இசை அமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் 'ஹிட்' பாடல் தரும் இசைநுட்பம் ?
'ஹிட்' ஆன திரைப்படங்களில் பாடல்களும்
'ஹிட்' என்பதானது கடந்த காலமாகி விட்டது. இன்று 'ஹிட்' என்று சொல்லப்படும் பாடல்களும், அந்த திரைப்படம் தியேட்டர்களில் ஓடும் காலம் வரை தான் 'ஹிட்' என்பதே, நிகழ்கால நிலைமையாகி விட்டது.
அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளன.
1. உலகில் எந்த இசையைக் காப்பி அடித்து திரைப்படப்பாடல் வெளிவந்தாலும், உடனே கண்டு பிடித்து இணையத்தில் வெளிப்படுத்தி வரும் போக்கின் காரணமாக, இசை அமைப்பாளர்களுக்கு புதிதாகவே இசை அமைக்க வேண்டிய நெருக்கடி கூடி விட்டது.
2. அது மட்டுமல்ல, மாணவர்களின் இளைஞர்களின் ரசனையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உணர்ந்து, அதற்கு ஏற்றார்ப்போல் இசை அமைத்தால் தான் இசை எடுபடும் என்றாகி விட்டது.
காப்பி அடிக்காமல், கதைக்களத்திற்கு
ஏற்ற வகையில் புதிதாக இசை அமைக்கும் முயற்சியும் தொடங்கி விட்டது.
அம்முயற்சியை வெளிப்படுத்தி வரும் இளம்
இசை அமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும், சற்று முயற்சித்தால் எவ்வாறு 'ஹிட்' பாடல்
தர முடியும்? என்பது தொடர்பான இசைநுட்பத்தை இங்கு பார்ப்போம்.
திரைப்படப்பாடல்களில் ஆங்காங்கே எழுத்தொலிகள்
சிதைந்த போக்கானது முடிவுக்கு வந்து விட்டது. 'அந்த' சீரழிந்த போக்கிலிருந்து விடுதலையான
பாடல் எழுத்துக்கள் எல்லாம் நிகழ்கால சமூக சூழலுக்கேற்ற புதிய இசை உருவாகும் நெருக்கடியைத்
தூண்டி வருகின்றன.
'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில்
இடம் பெற்ற பாடல்களில் கதைக்களத்திற்கேற்ற கருத்து மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு
முக்கியத்துவம் பெற்றன. அந்த பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி
தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடியதானது எனது கவனத்தினை ஈர்த்தது. அதில் ஒரு முக்கிய
சிக்னல் வெளிப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.
'பேட்ட' திரைப்படத்தில் பின்னணி இசையாக
'பல' பழைய - சுருதி சுத்தமான எழுத்துக்களைக் கொண்ட- திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்தி,
ரசனையின் உச்சிக்குப் பார்வையாளர்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சியானது வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிவந்து உலக அளவில்
'கொலைவெறி' பாடல் பிரபலமான அளவுக்கும், அந்தந்த
மொழி பேசும் மக்களின் மனதில் இருந்த 'இறுக்கங்களை'
எல்லாம், அதே 'கொலைவெறி' பாடல் 'பாணியில்'
கேலி,கிண்டலுக்கு உட்படுத்தி பலமொழிகளில் வெளிவந்த அளவுக்கும், இதுவரை உலகில் எந்த
மொழியிலும் பாடல் வெளிவந்ததில்லை. (‘நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்';
https://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_14.html
)
மேற்குறிப்பிட்ட (1) கொலைவெறிப்பாடல்,
(2), பேட்ட திரைப்படத்தில் பின்னணி இசையாக
வெற்றி பெற்ற பழையப் பாடல்கள்;
(3) திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த
முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக பாடல்களில் எழுத்தொலிகளின்
சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய வரவேற்கத்தக்க
வகையில் 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள்;
ஆகிய மூன்றும் வெளிப்படுத்திய 'சிக்னல்கள்'
மூலமாக, இளம் இசை அமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் 'ஹிட்' பாடல் தரும் இசைநுட்பத்தை
கையகப்படுத்த முடியும்.
அது தொடர்பாக, முகநூலில் வெளிவந்த கீழ்வரும் கருத்து எனது கவனத்தினை ஈர்த்தது.
'நினைத்தாலே இனிக்கும்' படப்பாடல் கம்போசிங் நடந்த போது, சுஜாதாவிடம் கண்ணதாசன் வெளிப்படுத்திய பாடல் இசைநுட்பம் வருமாறு:
“தமிழ்ல ஆதார
சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு
எத்தனை பெயர்கள்?
சீதா — நேர் நேர்;
ஜானகி — நேர்நிரை;
ஜனகா — நிரைநேர்;
வைதேகி — நேர் நேர் நேர் …."
சுஜாதாவிடம் கண்ணதாசன் வெளிப்படுத்திய பாடல் இசைநுட்பமானது பழந்தமிழ் இலக்கியங்களில் இருப்பதை நான் ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளேன்.
அசையையும் சீரையும் கெடுத்த புதுக்கவிதைப் புகழ் வைரமுத்துவின் திரைஇசைப்
பிரவேசமானது,
கண்ணதாசன் பின்பற்றிய அந்த பாடல்
இசை நுட்பத்தை
எவ்வாறு சீர்
குலைத்தது? என்பதை
நான் வெளிப்படுத்தியுள்ளேன்.( https://tamilsdirection.blogspot.com/2018/11/4-1-2-3-4-1970-5-15-6-benchmark-7.html)
அசையும் சீரும்
ஒரு பாடலில்
எவ்வாறு இடம்
பெற வேண்டும்?
என்ற இசைநுட்பமானது, பழந்தமிழ் இலக்கியங்களில் இருப்பதை
எனது ஆய்வுகள்
மூலமாக வெளிப்படுத்தியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2509)
எனவே இசை அமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் அசையையும் அசைகளின் கூட்டாகிய
சீரையும் புறக்கணித்த
புதுக்கவிதை பாணியில்
இருந்த குறைபாடுகளைப் புரிந்து கொண்டு, திரைப்படத்திற்கான பாடல்
கம்போசிங்கைத் தொடங்க
வேண்டும்.
இசை அமைப்பாளரின் டுயூனுக்கு பாடலாசிரியர் எழுதத் தொடங்கும் போதும்,
கதைக்களத்திற்கு ஏற்ற
பாடலை முதலில்
பாடலாசிரியர் எழுதும்
போதும், அவ்வாறு
எழுதிய பாடலுக்கு
இசை அமைப்பாளரின் டுயூன் அமைக்கும்போதும்,
அவ்வாறு தொடங்கினால்
தான் 'ஹிட்'
திசையில் பயணிக்க முடியும்.
இரண்டு வழிகளிலும்
அவ்வாறு இசைக்குப்
பொருத்தப்பட்ட பாடலில்
வெளிப்படும் இசை
அழகியல் குறைபாடுகளைச் சரி செய்யவும் மேற்குறிப்பிட்டவாறு புரிந்து
கொண்ட குறைபாடுகள்
உதவும்.
இசையில் பங்கேற்கும்
பாடகர்களின், இசைக்கருவிகளின் சுருதித் தீர்மானிப்பும் (pitch standard), சுருதி அமைப்பும்
(tuning system) மாறுபட்டிருந்தால், எவ்வளவு சிறந்த இசையாக
இருந்தாலும், அந்த
இசைக்கு மிகவும்
பொருந்த்தமான பாடல்
இருந்தாலும், இசை
அழகியல் (musical aesthetics) சீர் குலைந்து,
அந்த ரிக்கார்டிங்கில் வெளிப்படும் பாடலானது, ரசிகர்கள்
மத்தியில் பெற
வேண்டிய வேண்டிய
வெற்றியைப் பெறாது.
மேற்குறிப்பிட்டவாறு முயற்சிக்கும் போது, சந்திக்கும் சிக்கல்களை
இசை அமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும்
எனக்குத் தெரிவித்தால், நான் உரிய ஆலோசனையை
(வியாபார நோக்கமின்றி,
எனது இசை
ஆர்வ அடிப்படையில்) வழங்க முடியும். தொடர்புக்கு:
pannpadini@gmail.com எனது ஆய்வுகள் பற்றி அறிய: http://drvee.in/
குறிப்பு: சுருதி
சுத்தமுள்ள எழுத்துக்கள் அடங்கிய பாடல், உயர்
அழகியல் சுர
அமைப்புகள் (musical note structures) கொண்ட இசை,
அவை இரண்டிற்கும் அழகியல் பொருத்தமுள்ள நடனம்
என்ற வகையில்
முன்னுதாரணமாக அமைந்த
வெகு சிலவற்றில்
ஒன்று கீழே:
No comments:
Post a Comment