எதிரியாக தமது வலிமையை தமது
எதிரிக்குத் 'தானம்' செய்து,
தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் (1)
இலங்கை தேர்தல்
முடிவுகள் மூலமாக, இலங்கை அரசானது ராஜபட்சேயின் குடும்ப ஆட்சியில் வலிமையாக சிக்கி
விட்டது.
மோடியின்
ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி பலகீனமாகி வருவது
இந்தியாவிற்கு நல்லதல்ல, என்று அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளார். அவ்வாறு இந்தியா பயணிக்கக்கூடாத திசையில், இப்போது இலங்கை
பயணிக்கத் தொடங்கியுள்ளது.
ராஜபட்சே
குடும்பமானது தங்களின் 2005 தேர்தல் வெற்றிக்கு பிரபாகரனுக்கும், 2020 தேர்தல்
பிரமாண்ட வெற்றிக்கு நாடு கடந்த தமிழிழ
அரசு உள்ளிட்ட விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கும், வெளியில்
தெரியாமல் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தால், அதில் வியப்பில்லை.
இலங்கையில் 2005
தேர்தலில் ராஜபட்சே தோற்றிருந்தால்,
முள்ளிவாய்க்கால் அழிவு நடந்திருக்குமா? என்பது
கேள்விக்குறியே.
இலங்கையில் 2005 தேர்தலில், ஈழத்தமிழர்களை
வாக்களிக்க விடாமல் பிரபாகரன் தடுத்ததே, மயிரிழையில் ராஜபட்சே வெற்றி பெறவும், ரணில்
விக்கிரமசிங்கே தோற்கவும் முக்கிய காரணமானது.
In 2005 elections, the main candidates for the election, which was held
in November, were UNF candidate former Prime Minister Ranil Wickremasinghe, who
advocated the reopening of talks with the LTTE, and the UPFA candidate Prime
Minister Rajapaksa, who called for a tougher line against the LTTE and a
renegotiation of the cease-fire. The LTTE openly called for a boycott of the
election by Tamils. Many of them were expected to vote for Wickremasinghe, and
the loss of their votes proved fatal to his chances, as Rajapakse achieved a
narrow victory.
A large number of the minority Tamil population in the Northern and
Eastern parts of the country, who were largely expected to back Wickremesinghe
were prevented from voting by the extremist LTTE, which had enforced a boycott
of the polls.
இந்திய
இராணுவத்தை எதிர்க்க, பிரேமதேசாவிடமிருந்து பிரபாகரன் ஆயுதம் பெற்றதாக உலவிய வதந்தியைப்
போலவே, 2005 தேர்தலில் ராஜபட்சேயிடமிருந்து பெரும் தொகையைப் பெற்று, தமிழர்களை
வாக்களிக்க வேண்டாம், என்று ஆணையிட்டதாகவும் வதந்திகள் உண்டு.
2005 தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற
ராஜபட்சே, சமாதானப்
பேச்சு வார்த்தைக்கு அழைத்ததையும் பிரபாகரன் நிராகரித்துள்ளார்.
(Rajapaksa invited the
Tigers to a new round of talks, but amid mounting violence they withdrew;
சார்பற்ற (objective)
முறையில் செயல்பட வேண்டிய 'சமூக நேர்மை வழிகாட்டியை' (Social Ethical Compass), ஒரு தலைவர் தமது
சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் திருத்தி பயணிப்பதானது, எவ்வளவு சமூகக்
கேடாக அமையும்? என்ற ஆராய்ச்சிக்கு உதவும் நபராக பிரபாகரன் வெளிப்பட்டுள்ளார்.
ஈழவிடுதலைக்கான
ஆயுதப் போராட்டத்தினைத் தூண்டும் வகையில், 1974-இல்
யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, இலங்கை
அரசின் அடக்குமுறைக்கு உள்ளானது. காவல்துறை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50
பேர்கள் காயமுற்றனர்.
மேற்குறிப்பிட்ட
மாநாட்டை எதிர்த்து இலங்கை அரசின் நிலைப்பாட்டினை ஆதரித்தவர் புகழ் பெற்ற தமிழ்ப்புலமையாளர்
கார்த்திகேசு சிவத்தம்பி. எனவே ஈழ விடுதலைக்கு எதிரான துரோகிகளின் பட்டியலில்
முதல் இடம் பெறும் தகுதி அவருக்கு உண்டு.
ஆனால் பிரபாகரன்
சாகும் வரை, பிரபாகரனால் மிகவும் மதிக்கப்பட்டு,
தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களின் அரவணைப்பில் காலத்தைக் கழித்தவர்
கார்த்திகேசு சிவத்தம்பி. அவ்வாறு 'வாழ்வியல்
புத்திசாலியாக' அவர் வாழ்ந்த சமூக செயல்நுட்பத்தினைக்
கீழ்வரும் தகவல் மூலமாக, நான் கண்டுபிடித்தேன்.
இலங்கை அதிபர்
சிறிமாவோ பண்டாரநாயகா எதிர்த்த, 1974இல்
யாழ்ப்பாணத்தில் நடந்த 4 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணித்த
'வாழ்வியல் புத்திசாலியாக வாழ்ந்த' அவர், பின் விடுதலைப் புலி பிரபாகரன் கை
ஓங்கிய காலத்தில், திருச்சி கே.கே.நகரில் வாழ்ந்த
பிரபாகரனின் பெற்றோர்களை தரிசித்து, விடுதலைப்
புலிகளின் ஆதரவாளராக 'ஞானஸ்நானம்' பெற்றார்.
பின் முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின் தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி தமக்கு
ஒத்து வராத உலகத்தமிழ் மாநாட்டு அமைப்பினை செல்லாக்காசாக்கி, புதிய அமைப்பின் மூலம், 2010 சூனில்
கோவையில் செம்மொழி மாநாடு நடத்த துணை போனார். பின் 2010
டிசம்பரில்இல் கொலும்பில் நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை, தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து அவர்
எதிர்த்தார்.
சிவத்தம்பி தமது
வாழ்நாளில் தமிழுக்காகவோ, தமிழர்களுக்காகவோ எந்த போராட்டத்திலும்
கலந்து கொள்ளாமல், 1974 யாழ்ப்பாண உலகத்தமிழ் ஆராய்ச்சி
மாநாட்டினைக் கெடுக்க சிறிமா பாண்டாரநாயகவிற்கு துணை நின்றவர். ஆனாலும் பிரபாகரன்,
தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்டு அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு
நெருக்கமாக பயணித்தவர் அவர்.
பிரபாகரன் உள்ளிட்ட
விடுதலைப்புலி இயக்கத்தை உருவாக்கிய 'பொடியன்களுக்கு'
தமது இல்லத்தில் இரகசியமாகப் பதுங்க அவ்வப்போது அடைக்கலம் கொடுத்து,
ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஆதரித்தவர்கள் பேரா.நித்தியானந்தமும்
பேரா.நிர்மலா நித்தியானந்தமும் ஆவார்கள்.
ஆனால் கார்த்திகேசு சிவத்தம்பியைப் போல 'வாழ்வியல் புத்திசாலியாக' வாழத்
தெரியாதவர்கள் அவர்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு பிரபாகரன் புரிந்த 'செய்நன்றிக்
கடனை' ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
1944இல்
'பெரியார்' ஈ.வெ.ரா
திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா?
என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:
தனது
வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய
காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம்,
நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம், என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல்,
பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம்
இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா,
திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை
ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில்
கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும்
நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று
நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது,
சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம்
சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக
'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் இசை
ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன்.
நிர்மலாவின்
தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின்
நிறுவனருமான, பேரா.முனைவர்.ரஜனி
திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து,
21 செப்டம்பர் 1989இல்
' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து
சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama
& Rajini Rajasingham
Thiranagama : Unforgettable Symbol of Sri Lanka’s Tamil Tragedy By D.B.S. Jeyaraj; http://dbsjeyaraj.com/dbsj/archives/33112
பின் பல வருடம்
கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?'
என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது." " There is a state
government of its own there. There are political parties. The state is
prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do
so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த
, ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில்
மறைந்தார்.
சர்வதேச சமாதான முயற்சிகள் பிரபாகரனின்
புரிதலின்மை காரணமாகவே பலனளிக்கவில்லை. பாலசிங்கத்தின் முயற்சியும் பிரபாகரனிடம்
எடுபடவில்லை.
Erik Solheim, during my interview, stated that Anton Balasingham
was an educated man who understood the value of federalism. This is clearly
witnessed when Anton Balasingham, after Neelan Tiruchelvam’s killing, praised
the original GL-Neelan package as workable and expressed regret over the missed
opportunity for the LTTE to negotiate with the proposal. This is something
Prabhakran never did. Solheim, furthermore, stated that arguments between
Prabhakran and Balasingham were very common due to Prabhakaran’s narrow vision
of the separatist ideology. If Prabhakaran had been directly educated on the
principles and benefits of federalism, it could have paved the way for him to
being more open to constitutional reforms as solution to the conflict.
(https://www.colombotelegraph.com/index.php/it-was-wrong-to-label-the-ltte-as-a-terrorist-organization/)
ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலேக் குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ அந்த பயணத்தின் முடிவில் அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது.
(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html)
பிரபாகரனும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் அவர்கள் தேர்ந்தெடுத்து பயணித்த பாதைகளின் விளைவிற்கு பிறர் மீது பழி போட்டு தப்பிக்க முடியாது.
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' புறநானூறு 192:2
ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலேக் குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ அந்த பயணத்தின் முடிவில் அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது.
(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html)
பிரபாகரனும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் அவர்கள் தேர்ந்தெடுத்து பயணித்த பாதைகளின் விளைவிற்கு பிறர் மீது பழி போட்டு தப்பிக்க முடியாது.
முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின், ‘நாடு கடந்த தமிழிழ அரசு’ போன்ற அரசியல் தற்கொலைப்பாதையில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பயணித்ததானது, 2020 தேர்தலில் ராஜபட்சே குடும்பம் வெற்றி பெற எந்த அளவுக்குப் பங்களித்தது? என்ற ஆராய்ச்சிக்கு, கீழ்வரும் பதிவும் உதவக்கூடும்.
‘ஈ.வெ.ரா மற்றும் லெனின் வழியில் ராஜபட்சேயுடன்
சமரசமாவதே, ஈழத்தமிழர்களுக்குள்ள
புத்திசாலித்தனமான ஒரே வழியாகும்;
'ஜுஜுட்சு'
(Jujutsu; ‘manipulating the
opponent's force against themselves rather than confronting it with one's own
force.’; https://en.wikipedia.org/wiki/Jujutsu) சண்டையில், எதிரியின்
வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி
பெறுவர்.
பிரபாகரன்
மற்றும் அவரின் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் மூலமாக, எதிரியே தனது வலிமையை 'தானம்'
செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' இலங்கையில்
அரங்கேறியுள்ளது.
‘'தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும், 1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.
முள்ளி வாய்க்கால் அழிவு மட்டுமின்றி, 'TELO, PLOTE, EPRLF ' உள்ளிட்ட இன்னும் பல குழுக்களின், ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட எண்ணற்ற போராளிகளின் மரணங்கள், அச்சுறுத்தல் மூலமாக போராளியான சிறுவர்களின், இளம் பெண்களின் மரணங்கள், போன்றவற்றின் சாபங்கள் உள்ளிட்ட இயற்கையின் சாபத்தில் இருந்தும், ஈழ விடுதலை மூலமாக தமிழ்நாட்டில் உருவான அதிவேக புதுப்பணக்காரக் குடும்பங்களும் தப்பிக்க முடியுமா? அனுபவிக்கத் தொடங்கியுள்ள தண்டனைகளை செல்வாக்கின் மூலமாக மறைத்து வருவதும் நீண்ட காலம் நீடிக்குமா?
‘'தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும், 1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.
TELO, PLOTE, EPRLF ஆகிய
குழுக்களின் தலைவர்களையும், போராளிகளையும், ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளை கண்டிக்காமல், விடுதலைப்புலிகளின்
ஆதரவாளர்களாக பயணித்த, அந்த குழுக்களின், தமிழ்நாட்டு ஆதரவாளர்களுக்கும், ஜெயலலிதாவை காலில் விழுந்து வணங்கி, பின்
ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை/மரணம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சசிகலாவின்
காலில் விழுந்து வணங்கியவர்களுக்கும், வேறுபாடு உண்டா? அந்த சமூக செயல்நுட்பத்திலிருந்து விடுதலை
ஆகாமல், தமிழ்நாட்டிற்கு
மீட்சி உண்டா?’
(‘'முள்ளும் மலரும்' ரஜினியிடம்
கேட்ட கேள்வி; அப்படி கூட எவரும் கேட்காத நிலையில், இன்றும் தமிழ்நாடு நீடிக்கிறதா?’;
தமிழ்நாட்டில்
ஏரிகள், ஆறுகள், மலைகள் காடுகள்
உள்ளிட்ட கனி வளங்களையும், கொலை, அச்சுறுத்தல் மூலமாக தனியார்ச் சொத்துக்களையும் ஊழல் பேராசையில்
அபகரித்து வாழும் குடும்பங்களைப் போலவே,
முள்ளி வாய்க்கால் அழிவு மட்டுமின்றி, 'TELO, PLOTE, EPRLF ' உள்ளிட்ட இன்னும் பல குழுக்களின், ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட எண்ணற்ற போராளிகளின் மரணங்கள், அச்சுறுத்தல் மூலமாக போராளியான சிறுவர்களின், இளம் பெண்களின் மரணங்கள், போன்றவற்றின் சாபங்கள் உள்ளிட்ட இயற்கையின் சாபத்தில் இருந்தும், ஈழ விடுதலை மூலமாக தமிழ்நாட்டில் உருவான அதிவேக புதுப்பணக்காரக் குடும்பங்களும் தப்பிக்க முடியுமா? அனுபவிக்கத் தொடங்கியுள்ள தண்டனைகளை செல்வாக்கின் மூலமாக மறைத்து வருவதும் நீண்ட காலம் நீடிக்குமா?
யாராயிருந்தாலும், தாங்கள் தேர்ந்தெடுத்த திசையில் பயணித்தவர்கள் எல்லாம், முடிவில்
அதற்கான நன்மை, தீமைகளை இயற்கையின் போக்கில் அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது.
தமிழ்நாட்டில்
இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ளவர்களில் பலர், பிரபாகரனைப் போலவே, தம்மை அதிபுத்திசாலியாகக் கருதிக்
கொண்டு,
சார்பற்ற (objective)
முறையில் செயல்பட வேண்டிய 'சமூக நேர்மை
வழிகாட்டியை' (Social Ethical Compass), தமது சொந்த விருப்பு
வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் திருத்தி, தமிழ்நாட்டை தமது செல்வாக்கில் கொண்டு வர
எவ்வாறு போட்டி போட்டு வருகிறார்கள்? என்பதை அடுத்தப்
பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment