Saturday, August 15, 2020


ரசனையில் மெலடியின் மீட்சியும்,'நோஞ்சான் நோயில்' இருந்து தமிழ்ப்புலமையின் மீட்சியும்,

உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும் நேராத அவலத்தில் இருந்து தமிழின் மீட்சியும்,


சாத்தியமாகும் காலம் நெருங்கி விட்டது



கி.பி ஆம் நூற்றாண்டில்சீன மொழி நூல்களில் இருந்த அறிவைஜப்பானிய மொழியில் இறக்குமதி செய்யபுத்த துறவிகள் உருவாக்கிய 'கடகானாஎழுத்து முறையை வளர்த்து வந்த போக்கில் தான்ஜப்பான் இன்று உலகே வியக்கும் வகையில் வளர்ந்த நாடாக விளங்குகிறது. எனவே 'கடகானாமூலம் விழித்த ஜப்பானியர்களைப் போலவே, 'கிரந்தமூலமாக‌ தமிழர்கள் விழிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.
(https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_5.html)

1944-இல் தி.க தோன்றி, அதன் தொடர் விளைவாக 1967 முதல் 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கியதற்கு 'விலையாக', தனித்தமிழ் ஆர்வலர்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு வளர்ந்தது? அவர்களால் வெறுக்கப்பட்ட எந்தெந்த சொற்கள் திரைப்படப் பாடல்களில் இடம் பெற்றன? அதன் காரணமாக, அவர்களின் மற்றும் அவர்களின் செல்வாக்குகளில் சிக்கியவர்களின் ரசனையானது, எந்த அளவுக்கு திரைப்படப்பாடல்களின் ரசனைக்கு எதிரான திசையில் பயணித்தது

திராவிடக்கட்சிகளின் ஆட்சி காலத்தில், ’ வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில்', மற்றும் அதே பாணியில் பயணித்த பிற இசை அமைப்பாளர்களின் பங்களிப்பில்,  தமிங்கிலீசில்' 'டேக் இட் ஈசி பாலிசியில்எவ்வாறு தமிழ்த்திரைப்படப்பாடல்கள் சிக்க வழி வகுத்தது? அது எந்த அளவுக்கு மெலடிப்பாடல்களின் வீழ்ச்சிக்குக் காரணமானது? என்ற ஆய்வுகளில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தேவையானவற்றை, இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழில் பிற‌மொழிச் சொற்களை இறக்குமதி செய்ய இரண்டு வழிகள் உள்ளன.

(1) பொருள் சிதைவுக்கு இடமில்லாத ஒலிப்பியல் இறக்குமதி (Phonetic import);

(2) பொருள் சிதைவு அபாயமுள்ள பொருள் மொழிபெயர்ப்பு (semantic import)

ஜப்பானிய மொழியில் பிறமொழிச் சொற்களை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், உள்ளிட்ட துறைகளில், இறக்குமதி செய்ய ஒலிப்பியல் முறையையே பின்பற்றுகிறார்கள்.

தொல்காப்பிய  'ஒரீஇ' முறையானது, எவ்வாறு உலக மொழிகளுக்கான பிறமொழிச்சொற்கள் ஒலிப்பியல்  இறக்குமதிக்கான இலக்கணம் ஆகும்? (To import the technical words from the foreign languages, the 'orIi' process of tholkAppiam may prove to be an objective, language independent linguistic phonetic process, that could be adopted in all world languages.) என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

'பிளாஸ்டிக்' என்ற சொல்லிற்கு 'நெகிழி' என்ற சொல்லானது, எந்த இலக்கண அடிப்படையில் யார் உருவாக்கி எப்போது அறிமுகமானது? என்பது எனக்கு தெரியாது. அண்மையில் 'தினமணி' போன்ற ஊடகங்கள் அச்சொல்லை கையாண்டது எனது கவனத்தினை ஈர்த்தது.

'பிளாஸ்டிக்' என்பதன் பொருள் 'கடினம்' (rigid) அல்லது 'சிறிய நெகிழ்வு' (slightly elastic) ஆகும். 'நெகிழி' என்ற பொருள் மொழி பெயர்ப்பில், 'கடினம்' விடுபட்டுள்ளது. அது 'பிளாஸ்டிக்' என்ற சொல்லின் பொருளில் சிதைவு  (semantic distortion) ஆகாதா?

Plastic: A synthetic material made from a wide range of organic polymers such as polyethylene, PVC, nylon, etc., that can be moulded into shape while soft, and then set into a rigid or slightly elastic form

'பஸ்' என்ற சொல்லிற்கு 'பேருந்து' என்ற சொல் பயன்பாட்டிற்கு  வந்து பல வருடங்கள் ஆகிறது. ஆனாலும் படித்தவர்களில் பெரும்பாலோரும், அரைகுறை படிப்பாளிகளில் அனைவரும் இன்றும் 'பஸ்' என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறனர்.

மேற்கண்ட இரண்டு சொற்களிலும் 'ஸ்' என்ற கிரந்த எழுத்து உள்ளது.  அதைத் தவிர்க்கும் நோக்கில், அந்த புதிய சொற்கள் உருவாக்கப்பட்டிருந்தால், அது தமிழின் வளர்ச்சிக்கு எவ்வாறு கேடாகும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

அறிவியல் சொற்கள் தொடர்பான ஃபோனடிக் (phonetic) ஒரீஇஇறக்குமதியில், கிரந்த எழுத்துக்கள் ஒலிச்சிதைவினைக் குறைக்கப் பயன்படும்: 'Oxygen' என்ற ஆங்கிலச்சொல்லுக்கு, தமிழில் 'ஆக்சிசன்' என்ற சொல்லை விட, 'ஆக்சிஜன்' சொல்லில், ஒலிச்சிதைவு குறைவே ஆகும்; உயர்க்கல்வியை ஆங்கிலவழியில் படிப்பவர்களின் சிரமத்தினை, அது குறைக்கும். தனித்தமிழ்ப்பற்றில் அச்சொல்லினை 'தீயகம்' என்று 'செமாண்டிக்' இறக்குமதி செய்வதானது,  பொருள் சிதைவுடன் அந்த சிரமத்தினை மிகவும் கூட்டி, அறிவியல் தமிழ்க்கல்விக்கு கேடாகவே முடியும். (‘ஒருங்குறி சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கிரந்த எழுத்துக்கள் தொடர்பான எதிர்ப்புகள் தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?’; 

சில வருடங்களுக்கு முன், என்னைச் சந்திக்க ஒரு தனித்தமிழ் பற்றாளர் வந்திருந்தார். "எப்படி வந்தீர்கள்?" என்ற நான் கேட்டதற்கு, 'மகிழுந்தில் வந்தேன்" என்று பதில் சொன்னார். அது எனக்கு விளங்காததை, அவரிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் வெளியில் சென்று பார்த்த போது, அவரின் கார் இருந்ததைப் பார்த்தேன். 'கார்' என்ற சொல்லிற்கு 'மகிழுந்து' என்ற சொல் இருப்பது அப்போது தான் எனக்கு தெரிய வந்தது.

ஒரு தி.மு.க ஆதரவாளர் என்னை சந்திக்கும் போதெல்லாம், உரையாடலில் நான் 'சந்தோஷம்' என்ற சொல்லை பயன்படுத்தும் போது, ' மகிழ்ச்சி என்ற தமிழ்ச்சொல்லை விடுத்து சந்தோஷம் என்று சொல்வது தவறல்லவா?" என்று ஒவ்வொரு முறையும் திருத்தி மகிழ்வார். கீழ்வரும் விளக்கம் அவருக்கு புரியாது, என்பதால் அவரின் மகிழ்ச்சியை நான் கெடுத்ததே இல்லை.

அது மட்டுமல்ல, பொதுவாக தமிழ்நாட்டில் தமிழ்/திராவிட ஆதரவாளர்களிடம் வெளிப்படும் குறைகளை நாம் சுட்டிக் காட்டினால், அவர்களையே நாம் குறை சொல்வதாக அவர்கள் கருதி மனம் புண்படுவார்கள். அது போன்ற அனுபவங்களில் பாடம் கற்று, அத்தகையோரை நான் புண்படுத்துவதைத் தவிர்த்து வருகிறேன்.

தாய்மொழி என்பதானது வெறும் தகவல் பரிமாற்றம் (communication) என்பதோடு மட்டுமின்றி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட அடையாளக் கூறுகளுடன் செயல்படும் சமூக உயிரோட்டம் ஆகும்.

'வந்தது வளர்த்து வருவது ஒற்றி'(சிலப்பதிகாரம்:அரங்;65) இசைக்கு மட்டுமின்றி, இலக்கணத்திற்கும் பொருந்துவதாகும். தமிழில் தொல்காப்பியம் தொடங்கி, இன்றுவரை வெளிவந்துள்ள இலக்கண நூல்களை கணக்கில் கொண்டு, உலகில் இலக்கணம் தொடர்பான ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்கால சமூக மாற்றங்களுக்கேற்ற வகையில் இலக்கணத்தை வளர்த்து’, வரவிருக்கும் மாற்றங்களோடு ஒற்றிபயணிப்பதே சரியான வளர்ச்சி ஆகும். அதில் தவறினால், அந்த 'தொடர்பு' முறிந்து, மேலே குறிப்பிட்ட 'திரிந்த' திசையில், புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, ‘இளையதமிழர்கள் தமிங்கிலீசர்களாக‌ பயணிப்பதை குறை சொல்ல முடியாது; அவர்கள் மீது கோபப்படுவதிலும் அர்த்தமில்லை.

தனித்தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பினால், அவ்வாறு புதிய 'தமிங்கிலீஸ்' மூலம், தமிழ் எவ்வாறு மரணத்தைத் தழுவி வருகிறது? என்பது தொடர்பான விளக்கத்திற்கு:

எல்லை மீறி போவதற்குள், மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழ் இன்னொரு பாலி மொழியாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது; 1944-இல் தி.க தோன்றி, அதன் தொடர் விளைவாக 1967 முதல் 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கியதற்கு 'விலையாக'(?). 
(‘தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’; 

'சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு" என்ற போக்கில், கிரந்த எழுத்துக்களை எதிர்த்த சான்றுகள் எதுவும் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. இருந்ததற்கான சான்றுகளை எவரும் தெரிவித்தால், நன்றி தெரிவித்து அவற்றை ஆராய இயலும்.

விளையாட்டுப் பள்ளி முதல் முனைவர் பட்டம் வரையில் ஜப்பானிய மொழியிலேயே படித்து வரும் ஜப்பான் நாட்டில், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிச்சொற்களை ஜப்பானிய மொழியில் இறக்குமதி செய்ய ஒலிப்பியல் இறக்குமதியைப் (Phonetic import) பின்பற்றுகிறார்கள். 

ஆரம்பப்பள்ளியிலேயே தமிழ்வழிக்கல்வியானது மரணப் பயணத்தில் சிக்கி விட்டது. அந்த நிலையிலும், ஒலிப்பியல் இறக்குமதியை தவிர்ப்பதானது, எந்த அளவுக்கு தமிழின் வீழ்ச்சியை வேகப்படுத்தும்? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம்.

வீட்டுக்கு அடங்கி’ ‘ஒழுக்கமாக(?) நன்கு படித்த' பிள்ளைகள், 'சிக்கல்கள்' வரும்போது, எவ்வளவு இழிவான 'சுயநலக்கள்வர்'களாக‌ நடந்து கொள்கிறார்கள்? தமிழ்நாட்டில் மெலடி வீழ்ச்சிக்கு அத்தகையோரும் எவ்வாறு பங்களித்தார்கள்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘தமிழ்நாட்டில் மெலடி இசையின் வீழ்ச்சிக்குக் காரணமான சமூகவியல் செயல்நுட்பம்? தன்மானம் மீட்சி எவ்வாறு மெலடி மீட்சிக்கு வழி வகுக்கும்?’; 

வெளியில் 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக 'தமிழர்' என்ற அடையாளத்தை முன் நிறுத்திக்கொண்டு, இந்தியை அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் படிக்கும் வாய்ப்பினைக் கெடுத்துக் கொண்டு, தமது குடும்பப்பிளைகளை விளையாட்டுப் பள்ளி முதலே ஆங்கிலவழியில் சேர்த்து, பள்ளிகளில் இந்தியும் படிக்க வைத்த தனித்தமிழ் ஆர்வலர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட 'சுயநலக்கள்வர்கள்' வரிசையில் இடம் பெற்று மெலடி வீழ்ச்சிக்குப் பங்களித்த சமூகக் குற்றவாளிகள் ஆக மாட்டார்களா?
 ‌
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத ஏமாளித்தனமான தாராளம் அடிப்படையில், தமிழ் இருக்கைகள் தொடங்கப்படும் ஏமாளியாக தமிழ்நாடு நீடிப்பதற்கு மேற்குறிப்பிட்ட 'தனித்தமிழ் சமூகக் குற்றவாளிகள்' எவ்வளவு பங்களித்துள்ளார்கள்? என்ற விவாதத்திற்கான நேரமும் வந்து விட்டது. 

வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி, தமிழ்ப்புலமையானது எவ்வாறு 'நோஞ்சான் நோய்ச்சிறையில்' சிக்கியது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

தமிழ்நாடானது மெலடி வீழ்ச்சிக்குள்ளான காலக்கட்டத்தில் தான், தமிழ்ப்புலமையானது 'நோஞ்சான் நோய்ச்சிறையில்' மிகவும் மோசமாக சிக்கியது.

அவ்வாறு தமிழ்ப்புலமையானது 'நோஞ்சான் நோய்ச்சிறையில்சிக்கியதால் தான்நிகழ்காலத்தில் உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும் நேராத அவலமானது, தமிழுக்கு  நேர்ந்துள்ளது. 
('நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்:தெரியாததை தெரியாது' என்று கூச்சமின்றி தெரிவிக்கும்  துணிச்சல் வேண்டும்.'; 

எனவே ரசனையில் மெலடியின் மீட்சியும், 'நோஞ்சான் நோய்ச்சிறையில்' இருந்து தமிழ்ப்புலமையின் மீட்சியும்,

உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும் நேராத அவலத்தில் இருந்து தமிழின் மீட்சியும்,

ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சமூக செயல்நுட்பங்கள் மூலமாக சாத்தியமாகும் காலம் நெருங்கி விட்டது. அதற்கான சமூக அறிகுறிகளும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

சாலமன் பாப்பையா போன்ற மூத்த தமிழ் அறிஞர்களே, இந்தியைக் கற்க விடாமல் தடுத்தது தொடர்பான‌ தத்தம் தவறுகளை பகிரங்கமாக அறிவித்து திருத்திக்கொள்ளும் போக்கும் துவங்கி விட்டது. அதனைக் கீழ்வரும் காணொளி தெரிவிக்கிறது.

https://www.youtube.com/watch?v=7-wo_ISsTLg&feature=youtu.be

இனி தமிழ்நாட்டு பட்டிமன்றங்களில் ரசனையில் மெலடியின் மீட்சியும், 'நோஞ்சான் நோயில்' இருந்து தமிழ்ப்புலமையின் மீட்சியும்,

உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும் நேராத அவலத்தில் இருந்து தமிழின் மீட்சியும்,

மக்களை ஈர்க்கும் தலைப்புகளோடு விவாதிக்கப்படும் காலமும் நெருங்கி விட்டது.



குறிப்பு: 'ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே, ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே; 
https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html

இம்முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமலும், மறுக்காமலும் பயணிக்கும் (கடந்த சுமார் 20 வருடங்களாக ஆபிரகாம் பண்டிதர் பற்றி பேசி எழுதி வரும்) தமிழிசைப் புலமையாளர்களும், (கடந்த சுமார் 15 வருடங்களாக 'பெரியார்' ஈ.வெ.ரா பற்றி பேசி எழுதி வரும்) 'பெரியாரியல்' புலமையாளர்களும் வரலாற்றில் 'நோஞ்சான் புலமையாளர்களாக' இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

'தமிழ் இசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்' நூலைப் படித்த குட்டி ரேவதி தொலைபேசியில் என்னை அழைத்து மிகவும் பாராட்டினார்.

ஏ ஆர் ரகுமான் அறக்கட்டளை சார்பில், 'ஆபிரகாம் பண்டிதர் திட்டம்' பொறுப்பாளராக உள்ள குட்டி ரேவதி, ஆபிரகாம் பண்டிதர் தொடர்பான மேற்குறிப்பிட்ட எனது ஆய்வுமுடிவுகளை மறைத்து;

'ஆபிரகாம் பண்டிதரின்   'ச - ப இணை' என்ற ஆய்வு முடிவினை, மறைந்த இசை அறிஞர் எஸ்.ராமநாதன் தமது சிலப்பதிகார ஆய்வில் மறுத்துள்ளதையும் மறைத்து,  ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகளை, அடுத்து வந்த ஆய்வாளர்கள் எவருமே மறுக்கவில்லை, என்று தவறாக தெரிவித்துள்ளதானது, அறிவு நேர்மையாகுமா?' 

No comments:

Post a Comment