Thursday, December 24, 2020

 

திரைப்பட இயக்குநர்கள் இசை அமைப்பாளர்களின் பார்வைக்கு;
 

'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' பாடல், இன்றைய தலைமுறையயும் ஈர்க்கும் என்பதானது, ஆர்.ஜே.பாலாஜியின் 'எல்கேஜி'  மூலமாக நிரூபணமானது.

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய‌ 

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா”

https://www.youtube.com/watch?v=mNnPWhBr71A

மேற்குறிப்பிட்ட பாடலின் மெட்டை ஒட்டி, ஆனால் சற்று மாறுபட்டு கீழ்வரும் புதுப்பாடலை இசைக்கலாம்.

                                          பல்லவி

பலித்த வரையில் பார்ப்போம் என்பவன்

பிச்சைக் காரன டா     - இதில்

பணக்காரன் படித்தவன் பதவிக்காரன் என்ற

பேதம் இல்லையடா

                             சரணம் 1

இருக்கும் வரையில் பொறுக்கி பட்டம்

பதவிகள் பெறுவாரே    - அவர்

மேலே போனதும் புத்தரைப் போலே

போதனை புரிவாரே     - இவர்

பேச்சை எழுத்தை நம்பி மோசம்

போனவர் பல  பேரு      - மனிதன்

செயலை வைத்து ஆளை அளப்பது   

என்றும் தவறாது

 

                                         சரணம் 2

பல்லை இளிப்பதும் கூட்டிக் கொடுப்பதும்

காலில் விழுந்து காரியம் முடிப்பதும்

பிச்சை வழி கள டா   - அவர்

பெறுகிற பணம் பட்டம் பதவிகள் எல்லாம்

எச்சில் இலைகளடா   -  சமூக‌

எச்சில் இலைகளடா

                                      -----------------    

இன்றைய தலைமுறையில் போக்கினை ஒட்டி, திரை இசை ரசனையை நல்ல திசையில் வளர்க்கும் முயற்சி இதுவாகும். எனவே ஆர்வமுள்ள திரைப்பட இயக்குநர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் மேற்குறிப்பிட்ட பாடலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய முயற்சிக்கு இசை ஆலோசனையையும் நான் வழங்க இயலும். புது எண்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நான் ஏற்பதில்லை. ஈமெயில் மூலமாக முதலில் தொடர்பு கொண்டால், அதன்பின் தொலைபேசியில் பேச இயலும்.  Email: pannpadini@gmail.com

No comments:

Post a Comment