Friday, May 3, 2019

நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்' (4)    

 

தஞ்சை  ராமையாதாஸ், பட்டுக்கோட்டை பாணியில் 

 

'புதிய' இசை ரசனையின் திசை



மேற்கத்திய உலகில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒரு சமூகத்தில் இசை ரசனையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான பல கேள்விகளுக்கான‌ விடைகள் இன்னும் வெளிப்படவில்லை
(‘Research is looking for factors that play a role in the formation of taste apart from social background, such as personality traits and key experiences.’; https://www.mpg.de/9788807/F001_focus_018-025.pdf )

தமிழ்நாட்டில் 1944 முதல் இன்று வரை, 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக 'சிதைவுகளுடனும், குழப்பங்களுடனும்' முன் நிறுத்தப்பட்ட 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்கள் தொடர்புடைய இசை ரசனையானது 1950கள் முதல் இன்றுவரை என்னென்ன மாற்றங்களைப் பெற்று வந்துள்ளன? அந்த மாற்றங்களின் ஊடே தி.மு.கவின் வளர்ச்சி, 1967 ஆட்சி மாற்றம், பின் தி.மு. வில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆரின் ...தி.மு. காரணமாக இரண்டு கட்சிகளின் பண்பு வேறுபாடுகள் எல்லாம் 

அந்தந்த கட்சிகளின் இசை ரசனையில்  என்னென்ன வேறுபாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன?  இன்றும் தி.மு. எதிர்ப்பு அரசியலுக்கு எந்த அளவுக்கு  எம்.ஜி.ஆர் படப்பாடல்களின் இசை ரசனை பயன்பட்டு வந்துள்ளது?

எனது பள்ளிப்பருவம் முதல் இன்று வரை சந்தித்து வரும் இசை அனுபவங்கள் மூலமாக மேற்குறிப்பிட்டகேள்விகளை அடையாளம் காணும் வாய்ப்புகளும், எனது இசை ஆராய்ச்சி மூலமாகவும், 1994 முதல் இன்று வரை நான் உருவாக்கி வரும் இசைகளையும், அவற்றில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்களையும் பின்னூட்டங்களுக்கு உட்படுத்தி கிடைத்த உள்ளீடுகள் (inputs) அடிப்படையிலான ஆய்வுகள் மூலமாகவும்;

மேற்குறிப்பிட்ட விடைகளைத் தேடும் முயற்சியிலும் முன்னேறி வருகிறேன்.

தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும், வளர்ந்து வரும் சமூக விசைகள் (Social Forces) யாவை? தேய்ந்து வரும் சமூக  விசைகள் யாவை? என்ற ஆராய்ச்சிக்கு, இன்று வளர்ந்து வரும், மற்றும் தேய்ந்து வரும் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளை ஆராய்வது பலன் தரும்.

அந்த 'சாவியை' (Key), பழந்தமிழ் இலக்கியமான 'நாலடியார்', கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளது.

"பணிவு இல் சீர்
 மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
 கோத்திரம் கூறப்படும். " - நாலடியார் 25:2
(‘The history of a city and the history of music of the city are intertwined’; http://musicdrvee.blogspot.in/2012/08/history-of-city-and-history-ofmusic.html  &

மேற்குறிப்பிட்ட பதிவானது, இசையானது எவ்வாறு ஒரு ஊரின் 'யோக்கியதையை' கண்டுபிடிக்க துணை புரியும்? என்று விளக்கியுள்ளது. (‘திரை இசை ரசனையானது, சுருதி சுத்தமான திசையில்  மீண்டும் பயணிக்குமா?’; http://tamilsdirection.blogspot.com/2018/11/3-social-forces.html)

சுருதி சுத்தத்திற்கு இலக்கணமாகும் (எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பது) பாடல்களில் ஒன்றாகிய 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற திரைப்படப்பாடலை பின்பலமாகக் கொண்டு வெளிவந்துள்ள வெற்றிப்படமே 'LKG' ஆகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2019/02/normal-0-false-false-false-en-us-x-none_26.html)

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த 'மலைக்கள்ளன்' திரைப்படத்தில் 'எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை எழுதியவர்  தஞ்சை ராமையாதாஸ்.

 
பலநேரங்களில் எந்தப் பாடல் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடல், எது தஞ்சை ராமையாதாசின் பாடல் என பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு நல்ல பல பாடல்களை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

மேற்குறிப்பிட்ட பாடல்களின் திரை இசை ரசனையை ஒட்டி, 1990களின் பிற்பகுதியில் கீழ்வரும் பல்லவி கொண்டபாடலை நான் எழுதினேன்.

''பலித்தவரையில் பார்ப்போம் என்பவன்
பிச்சைக்காரனடா  ‍ - தமக்கு
பலித்தவரையில் பார்ப்போம் என்பவன்
பிச்சைக்காரனடா ‍ - அதில்
பணக்காரன் படித்தவன் பதவிக்காரன் - என்ற
 பேதமில்லையடா'

சுமார் 20 வருடங்களுக்கு முன், சென்னை ராயப்பேட்டையில் நேர்மையான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் குடும்பங்கள் மிகுந்த 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம் ஒரு குழுவாக‌ ‘பாலகுரு- பத்ரிஎன்ற இருவரின் தலைமையில் செயல்பட்ட போது, திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கிய 'சிக்னலை' அங்கு உணர்ந்தேன். சென்னையில் ரவுடிகளின் 'கட்டப்பஞ்சாயத்திற்கு' இடமில்லாத வகையில், அந்த பகுதியில் சமூக அக்கறையுடன் அக்குழு செயல்பட்ட காலத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி, அந்த பகுதியில் அப்போது வாழ்ந்த (நடிகர் நெப்போலியன் உள்ளிட்டு) பிரபலங்கள் அவர்களை ஆதரித்த அதிசயத்தையும் அங்கு கண்டேன். எனவே பாலகுரு துணையுடன், இள வயது ஆண்களும் பெண்களும் சுமார் 40 பேர் நிறைந்த, மிகவும் எளிமையான ஒரு கூடத்தில், மேற்குறிப்பிட்ட எனது பாடலை நானே பயிற்சி கொடுத்து பாட வைத்தேன். அது எனக்கு மறக்க முடியாத அனுபவமானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா' பாடல் பாணி மெட்டில் எனது பாடல் இருப்பதையும் பாலகுருதான் சுட்டிக்காட்டினார்.

 
பின் சில வருடங்களில் மேற்குறிப்பிட்ட இருவரும் பகையாளியாகி, பத்ரி கொலையில் மரணமானதும் எனக்கு மறக்க முடியாத கசப்பானது. அந்த இருவரில் பாலகுரு 'பெரியார்' ஆதரவாளர் அகும் முன்பு, காவடி எடுத்த தீவிர முருக பக்தராக வாழ்ந்தவர் ஆவார். சமூகவியல் ஆய்வு நோக்கில், அந்த பகுதிக்கு மீண்டும் சென்று அக்குழுவில் இருந்தவர்களைச் சந்திக்கும் எண்ணமும் எனக்கு இருக்கிறது

ஒரு கட்சியின் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலான தொடர்புகளில் (links), உணர்நுட்பமும் (Sensitivity), வெளிப்படைப் போக்கும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளதோ, அந்த அளவுக்கு சமூக ஆற்றல் (Social Energy) இழப்புகளைச் சந்திக்க நேரிடும்? என்ற கேள்விக்கும், அந்த ஆய்வானது துணை புரிய வாய்ப்புள்ளது. 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

சமூகம் (அல்லது கட்சி)  'சீரழிவு' திசையில் பயணித்தால், அந்த சமூகத்தில் (கட்சியில்) 'சீராக' இருக்க வேண்டியவர்களில், பெரும்பாலோர் சீரழிந்துள்ளார்கள் என்பது காரணமாகும். அந்த நிலையில் மீட்சியின் அறிகுறியாக, சாதாரண மனிதர்களிடையே, அல்லது முன்பு 'சீரழிந்தவர்களாக' கருதப்பட்டவர்களிடையே, 'சீரான' மனிதர்கள் வெளிப்படும் போக்கானது துவங்கும்.' என்பதையும்;

'சமூகத்தின் 'சீராக' இருக்க வேண்டியவர்களில், பெரும்பாலோர் சீரழிந்து வரும் போக்கும், அத்தகையோரின் திரை இசை ரசனையானது செல்வாக்கிழந்து வரும் போக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். அது போலவே, சாதாரண மனிதர்களின், அல்லது முன்பு 'சீரழிந்தவர்களாக' கருதப்பட்டவர்களின் திரை இசை ரசனையான 'கானா' மற்றும் 'குத்து' பாடல்கள் செல்வாக்கு பெற்று வந்தபோக்கும், சீரழிவிலிருந்து தமிழ்நாடு மீண்டு வரும் போக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். 'அந்த' திரை இசை ரசனையிலும் ஆக்கபூர்வமான திருப்பு முனைக்கட்டத்தில் தமிழ்நாடு இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.' என்பதையும்;
ஏற்கனவே விளக்கியுள்ளேன்

(1) கொலைவெறிப்பாடல், (2), பேட்ட திரைப்படத்தில் பின்னணி இசையாக வெற்றி பெற்ற பழையப் பாடல்கள்;

(3) திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய ரவேற்கத்தக்க வகையில் 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள்;

ஆகிய மூன்றும் எவ்வாறு திரை இசை ரசனையின் திருப்புமுனை 'சிக்னல்களாக' வெளிப்பட்டுள்ளன? என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html)

தமிழ்நாட்டில் மைக்ரோ உலகில் வெளிப்பட்ட  நம்பிக்கையூட்டிய சிக்னல்கள் எல்லாம், மேக்ரோ உலக பெரிசுகளின் சுயலாபக் கணக்கு பொதுவாழ்வில் சுவடின்றி மறைந்து வந்துள்ளனவா? என்ற கேள்வியும் மேற்குறிப்பிட்ட ஆய்வில் இடம் பெற்றுள்ளது. 'சமூகத்தின் 'சீராக' இருக்க வேண்டியவர்களில், பெரும்பாலோர் சீரழிந்து வந்த போக்கே, அதற்கு காரணமா? என்ற கேள்வியும் அதில் அடங்கும். 'அந்த' மேக்ரோ உலக பெரிசுகளின் மீதுள்ள சமூக கோபத்தின் வெளிப்பாடாகவே, 'குத்து' நடனங்களும், 'குத்து' பாடல்களும் திரை இசையில் செல்வாக்கு பெற்று வந்தன.

கொலைவெறிப்பாடல்,
பேட்ட திரைப்படத்தில் பின்னணி இசையாக வெற்றி பெற்ற பழையப் பாடல்கள்,
தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய ரவேற்கத்தக்க வகையில் 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள்,
LKG-இல் பின்னணி இசையாக வெற்றி பெற்ற 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' பாடல்,

போன்றவை எல்லாம், திரை இசை ரசனையின் புதிய திசையை எனக்கு உணர்த்தியுள்ளன

தஞ்சை ராமையதாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோரின் சமூகத்திற்கான  பாடல்களை, இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் வளர்க்க வேண்டிய 'புதிய' இசை ரசனை உருவாகியுள்ளது. அந்த சமூகத் தேவைக்கான பாடலாசிரியர்களையும், இசை அமைப்பாளர்களையும், பயிற்சி மூலமாக உருவாக்க‌, எனது ஆய்வுகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி, முயற்சிக்கப் போகிறேன்.

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)

No comments:

Post a Comment