Friday, January 16, 2015



 மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?(1)



“ மோடிக்கு முன்பு இருந்தவர்களின் 'தன்மை(!)' மோடியை நல்லவராகக் காட்டுகின்றது என்ற அடிப்படையில் வரவேற்கத் தக்கது; ஆனால் ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?” என்று நான் சந்தித்த கேள்வி தொடர்பாக;

சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் ஆற்றல்(energy) இருப்பதையும், அந்தந்த நபரின் மனத்தில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) பொறுத்து, தனது தேவைகள், தான் சார்ந்துள்ள குடும்பம், நட்பு, கட்சி, பொது நலன் உள்ளிட்டவைக்கு, அவரின் மனதில் உள்ள முக்கியத்துவ தரஏணி வரிசையில்(hierarchical) , அவருடைய ஆற்றல் விசைகளாக (forces) வெளிப்படும், என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.  (’ சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds) ‘; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html
 
சமுகத்தில் வளர்ந்து வரும்(growing), தேய்ந்து வரும்(decaying) போக்குகள் உள்ளிட்ட, பொது நலன் தொடர்புள்ள அமைப்புகளிலும்,பிரச்சினைகளிலும் செயலாற்றும் விசைகளின் ஊற்றுக்கண்கள் மேலேக்குறிப்பிட்ட, தனி நபரிடமிருந்து வெளிப்படும் விசைகளே ஆகும். இயற்பியலில்(physics) எந்திரவியலில் (Mechanics) எவ்வாறு விசைகள் பிணைப்புகள்(Bonds)  உள்ளிட்ட பல வழிகளில் சேர்ந்து, அடுத்த அடுத்த உயர் மட்டங்களில்,  தொகு விசைகளாக (Resultant Forces)  செயல்படுகிறதோ, அதே போல, சமூக எந்திரவியலில் , மேற்குறிப்பிட்ட விசைகள், அந்த சமூகத்தில் செல்வாக்கில் உள்ள பண்பாடு உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில், வெவ்வேறு வகைகளிலான,  வெவ்வேறு, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையில், அரசியல், கலை, ஆன்மீகம் உள்ளிட்ட புலங்களில், வெவ்வேறு  தொகு விசைகளாக செயல்படுகின்றன.

ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.

உதாரணமாக 1967‍இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, அதற்கான ஆளுமை தனக்கில்லை என்பதை அறிந்து, தான் தனது புற்று நோயால் விரைவில் மரணமடைய விரும்புவதாக, தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியிடம் தெரிவித்ததை, அவர் தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்குப் பின்னர், முதல்வரான கலைஞர் கருணாநிதி, பெரியார்,அண்ணாவின் பிறந்த நாட்களை விட, தனது பிறந்த நாளுக்கு, அரசு செல்வாக்கினைப் பயன்படுத்தி, ‘அதீத முக்கியத்துவம்’ கொடுத்தது, தனது நலன், தனது குடும்ப நலன்களையே பிரதானமாகக் கொண்டு ஆட்சி செய்தது போன்ற திசையில் பயணித்தார். அந்த திசையில் அவர் இன்றுவரை'வெற்றிகரமாக', தி.மு.க தலைவராக பயணித்து வருவதற்காக, அவர் கட்சிக்குள்ளும், தமது சமூக வட்டத்திலும், பயன்படுத்திய செயல்நுட்பம் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

“தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்.” 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

அவ்வாறு சமூகம் சீரழிவுப் பாதையில் பயணிக்கும் போது, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான ஓட்டுநர்களாக தேவைப்படும்,  'தகுதி, திறமைகள்' பற்றி ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html   ) 

தமிழ்நாட்டில் அந்த சீரழிவுப் போக்கில் சிக்காமல் தனி நபராக வாழ்வது என்பது, அதிலும் மேல்நடுத்தர, வசதியில் உயர்ந்த சமூக மட்டங்களில் , இழிவான சமரசங்கள் இன்றி, வாழ்வது என்பது, எவ்வளவு பெரிய சவால் என்பது, தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கே தெரியும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அதை முழுமையாக விளங்கிக் கொள்வது சிரமம் என்பது என் கருத்து.
(http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

இந்திரா காந்தி, கலைஞர் கருணாநிதி போல, மோடி தன்னை வழிபடுவதை ஊக்குவிக்காமல், காக்கைக் கூட்டங்களையும் ஊக்குவிக்காமல், தனிமனித பலகீனங்களுக்கு அரசு செல்வாக்கைப் பயன்படுத்த எவருக்கும் துணிச்சல் இல்லாத அளவுக்கு, செயலளவில் தம்மை நிரூபிப்பவர்களை ஊக்கப்படுத்தி, மத்திய அரசு அலுவலகங்களில் ஊழலைக் குறைத்தும், உயர் அதிகாரிகள் தாமதமாகப் பணிக்கு வருவதைக் குறைத்தும், அது போல பல முன்னேற்றங்களை செயல்படுத்தி வருகிறார்.

திராவிடக் கட்சி ஆட்சிகளில் "அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து'கள் ஏற்படுத்திய விளைவுகளில், தமிழ்நாடு அடைந்துள்ள பல வகையான பாதிப்புகளை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, சுயலாப நோக்கமற்றவர்கள், 'வெள்ளத்தில் மூழ்கியவர்களை'க் காப்பாற்றுவதில் வெளிப்படுத்தும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

ஏற்கனவே இந்திய அளவில் நோயில் சிக்கிய அமைப்புகளில், ஊழலுக்கும், சாதி, மத பாரபட்சத்திற்கும் இடமில்லாத‌ , நோய் எதிர்ப்பு போக்கை செயலளவில் ஊக்கப்படுத்தி வரும் மோடியின் செயல்பாடுகளின் வெற்றிகள் காரணமாக, அடுத்து, அடுத்து, அரியானா, மகராஷ்டிரம், காஷ்மீர் என்று தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிகளை ஈட்டி வருகிறது. 

அந்த‌ மோடி அலையில் கூட, தமிழ்நாடு தப்பிக்குமா? என்று நான் சந்தேகப்படும் அளவுக்கு தமிழ்நாட்டு பா.ஜ.க இருப்பதையும் பதிவு செய்துள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html)  

அந்த பதிவின் கடைசி பாராக்கள் (கீழே) மீண்டும் நினைவுகூறத்தக்கதாகும்.

“தமிழ்நாட்டில் தினமும் ஆங்கங்கே அடிப்படை வசதிகளுக்காகவும், மோசடி பேர்வழிகளுக்கு எதிராகவும் மக்கள் தாமே போராடி வருவதிலிருந்து, ஒதுங்கி நின்று, 'குறுக்கு வழிகளில்', மற்ற கட்சிகளின் ' ஆதாயத் தலைவர்கள்/தொண்டர்களை' தம் பக்கம் இழுத்து, பயணித்து ஆட்சியைப் பிடிப்பது இனி நடக்க வாய்ப்பில்லை; பா.ஜ.கவாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், என்பதும் என் கணிப்பாகும்.

இந்துத்வாவிற்குள்ளும், வெளியிலும் உள்ள மோடி எதிர்ப்பு சக்திகள் ஒன்றுக்கொன்று உதவியாக செயல்பட்டு, பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பை பலகீனமாக்கி வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/

ஊழல் மூலம் சொத்து சேர்க்க அவசியமில்லாதவர்களும், ஊழல் பசியில்லாதவர்களும், பொது நலனில் உண்மையாக அக்கறை உள்ளவர்களும் அதிக அளவில் பா.ஜ.கவில் சேரும் போது, திராவிடக் கட்சித் தலைவர்கள் பாணியில் உணர்வு பூர்வ பேச்சுக்கள் வெளிப்படுவதையும்,  ஆளுயர மாலை, மலர்க் கிரீடம் என்று திராவிடக் கட்சிகள் அறிமுகப்படுத்திய பொது அசிங்கங்களையும், தவிர்த்து, குஜராத்தில் குஜராத் மொழி, மாநில நலன்களை மோடி பேணிய வழியில், தமிழ் மொழி, தமிழ்நாட்டின் நலன்களுக்காக செயல்படும்போது, அரியானா வழியில் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி அமைவது சாத்தியமே. ஆனால் தமிழக பா.ஜ.கவானது, 'திராவிட கட்சிகளின்' பாணியில் பயணிக்கும் வரை, அதற்கு சாத்தியமில்லை.

Note: மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா? (2); https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html

 

No comments:

Post a Comment