Monday, September 14, 2020

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா சங்கமம்;


தன்மானம் இழந்த தமிழர்கள் வளர்ந்த தமிழ்நாடு? (1)

 

1995இல் தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாடு நடந்தது. அம்மாநாட்டின் போது, மிகவும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டதால், பலர் வீடுகளில் சமைக்காமல், அந்த உணவையே வாங்கி சாப்பிட்டார்கள்; உலகின் கவனத்தை ஈர்த்த 'அம்மா உணவகத்திற்கு' முன்னோடியாக. அது போல, நான் கேள்விப்பட்ட கீழ்வரும் தகவலும் எனக்கு மறக்க முடியாததானது.

அம்மாநாட்டிற்காக ஜெயலலிதா தஞ்சைக்கு ஹெலிகாப்டரில் வந்தார். தஞ்சை அரசு மக‌ளிர் கல்லூரி அருகே இறங்கு தளம் அமைக்கப்பட்டிருந்தது. மக‌ளிர் கல்லூரியின் மொட்டை மாடியில் மாணவிகள் ஜெயலலிதாவைப் பார்க்க குவிந்திருந்தனர்.

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வி.ஐ.பிக்கள் எல்லாம் ஜெயலலிதா காலில், அந்த மண் தரையில் விழுந்தனர். ஜெயலலிதா அவர்கள் காலில் விழுந்ததைக் கவனிக்காமல், நடக்க, ஜெயலலிதாவின் பின்னே, தவளை போல காலில் விழுந்தவர்கள் தத்தி முன்னேறினர்.

உடனே கல்லூரியின் மொட்டை மாடியில் இருந்த மாணவிகள் அனைவரும் பலமாக சிரித்த ஒலி அந்த பகுதியை அதிர வைத்தது.

மறுநாள் சென்னையில் இருந்து கல்லூரி முதல்வரை தொலைபேசியில் அழைத்து கண்டித்துள்ளார்கள். சில காலம் கழித்துஅங்கு பணியாற்றிய பேராசிரியையுடன் உரையாடுகையில், அவர் அந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அது போலவே, ஜெயலலிதா மறைந்த பின்னர், முதல்வர் ஆக முயற்சித்த சசிகலாவின் காலில் கட்சியின் வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி, துணைவேந்தர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் காலில் விழுந்தார்கள். அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, மேற்குறிப்பிட்ட கல்லூரி மாணவிகளைப் போலவே, தமிழ்நாடெங்கும் அக்காட்சியைக் கண்டவர்கள் எல்லாம் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள்.

நான் கல்லூரி முதல்வராக இருந்த போது, அருகில் உள்ள மாவட்ட தலைநகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். அப்போது துணைவேந்தராக இருந்தவர் மேடையில் கருணாநிதியின் காலில் விழுந்து வணங்கியதை அறிந்த மாணவர்களும் பேராசிரியர்களும் எவ்வாறு சிரித்தார்கள்? என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் மத்தியில் கல்லூரி முதல்வர் பதவிக்கு மரியாதை கிடையாது என்பதையும், அந்த பதவியில் எந்த அளவுக்கு நான் உண்மையாகவும், நேர்மையாகவும் பங்களித்தேன்? என்ற அடிப்படையில் தான், எனக்கு மரியாதை கிடைக்கும் என்பதையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா ஆகிய அம்மூவரில் இருந்தும் வேறுபட்டு எம்.ஜி.ஆர் பயணித்திருக்கிறார். முதல்வர் கருணாநிதியால் அவமதிக்கப்பட்ட புலமையாளர்களை மிகவும் மதித்து ஆலோசனைகள் பெற்று, எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்தினார். கி.ஆ.பெ விஸ்வநாதன் போன்றவர்களை வழி அனுப்பும் போது, அவர்களை காரில் உட்கார வைத்து, கதவை எம்.ஜி.ஆரே மூடி வழி அனுப்பி வைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் ஆணையில், டார்பிடோ ஜனார்த்தனத்தை தேடி, குடிசை மாற்று வாரிய வீட்டில் குடி இருப்பதை, பச்சையப்பன் கல்லூரி பேரா.தாண்டவன் (பின்னாள் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர்) கண்டுபிடித்தார். அவர் சென்ற மோட்டர்சைக்கிளின் பின்புறத்தில் தாமாகவே டார்பிடோ ஜனார்த்தனம் உட்கார்ந்து பயணித்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் அறை முன் உள்ள பெஞ்சில் அவரை உட்கார வைத்து, உள்ளே சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தாண்டவன் அதைச் சொன்னார். எம்.ஜி.ஆர் அதிர்ந்து, 'அவ்வளவு பெரிய மனிதரையா வெளியில் உட்கார வைத்தாய்' என்று தாண்டவனைக் கடிந்து, எம்.ஜி.ஆரே வெளியில் வந்து, அவரை வணங்கி உள்ளே அழைத்துச் சென்றார். பின் அவரை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ் பெற்ற நிபுணர்களை  துணை வேந்தர்களாக்கினார். ஜெயலலிதா (சசிகலா) மற்றும் கருணாநிதி ஆட்சிகளில் துணைவேந்தர் பதவிகள் ஏலத்தில் போன குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

நானறிந்த வரையில் முதன் முதலாக மேடையில் காலில் விழும் பண்பாட்டைத் துவக்கியவர் முரசொலி மாறன் ஆவார். 1967இல் அண்ணா முதல்வராகி, தமது தென்சென்னை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தில், கட்சியில் மூத்தவர்களை எல்லாம் பின் தள்ளி முரசொலி மாறனை வேட்பாளாராக்கினார். எம்.பியான முரசொலி மாறன் பொதுக்கூட்ட மேடையில் அண்ணா காலில் விழுந்து வணங்கினார். தமது காலில் விழ முயன்றவர்களைக் கண்டித்து தடுத்த ஈ.வெ.ரா மற்றும் துக்ளக் சோ போல, அண்ணா தமது காலில் விழுந்த முரசொலி மாறனை கண்டித்ததாக நான் கேள்விப்படவில்லை. ‌

தன்மானம் இழந்து காலில் விழுந்து, தத்தம் தகுதிக்கும் மீறிய பணம், பதவி, பட்டங்கள் பெறும் 'நோஞ்சான்' நோயானது 1967இல் முளை விட்டது. அது வளர்ந்து முற்றி, துவக்கத்தில் குறிப்பிட்ட தவளை போல காலில் விழுந்தவர்கள் தத்தி முன்னேறி, அதன் தொடர்ச்சியாகவே, சசிகலாவின் காலில், கட்சியின் வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி, துணைவேந்தர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் விழுந்தார்கள்.

1967 முதல் வெளிப்பட்ட சமூக ஊமைக்காயங்களை எல்லாம், 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, முற்போக்கு' என்ற உணர்ச்சிபூர்வ போதைகள் மூலமாக மறைத்த, யோக்கியத் தமிழர்கள்(?) எல்லாம், அந்த நோஞ்சான் நோயின் ஊடே வளர்ந்த சமூகக் கிருமிகள் ஆவார்கள். 

தமிழ்நாட்டில் இன்று படித்தவர்களையும், பதவியில் இருப்பவர்களையும் பணக்காரர்களையும் யாரும் மதிப்பதில்லை. அவர்களிடம் ஆதாயம் பெறுபவர்கள் மட்டுமே மதிப்பது போல நடிக்கிறார்கள்.

தலித் முதல் பிராமணர் வரை அந்தந்த சாதிகளில் உண்மையாக மதிக்கத்தக்கவர்கள் எல்லாம் சமூக இருளில் சிக்கி விட்டனர். அந்தந்த சாதியில் தன்மானம் இழந்து அதிகார பீட மனிதர்களின் காலில் விழுந்து, அதிவேகப்பணக்காரர் ஆனவர்கள் தான், இன்று அந்தந்த சாதிகளில் 'பெரிய மனிதர்களாக' வலம் வருகின்றனர்.‌

ஆதாயத்திற்காக காலில் விழும் மனிதர்களும், அதில் மகிழ்ந்து அதை ஊக்குவிப்பவர்களும் ஒரே வகையிலான மனநோயில் சிக்கியவர்கள் ஆவார்கள்.

உயர்வு மனப் பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் ஒரே நாணயத்தின் ‍ - நோயின் - இரு பக்கங்களாகும்."We should not be astonished if in the cases where we see an inferiority [feeling] complex we find a superiority complex more or less hidden. On the other hand, if we inquire into a superiority complex and study its continuity, we can always find a more or less hidden inferiority [feeling] complex." (Ansbacher, Heinz L., and Ansbacher, Rowena R., ed. The Individual Psychology of Alfred Adler - A Systematic Presentation in Selections from his Writings. New York: Basic Books Inc., 1956 (page 260).) எனவே பேராசிரியர்கள் துணை வேந்தர்கள் முதல் அரைகுறையாகப் படித்த அடிமட்டத் தொண்டர் வரை, 'காரியம்' சாதிக்க, தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதும், தலைவர்கள் அதை 'ரசிப்பதும்' ஒரே நோயின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகிறது.

தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை குறை சொல்லியவர்களில், யார் யார் தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள்? என்று ஆராய்ந்தால், நமக்கு தெரிந்தவர்களில், நாம் உள்ளிட்டு, எத்தனை பேர்?, அந்நோயில் சிக்காதவர்கள் என்பது மிகக் குறைவாக வெளிப்பட்டால், வியப்பில்லை.’ (https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

மேற்குறிப்பிட்ட நோயும், 1965 முதல் அடிமட்ட மக்களின் உயிர்களைக் காவு வாங்கி வரும் 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தே வளர்ந்ததா? என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த களமாக தமிழ்நாடு இருக்கிறது. (குறிப்பு கீழே)

எனவே எந்த கட்சியில் கொள்கையில் இருந்தாலும், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு சுயலாப நோக்கின்றி பங்களிக்க விரும்புவர்கள் எல்லாம், முதலில் தத்தம் மனசாட்சிக்கு உட்பட்டு கீழ்வரும் சுயபரிசோதனையைத் துவங்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு வகை நோய்களும் நம்மிடம் இருக்கிறதா?

நமது குடும்பத்தில், உற்றத்தில், சுற்றத்தில், சாதியில், மதத்தில், நாட்டில், தன்மானம் இழந்து அதிகார பீட மனிதர்களின் காலில் விழுந்து, அதிவேகப்பணக்காரர் ஆனவர்கள்களையும், அந்த அதிகார பீட மனிதர்களையும் மதிக்கிறோமா? அவர்களை சமூக மனநோயாளிகளாகக் கருதி, நமக்கு வேண்டியவர்களாயிருந்தால் திருத்துகிறோமா? திருந்த மறுத்தால், நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்றும் துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா?

நாம் சரியென்று ஏற்றுக்கொண்டவைகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் தேடி, அதன் வெளிச்சத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த மறுபரிசீலனையின் மூலமே, உரிய திருத்தங்களுடன் சரியான திசையில் நாம் பயணிக்க முடியும்.

இறுக்கமான மனநிலையில் (Fixed Mindset) இருந்து வளர்ச்சி மனநிலைக்கு (growth mindset) மாறுவதை ஊக்குவிக்கும் சமூகசூழலும் கனிந்து வருகிறது. அதில் முந்திக்கொண்டு உரிய மாற்றங்களுடன் பயணிப்பவர்கள் எல்லாம், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தலைகளாவார்கள். தாமதிப்பவர்களும் அந்த மீட்சிக்கான வால்களாகப் பயணிக்க வேண்டிய நெருக்கடிகளும் கூடி வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று ஓய்ந்த பின்னர் வெளிப்படும் தமிழ்நாடு, நிச்சயமாக ஆக்கபூர்வ திசையில் பயணிக்கும் புதிய தமிழ்நாடாக வெளிப்படும்.(https://tamilsdirection.blogspot.com/2020/04/fixed-mindset-growth-mindset.html)


குறிப்பு:

நீட் தேர்வில் தோல்வி, நீட் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ததில் தோல்வி போன்ற காரணங்களால், அல்லது  தேர்வில் தோல்வி, தேர்வில் காப்பியடித்து மாட்டிக்கொண்ட அவமானம் போன்ற காரணங்களால் மனச்சோர்வுக்கு (Depression) உள்ளானவர்கள் எல்லாம், 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயாளிகளாக இருந்தால் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம், என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன.

There is an increasing evidence that alexithymia may be considered a risk factor for suicide.; Front Psychiatry. 2017; 8: 148. Published online 2017 Aug 14. doi: 10.3389/fpsyt.2017.00148

In conclusion, if depression presents alexithymic features the subject has an additive impact on the risk of suicidal ideation.

https://www.researchgate.net/publication/8380541_Alexithymia_and_suicidal_ideation_A_12-month_follow-up_study_in_a_general_population

The TAS is a 20-item instrument that is one of the most commonly used measures of alexithymia.

https://contextualscience.org/TAS_Measure

Education, income, and occupational status were inversely related to the TAS score. The results suggest that alexithymia could be viewed not only as a psychological phenomenon, but also partly as a socially determined one.   

https://pubmed.ncbi.nlm.nih.gov/8306643/#:~:text=Education%2C%20income%2C%20and%20occupational%20status,as%20a%20socially%20determined%20one. 

மேற்குறிப்பிட்ட தற்கொலைகளில், அனிதா, செங்கொடி போன்ற தற்கொலைகளைகளை, தமது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தும் கட்சிகளும் தலைவர்களும் சமூகக் குற்றவாளிகள் ஆக மாட்டார்களா?

திராவிட அரசியலில் சமூக உளவியலில் என்னென்ன பாதிப்புகள் நடந்துள்ளன?                                                                                                                     (‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

அந்த பாதிப்புகளில் 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயும் ஊக்குவிக்கப்பட்டதன் காரணமாகவே, 1965 முதல் இன்று வரை வசதியற்ற சாமான்யர்களின் குடும்பப் பிள்ளைகள் மட்டுமே மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொண்டார்களா?

அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோயை ஊக்குவித்ததானது, சமூக ஊமைக்காயங்களை உணர முடியாத யோக்கியத் தமிழர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியதா? (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post.html )


No comments:

Post a Comment