Tuesday, December 22, 2020

 

'நோஞ்சான் நோயில்' தமிழ்ப்புலமை  சிக்க பங்களித்தவர்களா, 
 
எழுத்தாளர்கள் ஜெயமோகன், ப.திருமாவேலன், ரவிக்குமார், பிரபஞ்சன்?
 

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறும் வரையில்; 1925 முதல் 1939இல் நீதிக்கட்சியின் தலைவராகும் வரையில், 1939 முதல் 1944இல் திராவிடர் கழகம் துவங்கியது வரையில், 1944 முதல் 1949இல் தி.மு.க தொடங்கியது வரையில், 1949 முதல் 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது வரையில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து முனிவராகி விட ஈ.வெ.ரா விரும்பி, அண்ணாவும் காமராஜரும் அவரின் மனதை மாற்றியது முதல் 1973இல் சாகும் வரையில்;

என்று 'தமிழ், திராவிடர், ஆரியர், இந்தி' தொடர்பாக, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? என்பது பற்றிய அறியாமையில், உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்து எவ்வாறு கட்டுரை எழுத முடியும்? என்பதற்கான பாடப்புத்தகத்தில் இடம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட கட்டுரையினை ப.திருமாவேலன் எழுதியுள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2020/12/blog-post_21.html )

தத்தம் சார்பு(Subjective) கண்ணோட்ட அடிப்படையில், ஈ.வெ.ராவின் எழுத்துக்களை அதன் பின்னணியிலிருந்து பிரித்து, பயன்படுத்தி அவரை பார்ப்பன எதிர்ப்பு/ஆதரவு, தமிழர் எதிர்ப்பு/ஆதரவு, தலித் எதிர்ப்பு/ஆதரவு, முக்குலத்தோர் எதிர்ப்பு/ஆதரவு, அம்பேதர்கார் எதிர்ப்பு/ஆதரவு  காந்தி எதிர்ப்பு/ஆதரவு, ராஜாஜி எதிர்ப்பு/ஆதரவு என்று இன்னும் பல எதிர்ப்பு/ஆதரவு கட்டங்களுக்குள், ஈ.வெ.ரா அவர்களை சிக்க வைத்து எவ்வாறு எழுதுவது?

என்று பயிற்சி வகுப்பு எடுக்க உதவும் பாடப்புத்தகத்தினை எழுத்தாளரும் தி.மு.க எம்.பியுமான ரவிக்குமார் உருவாக்கியுள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)

'பிரபல' எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்காவில் உள்ள ஃபெட்னா உள்ளிட்ட தமிழ் அமைப்புகளால் பாராட்டப்பட்ட மம்மதுவை எடுத்த பேட்டியில் வெளிப்பட்ட பல அபத்தங்களில் சில:

"இந்துஸ்தானி இசை தமிழிசையின் வளர்ச்சி நிலைதான்./செவ்வியல் என்பது சலனம் இல்லாமல் இலக்கணத்திற்குள் அடைபட்டு மக்களிடமிருந்து அன்னியப் பட்டு கிடப்பது. வாழும் இசை செவ்வியல் இசையாக இருக்க முடியாது. /இணை, கிளை, நட்பு, என்ற இந்த ‘பொருந்து சுவரக் காட்டங்கள்தான் ‘ஐரோப்பிய இசையில் (Harmonical Notes or Chords) என்று கூறப்படுகிறது. ஆக அடிப்படையில் இரு இசை மரபுகளும் ஒன்றே./";

(https://www.jeyamohan.in/459#.XKhsKfZuLIV  )

உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையானது தாழ்வாகக் கருதப்படுவது பற்றிய எனது அனுபவங்களையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

உலகப்புகழ் பெற்ற செல்டான் பொல்லாக் போன்ற அறிஞர்கள் தமிழ் ஆய்வுகளைப் பற்றி மிகவும் கேவலமாகக் கருதியுள்ளது பற்றியும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html )

’’ எமதுள்ளம் சுடர் விடுக 34: தமிழர் இசையும் வாழ்வும்! என்ற தலைப்பில்  பிரபஞ்சன்  'தமிழ் இந்து' நாளிதழில் எழுதிய கட்டுரையைப் படித்த போது, கீழ்வரும் பகுதியானது எனது கவனத்தை ஈர்த்தது.

“இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு. ஆனால் அத்தனைச் சொற்களையும் வீழ்த்தி ‘ஸ்ருதி என்பது வழக்குக்கு வந்துள்ளதே !’’

கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு கீழ்வரும் மின்மடலை அனுப்பினேன்.

தங்களின் கட்டுரையில்;

இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு."

எனது கவனத்தை ஈர்த்தது.

'அந்த 22 சொற்கள்' யாவை?" என்பதை அனுப்பினால், அவை மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' நூலில் சரியாக 'புரிந்து' பதிவாகி உள்ளனவா? என்ற‌ எனது ஆய்வுக்கு உதவும்.”

இன்று வரை பதில் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html  ) பதில் தராமலேயே பிரபஞ்சன் மறைந்து விட்டதால், அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது மம்மதுவின் கடமையாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/01/6-10.html )

தேவநேயப் பாவாணரைப் போலவே, (https://tamilsdirection.blogspot.com/2020/12/3-researchmethodology-plato-b.html  )

மம்மதுவும் 'ஆய்வு வழிமுறை' (research methodology) பற்றிய தெளிவின்றி தமிழிசை ஆய்வுகள் மேற்கொண்டாரா? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது.

'நோஞ்சான் நோயில்' தமிழ்ப்புலமை  சிக்க பங்களித்தவர்களா, எழுத்தாளர்கள் ஜெயமோகன், ப.திருமாவேலன், ரவிக்குமார், பிரபஞ்சன்? என்ற கேள்வியானது கீழ்வரும் வரலாற்றுப் பின்னணியில் தான் எழுந்துள்ளது. 

தமிழின் தமிழ்நாட்டின் இன்றைய சீர்கேடுகளுக்கான சமூக செயல்நுட்பமானது வீரியத்துடன் வளர்ந்த காலக்கட்டம் 1949 முதல் 1967 வரையில் ஆகும். ஈ.வெ.ராவின் ‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’ என்று சொன்ன பகுத்தறிவுடன் (https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html  ),

சிலப்பதிகாரத்தையும் உயர்த்தி, தி.மு.க‌ 'இரட்டைக்குழல் துப்பாக்கி'(?) வலிமையுடன்,

தமிழை தமது பொதுவாழ்வு வியாபார மூலதனமாக்கி வளர்ந்த காலக்கட்டம் அதுவாகும். அதே காலக்கட்டத்தில் 'வளர்ந்த' தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில் எவருமே ஈ.வெ.ரா தமிழ் தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக விளக்கம் தந்ததாகத் தெரியவில்லை.

தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில் எவராவது ஈ.வெ.ராவின் தமிழ் தொடர்பான‌ கேள்விகளுக்கு அறிவுபூர்வமான விளக்கம் தந்திருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவ்விளக்கத்தினை நான் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

செல்டன் பொல்லோக்காக இருந்தாலும், "தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே என்று அறிவித்துள்ள‌ (தி.மு.க தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பெற்ற) ஜார்ஜ் ஹார்ட்டாக இருந்தாலும், டேவிட் டீன் சுல்மனாக இருந்தாலும், வேறு உலக அளவில் புகழ் பெற்ற அறிஞராக இருந்தாலும், தமிழ் தொடர்பான அவர்களின் தவறான ஆய்வு முடிவுகளுக்கு எதிரான சான்றுகள்,

அவ்வை நடராஜன், வைரமுத்து போன்ற கருணாநிதிக்கு நெருக்கமாகி ஊடகத்தில் செல்வாக்கு பெற்ற அறிஞர்களிடமிருந்து வெளிப்பட்டால் தான், அந்த தவறான ஆய்வு முடிவுகளால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும். அந்த சமூகப் பொறுப்பினை அவர்கள் தட்டிக்கழித்தால்,

அவர்களும் 'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமையாளர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியாது.

ஊடக பலத்தில் உயரப் பறக்கும் நோஞ்சான் புலமையாளர்களின் ஆய்வுகள் என்ற பிம்ப பலூன்களை எல்லாம், இளம் ஆய்வாளர்கள் துணிச்சலுடன் அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின் மூலம் வெடித்து சிதற வைக்கும் போக்கையும் ஊக்குவிக்க வேண்டும்.

அப்போது தான், 'நோஞ்சான் நோய்ச்சிறையில்' சிக்கியுள்ள‌ தமிழ்ப்புலமைக்கு விடுதலை கிடைக்கும். (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html )

ஒரு திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா பாடியவாறு,

தமிழ்நாட்டில் ஊடக பலத்தில் உயரப் பறக்கும் பிம்ப பலூன்களான பெரிசுகள் எல்லாம், 'சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு; இல்லே, சலாம் போட்டு ஓடி' விட வேண்டிய காலமும் நெருங்கி விட்டது.

No comments:

Post a Comment