Saturday, July 25, 2020


மோடியின் ஆட்சியில், இந்தியாவின் சமூக காங்கிரீனாகமாறி வரும் தமிழ்நாடு (2)


தமிழ்நாட்டில் 'ஊழல்' புலியைக் கொல்லப் புறப்பட்டு,

அதன் வாலைப் பிடித்த 'நாயரான‌'  பிரதமர் மோடி ?



புலி வால் பிடித்த நாயர் கதை;

வாலை விட்டால் புலி திரும்பி அடித்து விடும். விடாவிட்டால் புலியோடு காடெல்லாம் அலைய வேண்டும்’.

உண்ண முடியாமல், உறங்க முடியாமல், அவ்வாறு அலைந்தால் என்ன ஆகும்?

தமிழ்நாட்டில்  2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசிய பேச்சுக்கள் மூலமாக‌, மோடி பிரதமரானால், ‘தமிழ்நாடானது ஊழல் வலைப்பின்னலில் இருந்து விடுதலை பெற்று நல்லாட்சி மலரும் என்று நம்பியவர்கள் அதிகம். அதன் விளைவாக, தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் துணையின்றி, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற அதிசயம் நடந்தது.

அதன்பின் என்ன நடந்தது?  தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஊழல் பெருச்சாளிகள் மீது மன்மோகன் ஆட்சி காலத்தில் தொடுத்த வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. சீரங்கம் சட்டசபை இடைத் தேர்தலில் டெபாசீட்டிடம் பா.ஜ.க தோற்றது.

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சை மற்றும் மரணம் காரணமாக‌, ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) விரும்பிகள் மத்தியில் வளர்ந்து வரும் சமூகக் கோபமானதுதமிழ்நாட்டிற்கு அறிவியல் ஊழலை அறிமுகப்படுத்திய‌ கருணாநிதி மீது இருந்த கோபத்தை பின்னுக்கு தள்ளி விட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் சசிகலா குடும்பத்தின் கட்டளைக்கு உட்பட்டு அப்பொல்லோவில் (ஒளிபரப்பான) கீழ்தளத்தில் நின்று பேசிய பேச்சுக்களும், ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக‌ (ஊடக வெளிச்சத்துடன்) குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அவமதிக்கப்பட்டு) மட்டுமே சூழ, ராஜாஜி மண்டபத்தில் இருந்த ஜெயலலிதா உடலுக்கு (நேரடி ஒளிபரப்பில்) அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும் நடராஜனையும் வணங்கிய‌ மோடி தாமாகவே வலிய வந்து மேற்குறிப்பிட்ட கோபத்தின் குவியமாகி, ஸ்டாலினைக் காப்பாற்றி விட்டார். அதன்பின் 2ஜி குற்றவாளிகள் விடுதலையான பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க நோட்டாக்கட்சியானது.

மோடி பிரதரான பின், தேர்தல்களில் வாக்குக்கான பணம் பலமடங்கு அதிகரித்த அளவுக்கு, தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு வடிவேல் பாணி காமெடியாகி விட்டது.

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். வாய்ப்பு கிடைத்தால், மிகுந்த புத்திசாலித்தனத்துடன் ஊடகங்களையும் கருத்துக் கணிப்புகளையும் முட்டாள்களாக்கி கணக்கு தீர்ப்பார்கள்.

ஸ்டாலினாலும் சசிகலாவானாலும் அவர்களின் ஊழலைப் பற்றி பேசும் துணிச்சலின்றி கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் ஆனாலும், மோடியானாலும், வேறு யாரானாலும், தமிழ்நாட்டு வாக்காளர்களின் மேற்குறிப்பிட்ட கணக்கில் இருந்து தப்ப முடியாது. 
(https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_23.html)

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். எனவே தமிழ்நாட்டில் ஊழல் பெருச்சாளிகளை பாரபட்சமின்றி ஒழிக்கும் வரையில், தமிழக பா.ஜ.க நோட்டாக்கட்சியாகத் தான் பயணித்தாக வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொதுவாழ்வில் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, மத்திய அரசுடன் நேசமான கட்சியாகவே இருக்கும். தேர்தலில் தமிழக பா.ஜ.க  எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்ந்து, அந்தக்கட்சியின் வெற்றி வாய்ப்பினைக் குறைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 'ஊழல்' என்ற புலியைக் கொல்லப் புறப்பட்டு, அதன் வாலைப் பிடித்த 'நாயர்' போல பிரதமர் மோடியின் நிலை நீடிக்கிறது.

குதிரை கீழே தள்ளியதுமல்லாமல், புதைப்பதற்குக் குழியும் தோண்டியதென்கிறபடியும்,’

தமிழக பா.ஜ.க பயணிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாரிதாஸ் மற்றும் எச்,ராஜா போன்ற பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் ஈ.வெ.ராவை, நேரு பாணியில், உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கும் வரையில், தமிழ்நாட்டில் பா.ஜ.கவானது நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டியிருக்கும்

1919 முதல் 1924 வரையிலான 5 வருடங்களில், காங்கிரஸ் கட்சியில் இருந்த‌ ஈ.வெ.ரா அவர்கள் பொது வாழ்வில் எந்த அளவுக்கு சமூக ஆற்றலை உருவாக்கினார்? என்ற சமூக செயல்நுட்பத்தினை விளங்கிக் கொண்டால் தான், அதிலிருந்து எந்த அளவுக்கு தடம் புரண்டு இன்று 'பெரியார்' கட்சிகள் பயணிக்கின்றனர்? என்பதும் தெளிவாகும்.

தமிழ்நாட்டில் சமூக வளர்ச்சிக்கான‌ ஆக்கபூர்வமான சமூக ஆற்றல்களை எவ்வாறு உருவாக்குவது? என்ற ஆய்வின் மூலமாக, எவ்வாறு அந்த சமூக செயல்நுட்பத்தினைக் கண்டுபிடிப்பது? என்பதற்கு,

1919 முதல் 1925இல் காங்கிர‌சில் இருந்து வெளியேறும் வரையிலான 6 வருடங்களில் இருந்த தமிழ்நாட்டையும், ஈ.வெ.ராவையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

1919 முதல் 1944 வரை 25 வருடங்களில் ஈ.வெ.ரா சேகரித்த சமூக ஆற்றல்களை ஈர்த்து, ஆக்கபூர்வ சமூக செயல்நுட்பத்தில் இருந்து ஈ.வெ.ராவை அந்நியமாக்கி, அவரைப் பலகீனமாக்கி, அடுத்த 5 வருடத்தில் 1949இல் தி.மு.க உருவானது.

தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கி' என்று அண்ணா அறிவித்ததை ஈ.வெ.ரா ஏன் கண்டித்தார்? அண்ணாவின் மறைவிற்குப்பின், கருணாநிதி தி.மு.க தலைவர் ஆகும் வரையில்தி.மு.க தலைவர் பதவி ஈ.வெ.ராவிற்காக ஏன் வெற்றிடமாக இருந்தது? 1967இல் அண்ணா முதல்வராகி ஈ.வெ.ராவுடன் சமரசான பின்னும், தி.மு.க தலைவராக ஈ.வெ.ரா ஏன் அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை? அண்ணா சாகும் வரையில், அதே நிலை ஏன் நீடித்தது?

தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பாக ஈ.வெ.ராவின் நிலைப்பாட்டில் இருந்து, இரட்டைக்குழலில் ஒரு குழல் தடம் புரண்டு, அடுத்த குழலை எவ்வாறு மலடாக்கி, 1967இல் ஆட்சியைப் பிடித்த பின், எதிர்த்திசையில் பயணித்தது?

'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் ரஜினி சண்டை போடும் காட்சியைக் காட்டி விட்டு, பின் திரையில் கொத்து புரோட்டா உருவாகும் காட்சி திரையில் இடம் பெறும். அடுத்து சண்டை முடிந்து ரஜினி நடந்து வருவார். ரஜினியுடன் சேர்ந்து எதிரியை அடித்த ரஜினியின் கூட்டாளி ரஜினியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்பார்.

'எதுக்கண்ணே அந்த ஆளை அடிச்சீங்க?'

அப்படி கூட எவரும் கேட்காத நிலையில், 1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், தமிழ்நாடு இருந்தது.

'தீ பரவட்டும்' என்று கம்ப ராமாயணத்தைச் சாடிய அண்ணா, 1967இல் முதல்வராகி கம்பனுக்கு சிலை வைத்தார்.

'எதுக்கண்ணா, கம்பராமாயணத்தை தாக்கினோம்?' என்று எந்த உடன்பிறப்பும் அண்ணாவைக் கேட்டதாகத் தெரியவில்லை. 

அதே பாணியில், '2014 தேர்தலில் ஊழலை ஒழிப்பதாக எதற்கு நாம் வாக்குறுதி கொடுத்தோம்?' என்று எந்த தமிழ்நாட்டு பா.ஜ.க தொண்டரும் பிரதமர் மோடியைக் கேட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின்   நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின்  உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும்.

அந்த சிக்னலை உணராமல், தமிழக பா.ஜ.வையும் அந்த 'மர்ம' மரணத்தின் மெளன சாட்சிகள் வரிசையில் இடம் பெறச் செய்து, இந்திராகாந்திக்கு இருந்த துணிச்சலின்றி, அந்த 'சிக்னலின்' போக்கிலேயே பிரதமர் மோடி பயணித்தார். 'அந்த' பலகீனமே மோடியின் ஆட்சியில் 'கறுப்பு ஆடுகளை' வலிவுறச் செய்து, மெகா ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகி, மோடியின் ஊழல் ஒழிப்பானது, வடிவேலு பாணி காமெடியானது. 

பாரதத்தில் தமிழ்நாடு இருப்பது உண்மையானால், பாரத மாதா மோடியை மன்னிக்க மாட்டார்.

வியட்னாமில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்து, கருணாநிதி குடும்ப ஆட்சியில்  தனித்தமிழ்நாடு உருவாகியிருந்தாலும், மத்தியில் வலிமையான இந்திராகாந்தி ஆட்சி இருந்ததன் காரணமாக, அந்த தனித்தமிழ்நாடு முயற்சி குறைப்பிரசவமாகி, மீண்டும் இந்தியாவுடன் இணைந்து, அமெரிக்காவானது உலக அரங்கில் பெரும் தலைக்குனிவைச் சந்தித்திருக்கும். 
(September 25, 2017; ‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html)

ஆனால் மோடி ஆட்சியில், தமிழ்நாடு மிகவும் ஆபத்தான திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.‌

மோடிக்குப் பின் மத்தியில் தேவகவுடா பிரதமராக இருந்ததைப் போல, ஒரு பலகீனமான அரசு ஆட்சியில் இருந்தால், தமிழ்நாட்டில் ஜெயலலிதா போல வலிமையான மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்யும் முதல்வராக ஒரு நபர் இருந்தால், அந்த நபர் நெருக்கடி கால முதல்வர் கருணாநிதியின் பாணியில் முயன்றால், சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் பின்பலத்தில் தனித்தமிழ்நாடு அறிவிப்பது சாத்தியமாகி விடும்.

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்திலேயே, சரியான தேசக்கட்டுமான (Nation Building) திசையில், தமிழ்நாட்டில் ஊழல் வலைப்பின்னலைத் தகர்த்து, மைக்ரோஉலகத்தில் வாழும் சாமான்யர்களின் நம்பிக்கையை ஈட்டி, அவர்கள் எல்லாம் விரும்பி இந்தியாவுடன் 'ஒட்டி' பயணிக்கச் செய்தால் மட்டுமே, அந்த ஆபத்தில் இருந்து, தமிழ்நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும்.

மாணவப்பருவத்தில் இருந்து இன்று வரை, 'தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்புடன் 'ஒட்டிப் பயணித்து வருபவன்' என்ற அடிப்படையிலும், எனது காலத்திற்குப் பின் தமிழ்நாடானது ஆப்பிரிக்க நாடுகளைப் போல, ஊழல் சர்வாதிகாரத்தில் சிக்கி சீரழியும் வாய்ப்பினைத் தவிர்க்கும் நோக்கிலும், இந்த அபாய எச்சரிக்கையை வெளியிட நேர்ந்தது. 
(‘மோடியின் ஆட்சியில், இந்தியாவின் சமூக காங்கிரீனாகமாறி வரும் தமிழ்நாடு (1) ; 

மேற்குறிப்பிட்ட அபாய எச்சரிக்கையை நான் வெளியிட்ட பின், தமிழ்நாட்டில் ஓர் அதிசயம் அரங்கேறியுள்ளது.

சுயலாப நோக்கின்றி, சமரமற்ற ஊழல் எதிர்ப்பில் வலிமையான 'நேர்மை வழிகாட்டியுடன்' (Ethical Compass) பயணித்து வந்த வலிமையான தமிழர்களை எல்லாம் ஒன்றிணைக்க கந்த சஷ்டி கவசம்துணை செய்துள்ளது.

'நோஞ்சான் தமிழர்கள்'  அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர ஊக்குவிக்கும் சமூக சூழல் உருவாகி விட்டது. வெறுப்பு அரசியலில் மக்களிடையே பிரிவினைகளை வளர்த்துப் பிழைத்து வந்த 'ஒட்டுண்ணிகளை' சருகாக்கி சமூகக் குப்பைத்தொட்டியில் ஒதுக்குவதற்கும் கந்த சஷ்டி கவசம்துணை செய்துள்ளது.

திராவிட ஊழல் பெருச்சாளிகளின் பாதுகாப்புக் கவசங்களாக 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற பேரில் செயல்பட்டு, இந்துக் கடவுள்களை கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கிமதமாற்றங்கள் மூலமாக இந்துக்களின் எண்ணிகை குறைய, மறைமுகமாக உதவி வந்த 'கறுப்பர் கூட்டம்',  இனி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும், தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்தில் இருந்து தப்ப முடியாது.

எனவே கந்த சஷ்டி கவசம்மூலமாக, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சி நிச்சயமாகி விட்டது. தேசியக்கட்சிகளின் சுயநலன்களுக்கு தமிழ்நாடு பலிகடா ஆக இனி  வாய்ப்பில்லை. 

No comments:

Post a Comment