தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்' (2)
”இந்தியாவில் மோடியைப்
பிரதமராகக் கொண்டு, வலுவான தனிப் பெரும்பான்மையுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO),
மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன”. என்பது தொடர்பாக (refer
post Dt. December
30, 2014;’ தமிழ்நாட்டில்
மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’’)
“இங்கு தனிப்பெரும்பான்மை
என்பதுதான் முக்கிய காரணி . மோடி அதற்கப்புறம்தான்.”
என்ற கருத்தை, பெரியார் ஆதரவாளர்
எனக்குத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை
வெற்றி பெறுவதற்கு மோடி முக்கிய காரணியா? இல்லையா? என்பது ஒரு கேள்வி.
அடுத்து,"உலக அரங்கில் இந்தியாவின்
தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO), மற்றும் உலக ஊழல்
நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன”." என்பதற்கு
"இங்கு
தனிப்பெரும்பான்மை என்பதுதான் முக்கிய காரணி ", மோடி முக்கிய காரணி அல்ல
என்பது தொடர்பாக, இந்த பதிவில் பார்ப்போம்.
ஊழலில் மோசமான நாடுகளின் தரவரிசையில்
கடந்த வருடம் 94ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த வருடம் 85 ஆவதாக சற்று உயர்ந்துள்ளது.
“India has showed some improvement in
addressing corruption this year, ranking 85th among 175 countries as against
94th last year, graft watchdog Transparency International India (TII)”
http://timesofindia.indiatimes.com/india/Indias-ranking-on-global-corruption-index-improves/articleshow/45358144.cms)
குஜராத் முதல்வராக மோடி ஆட்சி
செய்த போது, அவரை 'மரண வியாபாரி' (Merchant of Death) என்று கடுஞ்சொற்களால் கண்டித்த
சோனியா உள்ளிட்டு, எந்த எதிர்க்கட்சிகளும் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தவில்லை.
அந்த பின்னணியுள்ள மோடி, இந்திய பிரதமரானபின், ஊழலுக்கு இடமில்லாமல் ஆட்சியைத் தொடங்கியதும்,
மத்திய அரசு செயலாளர்கள் முந்தைய ஆட்சிகளில் பணிக்கு தாமதமாக வந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி
வைத்து, ஊழலுக்கும் தாமதத்திற்கும் கோப்புகள் உள்ளாகாமல், உரிய நேரத்தில் முடிவுகள்
எடுக்கப்பட்டு வெளிவருவதைப் பிரதமர் அலுவலகம் கண்காணிப்பது போன்ற காரணங்களால், உலக
ஊழல் நாடுகள் தரவரிசையில், இந்தியாவின் தரநிலையானது ஊழல் குறைவில் சற்று முன்னேறியுள்ளதா?
ஏற்கனவே மத்திய அரசில் தனிப்பெரும்பான்மை ஆட்சிகள் இருந்த போது இம்முன்னேற்றம் நடந்ததா?
போன்ற கேள்விகளுக்கு, விருப்பு வெறுப்பில்லாமல், திறந்த மனதுடன் விடைகளைத் தேடினால்
தான் உண்மை தெரியவரும்.
அடுத்து உலக வர்த்தக அமைப்பு WTO என்றால் என்ன? அதன் வரலாறு
என்ன? கடந்த ஆட்சியில், 2013 டிசம்பரில், பாலியில் இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தம் காரணமாக,
பொது விநியோக ரேசன் பயனாளிகளுக்கும், விவசாயம் உள்ளிட்டு அரசின் உதவிகளுக்கும் என்ன
ஆபத்து நேர இருந்தது? (http://scroll.in/article/671157/Why-India-is-right-to-back-out-of-WTO%E2%80%99s-landmark-Bali-package)
உலக வர்த்தக அமைப்பின் WTO வரலாற்றில்,
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு முதல் முறையாக அதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு,
2015 சூலையில் மோடி ஆட்சியில், அந்த உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் மூலம்,
சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில், இந்தியாவின் நிலை எவ்வாறு பலகீனத்திலிருந்து பலமாக
மாறியது? இந்தியாவில்
உள்ள ஏழைகளும், விவசாயிகளும் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள்?
(“India had plunged the WTO
into the deepest crisis in its 20-year history in July by vetoing a deal on
streamlined customs rules due to a lack of progress on its demands to be
allowed to stockpile food without observing the usual WTO rules on agricultural
subsidies.” http://in.reuters.com/article/2014/11/13/india-trade-wto-idINKCN0IX08N20141113: “India
has made its stance clear that it will not easily give in to pressure from the
Western world over trade protocols of the World Trade Organisation, as was also
discussed during the talks in Bali in December 2013. India fears that agreeing
to the trade facilitation agreement (TFA) could compromise its own food
security.” http://www.dnaindia.com/money/report-why-is-india-not-agreeing-to-the-wto-trade-facilitation-agreement-2005181)
என்ற கேள்விகளை எழுப்பி பெரியார்
கட்சிகளும், தமிழ்/திராவிடக் கட்சிகளும் விவாதித்தார்களா? அல்லது திராவிட ஆட்சிகளின்
பலனால் விளைந்த தமிழ்வழி மரணப்பயணத்தை விட, ஐ.நா உள்ளிட்ட பொது அரங்கில் ராஜபட்சேயைக்
காப்பாற்றிய சீனாவைக் கண்டிக்காமல், ராஜபட்சேயை எதிர்ப்பதில்(?) ஆர்வம் காட்டியது போல,
அது போன்ற, 'உணர்வுபூர்வ' போராட்டங்களில், இது போன்ற கேள்விகள் முக்கியத்துவம் இழந்தனவா?
மேலேக் குறிப்பிட்ட பின்னணியில்,
.”இந்தியாவில் மோடியைப்
பிரதமராகக் கொண்டு, வலுவான தனிப் பெரும்பான்மையுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO),
மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன”. என்பது தொடர்பாக (refer
post Dt. December
30, 2014;’ தமிழ்நாட்டில்
மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’’)
“இங்கு தனிப்பெரும்பான்மை
என்பதுதான் முக்கிய காரணி . மோடி அதற்கப்புறம்தான்.”
No comments:
Post a Comment