திருப்பதாகவும், லெக்சிகனின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கமும் தந்தார்; அந்த நேர்க்காணலுக்கு முன்பேயே, காரைக்குடியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பாக நடந்த ஆய்வரங்கில், 'Pitfalls in the study & translation of the ancient Tamil texts ' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தவன் நான், என்ற விபரம் கூட தெரியாமல். சுமார் 15 வருடங்களுக்கு முன்னேயே, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறையில், பேராசிரியர்கள் ஜெயதேவன்(லெக்சிகன் முதன்மை பதிப்பாசிரியர்), வீ.அரசு, மற்ற பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் முன்னிலையில், மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் தொடர்பான விளக்க உரையும் (lecture cum demo)  நிகழ்த்தியிருக்கிறேன்; பேரா.ஜெயதேவன் உள்ளிட்ட அனைவரின் பாராட்டுதலையும் பெற்றேன்.

நேர்க்காணலில் தொடர்ந்த அபத்தங்களையும், அதன்பின் நான் மேற்கொண்ட முயற்சிகளில் கிடைத்த நம்பமுடியாத அனுபவங்களையும், பின்னர் நேரம் வாய்க்கும்போது பதிவு செய்வேன். அவற்றை மூலமாக(Source) கொண்டு, வரும் காலத்தில் வாய்ப்பு கிட்டும்போது, திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கும் எண்ணமும் உள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே எந்த மொழி தொடர்பான ஆய்வுத்திட்டம் தொடர்பான நேர்க்காணலில், இது போல அந்த துறையில் புலமையில்லாதவர்கள் எல்லாம் வெட்கமில்லாமல், துணிச்சலாக அபத்தமான முறையில் கேள்விகள் கேட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், அந்த மொழி புலமையாளர்கள் மத்தியில் அதைக் கண்டித்து ஒரு விவாதப் புயலே நடந்திருக்கும்தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளிலும் செல்வாக்கான நபர்களுடன் தொடர்பில் இருந்து, எந்த கட்சி ஆட்சி செய்தாலும், 'தமிழின்' பேரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, அதை பற்றிய கவலை இருக்க வாய்ப்புண்டா? ஹார்வார்ட் பல்கலைக்கழக செல்வாக்குள்ள செல்டன் பொல்லாக் போன்றவர்கள் எதிர்ப்பின்றி, தமிழை இழிவுபடுத்தும் ஆய்வுகளை வெளியிடுவதில் வியப்புண்டோ?

கங்கை அமரன், .ஆர்.ரகுமான், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது, 'மெளன சாட்சிகளாக' பயணித்து

திராவிட ஊழல் புரவலர்களின் அரவணைப்பில், 'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, ஈழ விடுதலை' உள்ளிட்ட இன்னும் பலவற்றின் ஆதரவாளர்களக பயணித்து;

'மாதொருபாகன்' நாவலாசிரியரான ஒரு பேராசிரியரின் 'மனித உரிமைக்கு'(?) ஆதரவாக குரல் கொடுத்த 'முற்போக்குகள்' எல்லாம்; 
( http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

தமிழ் ஆய்வுக்கு ஏற்பட்ட மேலே குறிப்பிட்ட அவமானத்தை கண்டித்து குரல் கொடுத்தார்களா? அத்தகையோரும், கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், பா.ஜ.கவை நிராகரிக்குமாறு கூட்டு அறிக்கை வெளியிட்ட 'முற்போக்கு எழுத்தாளர்களும்', இனியாவது குரல் கொடுத்தால் கூட, அது செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகளை பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தி, சரியான சட்ட திட்டங்களை உருவாக்கி, அந்த நிறுவனமானது மேலே குறிப்பிட்ட குறைகளின்றி தப்பிக்க துணை புரியும்.  

‘சட்டத்தின் செயல்பாடு(Rule of Law) என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் வரை தான், வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) நிறுவன கட்டமைத்தலில் (System Building) வலிவுடன் இருக்கும்.  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்  தமக்குள்ள அதிகாரத்தை, தமது ஊழல் உள்ளிட்ட பலகீனங்களுக்கு சேவகம் செய்ய முயற்சிக்கும்போது, அவர்களை அகற்றும் அளவுக்கு அந்த வலிமை இருக்க வேண்டும்.’ என்பதையும்;

‘மத்திய அரசு தமிழ்நாடு தொடர்பாக எதற்கு முயற்சித்தாலும், தமிழ்நாட்டின் நலன்களுக்காக அதை எதிர்க்கும் துணிச்சலானது,1967க்கு முந்தைய காங்கிரஸ் அரசிடம் இருந்தது என்பதை, கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலை நினைவகம் முயற்சியில் ஈடுபட்ட ஏக்னாத் ரானடேயின் நூல் தெளிவுபடுத்தியுள்ளது. பின் தி.மு.க ஆட்சியில் அத்திட்டமானது, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு, நிறைவேறியது.( 'The Story of the Vivekananda Rock Memorial’; vkpt@vkendra.org)  1967க்கு முன், மத்திய அரசு விரும்பியிருந்தாலும், கச்சத்தீவு தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து, இலங்கை வசம் போயிருக்க முடியாது என்பதையும், அதன் மூலம் விளங்கிக் கொள்ளவும் முடிகிறது.’  என்பதையும்;
ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

1965இல் அரங்கேறிய உணர்ச்சிபூர்வ 'இந்தி எதிர்ப்பு' போக்கானது, 1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, ஊழல் அரங்கேறும் வகையில், தமிழக அரசின் நிறுவன கட்டமைத்தலை சீர்குலைத்த போக்கில், 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற உணர்ச்சிபூர்வ போதைகளின் துணையுடன், தமிழ் தொடர்புள்ள அமைப்புகளையும், கட்சி அரசியலின் நலன்களுக்கு பயன்படுத்தும் தீமையும் அரங்கேறியது. அதன் உச்சக்கட்ட பாதிப்புகள் எல்லாம், கடந்த தி.மு.க ஆட்சியில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன செயல்பாடுகளில் வெளிப்பட்டதாக, மேலே குறிப்பிட்ட விசாரணையில் அம்பலமானால் வியப்பில்லை.

மேலே குறிப்பிட்ட 'மெளன சாட்சிகளாகவும்', திராவிட ஊழல் புரவலர்களின் அரவணைப்பிலும், பயணித்தவர்களின் பேச்சிலும், எழுத்திலும் மயங்கி, 'உணர்ச்சிப்பெருக்கில்';

பெரும்பாலும் முதல் தலைமுறையாக படித்த, கிராமப் பின்னணியுடைய குடும்பங்களில், தமது படிப்பையும், வாழ்வையும், தீக்குளித்து உயிரையும்,  அழித்துக் கொண்டவர்கள் வளர்ந்த போக்குடன்; 

அவ்வாறு தூண்டி வரும் நபர்களின் 'ஊழல் சமரச அடிவருடி’ப் போக்கானது, ஒன்றையொன்று வளர்த்த‌ சமூக செயல்நுட்பம் காரணமாகவே;

செல்டன் பொல்லாக் போன்றவர்கள், எதிர்ப்பின்றி, தமிழை இழிவுபடுத்தும் ஆய்வுகள் எல்லாம் வெளிவருகின்றனவா? தமிழில், தமிழ் இசையில் புலமையற்றவர்கள் மூலம் எனது ஆய்வு அவமானப்படுத்தப்பட்டதா?  என்ற ஆய்விலும் ஈடுபடும் எண்ணமும், எனக்குள் வளர்ந்து வருகிறது.

திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், தமிழ் சிறையுண்டிருப்பதை உணர்ந்து, எனது சொந்த செலவிலேயே ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நான்:

புதுக்கோட்டை ஞானாலயா கிருட்டிணமூர்த்தி (குறிப்பு-1 கீழே) கொடுத்த அழுத்தத்திற்கு பணிந்தே, மேலே குறிப்பிட்ட ஆய்வினை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்  சார்பாக நிதி பெற்று தொடர்ந்தேன். ஆன செலவுகளை நானே ஏற்று, முறையான விசாரணைக்குப் பின், வாங்கிய நிதியை திருப்பிக் கொடுத்து, எனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து விடுபட்டு, அதன்பின், 'திருக்குறளில் தமிழ் இசையியல்தொடர்பான, அந்த ஆய்வு ஏட்டினை நூலாக வெளியிட எண்ணியுள்ளேன்வெளிப்படைத்தன்மையும்(Transparency), குறைகளை பொறுப்பேற்கும் தன்மையும் (Accountability), அமுலாகும்போது மட்டுமே, திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், சிறையுண்ட தமிழானது விடுதலை ஆகும், என்பதும் எனது கருத்தாகும்.

எதிர்பாராமல் நிகழ்ந்த மேலே குறிப்பிட்ட அவமானத்தைப் போலின்றி, நானாகவே திராவிட கட்சிகளின் ஆட்சியில் புலமைக்கு ஏற்பட்ட சீரழிவு பற்றிய ஆய்வு நோக்கில்;

தேடி சென்று அனுபவித்த அவமானங்களை எல்லாம், நேரம் கிடைக்கும்போது, பதிவு செய்ய எண்ணியுள்ளேன். 1967க்கு முன் படித்திருந்தால், எஸ்.எஸ்.எல்.சி கூட தேறியிருக்க முடியாதவர்கள் எல்லாம், அதன்பின் 'திராவிட ஆட்சிகளில்' கல்வியில் ஏற்பட்ட சீரழிவுப் போக்கின் (குறிப்பு-2 கீழே) விளைவாக, இன்று தமிழ்நாட்டில் புலமையாளர்களாக, துணைவேந்த‌ர்களாக வலம் வருவது உள்ளிட்ட அரிய கண்டுபிடிப்புகளையும் அதில் பதிவு செய்வேன். அத்தகைய புலமையாளர்கள் வளர்ந்ததற்கும், இலக்கண அறிவின்றி, செவி மூலம் உணரும் ஓசை அறிவின் அடிப்படையில் பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்ததற்கும், உள்ள உறவும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், தமிழ் சிறையுண்டிருப்பதானது, விரைவில் முடிவுக்கு வரும், என்பதும் எனது கணிப்பாகும். திராவிட ஊழல் புரவலர்களை அடிவருடி பலன்கள் பெறுவதை தவிர்த்து, விரும்பி இழப்புகளை ஏற்று பயணிக்கும் புலமையாளர்கள் எல்லாம், அதற்கான பங்களிப்பை வ்ழங்கி வருகிறார்கள்.

எனவே சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம் கற்காமல்;

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' தொடர்பாக நான் முன்வைத்த கேள்விகள் எல்லாம், இருட்டில் நீண்ட காலம் நீடிக்க முடியாது, என்பதும் எனது கணிப்பாகும்.. (http://tamilsdirection.blogspot.sg/2017/11/tamil-chair.html


குறிப்பு:


1. தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)) நூலில் வெளிவந்துள்ள பொய்களை, இவர் குறித்து வைத்துள்ளார். அது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, நூல் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் அவரை அணுகலாம். 'தி.க கொடி உருவான வரலாறு' பற்றி மலரில் வெளிவந்த கட்டுரைக்காக, ('பெரியார்' இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில், ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது) 'குடி அரசு' அலுவலகத்தில் பணியாற்றிய 'மு.கருணாநிதி' அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது ஊரில் மருத்துவ சிகிச்சையில் இருந்த சிறிய செய்தியும், அந்த காலக்கட்ட‌ இதழ்களில் வெளிவந்திருக்கிறது.


2.   இன்று தமிழ்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களில் பலர், ஆங்கில வழியில் (English Medium) படிப்போரும், தமிழ்வழியில் (Tamil Medium- அரசு கல்லூரிகளில்) படிப்போரும், பல்கலைக்கழக தேர்வுகளில் விடைகளை ஆங்கிலமும், தமிழும் கலந்து எழுதி வருகிறார்கள். இந்த சீர்கேடானது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் உண்டா?    (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

No comments:

Post a Comment