'தமிழர்' உட்குழுவாக,
'இந்தியர்' வெளிக்குழுவாக,
பிராமணரல்லாதார் 'உட்குழுவாக', பிராமணர்கள் 'வெளிக்குழுவாக';
எதிரெதிர் முகாம்களின் 'கறுப்பர்
கூட்டங்கள்';
தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும்
கேடாகும் வகையில் உள்மறை (Latent)
சங்கமம்
ராஜாஜி
முதல்வராக இருந்த காலத்தில் கும்பகோணத்திலும், கருணாநிதி
முதல்வராக இருந்த காலத்தில் சேலத்திலும் ஈ.வெ.ரா தலைமை தாங்கிய ஊர்வலங்களில்
இராமர் படம் செருப்பால் அடிக்கப்பட்டது போல, சிவன்
படமானது ஏன் அவ்வாறு அடிக்கப்படவில்லை? காமராஜர்
முதல்வராக இருந்த காலத்தில், விநாயகர் பொம்மை உடைத்தல் போராட்டம்
நடந்ததைப் போல, முருகன் பொம்மைக்கு ஏன் அவ்வாறு
நடக்கவில்லை?
சிவன்
படத்தையும் முருகன் பொம்மையையும் அவ்வாறு அவமதித்திருந்தால், தாமும்
தமது கட்சியும் வெளியில் நடமாட முடியாது, என்பதை ஈ.வெ.ரா
அறிந்திருந்தார்.
இன்றும் நானறிந்த
பிராமணரல்லாத படித்தவர்களில் சைவப்பிரியர்கள் எல்லாம் சமஸ்கிருத வெறுப்புடனும்,
பிராமண வெறுப்புடனும் பயணித்து வருகிறார்கள். அது போல, தங்களின்
குடும்பம் மற்றும் வியாபாரம் தொடர்புள்ள சடங்குகளை எல்லாம் புரோகித பிராமணர்கள்
மூலம் நிறைவேற்றும் பல பிராமணரல்லாதோர், சமூக அளவில் பிராமணர்கள் மீது வெறுப்புடன் உள்ள
போக்கும் தொடர்கிறது.
பல சாதிகளில் சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பும் இன்றைய காலம் வரையிலும், பிராமண புரோகிதரை வைத்து திருமணம் செய்வதில்லை. தமிழ் நாட்டில் சூத்திரர் பற்றி மகராஜன் அறிக்கையில் உள்ளது சரியாக இருக்கலாம். தமிழரல்லாத மன்னர் ஆட்சிக்கு முன், தமிழ் நாட்டில் அக்கருத்து இருந்ததற்கு சான்றில்லை. பல சாதிகளில் பணக்கார குடும்பங்களில் பிராமண புரோகித திருமணங்கள் தி.க தோன்றிய பின் தான், புதிதாக முளைவிட்டன. பிராமண எதிர்ப்பு பிராமணரல்லாதாரிடம் புதிதாக உள்மறையாக தாழ்வு மனப்பான்மையைத் தூண்டி, சடங்குகளில் பிராமண புரோகிதர் வரவை ஊக்குவித்திருக்கலாம்.
பல சாதிகளில் சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பும் இன்றைய காலம் வரையிலும், பிராமண புரோகிதரை வைத்து திருமணம் செய்வதில்லை. தமிழ் நாட்டில் சூத்திரர் பற்றி மகராஜன் அறிக்கையில் உள்ளது சரியாக இருக்கலாம். தமிழரல்லாத மன்னர் ஆட்சிக்கு முன், தமிழ் நாட்டில் அக்கருத்து இருந்ததற்கு சான்றில்லை. பல சாதிகளில் பணக்கார குடும்பங்களில் பிராமண புரோகித திருமணங்கள் தி.க தோன்றிய பின் தான், புதிதாக முளைவிட்டன. பிராமண எதிர்ப்பு பிராமணரல்லாதாரிடம் புதிதாக உள்மறையாக தாழ்வு மனப்பான்மையைத் தூண்டி, சடங்குகளில் பிராமண புரோகிதர் வரவை ஊக்குவித்திருக்கலாம்.
(‘அனைத்து சாதியும் அர்ச்சகராகும் கோரிக்கையை
கெடுப்பது’;
ஈ.வெ.ரா
வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு அவரின் கொள்கைகளை உட்படுத்தும் அறிவுபூர்வ விமர்சனப்
பார்வையை இழந்து, ''குருட்டுப் பகுத்தறிவு' திசையில் 'பெரியார்' கட்சிகள்
பயணித்து வருகின்றன. அதனால் 'பெரியார்' போதையில்,
ஈ.வெ.ராவிற்கு தெரிந்திருந்த 'லக்ஷ்மண்
கோடு' எல்லை கடந்து, 'கறுப்பர்
கூட்டம்' 'கந்த சஷ்டி கவசம்' விமர்சனம் என்ற பெயரில் இழிவு படுத்தி மாட்டிக் கொண்டார்கள். இனி
அதன் விளைவில் இருந்து 'பெரியார்' கட்சிகள்
தப்பிக்க முடியாது.
ஆதாய நோக்கற்ற
இயல்பான எதிர்ப்பு வலிமையின்றியும், அறிவுபூர்வ
விவாத வலிமையின்றியும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
'பெரியார்'
கட்சிகள் இனி இந்து கடவுள்களை பொது இடங்களில் அவமதிக்க முடியாத
அளவுக்கு தமிழ்நாட்டில் பக்தர்கள் வலிமையாகி வரும் போக்கினை 'இந்துத்வா வளர்ச்சி' என்று கருதினால்,
அவ்வாறு ஆழமாக
வேர் பிடித்து வரும் 'இந்துத்வா' மூலமாக,
தமிழக பா.ஜ.க பலன் பெற வாய்ப்பில்லை, என்ற
திசையில் 'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சை பயணிப்பதையும் ஏற்கனவே எச்சரித்துள்ளேன்.
அது மட்டுமல்ல,
2014இல் மோடி பிரதமரானது முதல் இந்துத்வா ஆதரவு
முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்' எவ்வாறு வளர்ந்து வருகிறது? என்பதையும்
ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
இந்துத்வா ஆதரவு
மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர்
கூட்டங்கள்' எல்லாம், உணர்ச்சிபூர்வ
பரிமாற்ற வெறுப்பு அரசியலில் சமூக நேர்மையைச் சீர்குலைத்துப் பயணிப்பதானது,
2014 முதல் வேகமெடுத்து வரும் ஆபத்தான சமூக
சிக்னலாகும்.
அதன்
தொடர்விளைவாக, 'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களாக (Recruiting agents) எவ்வாறு
பிராமணர்கள் பங்களித்து வருகிறார்கள்? என்பதையும் ஏற்கனவே
விளக்கியுள்ளேன்.
இந்துத்வா ஆதரவு
முகாமில் உள்ள 'கறுப்பர் கூட்டங்கள்'
பங்களிப்புடன், பிராமண எதிர்ப்பைக் குவியப்படுத்தி, இந்துக்
கடவுள்கள் எதிர்ப்பைத் தள்ளி வைத்து, 'பெரியார்' கட்சிகள்
புத்துயிர் பெறும் ஆபத்தும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 'வெளிக்குழுவில்' பிராமணர்கள் சிக்கிய போக்கு
வலிமையானதற்கு ஈ.வெ.ரா எவ்வாறு பங்களித்துள்ளார்? 'தமிழர்'
உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும்
வலிமையானதற்கு ராஜாஜி எவ்வாறு பங்களித்துள்ளார்? என்பதை
ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
இந்துத்வா ஆதரவு
முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டம்' செல்வாக்கில் உள்ள சமூக வெளியும் (Social Space), இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர்
கூட்டம்' செல்வாக்கில்
உள்ள சமூக வெளியும், சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் கேடாகும் வகையில் உள்மறை (Latent)
சங்கமம் ஆகியுள்ளது;
என்பது எனது
அனுபவமாகும்.
தொல்காப்பியம்
திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் எவ்வாறு சமஸ்கிருத நூல்களில்
இருந்து வந்தவை? என்று நாகசாமி முன்வைத்த கருத்துக்கு இந்துத்வா ஆதரவு முகாமின்
செல்வாக்கில் உள்ள சமூக வெளியில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? என்பதை
கூகுளிலும் யூடியுபிலும் தேடிப்பாருங்கள்.
நாகசாமியின்
வாதத்தை மறுத்த வாதங்கள் எல்லாம், இந்துத்வா எதிர்ப்பு முகாமின் செல்வாக்கில் உள்ள சமூக வெளியில்
எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது?
என்பதை கூகுளிலும் யூடியுபிலும்
தேடிப்பாருங்கள்.
இரண்டு
முகாம்களிலும் வெளிப்பட்ட உணர்ச்சிபூர்வ பாராட்டு இரைச்சலில் உண்மை இருளில்
நீடிக்கிறதா? என்பதை, ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை அறியலாம்.
இசை
ஆராய்ச்சிக்கு முன், நான் இந்துத்வா எதிர்ப்பு முகாமில் இருந்தவன். அந்த வகையில், இன்று இந்துத்வா
எதிர்ப்பு முகாமில் வெளிப்பட்ட வாதங்களில் சம்ஸ்கிருத மொழி மீது வெளிப்பட்ட வெறுப்பு
என்னைக் கவலைக்குள்ளாக்கியது.
உதாரணத்திற்கு
ஒன்று கீழே;
நாகசாமி மற்றும்
ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் எதிர்வாதங்களில் உள்ள நியாயங்களை உரிய முறையில்
சந்திக்காமல், தமிழ்நாட்டில் ஏற்கனவே
இருந்த சமஸ்கிருத வெறுப்பினை தேவையில்லாமல் ஊதிப்பெருக்க வைத்து
விட்டார்கள்;
என்பது எனது
அனுபவமாகும்.
நித்தியானந்தாவைப்
பாராட்டிய ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் எல்லாம், சரியான தேச்சக்கட்டுமான திசையில் தமிழ்நாடானது
தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சிக்கு எவ்வாறு அனுகூல சத்ருவாக பங்களித்து
வருகிறார்கள்?
(‘Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity
Politics -EVRamaswamy’; Why it may
accelerate the breaking of Tamilnadu from India?;
தமிழ்நாட்டில்
பிரிவினை கோரிக்கையின் தோற்றம், வளர்ச்சி, 1967 முதல் தமிழ்நாடு தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரிந்தது ஆகிய
மூன்றிலும் ராஜாஜியின் பங்களிப்பு முக்கியமானது. அது தெரியாமல், ராஜிவ்
மல்கோத்ரா ‘Breaking India' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்
இலக்கியங்கள் தொடர்பாக நாகசாமி முன்வைத்த அனைத்து கருத்துக்களுக்கும் பதில்
சொல்லும் புலமை எனக்கு இல்லை. ஆனால் தொல்காப்பியம் தொடர்பாக அவர் முன்வைத்த
கருத்து எனது புலமை சம்பத்தப்பட்டதாகும். எனவே நாகசாமியின் கருத்து எவ்வாறு
தவறானது? என்பதை
கீழ்வரும் பதிவில் வெளியிட்டேன்.
‘Is Nagaswamy aware of the phonetic differences between Tamil &
Sanskrit?’ ;
மேற்குறிப்பிட்ட
பதிவின் கீழுள்ள குறிப்பில் உள்ளவை:
‘Philosophy of Peninsular India - ThirukkuRaL_aRam- A comparative study
of Thirukkural and Baghavat Gita’ by H.V.Visweshvaran (விஸ்வேஸ்வரன்)
“Bhagavat Gita (Gita) is also an old treatise on the meaning and purpose
of human life. It is supposed to be an epitome
of the Upanishads. As there is no attempt in the past to include kuRaL as part
of Indian philosophical thought, we try to give an account of the philosophy of
kuRaL , THE PHILOSOPHY OF PENINSULAR INDIA.
This work does not sit in judgment of which one is superior than the
other. Both are superior on their own right. Otherwise they might not have
survived this long and still continue to
inspire mankind.”
The above link was forwarded to Rajiv Malhotra
2019 செப்டம்பரில் நான் அனுப்பிய
ஈமெயிலுக்கு இன்று வரை ராஜிவ் மல்கோத்ராவிடமிருந்து பதில் வரவில்லை.
ராஜிவ்
மல்கோத்ராவின் பணிச்சுமையை நான் ஓரளவுக்கு
யூகிக்க முடியும். நாகசாமியின் தவறான கருத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும்
அவர் சார்பில், வேறு யாராவது நான் அனுப்பிய பதிவினைப் படித்து, ராஜிவ்
மல்கோத்ராவிற்கு தெளிவு ஏற்படுத்தி,
அந்த தவறான கருத்தில் இருந்து ராஜிவ் மல்கோத்ரா விடுபட உதவியிருக்க
வேண்டும். அல்லது எனது பதிவில் உள்ளவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச்
சுட்டிக்காட்ட வேண்டும். மாறாக, புறக்கணிப்பதானது, தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கும் சக்திகளுக்கு
வலுவூட்டும் அபாயம் இருக்கிறது. தமிழ் தொடர்பாகவும், ஈ.வெ.ரா
தொடர்பாகவும் அபத்தமான வாதங்களை ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள்
ஏற்று பிரச்சாரம் செய்வதானது, தமிழ்நாட்டில் இந்துத்வாவை கேலிப்பொருளாக்கி விடும்.
அது போல, ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டின்
சித்த மருத்துவத்தை ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும், தமிழ்நாட்டை
இந்தியாவில் இருந்து துண்டிக்கும் சக்திகளுக்கு வலுவூட்டும்.
அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில்
உள்ள கோவில்களில் இருக்கும் அட்டவணை மற்றும் சக்கர வடிவ கல்வெட்டுகள் தொடர்பாக
என்னைப் போன்ற பேராசிரியர்கள் மூலமாக வெளிப்படும் கண்டுபிடிப்புகளை எல்லாம், நாகசாமி போன்று
உயர் பதவிகளில் இருந்தவர்கள் புறக்கணித்தன் காரணமாக,
பாரம்பரிய
சுற்றுலா தொடர்புள்ள தொழில், வியாபார வாய்ப்புகளை தமிழ்நாடு எவ்வாறு இழந்துள்ளது? என்பதையும்
கீழ்வரும் பதிவில் வெளியிட்டுள்ளேன்.
இந்துத்வா ஆதரவு
முகாமில் நாகசாமியின் தமிழ் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துக்களை ஆதரித்தவர்கள் எல்லாம்,
மேற்குறிப்பிட்டவை தொடர்பாக, தங்களின் மனசாட்சிக்கு உட்பட்டு அறிவுபூர்வ விவாதத்தினை தூண்ட
வேண்டும்.
பழந்தமிழ்
இலக்கியங்களில் இருந்து வெளிப்பட்ட எனது கண்டுபிடிப்புகள் மூலமாக, புதிய தொழில், வியாபார, வேலை
வாய்ப்புகள் உருவாவதை விட, இந்துத்வா எதிர்ப்பே முக்கியம் என்று கருதி, என்னை சங்கி
ஆதரவாளராக கருதி ஒதுக்கியதால், சுமார் 20 வருடங்களாக, அந்த பலன்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தாமதமாகி விட்டன.
மோடி ஆட்சியில்
வெளிப்படும் நிறைகளைப் பாராட்டினாலும், குறைகளையும், இந்துத்வா ஆதரவு முகாம்களில் வெளிப்படும்
குறைகளையும் சுட்டிக்காட்டி வருவதால், இந்துத்வா ஆதரவு முகாம்களிலும், அதே பாணி
இருட்டடிப்பு தொடர்கிறது. குறிப்பாக, தொல்காப்பியத்தில் ‘இசை மொழியியல்’ (Musical Linguistics)
தொடர்பான கண்டுபிடிப்பானது, நாகசாமியின் தமிழ் தொடர்பான கருத்துக்கு எதிராக இருப்பதால், அதுவும் அந்த
இருட்டடிப்பில் சிக்க, தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையிலான பரிமாற்ற தொடர்பும் (Complimentary)
இருளில் நீடிக்கிறது.
தமிழ்நாட்டில்
தமிழும் சமஸ்கிருதமும் பகையாக நீடிப்பது தமிழின் வளர்ச்சிக்குக் கேடாகி வருகிறது.
நானறிந்த வரையில், இந்துத்வா எதிர்ப்பு முகாமில் இருந்த அனுபவத்துடன், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டங்களை' நான் மட்டுமே எதிர்த்து வருகிறேன். எனக்குத் தெரியாமல் இரண்டு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டங்களையும்' பாரபட்சமின்றி எதிர்ப்பவர்கள் இருக்கக்கூடும்.
இந்துத்வா ஆதரவு
மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டங்களின்' சமூகவெளியில்
என்னைப் போன்றவர்களின் முயற்சிக்கு என்ன இடம் இருக்கிறது? என்பதை, ஆர்வமுள்ளவர்கள்
ஆராய்ந்து உண்மையை அறியலாம்.
என்னைப்
போன்றவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாமல்;
தமிழ்நாட்டில்
பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்'
நீடிக்கும் சமூகத்தளவிளைவு (Social Polarization)
ஒழியாது.
அதுபோலவே, பெரும்பாலான, குறிப்பாக
படித்த, பிராமணரல்லாதார்
பார்வையில், 'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் நீடிக்கும் சமூகத்தளவிளைவு ஒழியாது.
அவ்வாறு என்
போன்றவர்களின் முயற்சிகளுக்கு இடமளிக்காததில் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு
முகாம்களில் உள்ள கறுப்பர் கூட்டங்களின் சமூக வெளிகளின் சங்கமமானது,
'வெளிக்குழுவில்' பிராமணர்கள் சிக்கிய போக்கினை
வலுப்படுத்துவதற்கும், 'தமிழர்' உட்குழுவாக, 'இந்தியர்' வெளிக்குழுவாக சிக்கிய போக்கினை வலுப்படுத்துவதற்கும், எந்த அளவுக்கு
பங்களித்து வருகிறது? என்பதை, ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை அறியலாம்.
தமிழ்நாட்டின்
சமூகவெளியில் இருந்து, மேற்குறிப்பிட்ட எதிரெதிர் முகாம்களில் உள்ள 'கறுப்பர்
கூட்டங்கள்' அகற்றப்படாத வரையில்,
தமிழ்நாட்டில்
ஆழமாக வேர் பிடித்து வரும் 'இந்துத்வா' மூலமாக, தமிழக பா.ஜ.க பலன் பெற வாய்ப்பில்லை.
தமிழத்துவாவைச்
சரியாக உள்வாங்கிய இந்துத்வா வளர்க்கப்படாத வரையில், அதற்கு சாத்தியமில்லை.
(https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html)
குறி ப்பு:
பெண்ணுரிமை தொடர்பாக, காலனிய மனநோயில்
சிக்கி முன்வைக்கப்படும் வாதங்கள் தவறானவை ஆகும்.
தமிழ்நாட்டின் வரலாற்றில்
பெண் கல்வி, அரசவையில் அமைச்சர்களாக, புலவர்களாக பெண்கள் இருந்தது தொடர்பான சான்றுகளை, மேற்கத்திய வரலாற்றில் அவை தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிடுவதும்
பலனளிக்கும். நாகசாமி போன்ற தொல்லியல் அறிஞர்கள், அது
தொடர்பான தொல்லியல் சான்றுகளை எல்லாம், தொலைக்காட்சி
பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
(தொல்காப்பியத்தின்
யாப்பிலக்கணமானது சமஸ்கிருத மூலங்களில் (Sanskrit sources) இருந்து
உருவானதாக, நாகசாமி வெளியிட்ட கருத்து தவறு என்பதை
நான் விளக்கியுள்ளேன்;
(http://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post.html & http://tamilsdirection.blogspot.com/2019/09/is-nagaswamy-aware-of-thephonetic.html)
திருக்குறள் (423) வழியில் நாகசாமியின் கருத்தினை அணுகுவதே சரியாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html)
No comments:
Post a Comment