Sunday, July 28, 2019


நம்ப முடியாத அளவுக்கு இரண்டும் கெட்டானாக‌ 

                சீரழிந்துள்ள தமிழ் இசைக்கல்வி



'மேற்கத்திய நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு தமிழிசைக் கல்வி கற்பிப்பதற்கான பாடத்திட்டங்களை உருவாக்க, சுவிட்சர்லாந்தில் ஒரு நிபுணர்கள் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டுள்ளோம். நீங்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும்' என்று 1990களில் சென்னையில் விடுதலை இராசேந்திரன் வீட்டில் என்னைச் சந்தித்த ஒரு விடுதலைப்புலி ஆதரவாளர் என்னிடம் தெரிவித்தார்எனது இசை ஆராய்ச்சிகள் பற்றி அறிந்த அவர், விடுதலைப்புலிகளின் முட்டாள்த்தனமானதீண்டாமையில்நான் இருக்கிறேன், என்பது தெரியாமல் அவ்வாறு பேசினார்.

'விடுதலைப்புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறார்களா?' (1988 மார்ச்) நூல் வெளிவந்த பின், பேபி சுப்பிரமணியம் உள்ளிட்ட விடுதலைப்புலி தலைவர்கள் எல்லாம் என்னை நேரில் சந்திக்க நேரும் போது, முகத்தைத் திருப்பிக் கொண்டு, 'தீண்டாமை' கடைபிடித்தார்கள். பின் 'எம்.ஜி.ஆர் மறைவும்இலங்கைப் பிரச்சினையும்' நூல் வெளியிட்ட போது, நேரில் சந்திக்க வெட்கப்பட்டு, சேலத்தில் தி. மாநாட்டில் அப்புத்தகம் விற்றவர்களிடம் நூற்றுக்கணக்கில் வாங்கிச் சென்றார்கள். தம்மை ஆதரித்தாலும், விமர்சித்தவர்கள் மீது தீண்டாமையை கடைபிடித்த முட்டாள்களாகவே பயணித்தார்கள். எனவே புலம் பெயந்த தமிழர்களுக்கான 'தமிழ் இசைக்கல்வி' பாடத்திட்டம் வகுக்க, சுவிட்சர்லாந்திற்கு என்னை அழைக்க மாட்டார்கள்; என்பதை நான் யூகித்தேன். அவ்வாறே, எனக்கு ஏதும் தெரிவிக்காமலேயே அது நடந்தது.

ஆனால்  சிவத்தம்பி அதில் கலந்து கொண்டதானது, நான் எதிர்பார்க்காத ஒன்றாகும். 1990களின் பிற்பகுதியில், எதிர்பாராத வகையில், சென்னைப்பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சிவத்தம்பியை நான் சந்தித்த போது, அது எனக்கு தெரிய வந்தது.

‘‘பல வருடங்களுக்கு முன், என் மனைவி "பேரா.சிவத்தம்பி என்பவர் போனில் பேசினார். தான் வயதானவர் என்றும், சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள என்னை அய்யா சந்திக்க விரும்புகிறேன் என்று  சொன்னதாகவும்என்னிடம் சொன்னார். மறுநாள் காலை அவரைச் சந்தித்தேன். ஐரோப்பாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குழந்தைகள் இசை பயில்வதற்கான பாடத்திட்டத்தை சுவிட்சர்லந்தில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் உருவாக்கி எடுத்து வந்திருப்பதாகவும், சென்னைப் பல்கலைக்கழக இசைத் துறையில் என்னைப் பற்றி கேள்விப்பட்டு, என்னைப் பார்க்க விரும்பியதாகவும்,  எனது ஆலோசனை வேண்டும் என்றும் சொன்னார். அப்பாடத்திட்டத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் தமிழிசையியல் இன்றி, தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக இசைப் பாடத்திட்ட அடிப்படையில் உருவாக்கி இருந்தார்கள். அதைச் சுட்டிக் காட்டிய போது, அதை அவர் விரும்பாமல், நியாயப்படுத்தும் வகையில் பேசினார். பின் விபுலானந்த அடிகள் 'யாழ் நூல்' சுருதிக் கணக்கீடுகளில் இருந்த குறைபாடுகள் பற்றி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழில் வெளிவந்திருந்த எனது கட்டுரையின் நகலை அவரிடம் கொடுத்தேன். அதன்பின் அந்த பாடத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களுக்கு என்னை அவர் அழைக்கவும் இல்லை.’ 
(‘கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ் அறிஞருடன் எனது அனுபவங்கள்’; 

இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகா எதிர்த்த, 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த 4 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணித்த 'வாழ்வியல் புத்திசாலியாக வாழ்ந்த' அவர், பின் விடுதலைப் புலி பிரபாகரன் கை ஓங்கிய காலத்தில், திருச்சி கே.கே.நகரில் வாழ்ந்த பிரபாகரனின் பெற்றோர்களை தரிசித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக 'ஞானஸ்நானம்' பெற்றார். எனவே தமிழ்ப்புலமையாளரான அவரை, புலம் பெயர்ந்த தமிழர்களின் 'தமிழிசைக்கல்வி' பாடத்திட்டம் உருவாக்கும் பணியை, விடுதலைப்புலிகள் அவரிடம் ஒப்படைத்தார்கள். தமிழ்நாட்டில் விடுதலைப்.புலிகள் காலுன்ற துணை புரிந்த வெகு சிலரில் ஒருவராகிய நான், ஈழ விடுதலையைக் காப்பாற்றும்  நோக்கில் முன் வைத்த விமர்சனத்தால், சிவத்தம்பியை விட தமிழ் இசையில் ஆழ்ந்த புலமையாளராக இருப்பது தெரிந்தும் புறக்கணிக்கப்பட்டேன். இழப்பு எனக்கா? புலம் பெயர்ந்த தமிழர்களின் தமிழ் இசைக்கல்விக்கா? 'கர்நாடக இசைக்கல்வி பாடத்திட்டத்தை 'காப்பியடித்து', தமிழிசைக்கல்வி என்று பயில்வதை விட, வேறு கேடு, தமிழ் இசைக்கல்விக்கு நேரிடுமா?

'கர்நாடக இசை உயர்வானது' என்ற தாழ்வு மனப்பான்மையில், தவறான திசையில் தமிழிசை ஆர்வலர்கள் பயணிப்பதையும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://musicresearchlibrary.net/omeka/items/show/2446)

15-ஆம் நூற்றாண்டில் புரந்தரதாசரால் உருவாக்கப்பட்டதே இன்றைய கர்நாடக இசைக்கல்வி முறையாகும். 'அந்த' பாடத்திட்ட முறையில், சமஸ்கிருத சொற்களுக்குப் பதிலாக, தமிழ்ச் சொற்களைப் போட்டு, பயில்வதானது, தமிழ் இசைக்கல்வி ஆகுமா?

அது போலவே, கர்நாடக இசையில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ள பாடல்களைப் போலவே, தமிழ்ப்பாடல்களை 'தமிழ் இசை' என்ற பெயரில் பாடுவதானது, எவ்வாறு தமிழ் இசைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்? என்பதை கீழ்வரும் காணொளியில் விளக்கியுள்ளேன்.


கர்நாடக இசைக்கல்வியில் இசைச்சுரங்களுக்கு இடையில் 'வாதி, சம்வாதி, அனுவாதி, விவாதி' என்று எந்த குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவாக கற்பிக்கப்படுகிறது.

கர்நாடக இசையைக் காப்பி அடித்து கற்பிக்கப்படும் 'தமிழ் இசைக்கல்வியில்'(?) அதையே பின்பற்றினால், குழப்பமில்லை.

ஆனால் 'இணை, கிளை, பகை, நட்பு' என்ற தமிழிசைக்கான இசை உறவுகளில்;

எது இணை? எது கிளை? எது நட்பு? எது பகை?

என்பதில் உள்ள குழப்பங்களை சரி செய்யாமல், அந்த குழப்பத்தையும், காப்பி அடித்து உருவான 'தமிழ் இசைக்கல்வியில் நுழைப்பதால், 'அந்த' தமிழ் இசைக்கல்வி' முறையில் பயிலும் மாணவர்கள் எல்லாம், இரண்டும் கெட்டான் போக்கில் இசை பயில்கிறார்கள்.

1996-இல் 'தமிழ் இசையின் இயற்பியல்(Physics of Tamil Music) முனைவர் பட்டம் பெற்றது முதல், உரிய சான்றுகளின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட இசை உறவுகள் பற்றிய விளக்கத்தினை தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன்.

மம்மது, அரிமளம் பத்மநாபன் உள்ளிட்டு இன்னும் பலர் தமிழ் இசை தொடர்பாக, பல நூல்களும், கட்டுரைகளும் வெளியிட்டு வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட எனது விளக்கம் சரி என்றோ, தவறு என்றோ, தெளிவுபடுத்தாமல், அவர்கள் எழுதியும் பேசியும் வந்தால், அதனால் 'அந்த' குழப்பத்துடன் 'தமிழ் இசைக்கல்வியானது' நீடிக்காதா

சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் 'பண்' என்ற சொல் தொடர்பான சான்றுகளில் உள்ள பொருள் என்ன? சமஸ்கிருத இலக்கியங்களின் 'ராகம்' என்ற சொல் தொடர்பான சான்றுகளில் உள்ள பொருள் என்னகர்நாடக இசைக்கல்வியில் 'ராகம்' என்ற பொருளில் என்ன கற்பிக்கப்படுகின்றன? என்று ஆராய்ந்தால், தமிழ் இசைக்கல்வி தொடர்பான நூல்களில், 'ராகம்' என்ற பொருளில், 'பண்' என்ற சொல்லினைப் பயன்படுத்துவதானது, எவ்வாறு தவறாகும்? என்பது விளங்கும். தமிழ் இசையில் 'அரும்பாலை' என்பதை சங்கராபரண ராகத்தில் வரும் சுரத்துடன் பொருத்தியதானது, எந்த அளவுக்கு சான்றுகளின் அடிப்படையில் சரி? என்பது ஆய்விற்குரியதாகும். சரி என்று வைத்துக் கொண்டாலும், சங்கராபரணம், அரும்பாலை, மேற்கத்திய இசையில் 'C-Major Scale' ஆகிய மூன்றிற்கும் உள்ள சுரங்கள் எல்லாம் ஒன்றே. அதனால் சங்கராபரணம் ராகமும், ''C-Major Scale'ம் ஒன்றாகாது; அது போலவே, சங்கராபரணம் ராகமும், அரும்பாலையும் ஒன்றாகாது.

சங்கராபரணம், அரும்பாலை, C-Major Scale ஆகியமூன்றிற்கும் உள்ள 7 சுரங்கள் எல்லாம் ஒன்றே என்றாலும், 'அந்த' 7 சுரங்களில் இருந்துஇசை அமைத்தலில் (Music Composing) எவ்வாறு சுர அமைப்புகளை (Music Note Structures) உருவாக்கி, தனித்துவமான (Unique) இசை அழகியலை (Musical Aesthetics) வெளிப்படுத்துவது? என்ற இசை இலக்கண நுட்பத்தின் அடிப்படையில் தான், மூன்றும் வேறுபடுகின்றன.

சங்கராபரணம் ராகத்திற்கான சுரக்கோர்வைகளும், சஞ்சாரத்தில் இடம் பெறும் சுர அமைப்புகளும் கர்நாடக இசைக்கல்வி புத்தகத்தில் உள்ளன (பக்கம் 443 – 445, 'தென்னக இசையியல்', பி.டி.செல்லதுரை, 2005). அதே சுரக்கோர்வைகளும், சஞ்சாரத்தில் இடம் பெறும் சுர அமைப்புகளும், அரும்பாலையிலும் உள்ளதற்கு சான்றுகள் உண்டா?

அது தவிர, இசைக்கல்வியில் இடம்பெறக்கூடிய அளவுக்கு, பாலை, பண், கோவை, பண்ணீர்மை, இசை உறவுகள், ஆயம், வட்டம், சதுரம், திரிகோணம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டாக வேண்டும்.

ஆபிரகாம் பண்டிதர் மேற்கத்திய 'Equal Temperament' முறையை சிலப்பதிகாரத்தில் வரும் வட்ட்ப்பாலையாக அடையாளம் கண்டது எவ்வாறு தவறாகும்? வீ.பா.. சுந்தரம் தமது நூல்களில் ''' சுரத்திற்கு, '' சுரம் இணை' என்று வலியுறுத்தியது எவ்வாறு தவறாகும்? என்பதை எனது ஆய்வுகள் மூலமாக 1996 முதல் வெளியிட்டு வந்துள்ளேன்; கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும்.

எனவே பண் என்பதை ராகமாகக் கருதுவதும் தவறு. கர்நாடக இசைக்கல்வியில் உள்ள சமஸ்கிருத சொற்களுக்குப் பதிலாக, தமிழ்ச்சொற்களைப் போட்டு, 'தமிழ் இசைக்கல்வி' என்று பயில்வதும் சரியல்ல.

தம்பூராவை கை விட்டு, மேற்கத்திய இறக்குமதியான சுருதிப்பெட்டியை இசை வழிகாட்டியாகக் கொண்ட கர்நாடக இசைக்கல்வி முறையானது, எவ்வாறு சுருதி சுத்தமற்ற இசைக்கல்விக்கு வழி வகுக்கும்? என்பதை கீழ்வரும் நூலில் நான் விளக்கியுள்ளேன்.

‘ANCIENT MUSIC TREASURES - EXPLORING FOR NEW MUSIC COMPOSING’ (Free Excerpt: https://www.amazon.com/ANCIENT-MUSIC-TREASURES-EXPLORING-COMPOSING/dp/9811411336)


இன்றைய கர்நாடக இசையில் உள்ள சுருதிச் சிக்கல்களைப் பற்றியும், கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.
‘Pitch Problems in Indian Classical Music (1)’; http://musicdrvee.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html

'பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பல்துறை (inter-diaciplinary) அறிவின் மூலமே விளங்கிக் கொள்ள கூடியவை ஆகும். அதிலும் தொல்காப்பியத்தில் உள்ள யாப்பிலக்கணத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமானால், மொழியியல் (Linguistics) அறிவும், தமிழ் இசையியல் (Tamil Musicology) அறிவும், 'இசையின் இயற்பியல் (Physics of Music) அறிவும், இருந்தால் மட்டுமே அதனை விளங்கிக் கொள்ள முடியும்.' (http://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_8.html)

தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வியில் யாப்பிலக்கணமானது 'தமிழ் இசையியல்' (Tamil Musicology) தொடர்பின்றி கற்பிக்கப்படுவதால், 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்(Musical Linguistics in tholkAppiam) தொடர்பான எனது கண்டுபிடிப்பானது, தமிழ்க்கல்வியில் இடம் பெறவில்லை. அதனால் விளையும் நட்டத்திற்கு யார் பொறுப்பு

அதன் தொடர் விளைவாக, அசை, சீர், தளை, அடி, தொடை, எழுத்தோசையின் அடிப்படையிலான வண்ணம் போன்ற பாடற்கூறுகளோடு இயைந்து பாடுவதற்கான பயிற்சி முறைகள் உருவாகாமல், கர்நாடக இசைப் பாடல்களின் 'பாணியில்', தமிழ் இசைப் பாடல்களைப் பாடுவது, தமிழ் இசைக்கு இழைக்கப்படும் அநீதியாகாதா?

கர்நாடக இசைக்கல்வியை 'காப்பி' அடித்து,, இசை உறவுகள் பற்றிய குழப்பத்துடன் 'தமிழ் இசைக்கல்வி' நீடிப்பதால், விளையும் நட்டத்திற்கு யார் பொறுப்பு?

ம்பூரா அடிப்படையிலான கர்நாடக இசைக்கல்விக்கு புத்துயிரூட்டி, தமிழ் வழி கர்நாடக இசை பயில்வதே இன்றுள்ள சாத்தியமாகும். அதனை 'தமிழ் இசைக்கல்வி' என்று குறிப்பிடலாகாது. மேற்குறிப்பிட்ட தமிழ் இசை தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று, குழப்பங்கள் அகன்று, உரிய சான்றுகளின் அடிப்படையில், 'தமிழ் இசைக்கல்வி' பாடத்திட்டங்கள் உருவாகும் வரை, 'அந்த' திசையில் பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை

தம்பூரா அடிப்படையிலானதமிழ் வழி கர்நாடக இசை’ மூலமாக சுருதி சுத்தமான இசைப்பயிற்சி கிடைக்கும். 'தமிழ் இசைக்கல்வி' பாடத்திட்டங்கள் உருவான பின், அத்தகையோரின் துணையுடன் தான், சரியான 'தமிழ் இசைக்கல்வியை' அறிமுகப்படுத்துவதும் சாத்தியமே.

'தமிழ் இசைக்கல்வி' பாடத்திட்டங்களை உருவாக்க துணைபுரியும் அரிய மூலங்களில் (Sources) ஒன்றாக, குடுமியான்மலை இசைக்கல்வெட்டு அமைந்துள்ளது. ('குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil Musicology) தொடர்புள்ளவையா?'; 
https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html)

சமஸ்கிருத வெறுப்பு நோய் நீடிக்கும் வரையில், 'தமிழ் இசைக்கல்வி' பாடத்திட்டங்களை உருவாக்க வழியில்லை. சங்க காலம் முதல் காலனியத்திற்கு முன் வரையில், தமிழ் இலக்கியங்களில், சமஸ்கிருதம் உள்ளிட்ட வேறு எந்த மொழியும் திணிக்கப்பட்டதற்கோ, எதிர்க்கப்பட்டதற்கோ சான்றுகள் உண்டா? (https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_8.html)

1996 முதல் தமிழ் தொடர்பாக நடந்து வரும் உலக மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும், இப்பிரச்சினைகள் இடம் பெற்றிருக்கவில்லை என்றால், அது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா

அகச்சீரழிவில் நேர்மையைக் காவு கொடுத்து வளர்ந்த 'பொதுவாழ்வு வியாபாரிகளை’ எல்லாம் 'புரவலர்களாக' ஏற்று, தமிழ்நாட்டில் அறிமுகமான, மேற்குறிப்பிட்ட முட்டாள்த்தனமானதீண்டாமை'யில் இருந்து, தமிழ்ப்புலமையை விடுவிக்காமல், தமிழ் இசைக்கல்விக்கான பாடத்திட்டங்கள் உருவாக வாய்ப்பில்லை, என்பதும் எனது அனுபவங்களின் அடிப்படையிலான‌ ஆய்வு முடிவாகும்.
( http://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_21.html)

நானறிந்த வரையில், உலகிலேயே இது போன்ற அவலமானது, வேறு எந்த மொழிக் கல்விக்கும், இசைக்கல்விக்கும் கிடையாது.

வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) இல்லாமல், தமிழ் இசைக்கல்வியும், தமிழ்க்கல்வியும் தொடர்வதானது, தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா

அதிலும் எண்ணிக்கையில் குறைந்து வரும் அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் தொடங்கியுள்ள நிலையில்; தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிவேகமாக அதிகரித்து வரும் சூழலில்.

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free Excerpt:

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264