Monday, January 5, 2015


           தமிழரின் அடையாளச் சிதைவும்

                        புலமை வீழ்ச்சியும் (1)


ஒரு சமூகத்தில் பண்பாடு என்பதே அடையாளத்தின், கண்டுபிடிப்புகளின், படைப்பாற்றாலின் மூலம் (A source of identity, innovation, and creativity.) என்று யுனெஸ்கோ அறிக்கை (கீழே) தெரிவிக்கிறது. எனவே தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியில் சாதி ஒழிப்பு/மத ஒழிப்பு என்ற பெயரில் நடந்த பண்பாட்டு ஒழிப்பு முயற்சிகளின் பங்கும் ஆய்விற்குறியதாகும். ('தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்'; https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html
 
இந்திய சமூகம் ஒரு சீரற்ற(heterogeneous)  சமூகம் என்பதையும், அங்குள்ள சிக்கல்களை ஒரு சீரான(homogenous)  சமூகமாகக் கருதி அணுகுவதில் உள்ள தவறுகளையும் ஏற்கனவே பார்த்தோம். (‘Is globalization a new Marxist Avatar? (Or Heterogeneous Societies and the Mode of Production)’;https://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html ]  

பிறக்கும் குழந்தை வளரும் போது, அக்குழந்தையின் வளர்ச்சியின் ஊடே, தமது குடும்பம்,மொழி,சாதி,மதம்,நாடு உள்ளிட்ட ஒரு மனிதருக்கான, பண்பாட்டுடன் தொடர்புடைய‌ அடையாளக் கூறுகளும் வளர்கின்றன. அவ்வாறு வளர்கின்ற அடையாளக் கூறுகளில், பண்பாட்டுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த‌ , சாதியும் மதமும் எதிர்க்கப்பட வேண்டிய அடையாளங்களாக ,  மக்கள் செல்வாக்குடன் திராவிட/முற்போக்கு  இயக்கங்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள்/போராட்டங்கள் போன்றவற்றில்,  இந்தியாவில் தனித்துவமாக,  தமிழ்நாடு உள்ளது. அதாவது தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை என்ற பிரச்சாரமானது,  சமூக நீதிக்கான போராட்டத்தில் பின்னிப் பிணைந்து தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டதே,  அந்த வித்தியாசத்திற்கு வழி வகுத்தது.

“நமது சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மீது பலவிதமான வழிகளில் செல்வாக்கு செலுத்துவதாக, நமது மனதில் உள்ள,  அடையாளம் இருக்கிறது.”- நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர் அமர்த்யா சென்
‌ ( ‘the conception of identity influences , in many different ways, our thoughts and actions’ xii ‘Identity and Violence, The Illusion of Destiny’ Amartya Sen) 

எனவே ஒரு சமூகத்தின் பண்பாட்டில் ஏற்படும் சிதைவு முயற்சிகள், அந்த சமூகத்தின் அடையாளத்திலும், புலமையிலும் சிதைவை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

மேலேக் குறிப்பிட்டவாறு தமிழ்நாடு வித்தியாசமாகப் பயணித்ததன் காரணமாகவே, பல பரிமாணங்கள் கொண்ட இலக்கியங்களிலும் புராணங்களிலும் மூடநம்பிக்கை என்ற இரைச்சலை மட்டுமே பார்த்து, அவை ஒழிக்கப்பட வேண்டியவைகளே என்ற முடிவுக்கு இட்டுச் சென்றதா? அவற்றில் இருந்த புலமை தொடர்புள்ள 'சிக்னல்களை' ,உணர முடியாமல் போனதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?‘; https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html &‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’; https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பகிரங்மாக மோடியை எதிர்த்து கருத்து வெளியிட்ட, இந்துத்வா எதிர்ப்பாளராகிய, அமர்த்யா சென் தெரிவித்த கீழ்வரும் கருத்து கவனிக்கத்தக்கதாகும். 

கி.பி 476இல்  சமஸ்கிருதத்தில் பூமியின் சுழற்சி பற்றி,ஆர்யபட்டா தெரிவித்த அறிவியல் கருத்துக்களை, இந்திய வானியல் அறிஞர்களில், 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  வராகமிகிராவும், 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரம்மகுப்தாவும் விரிவாக ஆராய்ந்து நூல்கள் எழுதியுள்ளார்கள்.8 ஆவது நூற்றாண்டில் பிரம்மகுப்தாவின் நூல் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்பின் 11 ஆவது நூற்றாண்டில் அந்த அரபு நூலை ஈரான் கணித அறிஞர் அல்பெருனி ஈரான் மொழியில் மறு மொழிபெயர்ப்பு செய்தார்.18 ஆம் நூற்றாண்டில் கல்கத்தாவில் கிழக்கு இந்திய கம்பெனியில் பணியாற்றிய வில்லியம் ஜோன்ஸ் என்ற வெள்ளையர்,  அந்த சம‌ஸ்கிருத நூல்களைப் படித்து,தொன்மை இந்திய வானியல் அறிவை வெளிப்படுத்திய நூல்களைப் பாராட்டினார். (Pages 87-88; ‘Identity and Violence, The Illusion of Destiny’ Amartya Sen)

அதாவது வடநாட்டில் இந்துத்வா எதிர்ப்பாளர்களும் கூட இந்திய பாரம்பரியத்தில் தொன்மை இந்தியாவில் சமஸ்கிருத நூல்களில் இருந்த புலமையை அடையாளம் கண்டு பாராட்டினார்கள். இன்று வரை உலக அரங்கில் பாராட்டப்படும் புலமை வாய்ந்த படைப்புகள், வட இந்தியர்களிடமிருந்து வெளிவருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் பழந்தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும், அது போல இருந்த புலமையை அடையாளம் காணாமல், இழிவு படுத்தி, திராவிட இயக்கம் வளர்ந்த போக்கில், ஏற்கனவே புலமையை வெளிப்படுத்தி வந்த நூல்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து, இன்று சிறும(minimum) நிலையில் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'திராவிடர்,திராவிட,தமிழர்' போன்ற அடையாளக் குழ‌ப்பங்களும் இந்த பின்னணியில் ஆய்விற்குரியதாகும்.

குடும்பம்,மொழி,சாதி,மதம்,நாடு மட்டுமின்றி,வரலாற்று அறிஞர், சைவ உணவு உண்பவர், எழுத்தாளர்,பெண்ணுரிமையாளர், சுற்றுப்புற சூழல் ஆர்வலர் என்று பலவகை அடையாளக் கூறுகள் ஒரு மனிதரின் மனதில் உள்ள அடையாளத்திற்குள் இருக்க வாய்ப்புண்டு. ஒரு மனிதரின் வளர்ச்சியில், வாழ்வில் பல்வேறு கட்டங்களில், அவரின் மனதில் உள்ள ஈடுபாடுகளுக்கு ஏற்றவாறு, அந்த கூறுகள் ஒவ்வொன்றும் இடம் பெறுவதும், வளர்வதும், அவரை விட்டு அகல்வதும் அந்த மனிதர் மரணமடையும் வரை,இயக்கத்தன்மையில்(Dynamic) உள்ளவையாகும்.

மனித இயல்பில் உள்ள அடையாளக்கூறுகள் மீதுள்ள பற்றுகளிலிருந்து விடுபடுவதன் முக்கியத்துவம் பற்றி, திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களிலும், சமஸ்கிருத நூல்களிலும் உள்ளன. நவீன காலத்தில் பல சிந்தனையாளர்கள், குறிப்பாக உலகப் போர் காலங்களில், நாட்டுப்பற்றில் உள்ள அபாயங்கள் பற்றி விளக்கியுள்ளார்கள். 

இலங்கையைச் சேர்ந்த ஆபிரகாம் கோவூர் போன்றோர் மொழி, மதம், இனம், நாடு போன்ற பற்றுகளைக் கடந்து, 'யாதும் ஊரே;யாவரும் கேளீர்' என்ற வகையில், உலகக் குடிமகனாக‌ வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.மிகுந்த கல்வியறிவும் புலமையும் உள்ளவர்கள் மட்டுமே விதி விலக்காக அவ்வாறு வாழ முடியும்.

நாட்டுப்பற்றினைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்த முடியும் என்பதற்கும், அதே நாட்டுப்பற்றை சரியாகப் பயன்படுத்தி, அடிமைப்பட்ட நாடு விடுதலை பெற முடியும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உண்டு.

அதே போல் சாதிப்பற்றைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சாதி இன்னொரு சாதியை அடிமைப்படுத்த முடியும். அதே சாதிப்பற்றை சரியாகப் பயன்படுத்தி, அடிமைப்பட்ட சாதி விடுதலை பெற முடியும்.

சாதிப்பற்று, நாட்டுப்பற்று உள்ளிட்ட பற்றுகளிலிருந்து விடுபட்டு, உலக மனிதராக வாழ்வது என்பது விதிவிலக்கான சிலரால் மட்டுமே முடியும். அப்படி வாழ்பவர்கள் தமது நாட்டின் அரசியல் சமூக மாற்றங்களில், எந்த அளவுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்க முடியும் என்பதும் ஆய்விற்குரியது.

நாட்டுப்பற்றை எதிர்த்து செயல்படுவதைப் போன்றதே, சாதி/மத பற்றுகளை எதிர்த்து செயல்படுவதும் ஆகும். 

நாட்டுப்பற்றை விட, மனிதரின் பண்பாடு தொடர்புடைய அடையாளக் கூறுகளில் சாதியும், மதமும் முக்கிய பங்கு வகிப்பவையாகும்.

மேலை நாடுகளில் நாட்டுப்பற்று எதிர்ப்பு என்பது அறிவுபூர்வமாக முன்வைக்கப்பட்டது. ஆனால் 1944க்குப்பின்,  தமிழ்நாட்டில் உணர்வுபூர்வ போக்குகளின் ஊடே 'சாதி/மத' எதிர்ப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதானது,  கீழ்வரும் விளைவுக்குக் காரணமா? 1994க்கு முன் 'படித்த முற்போக்காளார்கள்' இது போன்று செயல்பட்டிருந்தால், 'குடி அரசு' இதழில் அவர்களின் புகைப்படங்களோடு, அவர்களின் இரட்டை வேடப் போக்குகளை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வெளிவந்திருக்காதா? என்பவை ஆய்விற்குரியதாகும்.

“சென்னையில் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பின் சார்பில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவில் 'அந்த சாதியை'ச் சேர்ந்த ' கம்யூனிஸ்ட், திராவிட, முற்போக்கு, ஆன்மீக'  புலமையாளர்களாக இருந்த, 'முற்போக்கு, பிற்போக்குகள்' எல்லாம் கெளரவிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு 'இரட்டை வேட' 'சீர்திருத்த' 'புலமையாளர்கள்' தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். வேறு (பெரும்பாலும் தம்மை விட மேலான) சாதியில் திருமணம் செய்து, நல்ல வசதி வாய்ப்புகளுடன் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பவர்கள் தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் கல்வியில் வேலையில் இட ஒதுக்கீடு பலன்களை (தமது சாதியில் முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்புகளை அபகரித்து) அனுபவித்து வாழ்பவர்களில் பலர், 'சாதி ஒழிப்பு'  வீரர்களாகப் பாராட்டப்படும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உண்டு.” ('குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?’; https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

சமூகவியல் நோக்கில் ஒரு மனிதரின் தராதரம், குலம், கோத்திரம் ஆகியவற்றைப் பொறுத்தே ('சாதியை எதிர்த்த பெரியார்,  'சாதி புத்தி' பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்) ,ஒரு மனிதர் மனித உறவுகளில் 'கள்வர்' (திருக்குறள் 813)ஆவதைத் தடுக்கும் 'அகத்தடை' அவரது மனதில் செயல்படும். மீறி அவர் கள்வராக முயன்றாலும், அவரின் குடும்பம்,சாதி, மதம் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான சமுக வட்டத்தில்,  உள்ள 'தவறுக்கான அகத் தடை' வலுவாக உள்ள மனிதர்கள், அவரை கள்வராக விடாமல், தடுப்பார்கள். 'திராவிட மன நோயாளித்தனத்தின்' வளர்ச்சியின் ஊடே, முன்னெடுக்கப்பட்ட சாதி/மத எதிர்ப்பு முயற்சிகளானது, தமிழ்நாட்டில் இருந்த அக,புற தடைகளை உள்ளடக்கிய ‘சமூக செயல்நெறி மதகுகளை’(social functional checks) 'செல்லரிக்க'ச் செய்ததா?(’தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’; https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html) அந்த 'கள்வர்களுக்கு 'தமிழ் உணர்வு,பகுத்தறிவு' முகமூடிகளாக செயல்பட்டதா? என்பவை ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில், நானறிந்தது வரையில், முதுகளத்தூர் சாதிக் கலவரத்திற்கு முன், அதிக உயிரிழப்பையும், சேதத்தையும் ஏற்படுத்திய சாதி/மத கலவரங்கள் தமிழ்நாட்டில் அதற்கு முன்னும்,  காலனிய ஆட்சி காலத்திலும் நடந்தது கிடையாது. முதுகளத்தூர் கலவ்ரத்தில் தீர்க்கப்படாத 'மர்மங்கள்' இருப்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

“வழிபாட்டுப் புழுதிப் புயலில், உணர்வுபூர்வ போதைக் காற்றைப் பயன்படுத்த, தேச,  சர்வதேசச் சதிகள் இருக்கலாம் என்ற ஐயத்தை எழுப்பும் வகையில், முத்துராமலிங்கத் தேவர் தொடர்பான வழிபாட்டுப் புழுதிப் புயல் உள்ளது. (தனிநாடு, ஆயுதப் போராட்டம், பெண்ணுரிமை, மனித உரிமை, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு போன்ற பல நோக்கங்களில் செயல்படும் இயக்கங்கள் எல்லாம் சர்வதேசச் சதியில் சிக்க வாய்ப்புள்ள பின்னணியில்  வெளிவந்துள்ள ஆங்கில நாவல் ‘The Aquitaine Progression’ by Robert Ludlum)  
.
இந்தியா விடுதலைக்கு முன் காலனி ஆட்சியில் உளவுப் பிரிவினர் செயல்பாடு பற்றிய இரகசியங்களும், அந்த செயல்பாடுகள் நேரு ஆட்சியில் எவ்வாறு தொடர்ந்தன என்பது பற்றிய இரகசியங்களும் 'இரகசிய நீக்கம்' (Declassify) செய்யப்பட்டு வெளிவரும் போது தான் உண்மைகள் வெளிப்படும்.மோடி ஆட்சியில் அக்கருத்துள்ளவர்கள் அமைச்சர்களாயிருப்பதால், அதற்கு சாத்தியமிருக்கிறது. 

விடுதலைக்குப் பின், பிரதமர் நேருவுக்குத் பாராளுமன்றத்தில் தலைவலியாக இருந்த பிரச்சினை,  நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் மறைவு(?) பற்றி முத்துராமலிங்கத் தேவர் பேசிய பேச்சுக்களே ஆகும். அவை பாராளுமன்ற நூலகத்தில் இன்றும் சாட்சி ஆவணமாக இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அந்த காலத்தில் நேருவை எதிர்த்து துணிச்சலுடன் பொதுக்கூட்டங்களில் முத்துராமலிங்கத் தேவர் பேசியுள்ளார்.

தேவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் அவரை ஆன்மீகமும், தேசபக்தியும் மிகுந்த நேதாஜியின் சீடராகவே வெளிப்படுத்துகின்றன. காமராசர் ஆட்சியில் முதுகளத்தூர் கலவரத்தில் அவரை, 'இலாவகமாக'ச் சிக்க வைத்து, 'சாதித் தலைவராக' ஊதிப் பெருக்க வைத்து , பின் அவர் மரணமடைந்ததில், மேலேக் குறிப்பிட்ட 'தலைவலியிலிருந்து' நேரு விடுதலைப் பெற்றார். முதுகளத்தூர் உள்ளிட்டு தமிழ்நாட்டில் இன்று வரை நடந்து வரும் சாதிக் கலவரங்களில் 'வெளி சக்திகளின்' பங்கு பற்றிய ஆய்வு அவசியமாகும். திருச்சி பெரியார் மையத்தில் நான் பங்காற்றிய காலத்தில் தோட்டக்குறிச்சி, நெற்குப்பை,ராஜபாளையம், போடி, சாதிக் கலவரங்களை நேரில் சென்று, ஆய்வு செய்தோம். அந்த அறிக்கைகள் 'விடுதலை' இதழிலும், புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. அது போன்று 'திறந்த மனதுடன், அறிவு நேர்மையுடன்' ஆய்வுகள் முதுகளத்தூர் முதல் இன்றுவரை நடந்துவரும் சாதிக் கலவரங்கள் வரை மேற்கொள்ளப்பட்டால், அந்த 'வெளி சக்திகள்' பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிப்பட வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் வீசி வரும் வழிபாட்டுப் புழுதிப் புயலில் அதற்கெல்லாம் வாய்ப்பு உண்டா?

நேதாஜி தொடர்பாக முத்துராமலிங்கத் தேவர் பேசியுள்ள பேச்சுகளுக்கு வலிவு சேர்க்கும் சான்றுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.உதாரணம் கீழுள்ள தளங்கள்:
http://www.firstpost.com/blogs/secret-document-raises-questions-about-netajis-death-1259707.html
(வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

அதன்பின் 1968 இல் அண்ணா முதல்வராக இருந்த போது 'கீழ வெண்மணி' சாதிக் கலவரம் நடந்தது. அதிலிருந்து அவ்வப்போது தமிழ்நாட்டில் சாதிக்கலவரங்களும், மதக் கலவரங்களும் நடந்து வந்துள்ளன. எனவே 1944இல் முளைவிட்டு வளர்ந்த உணர்வுபூர்வ போக்கானது, தமிழ்நாட்டில் நடந்து வரும் சாதி/மதக் கலவரங்களுடன் எந்த அளவுக்கு தொடர்பு கொண்டது என்பதும் ஆய்விற்குரியதாகும்.  ஆனால் மோடி குஜராத் முதல்வரான பின் 2002இல் அங்கு மதக் கலவரம் நடந்தது. 2002க்கு முன்னும் பின்னும் இந்தியாவில் பல இன்னும் மோசமான மத/சாதி கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால் மோடி போன்று எந்த முதல்வர் மீதும் விசாரணை நடக்கவில்லை; கடுமையான விமர்சனமும் மீடியாக்களில் வெளிவரவில்லை. இதில் வியப்பென்னவென்றால், குஜராத் கலவரத்தில் உரிய பாடங்கள் கற்று, மத வெறியர்களை கட்டுப்படுத்தியதன் விளைவாக, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, குஜராத் உள்ளிட்டு பா.ஜ.க ஆளும் வட மாநிலங்களில் மதக்கலவ்ரம் நடக்கவில்லை. மோடி மீது கோபம் கொண்ட சில இந்துத்வா அமைப்புகள் 2002க்கு பின் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் மோடியை எதிர்த்து தேர்தலில் செயல்பட்டார்கள். அவர் பிரதமராவதைத் தடுக்கவும் கடைசி வரை முயற்சித்தார்கள்.

,மனிதர் மனங்களில் உருவாகும் தேவைகளும், ஈடுபாடுகளும் அவர்களின் அடையாளத்தோடு தொடர்புடையவையாகும். மனிதரின் செயல்படுகளுக்கான சமூக ஆற்றலின் மூலங்களாக அவர்களின் மனங்களில் உள்ள தேவைகளும், ஈடுபாடுகளும் இருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். (‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’; https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html  )

எனவே, மேலேக் குறிப்பிட்டவற்றின் பின்னணியில், உணர்வுபூர்வ போக்கில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சாதி/மத எதிர்ப்பு முயற்சிகளால்,  தமிழ்நாட்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, என்பதை, பண்பாடு, அடையாளம் பற்றிய உலக ஆய்வுகளின் அடிப்படையில்  ஆராய வேண்டியது அவசியமாகும்.

குறிப்பு :
Culture, in all its dimensions, is a fundamental component of sustainable development.
As a sector of activity, through tangible and intangible heritage, creative industries and various forms of artistic expressions, culture is a powerful contributor to economic development, social stability and environmental protection.
As a repository of knowledge, meanings and values that permeate all aspects of our lives, culture also defines the way human beings live and interact both at local and global scales.
A source of identity, innovation, and creativity.
A set of distinctive spiritual and material, intellectual and emotional features of a society or a social group.
A complex web of meanings, relationships, beliefs, and values that frames people’s relationship to the world.
Acquired through the process of cultivation and improvement of the individual, especially by means of education.
An evolving dynamic force relevant to all societies, local or global.
Influenced by and in turn influences world-views and expressive forms. Located in a time and a place.
While culture in the abstract is a set of mental constructs, it is rooted in a place at a moment in history and is always local.
A renewable resource if it is carefully nurtured for it to grow and flower.
When neglected, it is easily lost or destroyed.
From: ‘The Power of Culture for Development’
http://unesdoc.unesco.org/images/0018/001893/189382e.pdf

No comments:

Post a Comment