சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூவின் அபாய எச்சரிக்கை?
தமிழ்நாட்டுக் கட்சிகளும் தலைவர்களும்
திருந்துவார்களா?
'அதிக சம்பளமுள்ள
வேலைகளில் சிங்கப்பூரர்களாகிய எங்களை பணியமர்த்தாமல், ஏன்
வெளிநாட்டுக்காரர்களை பணியமர்த்துகிறீர்கள்?'
என்று
சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர் லீ குவான் யூவிடம் சிங்கப்பூரர்கள் கேட்ட
கேள்விக்கு, அவர் தந்த விளக்கம் கீழ்வரும்
காணொளியில் உள்ளது.
'சிங்கப்பூரின்
பொருளாதாரம் நன்றாக இருந்தால் தான், சிங்கப்பூர்
நன்றாக இருக்கும். சிங்கப்பூரில் செயல்படும் தொழில் வியாபார நிறுவனங்கள்
லாபத்துடன் செயல்பட்டால் தான், சிங்கப்பூரின் பொருளாதாரம் நன்றாக
இருக்கும். யாரைப் பணியமர்த்தினால், நிறுவனம் நன்றாக
நடக்குமோ, அவர்களை பணியமர்த்தினால் தான், நிறுவனம் நன்றாக நடக்கும். சிங்கப்பூரர்களைத் தான் பணியமர்த்த
வேண்டும் என்று வலியுறுத்தினால், அந்நிறுவனங்கள் நட்டமடைய, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற, சிங்கப்பூர்
சீர் குலைந்த நாடாகி விடும். எனவே சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு பணியாட்கள் அளவுக்கு
தங்கள் தகுதி, திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வரை,
வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்துவதைத் தவிர்க்க இயலாது' என்ற வகையில் மேற்குறிப்பிட்ட காணொளியில் விளக்கம் தந்துள்ளார்.
அவ்வாறு
சிங்கப்பூரர்கள் நல்ல சம்பளம் உள்ள வேலைகளுக்கான தங்களின் தகுதி திறமைகளை
வளர்த்துக் கொள்ள, அரசின் நிதி உதவியுடன் பயிற்சி பெறும்
திட்டங்களை சிங்கப்பூர் அரசு செயல்படுத்தி வருகிறது.
The SGUnited Skills programme is
a full-time training programme ranging from six to 12 months. The programme
will comprise certifiable courses delivered by companies and the Continuing
Education Training (CET) Centres, including Institutes of Higher Learning.
அண்மையில்
நடந்து முடிந்த சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றிருந்தாலும்,
வாக்கு சதவீதமானது, கடந்த தேர்தலில் பெற்றதை விட சிறிய
அளவு குறைந்துள்ளது. அதனைக் கணக்கில் கொண்டு, இன்னும்
எந்தெந்த வழிகளில் சிங்கப்பூரர்களின் தகுதி, திறமை,
வாழ்வு நிலைகளை உயர்த்துவது? என்று
சிங்கப்பூர் அரசானது திட்டமிடத் தொடங்கியுள்ளது.
1967க்கு முன், திருச்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்த நான் சிலமுறை சென்னைக்கு வரும் வாய்ப்புகள் கிட்டின. அப்போது மாநகரப் பேருந்து நிறுத்தத்தில், பேருந்து வந்து நின்றவுடன், தாமாகவே தள்ளுமுள்ளின்றி வரிசையில் நின்று, ஒவ்வொருவராக பேருந்தில் ஏறுவார்கள். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவானவுடன், நடத்துநர் சைகை காட்ட, வரிசையில் நின்ற பயணிகள் பேருந்தில் ஏற மாட்டார்கள். அப்போது அது எனக்கு வியப்பாகப்படவில்லை.

ஊழலில், பொது ஒழுக்கக்கேட்டில் இன்றைய சென்னையைப் போலவே, அந்த காலக்கட்டத்தில் (1960களில்)
சிங்கப்பூர் இருந்ததை சிங்கப்பூரில் புகழ் பெற்ற நடன ஆசிரியர் மறைந்த பாஸ்கர்
என்னிடம் தெரிவித்தார்.
இன்றைய
சிங்கப்பூர் அன்றைய சென்னையாக வாழ, அன்றைய சிங்கப்பூர் திசையில் இன்றைய
சென்னை பயணிக்கிறது. சிங்கப்பூரானது அவ்வாறு சீரடைந்ததற்கு, மறைந்த
லீ குவான் யூ முக்கிய காரணமாவார். அதனை அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களே, அவர் மறைந்த பின் நடந்த இறுதி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்கள்;
என்றும் கேள்விப்பட்டேன்.
'வடக்கு
வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டு, திராவிடக் கட்சிகள் 1967இல் ஆட்சியை பிடித்து, ஆண்டதன்
தொகுவிளைவாக, தமிழ்நாடானது, இந்தியாவில்
பணக்கார மாநிலங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
(“தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப்
பிடித்துவிட்டது. “ – ‘பணக்கார, ஏழை
மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!’
பிரவீண் சக்ரவர்த்தி- விவேக் தேஹேஜியா;
இன்று
வடக்கிலிருக்கும் ஏழைகள் எல்லாம், வேலைக்காக, தெற்கில்
இருக்கும் தமிழ்நாட்டை நோக்கி, 'படையெடுத்து வரும்' விபரீதம் அரங்கேறிவரும் அளவுக்கு,
தமிழ்நாடு பணக்கார மாநிலமாகி வருகிறது.
“தமிழ்நாட்டில் கட்டிட
வேலைகளுக்கும், மொத்த வியாபாரக்கடைகளில் மூட்டை
தூக்கும் வேலைகளுக்கும், கிராமங்களில் விவசாய வேலைகளுக்கும்,
வட நாட்டிலிருந்து 'தரகர்கள்' மூலம்
வருவிக்கும் பணியாட்கள் குறைந்த சம்பளத்தில் அதிக வேலை செய்து, தமிழர்கள் உடலுழைப்புத் துறையில் 'பதராகும்'
போக்கை வளர்த்து வருகிறர்கள். இந்த 'பதராகும்'
போக்கின் ஊடே, தமிழ்நாட்டில் தமிழர்களில் பலர் , எல்லா
வகையான தரகுப் பணிகளிலும் 'நிபுணர்களா'க செல்வம், செல்வாக்குடன்
வளர்ந்து வளர்கிறார்கள்.”;
தமிழ்நாட்டில்
வசதியில், வாய்ப்புகளில், சொத்துகளை
வாங்கி குவிப்பதில், யார் முன்னணியில் இருக்கிறார்கள்?
என்ற ஆய்வின் மூலமே, தமிழர்கள் தமிழ்நாட்டில் 'வளர்ந்து' வருகிறர்களா? 'வீழ்ந்து'
வருகிறார்களா? தமிழ்நாடு 'பணக்கார'(?)
நாடாகி வருவதற்கு காரணமான 'சமூக
செயல்நுட்பத்தில்'(?), தமிழர்கள் சீரழிந்து, இயற்கை வளங்களும் சீரழிந்து, தமிழ்வழிக்
கல்வியும் (எனவே தமிழும்) மரணப்படுக்கையில் உள்ளனவா? என்பது
தெளிவாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html)
இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில் தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html)
அறிவு உழைப்பிலும் உடல் உழைப்பிலும் தமிழர்கள் பதராகி வருவதைப் பற்றி கவலைப்படாமல், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டுக்காரர்களை வெளியேற்றி, தமிழ்நாட்டினரைப் பணியமர்த்துமாறு கோரிக்கை வைத்து பெ.மணியரசன், சீமான் போன்ற இன்னும் பல தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மேற்குறிப்பிட்ட சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூவின் விளக்கத்தைப் புரிந்து கொண்டு உரிய திருத்தங்களுடன் செயல்படுவது தான், அவர்களுக்கும் நல்லது; தமிழ்நாட்டிற்கும் நல்லது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகளில் வரும்
வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான பயிற்சி
வகுப்புகள், தமிழ்நாடெங்கும் இலவசமாகவும், வியாபார நோக்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே
தமிழர்களின் வேலைவாய்ப்புகளில் அக்கறையுள்ள கட்சிகள் எல்லாம் அவற்றையும், நடைபெறும் தேர்வுகளையும் கண்காணிக்கத் தொடங்கினால், தேர்வாளர்கள் பாரபட்ச போக்கில் செயல்பட அஞ்சுவார்கள். மீறி
செய்ல்படத் தொடங்கியவுடன், அவர்களை அடையாளம் கண்டு, தாமதமின்றி சட்டபூர்வமாக உரிய ஆதாரங்களுடன் எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், தவறு
செய்தவர்களைத் தண்டிக்கவும் முடியும்.
அதை விடுத்து,
தேர்வு முடிவுகள் வெளிவந்த பின், பாரபட்சம்
என்று கூக்குரலிடுவதால் என்ன பயன்?
மேற்குறிப்பிட்டவாறு
தமிழர்கள் தங்களின் தகுதி திறமைகளை வளர்த்து வேலைபெறும் வகையில் ஆக்கபூர்வமாக
உதவாத கட்சிகளும், தலைவர்களும், இருக்கிற
வேலைகளும் பறி போகிற வகையில் செயல்பட்டு வருகிறார்களா? என்ற
விவாதமும் அரங்கேற வேண்டும்.
அந்த விவாதத்தில், தமிழர்களைப் பதர்களாக்கி வரும் கீழ்வரும் சமூக செயல்நுட்பமும் இடம் பெற வேண்டும்.
அந்த விவாதத்தில், தமிழர்களைப் பதர்களாக்கி வரும் கீழ்வரும் சமூக செயல்நுட்பமும் இடம் பெற வேண்டும்.
சுமார் 10, 20, 30
வருடங்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சிப் பிழைத்தவர்களாக, அரசுப் பணியில்
லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு பணி
நீக்கத்திற்குள்ளானவர்களாக,
கூலி வேலை செய்தவர்களாக, அடியாளாக இருந்தவர்களெல்லாம், 'அரசியல்' பலத்துடன், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதிகளாக வலம்
வருவது;அந்த 'புதிய' பணக்காரர்களுக்கு திருமணம் உள்ளிட்ட குடும்ப
நிகழ்வுகளில் வி.ஐ.பி ஆக மதித்து கிடைக்கும் 'சமூக கெளரவம்' , அவர்கள் குடியிருக்கும் பல கோடி
ரூபாய்கள் மதிப்புள்ள வீடு, பயன்படுத்தும் அதிக விலையுள்ள கார் போன்றவை எல்லாம் 'வீரியமான சமூக
தொத்து நோய்க் கிருமிகளாக’ சமுகத்தை வேகமாகப் பாதித்து வருகின்றன.
இந்த தொத்து நோய் பரப்பு மையங்களாக , திருமணம்
உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் செயல்படுவதால், அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் அந்நோய்க்கு
இலக்காகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_23.html)
மேற்குறிப்பிட்ட வி.ஐ.பிக்களின் ஆதரவில் பயணிக்கும் கட்சிகளும் தலைவர்களும் 'வீரியமான சமூக தொத்து நோய்க் கிருமிகளாகி' தமிழர்களை பதர்களாக்கி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதால் தூத்துக்குடி சந்திக்கும் வேலைவாய்ப்புகள், வியாபாரங்கள் தொடர்பான இழப்புகள் பற்றி முகநூலில்

(https://www.facebook.com/Sreepriya.Iyer?hc_ref=ARS15XmzFFYPwOos6jRVc-3j3gvEn98FI9SXd7fyzgQDPF1XeumnaXTK1aUYPI36XKg&fref=nf ;Thanks to Kumar Kandasamy from Facebook) வெளிவந்துள்ள தகவல்கள் மிகவும் கவலைத்தர வல்லதாகும்.
ஸ்டெர்லைட்
ஆலையில் நேரடியாக பணியிழந்தவர்கள் மட்டுமின்றி, அந்த ஆலை மூலமாக பிழைத்து வந்த பல ஒப்பந்த
நிறுவனங்கள் துணையுடன் பிழைத்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின்
வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
ஸ்டெர்லைட்
போராட்டத்தை ஆதரித்த கட்சிகளும் தலைவர்களும், அந்த
ஆலை துவங்கப்பட்ட உடனே விழிப்புடன் செயல்பட்டிருந்தால், அந்த
ஆலை மூடப்பட்டு எண்ணிறந்த வேலை வாய்ப்புகள் பறி போகும் நிலை வந்திருக்குமா?
என்ற கேள்வியைக் கீழ்வரும் தகவல்கள் எழுப்புகின்றன.
ஜெயலலிதா
ஆட்சியில் 1995இல் 'மன்னார்
வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தூரம் தள்ளி தொழிற்சாலை அமைய,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவாக, சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான மதிப்பீடு செய்தே ஆக வேண்டும் என்று
அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது. 14.10.1996 - ல்
தி.மு.க. அரசுதான், அ.தி.மு.க. அரசு - மே 1995-ல் விதித்த விதிகளை ஒதுக்கி, மன்னார்
வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. தூரத்துக்குள் தொழிற்சாலை அமைய
TNPCB மூலம் அனுமதி அளித்தது.' முதல்
கோணல் இங்கு தான் தொடங்கியது.
மேற்குறிப்பிட்டவாறு
தி.மு.க அரசு அனுமதித்த பாதகத்தை எதிர்த்து, அன்று மேற்குறிப்பிட்ட கட்சிகளும் தலைவர்களும்
எதிர்த்துப் போராடியிருந்தால், அந்த பாதகம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
40,000 டன்
செப்பு தயாரிக்க முதலில் அனுமதி கொடுத்து செயல்பட்ட போதே, நோய்
பாதிப்புகள் வெளிப்பட தொடங்கியிருந்தும், பின்பு 4
லட்சம் டன் செப்பு தயாரிக்கும் ராட்சத நிறுவனமாக்கி, அதன் சுற்றுச்சூழல் மாசுபடும் சக்தியை 10 மடங்கு
தமிழகத்தில் தி.மு.க.வும், டெல்லியில் தி.மு.க. பங்கு பெற்ற
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தான் அதிகமாக்கியது.
மேற்குறிப்பிட்டவாறு
தி.மு.க. பங்கு பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதித்த பாதகத்தை
எதிர்த்து அன்று மேற்குறிப்பிட்ட கட்சிகளும் தலைவர்களும் எதிர்த்துப்
போராடியிருந்தால், அந்த பாதகம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
மேற்குறிப்பிட்ட
இரண்டு பாதகங்களும் தவிர்க்கப்பட்டிருந்தால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு எண்ணிறந்த
வேலைவாய்ப்புகள் பறி போகும் நிலை வந்திருக்குமா?
ஸ்டெர்லைட் ஆலை
மூடப்பட்டது தமிழ்நாட்டுக்கும் ஒரு பாடமாகும்;
ஊழல் வலையில்
சிக்கி, சுற்றுப்புற
சூழலை கெடுத்து வரும் பிற ஆலைகள் எல்லாம், ஊழல் செலவினத்தை குறைத்து, சரியான கழிவு
அகற்றல் தொழில்நுட்பத்தை அமுல்படுத்தி, போராட்டத்திற்கான 'நியாயங்கள்' எழுவதற்கு
இடமில்லாமல் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில்
செயல்பட்டு வரும் ஆலைகள் எல்லாம்,
'ஸ்டெர்லைட் பாணியில்' மூடப்பட்டு, லட்சக்கணக்கான
வேலைவாய்ப்புகளை இழந்து, தரகு/திருட்டு போன்ற தொழில்களின் ஆதிக்கத்தில், தமிழ்நாடு
சீரழிய இருக்கும் அபாயத்தை தடுக்க வேண்டும். (‘'ஸ்டெர்லைட் பாணியில்' செயல்படும் ஆலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கும்
அபாயத்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு?’;
தமிழ்நாட்டில்
ஊழலுக்கு தீனி போட்டு உரிய கழிவு நீக்கம் இன்றி செயல்பட்டு வரும் ஆலைகளை எல்லாம், வெளிநாட்டு நிதி
உதவியில் செயல்படும் என்.ஜி.ஒக்களின் தூண்டுதலில் போராட்டங்கள் வெடித்து 'ஸ்டெர்லைட்
பாணியில்' மூடப்படும்
அபாயம் இருக்கிறது. அவ்வாறு போராடப்போவதாக மிரட்டி, அந்த ஆலைகளின் அதிபர்களிடம் மாதாந்திர கட்டாய
நன்கொடை பெறும் அபாயமும் இருக்கிறது.
ஊழலை முளையிலேயே
கிள்ளி, உரிய
கழிவு நீக்கத்துடன் தமிழ்நாட்டில் ஆலைகள் செயல்படுவதும்,
உலக நாடுகளில்
ஒழுங்காக செயல்பட்டு வரும் மற்ற தாமிர ஆலைகளைப் போலவே.உரிய கழிவு நீக்கத்துடன்
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படுவதும்,
தமிழ்நாட்டில்
இருக்கிற வேலை வாய்ப்புகள் பறி போகாமலும், புதிய வேலை வாய்ப்புகள் விரைவில் உருவாகவும்
வழி வகுக்கும்.
ஆளும் கட்சியாக
இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலை பாதகமாக செயல்பட அனுமதித்து விட்டு, எதிர்க்கட்சியான
பின், ஸ்டெர்லைட்
ஆலையை மூடும் போராட்டத்தை ஆதரித்து,
தூத்துகுடி எம்.பியாக தேர்தலில் தி.மு.க வெற்றி
பெற்றுள்ளது; மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்களின் ஆதரவுடன்.
இப்படிப்பட்ட
கட்சிகளையும் தலைவர்களையும் ஓரங்கட்டாமல், தமிழ்நாடு தப்பிக்க முடியுமா? என்ற விவாதம்
சூடு பிடிக்கத் தொடங்கினால்,
சில கட்சிகளும்
தலைவர்களும் திருந்தி ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கத் தொடங்குவார்கள். திருந்த
முடியாதவர்கள் சமூகக்குப்பையாக ஒதுக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு
நிச்சயம் தப்பிக்கும்.
குறிப்பு:
1. 'பிரபாகரன், ஜெயலலிதா, கருணாநிதி, சசிகலா, ஸ்டாலின் போன்றவர்களால் ஊக்குவிக்கப்பட்ட சமூகப்புழுதிகளான மனிதர்கள்?'; https://tamilsdirection.blogspot.com/2020/04/blog-post_11.html
2. 'ஈ.வெ.ரா அண்ணாவிடம்; அண்ணா கருணாநிதியிடம்; கருணாநிதி எம்.ஜி.ஆரிடம்; எம்.ஜி.ஆர் பிரபாகரனிடம்; பிரபாகரன் சீமானிடம் எவ்வாறு ஏமாந்தார்கள்? பிம்ப வழிபாட்டில் இருந்து தமிழ்நாடு விடுபடுமா?'; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_2.html
3. 'எதிரியாக தமது வலிமையை தமது எதிரிக்குத் 'தானம்' செய்து,
தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும்'; https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_8.html

No comments:
Post a Comment