Monday, September 22, 2014


இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -  தியோடர் ரூஸ்வெல்ட்

  "Comparison is the thief of joy" Theodore Roosevelt


ஒரு மனிதன் தனக்கு எஜமானராக இருந்து அனுபவிக்கும் இன்பங்கள், துன்பங்கள் வேறு; செல்வம், செல்வாக்கில் மற்றவர்கள் தம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்ற, சமூக ஒப்பீட்டு (Social Comparison) நோயில் சிக்கி - மற்றவர்களின் மதிப்புக்காக ஏங்கி - அடிமையாக அனுபவிக்கும் இன்பங்கள், துன்பங்கள் வேறு. (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html   & http://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.html )

முதல்வகையில் வாழ்வதற்கு, ஒரு மனிதன் தனது இயல்பை விளங்கிக் கொண்டு, இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளைப் (Passions) பேணி வளர்த்துக் கொண்டு வாழ வேண்டும். (பெங்களுரில் வாழும் பணி ஓய்வு பெற்ற பேரா.சுவாமிநாதன், தாம் அனுபவித்த, ரசித்த அரிய புகைப்படங்கள், வீடியோக்கள், கட்டுரைகளை அனுப்பும் நண்பர்கள் பட்டியலில், நானும் இருப்பது, எனது இயல்போடு ஒட்டிய வாழ்வில் பெற்ற பலன்களில் ஒன்றாகும். அவர் அனுப்பிய ஒரு கட்டுரையின் அடிப்படையில் இதனை எழுதினேன்.) 

இரண்டாவது வகையில் தனது இயல்பையும், இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளையும் தொலைத்து, தனது முழு கவனத்தையும் பிறருடன் ஒப்பிடுவதிலேயே செலுத்தி, அதில் பெறும் வெற்றி தோல்விகளுக்கு ஏற்ப, இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டும். ('How comparison becomes the thief of our joy?'; https://veepandi.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html)

சமூக நிலையில், தோற்றத்தில்,செல்வத்தில், செல்வாக்கில், நமது வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு வாழ்வது என்பது மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆழமான ஆசையின் வெளி அறிகுறியாகும்.( The fact that many of us indulge in comparing our life, social status, appearance, wealth, etc., with others, is symptomatic of a deep-rooted desire to be accepted by others. ) அதை மறைக்க வெளியில் தம்மைப் பற்றி பிறர் பெரிதாக நினைக்க வேண்டும் என்று ஒரு போலியான மனிதராக அவர்கள் வாழ்வதும் தவிர்க்க இயலாது. (. Comparisons with others only create a fake sense of being, and we find ourselves trying to keep up with others at all costs.)

மேற்குறிப்பிட்ட ஒப்பீடு நோயில் சிக்கிய மனிதரின் மனதினுள்ஏமாற்றம்,சுய அனுதாபம்,தம்மைப் பற்றிய குறைவான மதிப்பீடு,பொறாமை ஆகியவை உருவாக வாய்ப்புகள் அதிகம் உண்டு.( only creates the feeling of frustration, self-pity, low self-worth, and envy. ) அதன் காரணமாக நமது இயல்பையே தொலைத்து வாழ்வதும் தவிர்க்க இயலாது. (Comparing ourselves with others takes away our individuality. ) நமது இயல்புக்கு எதிரான போரில் நாம் மூழ்கி, நாம் கற்பனை செய்துள்ள ஒப்பீடு போட்டியில், மற்றவரை 'எந்த வழியிலாவது' வீழ்த்த வழிதேடும் நோயாளி போன்று, நாம் வாழ நேரிடும். (We constantly battle against ourselves, and look for ways to beat him in this perceived competition.)

பொதுவாக இந்த நோயில் சிக்கியவர்கள், எந்த ஒருவரைப் பற்றியும் முதுகுக்குப் பின்னால் இகழ்வதும், அதே நபரால் தமக்கு ஆதாயம் எனில் அவரை 'ஆகா, ஓகோ' என்று புகழ்வதும் அந்த நோயின் மறு பக்கங்களாகும்.

நமது மூளை ஆனது,  கணினி செயலாற்றி (processor)  போன்றுள்ள ஒரு மனித செயலாற்றி ஆகும். நமது மூளை என்னும் செயலாற்றியானது,  உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions) , அன்பு, லாபநட்ட நோக்கில்லாத சேவை போன்ற ஆக்கபூர்வ உணர்வுகளில் ( Positive feelings)  செயல்படும்போது, நாம் ஒரு ஆக்கபூர்வ அலையியற்றி  ( Positive Oscillator) போல் வாழ்வோம். மாறாக சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, ஏமாற்றம்,கோபம், வெறுப்பு, வஞ்சம்,பழி வாங்கல், சுய அனுதாபம், போன்ற எதிர் உணர்வுகளில் செயல்படும்போது, நாம் ஒரு அழிவுபூர்வ அலையியற்றி  (Negative Oscillator) போல் வாழ்வோம். நேர் உணர்வுகள் (Positive Feelings)  செயல்பாட்டில் மூளை இருக்கும்போது,  நோய்கள் நம்மை அண்டாது. எதிர் உணர்வுகள் (Negative Feelings) செயல்பாட்டில் மூளை இருக்கும்போது, நோய்கள் நம்மை தாக்கும். https://www.youtube.com/watch?v=W81CHn4l4AM

ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான நபர், தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும், நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள், அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக, அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு.

அந்த மனநிலையில் உள்ளவர்கள், வாழ்க்கையில் இயல்பாகக் கிடைக்கும் இன்பங்களைக் கூட அனுபவிக்க முடியாமல், தொலைத்து வாழவும் நேரிடும்ஒரு நல்ல இசையை கேட்கும் வாய்ப்புடைய நபர், அந்த நேரத்தில் 'ஷேர்' மார்க்கெட்டில் (share market),  தம்மிடமுள்ள பங்குகள் ஏற்றத்திலா?/இறக்கத்திலா? என்று யோசித்துக் கொண்டிருந்தால், அந்த இசையின் இன்பத்தை அனுபவிக்க முடியுமா?

சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கு ஏங்கி வாழ்வதைத் தவிர்த்து, தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இன்பங்கள், தனித்துவம் (Unique)  வாய்ந்தவையாகும்.

மரங்கள் சூழ்ந்த பகுதியில் காலை நடைப்பயிற்சி செய்யும்போது, காதில் விழும் பறவைகளின் ஒலிகளைக் கூர்ந்து கவனிக்கும் போது, அந்த ஒலிகளில் இயற்கையாக வெளிப்படும் சந்தத்தைக் கண்டுபிடிப்பது ஒரு இன்பமாகும். இசைத் தொழில் நுட்பத்தில் அந்த ஒலிகளைப் பதிவு செய்து, சந்தத்தைப் பிரித்து, இசையாக மாற்றினால் எப்படி இருக்கும் என்று மூளையைப் பயன்படுத்தி யூகிப்பதும் இன்பம். அதை செயல்படுத்தும்போது கிடைப்பதும் இன்பம்.

காற்றில் தாள இடைவெளியில் (Rhythmic)  அசைகின்ற கொடிகள், மரக்கிளைகள், இலைகள் அகியவற்றை கூர்ந்து கவனிக்கும் போதுவெளிப்படும் நடனவகை அசைவுகளை (choreography related)  உணரும்போதும் கிடைக்கும் இன்பம் சொற்களில் அடங்காது. இவ்வாறு இயற்கையில் எழும் ஒலிகளிலும், அசைவுகளிலும் இருந்து, இசை, நடன கூறுகளை, அடையாளம் காட்டும் சங்க இலக்கிய வரிகளில் மூழ்குவதும், அரிய இன்பமாகும்.

நமது சமூக வட்டத்தில் எவராவது துயரப்பட்டால், அவர்கள் நம்மிடம் உதவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்க்காமல் , அவருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, அதற்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வாழ்வதும் ஒரு வகை இன்பமே.

தாமாகவே 'பாராட்டு, புகழ்' போன்ற வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது, சம்பந்தப்பட்டவர்களைப் புண்படுத்தாமல், அவற்றைத் தவிர்த்து வாழ்வதும் ஒரு இன்பமே - தமிழ்நாட்டில் தற்போது ஆதிக்கம் செலுத்திவரும் 'புகழ், பாராட்டு' நோயில் சிக்காமல், புத்திசாலித்தனமாக தப்பித்த காரணத்தால்.

தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை ( Social Status என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக வாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர’  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.

இந்திய விடுதலைக்கு முன் வாழ்ந்திருந்தால், கணித மேதை ராமானுஜம் போல், ஒரு கால்நடைத்துறை விஞ்ஞானியாக, அடையாளம் காணப்பட்டு உலகப்புகழ் பெற்றிருப்பார், என்று நான் வியக்கும்,  சுமார் 70 வயதுக்கும் மேலான - சொந்தமாக கார் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியுள்ள - எனது நண்பர், இன்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று,  மர நிழலில் புத்தகங்கள் படிப்பதை, தமது பொழுது போக்கு இன்பமாக அனுபவித்து வருகிறார். அவர் இணையத் தொடர்பு இல்லாதவர் என்ற துணிச்சலில் இதனைக் குறிப்பிட்டேன் , - தெரிந்தால் என்னை விட்டு விலகி விடுவார். சாதாரண மனிதராக வாழ்வதில் உள்ள - இயல்பான இன்பங்களை அனுபவிக்கும் -  ‘சுதந்திரம்’, ‘முக்கிய நபராக’(VIP) வாழ்பவருக்கு கிடைக்காது என்பதை, அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன்அந்த 'சுதந்திரத்திற்கும்' கீழ்வரும் ஆபத்தும் இருப்பதால், அது தொடர்பாக எச்சரிக்கையுடன் பயணிக்க, இப்போதே திட்டமிட்டு வருகிறேன்.

கி.முவில் வாழ்ந்த விட்ரிவியஸ்(Vitrivius; https://en.wikipedia.org/wiki/Vitruvius) தொடங்கி, 2000 வருடங்களாக, நவீன காலம்(Modern era) வரை மேற்கொண்டு வரும் முயற்சிகளில் முதல் முறையாக‌, கட்டிடக்கலையில் (Architecture) உறைந்துள்ள இசையை (Frozen Music) பிரித்தெடுத்து, கணினி வழி வெளிப்படுத்தும் 'லாஜிக்கை'(Logic), எனது வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் ஆய்வு குழு கண்டுபிடித்துள்ளது; நிரூபிக்கப்பட்டுள்ளது (Validated); 'காப்புரிமைக்கான' (Patent) முதல் கட்டம் கடந்து, காப்புரிமை எண் (Patent Number) பெற்று, அடுத்த கட்டத்தை நோக்கி, பயணிக்கிறது. மத்திய அரசின் நிதி உதவியில், திருச்சி NIT-இல் நடந்து வருவதால், அதை ஊடகத்தில் வெளிப்படுத்துவதை நான் தடுக்க முடியாது; அடுத்த கட்டமாக, கணினி வழி மென்பொருள் (Application Software) உருவாக்கும் ஆய்வினையும் தொடங்க வேண்டி இருப்பதால்.

தமிழ்நாட்டில் லாபநட்ட கணக்கில்லாமல், யாரும் யாரையும் மதிப்பது கிடையாது, என்ற சமூக வட்டத்தை விட்டு விலகி வாழும்போது மட்டுமே, இயல்பான மதிப்பையும், அன்பையும் அனுபவிக்க முடியும். மேலே குறிப்பிட்ட‌  இயற்கையான வாழ்வு வாழ்வது அபூர்வமான இன்பமாகும்.

தாம் வாழும் சமூகத்துடனும், இயற்கையுடனும் 'இயல்பாக' ஒன்றி வாழும்போது தான், இத்தகைய இன்பங்களை அனுபவிக்க முடியும். இயற்கையிலிருந்து பெருமளவில் விலகி, 'கான்கிரிட்' கட்டிடங்கள் சூழலில் நகரத்தில், சமூத்திலிருந்தும் பெருமளவில் விலகிசமுக ஒப்பீடு(social comparison)  போட்டியில் சிக்கிய ஒரு சமூகக் கூண்டுக்குள் வாழ்பவர்களுக்கு, இத்தகைய இன்பங்கள் என்றால் என்ன? என்று தெரியக்கூட வாய்ப்புண்டா? இத்தகைய நகரக் கூண்டுகளுக்குள் வளரும் குழந்தைகள் நிலைமை, மிகவும் பரிதாபத்திற்குரியதாகும்.

அவ்வாறு 'இயல்பாக' இன்பங்களை அனுபவித்து வாழாமல், நம்மை சுற்றியுள்ள நபர்களோடு, 'எப்போதும்' நம்மை ஒப்பிட்டுக் கொண்டு, அவர்களிடம் உள்ள வசதி, வாய்ப்புகள் என்னென்ன நம்மிடம் இல்லை என்ற ஆராய்ச்சிக்கே, நமது மூளையை முக்கியமாகப் பயன்படுத்தி, 'அந்த' வசதி வாய்ப்புகளை' 'எந்த வழியிலும்' பெறுவதே வாழ்வின் இலட்சியமாகக் கருதி வாழ்வது, 'இயல்பான' வாழ்க்கையா? அல்லது மோசமான நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி, 'மனநோயாளியாக' வாழும் வாழ்க்கையா? தம்மை விட செல்வம் செல்வாக்கில் மேலான நபர் எனில், அவரிடம் குழைந்து, வாலாட்டி காரியம் சாதிக்கும் நோக்கில் பழகும் 'நாய்கள்' பண்பு, நம்மையறியாமலேயே நமக்குள் நுழைந்து விடும் விளைவும் ஏற்படவும் வாய்ப்பு உண்டா/ இல்லையா?

அப்படிப்பட்ட வாழ்க்கையில் 'சிக்கியவர்களுக்கு', தமது 'இயல்பான வாழ்க்கையில்' வாழும்போது கிடைக்கும் இன்பங்களைதமது ஐம்புலன் அறிவுகளையும் மூளையையும் பயன்படுத்தி உணரமுடியுமா? இன்பங்கள் அனுபவிக்க வாய்ப்புண்டா? அறிவுப்புலம் உள்ளிட்டு பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் சாதனைகளை விளங்கி இன்புறும் 'கற்பூர வாசனைதெரியாதகழுதைகளாக' , நமது வாழ்க்கை அமைந்து விடாதா?

நுகர்வு கலாச்சாரத்தில் இன்பங்களை அனுபவிப்பதில் கூட, 'செயற்கையான' 'ஃபேசன்' (Fashion) அடிப்படையில், 'மற்றவர்களிடம்' 'பெருமையாக, பொறாமையைத் தூண்டும்' வகையிலான 'கானல் நீர்' போன்று, ஒரு செயற்கையான அனுபவித்தல் தானே கிடைக்கும். பெரும்பாலான 'போதை' இன்பங்களின் ஊற்றுக்கண்கள் தானே அவை.

ஒரு குறிப்பிட்ட கை- சமூக ஒப்பீடு நோய் மூலம் கிடைக்கும் - இன்பங்களுக்கே நமது புலன்கள் அடிமையாக நேரிடும். நமக்கு பணிந்து சேவகம் செய்ய வேண்டிய நமது புலன்களுக்கே, நாம் அடிமையாக நேரிடும். நமக்குள்ள உள்ள ஐம்புலன் அறிவுகளும், மூளையும் அந்த சமூக ஒப்பீடு  அடிமைத் தனத்திற்கே, சேவகம் செய்ய நேரிடும்.

நமது புலன்கள் அடிமையாக, நமக்கு பணிந்து சேவகம் செய்ய வேண்டிய திறமை நமக்கு இருந்தால், நாம் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' (திருக்குறள் 6,) என்ற வகையில் வாழ்பவர்கள் ஆவோம். 'அவித்தல்' என்பது 'அடக்குதல்' ( subdue) ஆகும்.

நமது புலன்களுக்கு நாம் சேவகம் செய்ய ஆரம்பித்தால், நாளடைவில், நம்மையறியாமலேயே, நாம் முகத்திலிருந்தும் இயற்கையிலிருந்தும் வெளிப்படும் இன்பங்களை அனுபவிக்கத் தெரியாத, - இயற்கையான நமது இயல்பிலிருந்து மாறியமேற்குறிப்பிட்ட‌, பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்' வாழ நேரிடும்

தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, 1944-இல் நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், ஆகிய திறமைகளும் ஆர்வமும், 'இயல்பிலேயே' இல்லாத சிற்றின மனிதர்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபாரிகளாக வளர்ந்ததன் விளைவுகளாக, இன்று நம்மிடையே 'நாய்களாகவும், கழுதைகளாகவும்' உலவுபவர்களை, அடையாளம் கண்டு ஒதுக்கினால் தான்;

நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன், நாம் வாழ்ந்து சாதனைகளும் படைக்க முடியும்,  என்பதும், நான் அனுபவபூர்வமாக கற்ற பாடமாகும். (http://drvee.in/ )

'திராவிடர், திராவிட' குழப்பங்களில் சிக்காத சாதாரண மனிதர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட திரிதலுக்குள்ளாகாத, 'இனம்' ஆகிய மனிதர்களாக தான், இன்றும் வாழ்கிறார்கள். 

இனம் இனத்தோடு சேரும் என்ற இயற்கை விதியின்படி, சமூக ஒப்பீடு நோயில் சிக்காமல், நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நாம் வாழும்போது, நமது சமூக வட்டமானது, அந்நோயாளிகளிடமிருந்து விலகி, நம்மைப் போன்றே வாழும் மனிதர்களை உள்ளடக்கிய சமூக வட்டமாக மாறுவதும், இயற்கை விதி போலவே நடைபெறுகிறது என்பதும், எனது அனுபவமாகும்.

பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் சமூகத்திலிருந்தும், இயற்கையிலிருந்தும், வெளிப்படும் இன்பங்களை அனுபவிக்கத் தெரியாமல், நாம் வாழலாமா? பிறக்கும்போது எதையும் கொண்டுவராத நாம், இறக்கும்போதும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது இடையில் நமது வாழ்வில் சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, இயல்பாக அனுபவிக்க வேண்டிய இன்பங்களை நாமும் தொலைத்து, நமது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினரையும் அந்நோயில் சிக்க வைத்து, தொலைத்துசேகரித்த செல்வம், செல்வாக்கு உட்பட.

இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு வாழும்போது கிடைக்கும் இன்பங்களை அனுபவிப்பதன் உச்சக்கட்டம், சொற்களால் விளக்கமுடியாமல் - வரையறைக்குட்பட்ட மனித மொழியால் (finite Human Language) விளக்க முடியாமல்  - அமையும் போது, ' எண்ணிலா ‘(infinite) -  இறைவனோடு - இயைந்த அனுபவமாகவே அமையும். மோகன ராகத்தில் , முல்லைத் தீம்பாணியில் , ' சி வா ' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைபுல்லாங்குழலில் இசைத்து, ஆனாயநாயனார் சிவபெருமானோடு ஐக்கியமானதும் இவ்வழிதான் என்பதும், எனது இசை ஆராய்ச்சி முடிவுகளில் ஒன்றாகும். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 &  http://veepandi.blogspot.sg/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html )

No comments:

Post a Comment