பெரியாரிஸ்டுகளிடம் வெளிப்பட்ட விவாத அநாகரீகம்
'பெரியார்'
கொள்கை ஆதரவாளனாக, சுயலாப நோக்கின்றி பயணித்து வந்து, பின் 'இசையின் இயற்பியல்' (Physics of
Music) குவியத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி, தமிழ், தமிழர், தமிழ்நாடு சந்தித்து வரும் மரண அபாயங்களை எல்லாம்,
எனது ஆய்வுகளின் அடிப்படையில் உணர்ந்து;
கடந்த
சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக, ஈ.வெ.ரா
அவர்கள் தொடர்பாக வெளியாகி வரும் எனது பதிவுகள் எல்லாம்,
'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில் (சில விதி விலக்குகள்
தவிர்த்து) மெளனத்தையே 'எதிர்வினையாக' சந்தித்து வந்துள்ளன.
அந்த 'மெளனத்தை' விட இன்னும் மோசமாக, தமிழ் தொடர்பாக ஈ.வெ.ராவின் தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை மறுத்து விவாதிக்காமல், ('சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’ என்று சொன்னது பகுத்தறிவா? அறியாமையா?'; https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html - தமிழ் தொடர்பாக, 'தாயே சத்தற்றவளாக, நோஞ்சானாக இருக்கும்போது' என்று ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கருத்து எவ்வாறு தவறானது? என்பதை இதில் விளக்கியுள்ளேன்)
நான்
மிகவும் மதிக்கும் ஒரு பெரியாரிஸ்டிடம் இருந்து
கீழ்வரும் கருத்தும்
வெளிவந்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
“தங்கள்
மாற்றம் தாய்மொழி, பராம்பரியம், மரபுகளைக் காப்பாற்றும் மீட்டெடுக்கும் பழைமைப்
போக்கில் உள்ளது (இதைப் பற்றியும் பெரியார் 'மலத்தில் அரிசி பொறுக்காதீர்கள்' என்று எச்சரித்துள்ளார். ஆனால் அதை நீங்கள் இப்போது
ஏற்க மாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.
அவரவருக்குச்
சரியென்று படுவதைச் செய்வதில் அவரவருக்கு உரிமையுள்ளது. அதே சமயம் பெரியாரால்,
திராவிட இயக்கத்தால் வந்த எழுச்சியின் பல
சரியான போக்குகளைக் கொச்சைப்படுத்தவும் இழிவுபடுத்தவும் உடைத்து சிதைக்கவும் நீங்கள் ஆதிக்கவாதிகளுக்கு ஓர் ஆயுதமாகப் போகின்றீர்களா
என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். “ (https://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_27.html
)
ஒரு விவாதத்தில் உள்ள மையப்பொருளில் இருந்து விவாதிக்காமல், விவாத வரம்பின் எல்லைகளை மீறி, விவாதிப்பவரையே விவாதப் பொருளாக்கி, நீதிபதி போல தீர்ப்பு வழங்குவது விவாத அநாகரீகமாகும். அந்த அநாகரீகமின்றி விவாதிக்கக் கூடிய பெரியாரிஸ்டுகள் விதி விலக்காகவே இருக்கின்றனர் என்பதும் எனது அனுபவமாகும். எந்த கொள்கையாளராக இருந்தாலும், வெறுப்பு அரசியலுக்கு அடிமையானால், விவாத அநாகரீகமின்றி விவாதிப்பது சற்று கடினமே ஆகும்
விவாதப்
பொருளையும், விவாத எல்லைகளையும் பற்றி, விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு சரியான புரிதல் இருந்தால் மட்டுமே, அந்த நோக்கம் நிறைவேறும்.
அதற்கும் அந்த பொருள் பற்றியும்,
வரை எல்லைகள் பற்றியும், விவாதிப்பதில், தமது வரை எல்லைகளைப்
(limitations) பற்றிய புரிதலும் முக்கியமாகும்.
விவாதத்தில்
விவாத வரம்பின் எல்லையை மீறி, விவாதத்தில் ஈடுபடும் தன்னைப் பற்றியும் விவாதத்தை நீட்டுவது என்பது, நமக்கு முதல் அபாய எச்சரிக்கையாகும்.
அதையும்
மீறி, அடுத்தவருக்கு என்ன தெரியும்/தெரியாது
என்று நாமே முடிவு செய்து,
விவாதத்தில் ஈடுபடுபவர்களையும், விவாதப் பொருளாக, விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாத எல்லையை , தன்னிச்சையாக, விரிவுபடுத்தி போவது, என்பது, நம்மையறியாமலேயே கீழ்வரும் விவாத நோய்களில் நம்மை சிக்க வைத்து விடும்.
அடுத்த
நபருக்கு அறிவுரை சொல்ல தகுதி இருக்கிறதா, இல்லையா? என்பது பற்றியும், அடுத்தவர் தம்மிடம் அறிவுரை எதிர்பார்க்கிறாரா? என்பது பற்றியும், கவலையின்றி, அறிவுரை வழங்கும் நோயும்,
யார்
அதிபுத்திசாலி என்ற போட்டியுடன்,
தனது பிழைப்பிற்காக/பிம்பத்திற்காக(ego-image), ஒரு சார்பாக
தெரிந்தே ஈடுபடும் நோயும்,
அறிவுபூர்வ
விவாதத்தில் தவிர்க்க வேண்டிய குறைகளாகும். (https://tamilsdirection.blogspot.com/2015/10/
)
மேற்குறிப்பிட்ட
குறைகளுடன் பெரியாரிஸ்டுகள் விவாதிப்பதற்கு, ஈ.வெ.ரா
அவர்களும் பகுதிக் குற்றவாளி ஆவார்.
தாம்
பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள்
திரிதலுக்கு' (Semantic
distortion) உட்படுத்தி,
ஈ.வெ.ரா அவர்கள்
தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'வரலாற்று குற்றவாளியாக' கருதுவற்கான நியாயங்களுக்கு ஈ.வெ.ராவே
காரணமாகியுள்ளார். நானறிந்த வரையில் தம்மை தவறாக அவ்வாறு புரிந்து கொள்ளும் வகையில் பேசிய, எழுதிய தலைவர் உலக அளவில் ஈ.வெ.ரா மட்டுமே
ஆவார். ('காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, நேரு, பாரதி
போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்க சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கலில் ஈ.வெ.ரா?';
https://tamilsdirection.blogspot.com/2020/10/unique.html)
மேற்குறிப்பிட்ட
குறைபாட்டின் காரணமாக, தமிழ் தொடர்பாக ஈ.வெ.ரா
'தாய்ப்பால் பைத்தியம்' நூலில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாக, ஈ.வெ.ராவிடம்
விவாதிப்பதை புலமையாளர்கள் தவிர்த்திருக்கலாம். (குறிப்பு கீழே)
அதன்
விளைவாக, இன்றும் அந்த தவறான நிலைப்பாட்டில்
பயணிக்கும் 'குருட்டுப் பகுத்தறிவாளர்கள்' வலம் வருகிறார்களா? என்ற
விவாதத்திற்கும் இடம் இருக்கிறது.
நேர்மறை
(Positive thinking) சிந்தனைகளுடன்
வாழும் ஒருவர் வெறுப்பு அரசியலில் சிக்கி விட்டால், காலப்போக்கில் எதிர்மறை சிந்தனைகளுக்கு அடிமையாகி, விவாத அநாகரீகம் நோயில் சிக்கும் வாய்ப்பினைத் தவிர்ப்பது கடினமாகும். (‘கந்த சஷ்டி கவசம்’ - நேர்மறை
சிந்தனைகளும், எதிர்மறை சிந்தனைகளும்’; https://tamilsdirection.blogspot.com/2020/07/positive-thinking.html
)
குறிப்பு:
நீட்
தேர்வு தொடர்பாக பா.ஜ.க
துணைத்தலைவர் அண்ணாமலையிடம் விவாதிக்க தி.மு.க
சார்பாக எவரும் முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து, தொலைக்காட்சியில் பா.ஜ.கவினருடன்
விவாதிப்பதையும் தவிர்க்க தி.மு.க
முடிவு செய்துள்ளது.
தி.மு.கவினரிடம் விவாதிக்க
மற்றவர்கள் அஞ்சி ஒதுக்கிய போக்கானது தி.மு.க
வளர்ச்சிக்கு உதவியது. கருணாநிதியின் மறைவிற்குப் பின், இன்று பா.ஜ.கவிடம்
விவாதிக்க தி.மு.க
அஞ்சும் போக்கானது, தி.மு.க
ஆதரவாளர்களை தலைக்குனிவுக்கு உள்ளாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்தப் போக்கானது, தி.மு.கவின்
அரசியல் தற்கொலைக்கு வழி வகுக்கும்.
தமிழ்
தொடர்பாக, ஈ.வெ.ராவின்
'தாய்ப்பால் பைத்தியம்' நிலைப்பாட்டினை ஆதரித்து விவாதிக்கும் பெரியாரிஸ்டுகள் எல்லாம் 'விவாதக் கோமாளிகளாக' வெளிப்படுவார்கள். ஈ.வெ.ரா
வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான
மாற்றங்களுக்கு' உட்படாத எந்த கொள்கையும் கட்சியும்
காலப் போக்கில் மரணிப்பது நிச்சயமே.
இது டிஜிட்டல் யுகம். அரைகுறையான சான்றுகளுடனும், விவாத குறைபாடுகளுடனும், விவாத அநாகரிகத்துடனும் விவாதிப்பவர்களை எல்லாம், படித்தவர்களும் கல்லூரி மாணவர்களும் எளிதில் அடையாளம் கண்டு ஒதுக்கி விடுவார்கள்.
படிக்கவும்:
'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும் ; https://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html
No comments:
Post a Comment