அழுகிய கழகங்களால் அழுகும் தமிழக பா.ஜ.க (3)
2014இல் மோடி பிரதமரானது இந்தியாவிற்கு
நல்லதாகவும்,
தமிழ்நாட்டிற்குக் கெடுதலாகவும் ?
'அதிகம் படித்த
ராஜாஜி 1937இல் இந்தியைக் கட்டாயமாக்கி, பிரிவினை கோரிக்கை தமிழ்நாட்டில் வெளிப்பட வழி செய்தார். பின் இந்திய
விடுதலைக்கு முன், அதே பிரிவினை கோரிக்கையை ராஜாஜி
ஆதரித்தார். இன்னும் மோசமாக, 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
மூலமாக, மாணவர்கள் பங்கேற்று பொதுச்சொத்துக்களுக்கும்
பொதுமக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போக்கு முதன் முதலாக வெளிப்பட்டது. அதுவும்
அண்ணாவுடன் சேர்ந்து ராஜாஜி தூண்டிய போராட்டமாகும். அதன் தொகுவிளைவாக, 'தமிழர்' உட்குழுவாக, 'இந்தியர்'
வெளிக்குழுவாகவும் வெளிப்பட நேர்ந்தது.
பொதுவாக இந்தியாவின்
போக்குகளில் இந்தியாவின் பன்முகத்தன்மை வெளிப்படுவதைப் புரிந்து கொள்வதில் உள்ள
சிரமங்களைத் தவிர்த்து, மையப்படுத்தப்பட்ட ஒரு சீரான
குறிப்பாயத்தில் (centralized
homogenous paradigm) அணுகுவதே தேசியக்கட்சிகளின் அணுகுமுறையாக
இருந்து வந்துள்ளது. அதுவே சுதந்திர இந்தியாவில் பிரிவினைப் போக்குகள் வளர முக்கிய
காரணமானது.
2014இல்
மோடி பிரதமரானது இந்தியாவிற்கு நல்லதாகவும் தமிழ்நாட்டிற்குக் கெடுதலாகவும் மாறி
வருகிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், கீழ்வரும்
தகவலை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.
இந்திராகாந்தியின்
நெருக்கடி கால ஆட்சியானது, இந்தியாவிற்குக் கெடுதலாகவும், தமிழ்நாட்டை திராவிட ஊழலில் இருந்து மீட்டு, தேசிய
நீரோட்டத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்பாகவும் வெளிப்பட்டது.
'தனித்தமிழ்நாடு'
போதையில் தி.மு.கவை ஆதரித்த தி.க மற்றும் தி.மு.கவின் முக்கிய
புள்ளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிலிருந்து தப்பிக்க தி.மு.கவில் பல முக்கிய
புள்ளிகள் தி.மு.கவை விட்டு விலகினார்கள்.
அடுத்து வந்த
பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவில் மோசமான தோல்வியைத் தழுவிய
இந்திரா காங்கிரஸ் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றது.
மேற்குறிப்பிட்ட
வெற்றியின் பின்னணிக்கு, கீழ்வரும் தமிழ்நாட்டின் தனித்துவப் போக்கு (Unique)
முக்கிய காரணமாகும்.
நேரு குடும்ப
சுயநல அரசியல் ஆதிக்கத்தில் வெளிச்சத்திற்கு வராமல், இருட்டில்
இருந்தவையெல்லாம், மோடி பிரதமரான பின், வெளிவரத் தொடங்கியுள்ளதா? என்பது
ஆய்விற்குரியதாகும். அந்த போக்கில், இந்திரா
காந்தியின் கணவரான பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில்
வெளிவந்துள்ளது.
‘Feroze The Forgotten Gandhi’
(by Bertil Falk ) புத்தகத்தில்
இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற
தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை
அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.
அவ்வாறு ஊழல்
களங்கத்துடன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த
காலக் கட்டத்தில்;
இந்தியா விடுதலை
ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில்
ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது
கவனத்தை ஈர்த்தது.
அவ்வாறு இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப் பின்னும், தமிழ்நாட்டில்
முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித்
தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில்
காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்தது.
இந்திய
விடுதலைக்கு முன், காங்கிரசில் தமிழ்நாட்டில் இருந்த
பெரும்பாலான யோக்கியர்கள் வெளியேறி நீதிக்கட்சியை ஆரம்பித்தார்கள். நீதிக்கட்சி
ஆட்சியில் யோக்கியமான பிராமணர்களும் அமைச்சர்களாக இருந்தார்கள். ஊழலற்ற அந்த
ஆட்சியில் பல சமூக சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தன.
எனவே அதே
போக்கில், 1967 வரை இந்தியாவில் இருந்து தனித்துவமாக
ஊழலற்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. காங்கிரசிலும் தமிழ்நாட்டு காங்கிரஸ்
யோக்கியர்கள் மிகுந்த கட்சியாக இருந்தது. நெருக்கடி காலத்தில், காமராஜர் மறைவிற்குப் பின், கருப்பையா
மூப்பனார் உள்ளிட்டவர்கள் சேர்ந்த இந்திரா காங்கிரசும் யோக்கியர்களின் கட்சியாக
இருந்தது. கருணாநிதி குடும்பத்துடனும், சசிகலா நடராஜன்
குடும்பத்துடன் நேசமான தலைவர்களைக் கொண்ட இன்றைய தமிழ்நாட்டு பா.ஜ.கவைப் போல இன்றி,
நெருக்கடி காலத்தில் இந்திரா காங்கிரஸ் யோக்கியமான தலைவர்களால் வழி நடத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்ட
பின்னணியில் தான், நெருக்கடி காலம் முடிந்து நடந்த
பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவில் மோசமான தோல்வியைத் தழுவிய
இந்திரா காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஈட்டிய பெரிய வெற்றியைப் புரிந்து கொள்ள முடியும்.
அதைத் தொடர்ந்து
சர்க்காரியா கமிசன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாடானது, ராஜாஜியால்
ஏற்பட்ட பிரிவினை பாதிப்பில் இருந்து மீண்டு, தேசிய நீரோட்டத்தில் சேர்ந்து ஊழல் கொடுமைகளில்
இருந்து தப்பித்திருக்கும். இந்திராகாந்தி கருணாநிதியுடன் சமரசமாகி, சர்க்காரியா
கமிசன் வழக்கை வாபஸ் பெற்றதன் மூலமாக, இன்னும் மோசமான ஊழல் ஆட்சிகளில் தமிழ்நாடு
சிக்க நேர்ந்தது.
மோடி குஜராத்
முதல்வராகி, அடுத்து வந்த சட்டசபை பொதுத்தேர்தலில்,
விஸ்வ இந்த் பாரிசத் உள்ளிட்ட இந்துத்வா ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர்
மோடியை தேர்தலில் தோற்கடிக்க முயற்சித்தது, எனது
கவனத்தினை 2005 முதல் ஈர்த்தது. அன்று முதல் சாதி, மத பாரபட்சமற்ற,
ஊழலற்ற வளர்ச்சி நோக்கிய திசையில் மோடி பயணிப்பதை ஆதரித்தும்,
அதில் வெளிப்படும் சறுக்கல்களை சுட்டிக்காட்டியும் நான் பயணித்து
வருகிறேன்.
2014 இல்
தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டு வந்த மோடியைத் தவறாக வழி நடத்தி, சினிமா
நடிகர்களைச் சந்திக்க வைத்ததும், தமிழக பா.ஜ.க தலைவர்கள்
மு.க.அழகிரியைத் தேடிச் சென்று ஆதரவு கேட்டதும், கெட்ட
சகுன அறிகுறிகளாகவே வெளிப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, கருணாநிதி
குடும்பத்துடனும், சசிகலா நடராஜன் குடும்பத்துடன் நேசமாக
தமிழக பா.ஜ.க தலைவர்கள் பயணித்ததாலேயே, கீழ்வரும்
வரலாற்று அவமானத்திற்கு தமிழ்நாடு உள்ளானது. கீழ்வருவது பற்றிய புரிதல் இன்றி,
அதனை விளங்கிக் கொள்ள முடியாது.
கர்நாடக
பா.ஜ.கவைப் போலின்றி தமிழக பா.ஜ.க எவ்வாறு 'நோஞ்சான்
கட்சியாக' பயணிக்கிறது?
இன்று தமிழக
பா.ஜ.கவானது, கர்நாடக பா.ஜ.கவைப் போல வலிமையுடன்
இருந்து, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தலையெடுக்கும்
யோக்கியதை இருந்திருக்குமானால், தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும்
சசிகலா - நடராஜன் குடும்பங்களுக்கு நெருக்கமாகி தமிழக பா.ஜ.க தலைவர்கள்
பயணித்திருப்பார்களா? முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
சங்கமமாகியிருப்பார்களா?
2014 முதல்
மோடி பிரதமராக ஆட்சி செய்து வருகிறாரே. தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க பிரமுகர்கள்
மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், நடந்த ஊழல் ஒழிப்பு சோதனைகளும் என்ன
ஆயிற்று? என்பதைப் பற்றி மூச்சு விடாமல், திராவிட ஊழல்களைப் பற்றி புள்ளி விபரங்களுடன் மோடி ஆதரவாளர்கள் சமூக
வலை தளங்களில் பரப்புரை செய்வது கோமாளித்தனம் ஆகாதா?
தமிழ்நாட்டில்
சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள நிலைமைகளை உணரும் சமூக உணர்விகள் (Social
Sensors), மற்றும் மென்சக்தி (Soft Power), எவ்வளவு பலகீனமாக உள்ளது?
இக்குறைபாடுகளின் வளர்ச்சியில் ஊழலுக்கு என்ன தொடர்புள்ளது? என்பது போன்ற கேள்விகளில் உரிய கவனம் செலுத்தாமல், 2014-இல் பிரதமரான மோடி ஆட்சி செய்து வருவதில் உள்ள குறைபாடுகளை ஏற்கனவே
விளக்கியுள்ளேன்.
என்னைப் போலவே,
மோடியின் ஆதரவாளராகப் பயணித்து வரும் சிலரிடம் கீழ்வரும் ஐயத்தை
எழுப்பினேன்.
ஜெயலலிதாவின்
உயிருக்கே ஆபத்தானவர்கள் என்று ஊடக வெளிச்சத்துடன் ஜெயலலிதாவால் குற்றம்
சாட்டப்பட்டவர்களின் பொறுப்பில் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் கூட பார்க்க முடியாத
வகையில், அப்பொல்லோவில் மர்மமான முறையில் பல மாதங்கள்
சிகிச்சையில் மர்மமாக இறந்தார் ஜெயலலிதா. அதே குற்றவாளிகள் ஜெயலலிதாவின் ரத்த
சொந்தமின்றி ராஜாஜி ஹாலில் நேரடி ஒளிபரப்பில் ஜெயலலிதாவின் உடலைச்சுற்றி
இருந்தார்கள். பின் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள சடங்கு சம்பிரதாயங்களை மீறி,
இறுதிச்சடங்கினை அனைத்து இந்திய பிரபலங்களின் முன்னிலையில்
நிகழ்த்தினார்கள்.
மன்மோகன் சிங்
மட்டுமின்றி, தேவகவுடா போன்ற பலகீனமான ஆட்சிகளில்
கூட, மேற்குறிப்பிட்ட அவமானம் தமிழ்நாட்டிற்கு
நேர்ந்திருக்காது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமான இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு கட்சிகள் எல்லாம் சசிகலா குடும்ப அரசியலுக்கு ஒத்துழைத்த போக்கானது, மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆட்சிகளில் வெளிப்பட்டிருக்காது. அந்த ஒத்துழைப்பு இன்றி, ஜெயலலிதாவின் பல மாதங்களிலான மர்மமான மருத்துவ சிகிச்சையும் மர்மமான மரணமும் நிகழ்ந்திருக்காது. கருணாநிதி காலத்திலேயே பிரிவினை சக்திகள் அவரை விட்டு விலகி, நடராஜனிடம் சரணடைந்தனர். எனவே கருணாநிதி குடும்ப அரசியலை விட, மிகவும் ஆபத்தான அதிக வலிமையுள்ளது சசிகலா குடும்ப அரசியல். கருணாநிதியின் மறைவிற்குப் பின், ஸ்டாலின் - உதயநிதி தலைமையில் தி.மு.க 'சோளக்கொல்லை பொம்மை'யாக மாறத் தொடங்கி விட்டது.
இந்திராகாந்தி பிரதமராக இருந்திருந்தால், மர்மமான முறையில் அப்பொல்லோவில் ஜெயலலிதாவைச் சேர்த்தவுடன், கீழ்வருவதைத் தான் செய்திருப்பார்.

ஜெயலலிதா
குணமானவுடன் மீண்டும் முதல்வராவார் என்று இந்திராகாந்தி அறிவித்து, சட்டசபையை 'suspend' செய்து, ஆளுநர்
ஆட்சியை அமுலாக்கி, ஜெயலலிதாவின் சிகிச்சையை தமது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பார். தடை செய்பவர்களை சிறையில் தள்ளி 'தகுந்த பாடம்' புகட்டி இருப்பார். ஜெயலலிதாவின்
மறைவிற்குப்பின், தமிழ்நாடானது அத்தகைய துணிச்சலை வெளிப்படுத்திய பிரதமரின் மூலமாக
தேசிய நீரோட்டத்தில் சேர்ந்திருக்கும்.
2014 தேர்தலில் தமக்கு தமிழ்நாட்டில் வெளிப்பட்ட ஆதரவு பலத்தினை மேற்குறிப்பிட்ட ஜெயலலிதாவின் மர்ம மருத்துவ சிகிச்சைப் போக்கிற்கு ஆதரவாகச் செலவழித்து, மத்தியில் தமது ஆட்சியின் வலிமையை தமிழ்நாட்டு மக்களின் கேலிக்குள்ளாக்கிய மோடியின் ஆட்சியினால் தான், அத்தகைய வரலாற்று அவமானம் தமிழ்நாட்டுக்கு நேர்ந்தது, ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாக்கட்சியானதற்கும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கட்சிகளையும் படுதோல்வி அடைய வைத்ததற்கும் அதுவே முக்கிய காரணமாகும்.
மேற்குறிப்பிட்ட யூகம் சரி என்றே நானும் எனக்கு தெரிந்த மோடி ஆதரவாளர்களும் உடன்படுகிறோம். சந்தேகம் இருந்தால், உங்களுக்கு தெரிந்த, படித்த பிராமணரல்லாத கட்சி சார்பற்றவர்களிடம் உரையாடி உண்மையை அறியலாம்.

மேற்குறிப்பிட்டது
சரி என்றால், சசிகலா பற்றி அவ்வப்போது ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மூலமாக, அந்த ஆழமான 'சமூக
ஊமைக்காயமானது' அவ்வப்போது வலிவு பெற்றும் வருகிறது.
தமிழ்நாட்டில் ஊடக செல்வாக்கு உள்ள மேக்ரோஉலகமானது, சாமான்யர்கள் வாழும் மைக்ரோஉல்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால்
தமிழ்நாட்டில் ஊடக செல்வாக்கு உள்ள மேக்ரோஉலகமானது, சாமான்யர்கள் வாழும் மைக்ரோஉல்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால்
(https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none.html),
அந்த 'சமூக ஊமைக்காயமானது' ஊடகங்களின் இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில், சாமான்யர்களின் குறிப்பாக கிராம மக்களின், இதயத்தில் இடம் பெற்ற கடைசித் தலைவர் ஜெயலலிதா ஆவார். அதைப் புரிந்தவர்களுக்கு மட்டுமே, ஜெயலலிதாவின் மர்ம மரணம் மற்றும் இறுதிச்சடங்கு தொடர்பான 'சமூக ஊமைக்காயத்தின்' ஆழம் புரியும்.
தமிழக மக்களின் நாடித்துடிப்புகளில் இருந்து அந்நியமாகி, மேல் மட்டத்தில் இருந்து கொண்டு, 'சமூக தொகுவிசைகளாக' (Social Resultant Forces) வெளிப்படும் 'மடியில் கனம் உள்ள தலைவர்கள் மூலமாக, தமிழ்நாட்டை கையாண்ட/கையாளும் போக்கானது, தேசக்கட்டுமானத்தினை (Nation Building) மீள்வதற்கு வழியின்றி (irreversible) சீர்குலைக்கும் ஆபத்தில் முடியும்.

நல்லதாகவும் தமிழ்நாட்டிற்குக் கெடுதலாகவும் மாறி வருகிறது. பாரபட்சமற்ற ஊழல்
ஒழிப்பு முயற்சிகள் எந்த அளவுக்கு தாமதமாகிறதோ, அந்த அளவுக்கு தமிழ்நாடானது 'சமூக
காங்கிரீனாக' வளர்ந்து விடும். (‘மோடியின் ஆட்சியில் இந்தியாவின் ‘சமூக காங்கிரீனாக’ மாறி வரும்
தமிழ்நாடு’;
https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html)
ஸ்டாலின் - உதயநிதி தலைமையில் தி.மு.க 'சோளக்கொல்லை பொம்மை'யாக மாறத் தொடங்கியுள்ள நிலையில், மோடி ஆட்சியின் துணிச்சலில் இந்துத்வா ஆதரவு முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்' உருவாகி, பிரிவினை சக்திகளை வலிமையாக்கும் முகவர்களாக (agents) செயல்பட்டு வரும் நிலையில் (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html),
தி.மு.க குடும்ப அரசியலை மட்டுமே எதிர்ப்பதன் மூலமாக, ‘சமூக காங்கிரீன்' போக்கானது மீட்சி எல்லையைத் தாண்டும் அபாயத்தை நெருங்குகிறது.

அது மீட்சி
எல்லையைத் தாண்டி விடுமானால், தமிழ்நாடானது இந்தியாவில் இருந்து, மென்சக்தியின் (soft power) வலிமையில் 'de facto' ஆக
துண்டிக்கப்படும். அது சர்வதேச அரசியல் போக்குகளைப் பொறுத்தே, வரும்
காலத்தில் ‘de jure’ சட்டபூர்வமாகும்.
No comments:
Post a Comment