Saturday, October 3, 2020

 

'சட்டத்தின் ஆட்சியானது' (Rule of Law) கேலிப்பொருளாக?


தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் கேடாகும்

 

பிரதமர் மற்றும் ஆளுநரின் கண்களில் மண்ணைத் தூவி,  பல மாதங்கள் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும் மரணத்திற்கும் மாநில முதல்வரையே பலியாக்கிய ஊழல் திமிங்கிலங்களை, சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடமாக செயல்பட‌ மத்திய அரசானது எவ்வாறு அனுமதித்தது?

முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்த பந்தங்களை ஒதுக்கி, ஜெயலலிதாவைக் கொல்ல சதி செய்ததாக ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்ட‌ குற்றவாளிகள் சூழ இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும், நடராஜனையும் மோடி வணங்கியதானது, தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்கும் வரலாற்று அவமானம் ஆகாதா? (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_22.html )

என்ற கேள்வியை தமிழ்நாட்டில் எழுப்பாத பத்திரிக்கையாளர்கள் பலர் ஆவார்கள்.

ராஜாத்தி அப்பொல்லோவில் சசிகலாவைச் சந்தித்த பின், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், அப்போல்லோ வாசலில் ஊடக வெளிச்சத்துடன், மர்ம மருத்துவ சிகிச்சைக்கு ஒத்து ஊதிய பின், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் மேற்குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பும் தகுதியையும் இழந்து விட்டார்.  

மேற்குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களில் சிலர், ‘துக்ளக் போன்ற பத்திரிக்கைகள் எவ்வாறு ஜெயலலிதாவை ஆதரித்ததோ, அதே அடிப்படையில் ஏன் சசிகலாவை ஆதரிக்கக் கூடாது?’ என்ற கேள்வியையும் எழுப்பினார்கள்.

'சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையிலான‌ உறவு முறிந்ததற்கு துக்ளக் சோவே காரணம்' என்று சசிகலாவின் கணவர் நடராஜன் குற்றம் சுமத்தியது தெரியாமல், மேற்குறிப்பிட்டவாறு கேள்வி எழுப்பும் அப்பாவி அல்லது சசிகலாவிடம் விலை போன 'நடுநிலை'(?) பத்திரிக்கையாளர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின் போது "மத்தியில் இனி கூட்டாட்சி தான். தனித்து எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது' என்று நடராஜன் கணித்து, சசிகலாவுடன் உள்ள தனது "உறவு உடைந்தது உடைந்தது தான்' என்று தெரிவித்து, சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் உறவு முறிந்ததற்கு துக்ளக் சோவே காரணம் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். (https://www.youtube.com/watch?v=_hARl0Vgo4M  )

அதே (சசிகலா) நடராஜன். முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பின்னால், “நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_18.html )

ஆறுமுகசாமி கமிசனுக்குள்ள வரைஎல்லைகள் காரணமாக, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை. மூன்று வருடங்கள் கால தாமதமாகி விட்டது.

எனவே தண்டிக்கும் அதிகாரமுள்ள சிறப்பு விசாரணைக் கமிசனை மத்திய அரசோ அல்லது உச்சநீதி மன்றமோ நியமித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரையில், தமிழ்நாட்டு மக்களுக்கு 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) மீது இழந்த நம்பிக்கையானது புத்துயிர் பெறாது.

‘'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;

ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும், இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும் பலர் இருக்கலாம்.

'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்' என்று சொன்னவர்கள், 'ஆதாயம்' பெற்று அடங்கி வரும் சூழலில்;

சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும், அந்தச் சிறுவனைப் போலவே 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html )

'சட்டத்தின் ஆட்சியானது' (Rule of Law) அவ்வாறு கேலிப்பொருளாகி வருவதானது, தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் கேடாகும் ஆபத்தும் இருக்கிறது.  

1991 முதல் கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தனியார்ச் சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட போக்கானது, தமிழ்நாட்டின் சிவில் சமூகத்தை கேலிப்பொருளாக்கி வருகிறது.

சிவில் சமூகம் (Civil society) என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், சாதிகள், மதங்கள், மனித உரிமை, பெண் உரிமை போன்ற சமூகப் பிரிவுகளின் அடிப்படைகளிலான‌‌ அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்ற இன்னும் பல அமைப்புகளை.க் கொண்டதாகும். (Civil society includes charities, development NGOs, community groups, women's organizations, faith-based organizations, professional associations, trade unions, social movements, coalitions and advocacy groups.; https://www.who.int/social_determinants/themes/civilsociety/en/ )

தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள‌ சிவில் சமூகமானது கோழையாக இருந்ததாலேயே, மேற்குறிப்பிட்ட தமிழக முதல்வரின் மர்மமான  மருத்துவ சிகிச்சையானது பல மாதங்கள் நடந்து, மர்மமான மரணத்தில் முடிந்தது. சம்பிரதாயங்களுக்கும் பொது ஒழுக்கத்திற்கும் கேடான வகையில் இறுதிச்சடங்கும் நடந்தது.

அவ்வாறு கோழையாக தமிழ்நாட்டின்  சிவில் சமூகம்  இனியும் நீடித்தால், அதுவே சர்வாதிகார ஆட்சியை ஏதாவது ஒரு வழியில் வரவழைத்து விடும். அந்த‌ சமூக இயற்கையின் போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பது கடினமே. (‘இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்’; https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html)

Note:  Cho Ramaswamy talking about expulsion of Sasikala and others from AIADMK ; https://www.youtube.com/watch?v=J-voqvypEyI&t=1s

No comments:

Post a Comment