Tuesday, November 10, 2020

 

'சமூக நுண்துளை வினையும் (Social Capillary action) 'சமூக ஆற்றல் உறிஞ்சி' செயல்நுட்பமும் (Social Energy Suckers) 

        
'அதீத சுடருடன் அணையும் விளக்கான' தி.மு.கவை அணையவிடாமல் பாதுகாத்த மோடி அரசு?

 

சமூகத்தில் மக்களிடம் வேர் பிடித்து வளரும் கட்சியானது, கொள்கை என்ற எண்ணெயில் எரியும் விளக்கு போன்றதாகும்.

தி.மு.கவின் கொள்கையானது நீர்த்துப் போன நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் பற்றிய அறியாமையில்,

'அதீத சுடருடன் அணையும் விளக்காக' உள்ள தி.மு.கவின் வற்ற வேண்டிய எண்ணெயை வற்ற விடாமல் பாதுகாத்து வரும் திசையில் தான், 2014 முதல் மோடி ஆட்சியும் தமிழக பா..கவும் பயணித்து வந்துள்ளன. சரியான திசையில் பயணிக்காததால், ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பின், தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் எவ்வாறு தாமதமானது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_22.html )

2020இல் இந்திய விடுதலைக்குப் பின் முதல்முறையாக தமிழ்நாட்டின் அடையாளச் சிக்கலைத் தீர்க்கும் திசையில், தமிழக பா.. தலைவர் எல்.முருகனும் துணைத்தலைவர் அண்ணாமலையும்,  பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள். அவர்களுக்கு முதல் வெற்றியை எதிர்பார்த்ததை விட விரைவாகவே ஸ்டாலின் வழங்கி விட்டார்.

நீட் தேர்வு தொடர்பாக பா.. துணைத்தலைவர் அண்ணாமலையிடம் விவாதிக்க தி.மு. சார்பாக எவரும் முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து, தொலைக்காட்சியில் பா..கவினருடன் விவாதிப்பதையும் தவிர்க்க தி.மு. முடிவு செய்துள்ளது.

தி.மு.கவினரிடம் விவாதிக்க மற்றவர்கள் அஞ்சி ஒதுக்கிய போக்கானது தி.மு. வளர்ச்சிக்கு உதவியது. கருணாநிதியின் மறைவிற்குப் பின், இன்று பா..கவிடம் விவாதிக்க தி.மு. அஞ்சும் போக்கானது, தி.மு. ஆதரவாளர்களை தலைக்குனிவுக்கு உள்ளாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்தப் போக்கானது, தி.மு.கவின் அரசியல் தற்கொலைக்கு வழி வகுக்கும். (https://tamilsdirection.blogspot.com/2020/11/physics-ofmusic-15.html )

'அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது' (https://vanakkamlondon.com/spiritual/2019/12/57821/  )

விளக்கின் திரியைப் பற்ற வைத்ததும், புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி எண்ணையை ஈர்த்து திரி எவ்வாறு எரிகிறது? என்பதை விளங்கிக் கொண்டால் தான், எண்ணெய் தீர்ந்து அணையும் முன், ஏன் திரி அதிக பிரகாசத்துடன் எரிகிறது? என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

மிகவும் குறுகிய விட்டமுள்ள நுண்துளைகள் திரவத்துடன் தொடர்பு கொள்கையில், திரவத்தின் பரப்பு இழுவிசை (surface tension) காரணமாக மேல்நோக்கி திரவத்தை ஈர்ப்பதே 'நுண்துளை வினை (Capillary action) ஆகும்.

(The job of the wick is to transport the fuel from the container to the flame. Capillary action draws the liquid fuel up the wick, which prevents the wick from burning up; the flame actually burns just above the wick's surface.; https://www.hunker.com/13412087/how-oil-lamps-work ;

Ever wipe your wet face with a cotton towel? How does it absorb all the water? It is called capillary action. Water like many other liquids has the property to rise up against gravity when it comes in contact with small tubes. In case of a towel, the numerous tiny pores in it act as tubes absorbing the water. Capillary action is responsible for many phenomena we see in our day to day life. https://nwa.mah.nic.in/sdmc/facts/capillary.htm# ;

Capillary action (sometimes capillarity, capillary motion, capillary effect, or wicking) is the ability of a liquid to flow in narrow spaces without the assistance of, or even in opposition to, external forces like gravity. https://en.wikipedia.org/wiki/Capillary_action )

எண்ணெய் தீரும் நிலையில், திரி எரியும் முனை கூடுதல் வெப்பத்துடன் இருப்பதால், திரியில் இருக்கும் கடைசித்துளி எண்ணெயையும், திரியில் இருக்கும் எண்ணெயையும் வேகமாக உறிஞ்சி கூடுதல் பிரகாசத்துடன் எஞ்சிய திரி முழுவதும் எரிந்து அணையும்.

தி.மு. போன்றமக்களிடம் வேர் பிடித்து வளர்ந்த கட்சிகள் எல்லாம் அடி மட்டத்தில் 'சமூக நுண்துளை வினை ( Social Capillary action) மூலமாக எவ்வாறு வளர்ந்தன? என்பதை நேரடியாக பார்க்கும் அனுபவம் எனக்குக் கிடைத்தது. (குறிப்பு 1 கீழே)

'சமூக நுண்துளை வினை' மூலமாக அடிமட்டத்தில் தொண்டர்களானபல சமூக நுண்துளைகள் மூலமாக ஈர்த்த சமூக ஆற்றலானது, எவ்வாறு ஒன்றியம், மாவட்டம் போன்ற அமைப்புகள் மூலமாக தி.மு. தலைமை செயல்படுவதற்கான சமூக ஆற்றலை 1967 வரை உருவாக்கியது? என்பது தொடர்பாக

ஆர்வமுள்ளவர்கள் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டால், அதற்கு நான் உதவ முடியும்.

மக்களை ஈர்த்தகொள்கை என்பதன் அடிப்படையிலேயே, எந்த ஒரு கட்சியும் மேற்குறிப்பிட்டவாறு 'சமூக நுண்துளை வினை' மூலமாக தமிழ்நாட்டில் வேர் பிடித்து வளர முடியும். அக்கொள்கையானது நீர்த்துப்போக தொடங்குமானால், 'சமூக நுண்துளை வினை'யும் நீர்த்துப்போகும்.

1967இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னால், எவ்வாறு ஊழல் மூலமாக ஆதாய அரசியல் வளர்ந்த போக்கில், தி.மு.கவில் 'சமூக நுண்துளை வினை' படிப்படியாக குறைந்து, சமுக ஆற்றல் உறிஞ்சிகள்' (Social Energy Suckers) செயல்நுட்பம் வளர்ந்தது? என்பது தொடர்பாக

ஆர்வமுள்ளவர்கள் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டாலும், அதற்கு நான் உதவ முடியும்.

'சமுக ஆற்றல் உறிஞ்சிகள்' செயல்நுட்பத்தில் பயணிக்கும் ஒரு ஆளுங்கட்சியானது, எந்தெந்த வழிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் சுருட்ட முடியும்? தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, எவ்வாறு நன்கு ஊழல் மசகிடப்பட்ட எந்திரமாக (well oiled machine) கட்சியைப் பாதுகாப்பது? மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழல் பணத்தில் ஒரு பகுதி எவ்வாறு செலவாகிறது? கிராம மட்டத்தில் இருந்து பல்வேறு உதவி தூண்டில் மீன்கள் மூலமாக, கட்சியில் வாக்கு வங்கியை எவ்வாறு பாதுகாப்பது? மத்தியில் ஆண்ட ஆளும் கட்சிகள் தத்தம் சுயநலன்களுக்காக, எவ்வாறு தமிழ்நாட்டில் 'சமுக ஆற்றல் உறிஞ்சிகள்' செயல்நுட்பத்தை அனுமதித்து வந்துள்ளன?

என்பவை எல்லாம், மேற்குறிப்பிட்ட ஆய்வுக்கு உதவும் கேள்விகளாகும்.

1967இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மூலம், அப்போது முதல்வரான அண்ணாவிற்கு, தமது கட்சியில் வளர்ந்துள்ள 'சமுக ஆற்றல் உறிஞ்சிகள்' (Social Energy Suckers) பற்றிய புரிதல் ஏற்பட்டது. “ஒரு அரசியல்கட்சி நடத்தவேண்டிய தடாலடி ஆளுமை தனக்கில்லை என்பதையும், அரசாளுமையில் மாட்டிக்கொண்டு மாரடிக்கும் வேலை தனக்குப் பொருந்தாத ஒன்று என்றும், ஊழல்பேர்வழிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் நடத்துவது இயலாத வேலை என்றும், உணர்ந்த அண்ணா, மருத்துவ மனையில் சந்தித்தபொதுவுடமைக்கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், புற்றுநோயால் தாக்கப்பட்டு இருந்தபோதுதான் தன் கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற்றத்துடன் உயிர்வாழ்வதை விரும்பவில்லை, எவ்வளவு விரைவில் மரணம் நேரும் என்று எதிர்நோக்கியிருப்பதாகவும் சொல்ல வைத்தது. இதில் வினோதம் என்னவென்றால், பொதுவாழ்வில் சலித்து, அனைத்தையும் துறந்து, முனிவராகி விட பெரியார் யோசித்த போது, அதை வேண்டாம் என்று தடுத்து, பெரியாரை உற்சாகப்படுத்தியவர் அண்ணா, முதல்வராயிருந்த காலத்தில்.

1944இல் 'திராவிடர் கழகம்' உருவாகிஅறிவுபூர்வமான போக்குகள் தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்குகள் தலைதூக்கி, 'சமூக ஆற்றல் உறிஞ்சி' செயல்நுட்பம் வளர்ந்த போக்கிலேயே, அண்ணா பலியானதையே மேற்குறிப்பிட்டது உணர்த்துகிறது. (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_77.html )

'தீ பரவட்டும்' என்று கம்ப ராமாயணத்திற்கு எதிராகப் பயணித்த தி.மு.கவானது, 1967க்குப் பின் கம்பன் உள்ளிட்டு .வெ.ராவும் அண்ணாவும் கண்டித்த தமிழ் இலக்கியங்களின் கர்த்தாக்களுக்கு சிலைகள் எடுத்த போதே, அக்கட்சிகளின் வளர்ச்சிக்கு உதவிய கொள்கை நீர்த்துப் போகத் தொடங்கியது.

தி.கவும், தி.மு.கவும் வளர்ந்த 'சமூக நுண்துளை வினை' தொடர்புடைய கொள்கையானது எவ்வாறு நீர்த்துப் போகத் தொடங்கியுள்ளது? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html

https://tamilsdirection.blogspot.com/2020/11/physics-ofmusic-15.html

கொள்கைக்ள் நீர்த்துப் போனாலும், தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுத்து வரும் அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் நீடிக்கின்றன. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடிக்கும் அடையாளச் சிக்கலே பிரிவினை சக்திகளின் வெறுப்பு அரசியலின் வலிமையாகும்.     (https://tamilsdirection.blogspot.com/2020/08/latent.html)  

2014 முதல் சில பா.. தலைவர்கள் தவறான (மணியம்மை .வெ.ராவின் வளர்ப்பு மகள்) மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் .வெ.ராவையும் அண்ணாவையும் இழிவுபடுத்தி அரசியல் தற்கொலைப் போக்கில் பயணித்ததானது அந்த பிரிவினை சக்திகளின் வலிமையைக் கூட்டியது.  (https://tamilsdirection.blogspot.com/2020/07/recruiting-agents.html )

கொள்கைகள்  நீர்த்துப்போன நிலையில் திராவிட குடும்ப ஊழல் அரசியலின் லாபத்திற்கு பேரம் பேசும் வலிமையும் அதனால் கூடியது.

காஷ்மீரில் பிரிவினைக்காகவெளிப்படும் வன்சக்தியை (Hard Power) விட வலிமையானது, தமிழ்நாட்டில் பிரிவினைக்காக வளர்ந்து, இன்று 'திராவிட ஊழல் பாதுகாப்புக் கவசமான' மென்சக்தி (Soft Power) என்பதும், கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில், 'அறிவியல் ஊழல்' புகழ் தி.மு. பெற்ற வெற்றியின் முலமாக‌, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில், பிரிவினைக் கோரிக்கையை ஆதரித்துப் பேசியவர்கள் மீது தேச விரோத சட்டம் பாய்ந்து, அவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டு வருகிறார்களா?

தமிழ்நாட்டில் தி.மு.க அமைச்சர்கள் ஆட்சியை இழப்பதற்கு முன், 'பிரிவினை கோரிக்கையை' முன்னெடுப்போம், என்று எச்சரித்த போது, அவர்கள் மீது, அந்த சட்டம் பாய்வதற்கு ஏன் பயந்தது? அதற்குப் பின்னும், காங்கிரசும், பா.ஜ.க வும் மத்திய அரசில் தி.மு.கவை இடம் பெறச் செய்தது, தேச துரோகமாகாதா? இந்திய விடுதலைக்குப் பின் நடந்த தேர்தல் முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல், கட்சித்தாவலை ஊக்குவித்தே ராஜாஜி முதல்வர் ஆனார். இடையில் காமராஜர் ஆட்சிக்குப் பின், 1967 முதல் கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை, 'அந்த' மென்சக்தியின் வலிமையில், திராவிடக் கட்சிகளுக்கு வாலாக அல்லது பாரமாக தேசியக் கட்சிகள் எல்லாம் பயணிக்கின்றனவா?  (https://tamilsdirection.blogspot.com/2019/06/5.html )

பணம், காசுக்கு பங்கம் வந்துட்டா, கொள்கையாவது, வெங்காயமாவது.

''சமீபத்துல, கோவை மேற்கு மாவட்ட, தி.மு.., நிர்வாகிக்கு சொந்தமான இடங்கள்ல, வருமான வரித்துறை நடத்துன சோதனையால, தி.மு.., புள்ளிகள் பலர் மிரண்டு போயிருக்கா ஓய்...

''ஏற்கனவே, தி.மு.., - எம்.பி.,க்கள் சொத்துகள் மீது, வருமான வரித் துறை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி, முடக்கி வச்சிருக்காளே... அடுத்த ரெய்டு யார் வீட்டுலன்னு, எல்லாரும் பீதியில இருக்கா ஓய்...

''இதனால, தி.மு.., மூத்த நிர்வாகி ஒருத்தர், சமீபத்துல, டில்லியில பா.., மேலிடத் தலைவர்களைப் பார்த்து, சமாதானக் கொடியை பறக்க விட்டிருக்கார்...

''அப்ப, 'சட்டசபை தேர்தலுக்கு பின், எங்களது அணுகுமுறைகளை அடியோடு மாத்திக்கறோம்... கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே'ன்னு கேட்டதுக்கு, அவா தரப்புல பிடி கொடுக்கலையாம் ஓய்...'' என்றார்,

''அது சரி வே... பணம், காசுக்கு பங்கம் வந்துட்டா, கொள்கையாவது, வெங்காயமாவது...’ (https://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91&fbclid=IwAR0Vvtr-fRLlw1qiLodHIU6jR4zjOfQOMGbkqfdbpde9Gh7qYfk0yNFESPA )

 

(வளரும்)


குறிப்பு 1:

1967 வரை தி.மு. வளர்ந்த சமூக செயல்நுட்பமானது 'சமூக நுண்துளை வினை (Social Capillary action) ஆகும். 1967 முதல் அது சீர்குலைந்து, ஆதாய அரசியலில் தி.மு. பயணித்து வரும் சமூக செயல்நுட்பமானது 'சமூக ஆற்றல் உறிஞ்சி' செயல்நுட்பம் ஆகும். அந்த இரண்டு சமூக செயல்நுட்பங்களும் புரிந்தவர்களுக்கு, தி.மு.‌ 'அதீத சுடருடன் அணையும் விளக்கா'? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு. வளர முக்கிய பங்கு ஆற்றிய வெகு சிலரில் முக்கியமானவர் பெரியண்ணன். 1950 களில் நான் பள்ளி மாணவன். உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாக இருந்த வசதியான குடும்பமானஎன் தாய் மாமன்கள் தி.மு. பற்றாளர்கள். பண நெருக்கடியுடன் வாழ்ந்த தி.மு. தொண்டரான பெரியண்ணன் பெரும்பாலும் கூட்டுக்குடும்பமான எங்கள் வீட்டிலேயே இருப்பார். தங்களுக்கு கிடைக்கும் பணத்தை என் மாமன்கள் மகிழ்வுடன் தி.மு. கட்சியை வளர்க்க செலவழித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.வை வளர்த்த கே.வி.சுப்பையா என் தந்தையின் நெருக்கமான நண்பர். பி. படித்து அரசுப்பணியில் இருந்து தி.மு.கவை வளர்த்து, 1957 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமது அரசுப் பணியை அவர் ராஜினாமா செய்தார்.  கூலியின்றி கொள்கை ஆர்வத்தில் வெளிப்பட்ட பணத்தையும் உடலுழைப்பையும் 'சமூக நுண்துளை வினை' மூலமாக ஈர்த்து, புதுக்கோட்டையில் தி.மு. எவ்வாறு வளர்ந்தது? என்பதைப் பார்க்கும் அனுபவமானது பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவராக வளர்ந்த காலத்தில் எனக்குக் கிட்டியது.

இயற்பியலில் (Physics) 'நுண்துளை வினை' மூலமாக பல நுண்துளைக் குழாய்கள் வழியாக பெரிய அளவில் திரவத்தை  அதிக உயரத்தில் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் சந்தைக்கு வந்ததாகத் தெரியவில்லை.

தனி மனிதர், குடும்பம், கட்சி போன்ற அமைப்புகள் செயல்படுவதற்கு சமூக ஆற்றல் (Social Energy) அவசியமாகும்.

1.குடும்பம், நட்பு, உள்ளிட்டு பலவகை அமைப்புகளில்(structures) அங்கம் (membership) வகிக்கும் மனிதர்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் தொடர்புகள் ஆகியவை சமூக இழைகளாகும்(social fibers).

2. அங்கம் வகிக்கும் மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும்ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,

3. தனி மனிதர்களின் ஆற்றல்களே அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் (குடும்பம், இயக்கம், etc ) சம்பந்தப்பட்ட சமூக அமைப்பாற்றல் ஆகும். அவையே சமூக அமைப்பின் அமைப்பாற்றலின் (socio-structural energy) மூலங்களாகும் (sources).

4. ஒரு அமைப்பானது, (குடும்பம், நிறுவனம், அரசு, etc ), அதன் நோக்கங்களை நிறைவேற்ற,  தரஏணி  நிலையிலான ( hierarchical status) செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.அதன் காரணமாக அச்செயல்பாடுகளுக்கு பொறுப்பான மனிதர்களின் நிலையும்  தரஏணி நிலையில் மேலும் கீழுமாகஇருக்கும். (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

மக்களை ஈர்த்தகொள்கை என்பதன் அடிப்படையிலேயே, எந்த ஒரு கட்சியும் எவ்வாறு 'சமூக நுண்துளை வினை' மூலமாக தமிழ்நாட்டில் வேர் பிடித்து வளர முடியும்? அக்கொள்கையானது நீர்த்துப்போக தொடங்குமானால், 'சமூக நுண்துளை வினை'யும் எவ்வாறு நீர்த்துப்போகும்? என்ற ஆராய்ச்சிக்கு மேற்குறிப்பிட்ட விளக்கம் உதவும்.

மேற்குறிப்பிட்ட சமூக இழைகள் 1967 வரை, தி.மு.க வளர்ந்த காலக்கட்டத்தில் தி.மு.க ஆதரவுப் போக்கில் பயணித்தவர்களின் 'நுண்துளை வினை'க்கான‌ நுண்துளைக் குழாய்கள் போல செயல்பட்டன. 1967க்குப் பின், அரசியல் நீக்கம் வளர்ந்து, 'நுண்துளை வினை' சீர் குலைந்து, 'சமூக ஆற்றல் உறிஞ்சி' செயல்நுட்பம் வளர்ந்து இன்று உச்சத்தில் உள்ளது. எனவே சமூக இழைகளும் ஊழல் நோயில் சிக்கி, 'சமூக ஆற்றல் உறிஞ்சி'களாக மாற்றம் பெற்றுள்ளன.  

No comments:

Post a Comment