Sunday, January 25, 2015


'ஆர்.எஸ்.எஸ்' மீது தயாநிதி மாறன் குற்றம் சுமத்தியதானது;

 திராவிட சந்தர்ப்பவாத’த்தின் உச்சமா?



சென்னையில் சட்ட விரோதமாக 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட இணைப்பகம் செயல்பட்டது தொடர்பாக,  கடந்த ஆட்சியில் சி.பி.ஐ வழக்கு விசாரணையைத் துவங்கி,  விசாரணை மந்தமாக முன்னேறியது.( குறிப்பு கீழே) பின் உச்ச நீதிமன்ற தலையீட்டில் விசாரணை முன்னேறி, தற்போது தயாநிதி மாறானின் உதவியாளரையும், சன் தொலைக்காட்சி ஊழியர் இருவரையும் கைது செய்துள்ளது.அது தொடர்பாக, தயாநிதி மாறன் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கையாளரை திருப்தி செய்வதற்காக சி.பி.அய் செயல்படுவதாகக் குற்ற‌ம் சாட்டியுள்ளார். (Mr Maran, who met his DMK party chief M Karunanidhi today, accused the investigating agency of framing him and trying to please the RSS or Rashtriya Swayamsevak Sangh, the ideological mentor of the ruling BJP. "I am being singled out. The CBI is fixing me to please an RSS ideologue from Tamil Nadu," Mr Maran alleged. “ http://www.ndtv.com/article/india/cbi-trying-to-fix-me-says-former-telecom-minister-dayanidhi-maran-652138)


மேலேக் குறிப்பிட்டுள்ள சான்றின்படி, மோடி ஆட்சி காலத்திலும், மன்மோகன் ஆட்சி காலத்திலும் மேலேக் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக 'ஒரே போக்கில்' செயல்பட்டு வந்த சி.பி.ஐயானது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கையாள‌ரின் அழுத்ததால், அந்த போக்கிலிருந்து மாறி, மேலேக் குறிப்பிட்ட கைதுகளில் ஈடுபட்டுள்ளதா? தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு இந்த வழக்கில் அக்கறை இல்லையா? இல்லையென்றால், ஏன் இல்லை? தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸிலும் தி.மு.க சார்பாளர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுவது தவறா?

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் கலைப்பு உள்ளிட்டு, என்னென்ன‌ 'சிக்கல்களுக்குள்ளாகும்' போதெல்லாம், பார்ப்பன சூழ்ச்சி என்று,  எப்போதெல்லாம் கருத்து வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஆய்விற்குரியதாகும். உதாரணமாக ஒரு சான்று கீழே;

“நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர்களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர்வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது?   இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும்.  இராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே;” http://rssairam.blogspot.in/2012/11/blog-post_2.html

1944இல் திராவிடர் கழகம் உருவாகி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் தடம்புரண்டு, உணர்வுபூர்வ போக்கில் சிக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அவ்வாறு தடம் புரண்டாலும், பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும், கலைஞர் கருணாநிதியின் பிராமண எதிர்ப்புக்கும் பண்பு ரீதியில் வேறுபாடு உண்டு. ராஜாஜி உள்ளிட்டு எந்த பிராமணரையும் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தனது கொள்கை ரீதியிலான பிராமண எதிர்ப்பைப் பெரியார் பயன்படுத்தவில்லை.அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்த்திற்கு 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' ப்யன்படும் போக்கானது செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது' எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்திற்கும், தமிழ்வழி வீழ்ச்சிக்கும்,கனிவளங்கள் சூறையாடப்படும் ஊழல் கோரப்பசிக்கும், 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' ஆனவை, 'தமிழ் இன உணர்வு' என்ற போர்வையில் பயன்படும் போக்கானது, செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது', எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.

“ பிராமணர்களின் அதிக்கத்தை எதிர்த்த பெரியார் , தமது பிராமண நண்பர்களின் தோட்டங்களிலேயே தமது கட்சியின் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.பெரியாரும் ராஜாஜியும்; "இருவரும் சேர்ந்து முன்போல ஒத்துழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்துழைக்கச் சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்." என்று பெரியார் தெரிவித்த கருத்து எதை உணர்த்துகிறது? (‘எனது நண்பர் ராஜாஜி ‘:- குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு’ இதழில் எழுதியதிலிருந்து… தொகுப்பு: சு. ஒளிச்செங்கோ, http://tamil.thehindu.com/opinion/columns/)

பெரியாரும் ராஜாஜியும் நட்பாக இருந்தது போல,தமிழ்நாட்டில் ஆங்காங்கே உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில், நேர்மையாகவும் மிகுந்த ஆச்சாரங்களுடன் வாழ்ந்த பிராமணர்கள், நண்பர்களாயிருந்தார்கள். ஒரு பிராமணப் பெண்ணை மணந்து, அசைவ உணவைத் தவிர்த்து,உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டரையும் நான் சந்தித்திருக்கிறேன்.”
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none.html

அண்ணா உயிரோடு இருந்தது வரையிலும், கலைஞர் கருணாநிதி தாம் சந்தித்த சிக்கல்களுக்கு பிராமண எதிர்ப்பைப் பயன்படுத்தியதற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அதுவரை, ராஜாஜியுடன் கலைஞர் கருணாநிதிக்கு இருந்த 'உறவு'(?), அவரின் அரசியல் முன்னேற்றத்திற்கு, தமிழக முதல்வராகும் வரை உதவியது. எனவே தமது சொந்த சிக்கல் தொடர்பாக, 'பிராமண எதிர்ப்பை'க் கேடயமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதப் போக்கானது, எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்தது? என்பது ஆய்விற்குறியதாகும்.

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி 1969இல் முதல்முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.அன்று தமிழ்வழிக் கல்வியின் நிலை, காவிரி,கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு போன்ற சிக்கல்கள் முளை விடாத நிலை, அரசர்கள் ஆட்சி, அதன் பின் காலனி ஆட்சி, இந்திய விடுதலைக்குப்பின் 1967 வரை காங்கிரஸ் ஆட்சி வரை தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், காடுகள் இருந்த நிலை, மலைகளும்,ஆற்று மணல் உள்ளிட்ட கனிம‌ வளங்களும் இருந்த நிலை ஆகியவற்றைப் பற்றி இன்று சுமார் 60 வயதுக்கும் மேல் வாழ்பவர்களுக்கு தெரியும். அவர்களில் தி.மு.க உள்ளிட்ட திராவிடக்கட்சிகள், பெரியார் கட்சிகள், எண்ணிக்கையில் அதிகரித்து வரும் தமிழ்க் குழுக்கள் ஆகியவற்றின் ஆதரவாளர்களும் அடக்கம்.

இன்று தமிழ்வழி மரணப் பயணத்தில் இருப்பதும் 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_3.html) ;’ தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (5); தமிழின் மரணத்திற்குப் பின், தமிழ்நாட்டில் தமிழர்கள்?’) ஊழல் பேராசைப் பெரும்பசிக்கு தமிழ்நாட்டின் கனிவளங்கள் சூறையாடப்பட்டுள்ளதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஒரு சமூகத்தில் அரசியல் மூலம், நாட்டின் முக்கிய பொறுப்பில் அமர்பவர்களின் பங்களிப்பானது, எவ்வாறு அந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் அல்லது வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் என்பது தொடர்பான சமூகவியல் செயல்நுட்பத்தை ஏற்கனவே பார்த்தோம்.

“ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.

உதாரணமாக 1967‍இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, அதற்கான ஆளுமை தனக்கில்லை என்பதை அறிந்து, தான் தனது புற்று நோயால் விரைவில் மரணமடைய விருபுவதாக, தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியிடம் தெரிவித்ததை, அவர் தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்குப் பின்னர், முதல்வரான கலைஞர் கருணாநிதி, பெரியார்,அண்ணாவின் பிறந்த நாட்களை விட, தனது பிறந்த நாளுக்கு, அரசு செல்வாக்கினைப் பயன்படுத்தி, ‘அதீத முக்கியத்துவம்’ கொடுத்தது, தனது நலன், தனது குடும்ப நலன்களையே பிரதானமாகக் கொண்டு ஆட்சி செய்தது போன்ற திசையில் பயணித்தார். அந்த திசையில் அவர் இன்றுவரை'வெற்றிகரமாக', தி.மு.க தலைவராக பயணித்து வருவதற்காக, அவர் கட்சிக்குள்ளும், தமது சமூக வட்டத்திலும், பயன்படுத்திய செயல்நுட்பம் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

“தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்.”
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

அவ்வாறு சமூகம் சீரழிவுப் பாதையில் பயணிக்கும் போது, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான ஓட்டுநர்களாக தேவைப்படும்,  'தகுதி, திறமைகள்' பற்றி ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

1944க்கு முன் பிராமணர்களும் இருந்த நீதிக்கட்சியிலும், காங்கிரஸ் கட்சியிலும் இருந்த படித்தவர்களும், பணக்காரர்களும் உண்மையான சமூகப்பற்றுடன் அடிமட்டத்தில் இருந்தவர்களை உயர்த்த, மேற்கொண்ட முயற்சிகள் வெளிச்சத்திற்கு வர வேண்டிய நேரம் வந்து விட்டது.1944இல் திராவிடர் கழகம் உருவாகி, ஆக்கபூர்வ உணர்வுகளை,'பிராமண எதிர்ப்பு' என்ற பெயரில் 'கோபம்,வெறுப்பு,பழி வாங்கல்' போன்ற அழிவுபூர்வ உணர்வுகளில் 'சமூக நீதி' முயற்சிகளை சிக்க வைத்ததே, இன்று தமிழையும், தமிழ்நாட்டின் கனிவளங்கையும் ஊழல் கோரப்பசியில் சூறையாடுபவர்களின் கேடயமாக 'பிராமண, ஆர்.எஸ்,எஸ் எதிர்ப்பு' பயன்படும் விளைவிற்கு வழி வகுத்ததா?1944க்கு முன் புலமையாளர்கள் எல்லாம், 'தலித்' மற்றும் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும்,அறிவை மதித்து நண்பர்களாகிய பழகிய போக்கு மறைந்து, இன்று படித்த 'முற்போக்குகள்' கூட சாதிப்பார்வையில் சிக்கி வாழும் சீரழிவிற்கும் அது வழி வகுத்ததா? மேலேக் குறிப்பிட்ட 'வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்'  என்ற நோயின் பிடியில், தமிழ்நாடு சிக்கியதற்கும் அது காரணமா?தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து,குற்ற உணர்வேயின்றி தமிழ் ஆதரவாளர்களாக வலம் வரும் போக்கிற்கும் அது காரணமா? என்பவையெல்லாம்  ஆய்விற்குரியதாகும்.

மத்திய அரசில் முக்கிய பொறுப்பில் சீனியர் காபினெட் அமைச்சராக  தயாநிதி மாறன் இருந்து, பின்னர் சிக்கிய வழக்குகளின் தோற்றமும், அந்த வழக்கு விசாரணையில் என்னென்ன குறைபாடுகள் எவ்வாறு நடந்தன என்பதும், எந்தக் கட்டத்தில் ஏன் உச்சநீதிமன்றம் தலையிட்டது என்பதும், மன்மோகன் சிங் ஆட்சியில் அந்த வழக்குகள் பயணித்த போக்கிலேயே, மோடி ஆட்சியில் தொடர்ந்து, பின் ஏன் சூடு பிடித்தது என்பதும் தொடர்பான உண்மைகளை இனியும் இருட்டில் சிறை வைக்க முடியாது என்பது என் கருத்து. 

திமு.க தலைவர் கருணநிதியைச் சந்தித்த பின், அவரைப் போலவே தனது சிக்கலுக்கு 'ஆர்.எஸ்.எஸ்' மீது தயாநிதி மாறன் குற்றம் சுமத்தியதானது, ‘திராவிடசந்தர்ப்பவாத’த்தின் உச்சமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

குறிப்பு :
“ 'இந்த தவறான இணைப்பால், தொலைத்தொடர்புத் துறைக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது' என, ஊழியர் சம்மேளனம் சார்பில் நான் குரல் எழுப்பியதும், பிரச்னை பூதாகாரமாக வெளியே வந்தது. ஆனாலும், இந்த பிரச்னையின் ஆதாரங்களாக இருக்கும் ஆவணங்களை, தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் அழித்து விட்டனர். பொது மேலாளராக இருந்து செயல்பட்ட செல்வம், ஓய்வு பெற்று சென்ற பின், ஒரு நாள் தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்துக்கு வந்து, நடந்த முறைகேட்டைக் காட்டிக் கொடுக்கும் ஆவணங்களைத் தேடித் தேடி அழித்திருக்கிறார். இந்தத் தகவல்கள் கிடைத்ததும், அது தொடர்பாகவும் நான், தொலைத்தொடர்புத் துறை, தலைமையகத்துக்கு புகார் செய்தேன். பின்னாளில், சி.பி.ஐ., அதிகாரிகள், இந்த பிரச்னை தொடர்பாக, என்னை அழைத்து விசாரித்த போது, இது குறித்து கூறினேன்; விளக்கமான புகார் கொடுத்தேன்; வாக்குமூலம் பதிவு செய்தேன். இந்த வழக்கில், நானும் ஒரு முக்கிய சாட்சி.” தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன்; http://www.dinamalar.com/news_detail.asp?id=1168382

1 comment:

  1. குறுநில மன்னர்கள் போல் ஊர் ,பேரூர் ,வட்டம் ,மாவட்டம் பொது,செயல் எனப் பல படிகளில் ஊழல் ஏஜன்சிகள் தங்கள் சாதி ஊழல் கூட்டாளிகள் ஆகிய கட்டமைப்புடன் இயற்கை வளங்கள் சுரண்டப் பட்டதை கோர்வையாக விளக்கி ஒரு சரித்திர பதவு செய்துள்ள உங்களுக்குப் பாராட்டுக்கள். அறுபது வயதுக்கு முற்பட்டவரை மட்டும் சாட்சிக்கு அழைத்தது தவறுகளின் ஆழம் காட்டுகிறது.

    ReplyDelete