Wednesday, January 14, 2015



   நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்'(1)



தமிழ்நாடு அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தில் சிக்கி, திருப்பு முனையில் இருக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த திருப்புமுனை தொடர்பான 'சிகனல்கள்' (signals)  அரசியல் மட்டுமின்றி, இசை உள்ளிட்ட கலைத்துறை படைப்புகளிலும் வெளிப்படும்.( குறிப்பு கீழே) அதில் இசைத்துறையில் வெளிப்படும் 'சிக்னல்களை' இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன் வந்து, உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படப் பாடல் 'கொலை வெறி' பாடலாகும்.இந்திய திரை வரலாற்றில் அந்த அளவுக்கு ஒரு பாடல் உலகைக் கலக்கியது கிடையாது. (The popularity of the song was also reported by international media like BBC and Time magazine, who attributed its major crossover world appeal to its universal theme, catchy tune and unique lyrics.Top business schools like Indian Institutes of Management conducted studies to figure out the popularity of this song; http://en.wikipedia.org/wiki/Why_This_Kolaveri_Di)

அதற்கு என்ன காரணம் என்பது பற்றிய, சமூக கறுப்பு வெள்ளை பார்வைக்குறைபாடு நோயில்(Social Colour Blindness)  சிக்காத
( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ), 
எனது ஆராய்ச்சியில்,  இதுவரை வெளிப்பட்டதை இங்கு பதிவு செய்கிறேன்.

பொதுவாக இன்றைய திரைப்படப் பாடல்களில் எழுத்துக்களும் சொற்களும் எளிதில் விளங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுவதாகும்.

"பாடலில் வரும் எழுத்தின் ஒலியானது கீழ்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தான், பாடகரால் சுருதி சுத்தமாக பாட முடியும்.

 1. பாடலில் வரும் எழுத்தின் ஒலி,  பாடலில் அந்த எழுத்துக்கான சுரத்தில் சுருதி சுத்தமாகப் (accurate pitch) பொருந்த வேண்டும்.

2. பாடலில் அந்த எழுத்து ஒலிக்கும் நேரம் (பாடலுக்கான இசைக் குறியீட்டில் உள்ள அடசர காலம் – beat duration of the musical note ) பாடகரின் வாயினுள் அந்த எழுத்தை ஒலிக்கத் தேவைப்படும் செயல்நுட்பத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்." என்பதையும்,

"இளையராஜா வருகைக்கு முந்தைய திரைப்பாடல்களில் அந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகாத பாடல்கள் அரிது. இளையராஜாவிற்கும் வைரமுத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு,  அந்த இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகாத பாடல்களை வைரமுத்து எழுதி, சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் கொண்ட சொற்களாக‌ திருத்த மறுத்தாரா என்பதும் ஆய்விற்குரியது." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.('பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைர‌முத்துக்குத் தெரியாதா?’; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html )

'கொலை வெறி பாடலில்' உள்ள ஆங்கிலச் சொற்களும், தமிழ்ச் சொற்களும் தெளிவாக புரியும் வகையில், மேலேக் குறிப்பிட்ட இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகியுள்ளன.

அடுத்து அந்த பாடல் உலக அளவில் கலக்கியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த பாடலில் இடம் பெற்ற சுர அமைப்புகள்(music note structures)  இசை அழகியலில்(Musical aesthetics)  சிறப்பிடம் பெற்றவை என்பதை, எனது அடுத்த கட்ட ஆய்வுகளில் உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.  

' மாலையிட்ட மங்கை'  திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் வரிகளை, இன்றும் கல்லூரி மாணவர்கள் பாட கேட்டிருக்கிறேன். 

அந்த பாடலின் முதல் வரியை,
'செந்தமிழ் செந்தமிழ் செந்தமிழ் தேன்மொழியாள்' 

என்று அதே சுர அமைப்பில் சற்று மாற்றி பாடி,

'வை திஸ் வை திஸ் வை திஸ் கொலைவெறிடி' என்பதுடன் ஒப்பிடலாம், என்ற கருத்தும் வெளிவந்துள்ளதும், ஆராய்ச்சிக்குரியதாகும்.


அதே போல் அவற்றை வெளிப்படுத்திய கருவி இசையும், வாய்ப்பாட்டும் அதற்கு எவ்வாறு வலிவு சேர்த்தன என்பதையும் வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.


இசைக்கான இலக்கண நெறிமுறைக்ளை மீறி, ஆட்சி அதிகார எதிர்ப்பு (anti-establishment)  போக்கில் வெளிப்பட்ட பாடல் இதுவாகும். அவ்வாறு வெளிப்படும் இசை உள்ளிட்ட கலைகளில், இசைப்பதர்களின் ஊடே இசை மணிகள் இருப்பதையும், இப்பாடல் வெளிப்படுத்தியுள்ளது. எனவே ஆட்சி அதிகார எதிர்ப்பு கலகப் போக்கில்,  பதர்களின் ஊடே, மணிகளான மனிதர்கள் இருக்கும் வாய்ப்பையும் இதன் மூலம் பெறலாம். பதர்களிலிருந்து மணிகளான மனிதர்கள் பிரியும் சமூக தளவிளைவுப் போக்கே (Social polarization)  அடுத்த கட்ட வளர்ச்சி/மீட்சி போக்காக அமையும்.

அதே போல, அப்பாடலில் இடம் பெற்ற ஆங்கில மற்றும் தமிழ்ச் சொற்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் 'வெண்மை' உள்ளிட்ட மேல்த்தட்டு மேற்கத்திய மோகத்தினைக் கிண்டல் செய்தும், தமிழ்நாட்டில் கீழ்த்தட்டில் உள்ள இளைஞர்களின் மனநிலையில்  , வெவ்வேறு வகையிலான ஏக்கங்களுடன் வாழும், மேல்த்தட்டு உள்ளிட்ட‌ , அனைத்து மட்ட மக்களும், குறிப்பாக இளைஞர்களும் இருப்பதைப் படம் பிடித்து காட்டுவது தொடர்பாக, மேலும் ஆய்வு செய்ய வேண்டிய பாடல் இதுவாகும். அது மட்டுமல்ல, அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பாடலில் வாய்ப்பாட்டிற்கும், கருவி இசைக்குமான சுர அமைப்புகள் நன்கு பொருந்தியதும், இப்பாடலின் உலக வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும். 

ஆங்கிலவழிக்கல்வி, மக்களிடமிருந்து அந்நியமாகி பயணிக்கும் 'தனித்தமிழ்' முயற்சிகள் உள்ளிட்ட பல காரணங்களால், தமிழ் மொழியானது, தனது தகவல் பரிமாற்ற வலிமையை, தமிழும் ஆங்கிலமும் கலந்த 'தமிங்கிலீசில்', 'அதிவேகமாக' இழந்து வருகிறது.   தகவல் பரிமாற்றம்(communication)  கோணத்தில், தமிழின் மரணப்பயணம் குறித்து வெளிப்பட்டுள்ள அபாய அறிவிப்பாக, இப்பாடலின் வெற்றி அமைந்துள்ளது.
http://tamilsdirection.blogspot.com/2014_09_01_archive.html


உலகமயமாதலில் ஆங்கிலம் கலந்த மொழியின் தகவல் பரிமாற்ற வலிமையின் ஆதிக்கத்தையும் இப்பாடல் வெளிப்படுத்தியதானது, அதே வழியில் தமிழுக்குப் பதிலாக பிற மொழிச் சொற்களை சேர்த்து, தாம் விரும்பிய கிண்டலை வெளிப்படுத்த, பல மொழிகளில் இப்பாடல் வெளிவந்து, உலகைக் கலக்குவதற்கும் காரணமானது.

இப்பாடல் உருவாக்கத்தில், முக்கிய பங்கு வகித்த நடிகர் தனுஸ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்  ஆகியோருக்கு, இப்பாடலின் வெற்றிக்கான மேலேக் குறிப்பிட்ட காரணங்கள் தெரியாமல் இருந்தால் வியப்பில்லை. இது தொடர்பாக, எனது கீழ்வரும் அனுபவம் கூடுதல் வெளிச்சம் தரலாம்.

1960களின் பிற்பகுதியில், நான் கல்லூரியில் இயற்பியலில்(Physics) ஒலியியல்(Acoustics)  படித்த போது, 'லிசஜோ' படங்கள்(Lissajous Figures)  பற்றிய பாடம் என்னை மிகவும் ஈர்த்தது. அதில் திடப் பொருளில் ஒலி அதிர்வுகள் பயணம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளுடன், அந்த திடப்பொருளின் பண்பு கொண்டிருந்த உறவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப்போது கிராமத்திற்கு சென்றிருந்த போது, ஒரு கேணியை ஆழப்படுத்த, அதிலிருந்து அகற்றிய பெரிய பாறைகள் தரை மேல் இருந்தன. அங்கிருந்த, படிப்பறிவற்ற, பணியாள் தனது உளியால், அந்த பாறையைத் தட்டி, ஒலி மூலம் ஆய்ந்து, பின் இலாவகமாக அப்பாறையின் மேல், குறிப்பிட்ட இடங்களில் உளியை வைத்து, ஓங்கி பெரும் சுத்தியல் கொண்டு அடித்த போது, அந்த பாறை, நான்கு சம பாகங்களாக சேதமின்றி பிளவு பட்டது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆனது. அதற்கான இயற்பியல் - ஒலியியல் காரணங்களை, நான் சொன்னாலும், அதைச் செய்தவருக்கு விளங்காது. 

ஆட்சி அதிகார எதிர்ப்பு(anti-establishment)  போக்கில், செவ்விசை செல்வாக்கு இழந்து, பல வகையான மாற்று இசைகள் அந்தந்த கட்ட போக்குகளில் வளர்ந்து, படைப்பாற்றால்(creativity) பாதாளத்தில் உள்ள நிலை அடைந்து விட்டது. இனி அடுத்த கட்ட புதிய இசைக்கான காலம் கனிந்து வருகிறது என்பதை லண்டனில் இருந்து வெளிவரும் 'கார்டியன்'(Guardian)  இதழில் மார்ட்டின் கெட்டில்(Martin Kettle) என்ற எழுத்தாளர் கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

“The popular music that once filled the place it vacated seems in turn to have largely burned itself out. Here, too, creativity is at its lowest ebb since the early 50s. The space awaiting good new music of any kind is immense.”- Guardian, February 1, 2005

'கொலை வெறி'ப் பாடலானது, தமிழ்நாட்டில் அந்த புதிய இசை தோன்றுவதற்கான சிக்னல் ஆகும் என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 'சூது கவ்வும்', 'பண்ணையாரும் பத்மினியும்', 'ஜிகிர் தண்டா', 'கோலிசோடா' போன்ற படித்த இளைஞர்கள் இயக்கி, வியாபார ரீதியில் வெற்றி பெற்ற படங்கள் தொடர்பான எனது ஆய்வும், அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சாதாரண மக்களிடமிருந்தும், அவர்கள் சந்தித்துவரும் 'வெட்கக்கேடான' அடிப்படை வசதியின்மை, மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்தும் தொடர்பற்று, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில் பயணிக்கும் கட்சிகள் அடையாளம் தெரியாமல் உதிரும் காலம் நெருங்கி வருகிறது. தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் வீழ்ச்சியிலிருந்து மீளும் காலம் அதிக தொலைவில் இல்லை.

குறிப்பு : ஒரு ஊரின் 'கோத்திரத்தை' அந்த ஊரில் உள்ள இசையின் மூலம் ஆய்ந்தறியலாம் என்பதை 'நாலடியார்' கீழ்வரும் வரிகளில் விளக்கியுள்ளது.

'பணிவுஇல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும்.'
நாலடியார் 25:2

சீர் என்பது ஒரு பாடலின் சுர இசை, தாளம் உள்ளிட்ட இசை அழகியல் கூறுகளை உள்ளடக்கிய ஒரு இசை முக்கியத்துவம் வாய்ந்த சுர உள் அமைப்பு ( musically significant sub-structure)  ஆகும்.( ‘Musical Sounding of the Letters and the Syllables (11); A Measuring Device to weigh chIr, the Musical Linguistic Sub-Structure’
http://musictholkappiam.blogspot.com/2013/04/normal-0-false-false-false.html )

திருக்குறள்(118) கூறும் 'சமன் செய்து சீர் தூக்கும் கோல்' என்பது இசையில் 'சீரை நிறுக்கும்'  கோல் என்பது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. (http://musicresearchlibrary.net/omeka/items/show/2448)

'கோத்திரம்' என்ற சொல், ஒரு மனிதரின் அல்லது ஊரின் பரம்பரைப் பின்னணியில் இன்றுள்ள பண்பை வெளிப்படுத்தும் சமூகவியல் முக்கியத்துவம் உள்ள சொல்லாகும்.திராவிட மனநோயாளித்தனத்தில் நல்ல‌ 'கோத்திரம்' சிதைந்து, 'கள்வர்' (திருக்குறள் 813) கோத்திரத்தில் தமிழர்கள் அதிகரித்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html) 'மாத்திரை' என்பது பாடலுக்கான இலக்கணத்திற்குட்பட்டு 'சீர்' ஒலிக்க வேண்டிய கால அளவாகும்.

எனவே இன்றைய இசை பற்றிய எனது ஆய்வு, தமிழ்நாட்டில் உள்ள 'சீர்' குலைவுகளையும், அதிலிருந்து மீளும் வாய்ப்புள்ள 'சிக்னல்களையும்', பற்றிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment