Monday, September 21, 2020

தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் (1)


ஓரணியில் திரள்வதில் உள்ள சிக்கல்கள்?

 

பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி) 'இன்று யாருக்காகப் பெரியார்' என்ற தலைப்பில், ஈ.வெ.ராவின் பிறந்த நாளினை முன்னிட்டு, 17.09.2020 வியாழக்கிழமையன்று முகநூலில் வெளிவந்த பதிவானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

அந்த பதிவில், 'தனித்தமிழ்நாடு' கோரிக்கைக்கு செயல்பூர்வமாக ஈ.வெ.ராவின் பங்களிப்பானது, எவ்வாறு மற்றவர்களின் பங்களிப்பை விட, அதிகமான துணிச்சலுடன் தொடர்ந்து வெளிப்பட்டது? என்பது சரியாக வெளியிடப்பட்டுள்ளது. 'தமிழ்த்தேசியம்' என்ற பேரில் ஈ.வெ.ராவை எதிர்ப்பது எவ்வாறு அபத்தமானது? என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பதிவின் கடைசியில் உள்ள கீழ்வரும் பகுதியானது, ஆழ்ந்த விவாதத்திற்கு உரியதாகும்.

இந்தியப் பேராதிக்கத்தை, வல்லரசியச் சூறையாடல்களை, ஆரியப் பார்ப்பனியத்தை, சாதிய கொடுநெறியையெல்லாம் வீழ்த்திப் புதிய தமிழகம் காணவேண்டும் எனும் நோக்கமுடையோர் அனைவரையும் சிந்தாமல் சிதறாமல் கூட்டிட வேண்டுமானால் தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் ஓரணி திரண்டாக வேண்டிய நெருக்கடியான காலத்தில் உள்ளோம் என்பதை விளங்கியாக வேண்டும்.

இந்த அறிதலின்றி தங்களுக்குள் குத்துதல், குடைதல் செய்து ஒற்றுமையைக் குலைப்போரைத் தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில் அக்கறை அற்றோர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

தமிழ்த் தேசம் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்.. 

முதலில், தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில், அம்பேத்கரியக் கருத்தாளர்களுக்குள்ள சிக்கல்களைப் பார்ப்போம்.

மொழிவாரி மாநில பிரிவினைகளை ஆதரித்த அம்பேத்கார், அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாக மாநில மொழிகளை அனுமதிக்கக் கூடாது என்றும், சமஸ்கிருதமே ஆட்சி மொழியாக வேண்டும் என்றும், அதுவரை இடைக்காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பின் சமஸ்கிருதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில், இந்தி ஆட்சி மொழியாக இருக்க ஒத்துக்கொண்டார். அது தொடர்பான சான்றுகள் கீழே; 

Ambedkar had 3 points in the proposal which was entrusted to the Jawaharlal Nehru government. The first was Sanskrit should be the language of the Indian Union. The second proposal was that for the first 15 years of independence, English could be used as an official language, but Sanskrit should be used as its parallel official language. After 15 years, Sanskrit has been made the official language of the Union. The Parliament should be made the law of taking English to work for only 15 years; it was the third point of the proposal.

Ambedkar’s suggestion was for the amendment of that proposal, in which the National Language System Council had given its three proposals to the government in August 1949. In his proposals, the Council had decided that Hindi should be distinguished in place of English, which does not take more than ten years. Different territories of the Indian Union will be free to use their regional languages. However, the teaching of 2 Indian languages ​​in the teaching method of these provinces will be necessary. The Council also decides that the Indian Union should use Sanskrit in the places of ideal sentences, titles, and as a Motto. https://thearticle.in/story-hub/babasaheb-sanskrit-language-can-mitigate-indias-linguistic-differences/

Dr. Ambedkar was a strong proponent of the creation of linguistic states, but asserted that the linguistic states so created must use Hindi as their official language (instead of the language of the state itself). This, he held, was necessary to prevent India from becoming "the medieval India consisting of a variety of States indulging in rivalry and warfare".

“How can this danger be met? The only way I can think of meeting the danger is to provide in the Constitution that the regional language shall not be the official language of the State. The official language of the State shall be Hindi and until India becomes fit for this purpose English. Will Indians accept this? If they do not, linguistic States may easily become a peril.” Dr. Ambedkar  http://karnatique.blogspot.com/2009/09/dr-b-r-ambedkar-on-indias-language.html

எனவே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும், மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும் இந்தி இருக்க வேண்டும் என்பதும், வருங்காலத்தில் இந்திக்குப் பதிலாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்பதும், அம்பேத்காரின் நிலைப்பாடு ஆகும்.

அம்பேத்கரியக் கருத்தாளர்கள் அம்பேத்காரின் மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால், அது பொழிலன் முன் வைக்கும் தமிழ்த் தேச விடுதலை எழுச்சிக்கு உடன்பட்டதாகுமா? தமிழ்த் தேச விடுதலையை ஆதரிக்கும் அம்பேத்கரியக் கருத்தாளர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட சமஸ்கிருதம் மற்றும் இந்தி தொடர்பான அம்பேத்காரின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது முரண் ஆகாதா?

மேற்குறிப்பிட்ட சமஸ்கிருதம் மற்றும் இந்தி தொடர்பான அம்பேத்காரின் நிலைப்பாடுகளைக் காரணம் காட்டி, அம்பேத்காரை தமிழ்த் தேச விடுதலையின் எதிரி, என்று முடிவு செய்வதும் அபத்தமாகும். சமூக இரட்டை இலக்க சிறையில் சிக்கியவர்கள் தான், அவ்வாறு முடிவு செய்வார்கள்.

சமூகத்தில் எதையும் கறுப்பு வெள்ளையாகவே, அல்லது வெற்றி தோல்வியாகவே, இரட்டை இலக்க அணுகுமுறையில் (Binary) பார்ப்பதானது, நமது வாழ்க்கையையே அந்த சமூக இரட்டை இலக்க சிறையில் (Social Binary Prison) சிக்க வைத்துவிடும். (https://tamilsdirection.blogspot.com/2020/04/fixed-mindset-growth-mindset.html )

அவ்வாறு சிக்கிய பின், நமக்கு தெரியாமலேயே, சமூக ஒட்டுண்ணிகள் நமது சமூக வட்டத்தில் ஊடுருவி, சமூகத்தை சீரழிக்கும் சமூகக்கிருமிகளாக‌ வளர்ந்த 'சமுக ஆற்றல் உறிஞ்சி செயல்நுட்பம்' பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

பாரதி, பாரதிதாசன், ஈ.வெ.ரா, அண்ணா, காந்தி, கோட்சே உள்ளிட்டு எவரையுமே சமூக இரட்டை இலக்க சிறையில் அணுகுவதானது, நம்மை அந்த சிறையில் சிக்க வைத்து, நமது வாழ்வை முடக்கி விடும்.

நாம் சரியென்று ஏற்றுக்கொண்டவைகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் தேடி, அதன் வெளிச்சத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த மறுபரிசீலனையின் மூலமே, உரிய திருத்தங்களுடன் சரியான திசையில் நாம் பயணிக்க முடியும். (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_12.html )

சமஸ்கிருதம் தொடர்பான அம்பேத்காரின் நிலைப்பாடுகள் அவரின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் முடிவாகும். அந்த ஆராய்ச்சியின் முடிவில் நான் மாறுபட்டாலும், சமுக நலன் நோக்கில் தான் அந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன, என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. சமூக நலன் நோக்கில் முன் வைக்கப்படும் கருத்தினை தவறானது என்று கருதி ஏற்காமல் இருக்கலாம். அக்கருத்தினை எதிரிக்கருத்தாக கருதி வெறுப்பது சரியல்ல.

அவ்வாறு வெறுப்பு அரசியலில் சிக்கி பயணிக்கும் மனிதர்களும் கட்சிகளும் காலப்போக்கில் பலகீனமாகி மரணிப்பது சமூக இயற்கையின் போக்கு ஆகும்.

தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்பு ஊக்குவிக்கப்பட்ட போக்கில், அதற்கு துணை புரிந்த நோஞ்சான் புலமையாளர்களும் ஊக்குவிக்கப்பட்டார்களா? பழந்தமிழ் இலக்கியங்களிலோ, கல்வெட்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகளிலோ, 'சமஸ்கிருத எதிர்ப்பு' இருந்ததற்கு சான்றுகள் உண்டா? காலனி ஆட்சியில் தமிழர்கள் நோஞ்சான்களாக வளர்ந்து, தமிழானது சமஸ்கிருத கலப்பில் வீழ்ந்ததா? அதன் தொடர்ச்சியாகவே, இன்று தமிழ் ஆங்கிலத்திடம் வீழ்ந்து வருகிறதா? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு) மறந்து, வெறுப்பு அரசியலில் நோஞ்சான்களாகப் பயணிப்பது இனியும் தொடரலாமா? ‌என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது. (‘சமஸ்கிருதம் செத்த மொழி என்பது அபத்தம்; தமிழ்நாட்டில் தமிழ் சாகும் மொழி?’; https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_9.html )

அடுத்து, தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில், மார்க்சிய நெறி உணர்வாளர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பார்ப்போம். அவர்கள் விளங்கிக் கொண்டுள்ள மார்க்சிய நெறி தொடர்பாக, கீழ்வரும் பகுதியானது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில், எவராவது மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும்,  வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த சமஸ்கிருத  நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது தொடர்பான புலமையையும்,  வடநாட்டு மார்க்சிய அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.

மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி (Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base), மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்……………………..இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், மேலேக் குறிப்பிட்ட புலமையுடன், தமிழ்நாட்டைப் பற்றிய எனது அறிவு அனுபவ அடிப்படையில், மார்க்சிய பார்வையில் இருந்த ஒரு சீரான பொருள் உற்பத்தி முறைக்கு (homogeneous mode of production) மாறாக, ஒரு சீரற்ற பொருள் உற்பத்தி முறையில் (heterogeneous mode of production ) இந்திய சமூகம், குறிப்பாக தமிழ்நாடு, இருந்தது எனது ஆய்வில் வெளிப்பட்டது. இதனை அந்த காலக் கட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த மார்க்சிய, மார்க்சிய‍ லெனினிய அமைப்புகளில் இருந்தவர்களுக்கு தெரிவித்த போது, எவரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே அத்தகைய விவாதத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை, என்ற புரிதலுடன் நான் இசை ஆராய்ச்சியில் ஈடுபட‌த் தொடங்கினேன். (https://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html )

எனவே அம்பேத்கரியக் கருத்தாளர்கள் அம்பேத்காரின் சமஸ்கிருதம் தொடர்பான‌ நிலைப்பாட்டை, தமிழ்த் தேச விடுதலை நோக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதைப் போலவே,

மார்க்சிய நெறி உணர்வாளர்களும், தமிழ்நாட்டின் சமூகத்திற்கு தாம் விளங்கிக் கொண்ட மார்க்சிய நெறியையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அடுத்து, தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில், பெரியாரியக் கருத்தாளர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பார்ப்போம்.

முதலில், தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது, 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? என்பது தொடர்பாக நான் முன்வைத்துள்ள சான்றுகளை பெரியாரியக் கருத்தாளர்கள் கணக்கில் கொள்ளாமல், தமிழ்த் தேச விடுதலை எழுச்சிக்கு சரியான முறையில் பங்களிக்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

இசை இயற்பியல்'  (Physics of Music) அணுகுமுறையில் எனது ஆய்வில் பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தியதன் விளைவாக, ஈ.வெ.ரா அவர்கள் தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து  பயணித்ததில் வெளிப்பட்ட தவறுகளை எல்லாம்;

கடந்த சுமார் 20 வருடங்களாக உரிய சான்றுகளின் அடிப்படையில் நான் சுட்டிக்காட்டியும், அதை எந்த பெரியார் கட்சித் தலைவர்களும் பரிசீலித்து மறுப்பு வெளியிட்டதாக தெரியவில்லை. ஆனால், நானறிந்தவரையில் சுயலாப நோக்கின்றி வாழும் 'பெரியார்' ஆதரவாளர்களில் சிலர், அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, ஈ.வெ.ராவின் கொள்கைகளில் உரிய மாற்றங்கள் செய்ய‌ அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்துவதிலும், ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். (https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

எனவே 'பார்ப்பன சூழ்ச்சி' பற்றியும், தமிழ் பற்றியும், ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை எல்லாம், பெரியாரியக் கருத்தாளர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தாமல், தமிழ்த் தேச விடுதலை எழுச்சிக்கு சரியான முறையில் பங்களிக்க முடியாது.

கடைசியாக, தமிழிய அற உணர்வாளர்களும் மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினர் முன்னெடுக்கும் மறு ஆய்வுகளை ஊக்குவிப்பதன் மூலமே தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில் உள்ள குறைபாடுகளை எல்லாம் களைந்து முன்னேற முடியும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது கொல்வால்கரின் ''Bunch of Thought'  நூலினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, இன்றைய காலக்கட்டத்திற்கு ஒத்து வராத பகுதிகளை எல்லாம் துணிச்சலுடன் அகற்றியுள்ளது. (https://timesofindia.indiatimes.com/india/parts-of-golwalkars-bunch-of-thought-not-valid-anymore-rss-chief-mohan-bhagwat/articleshow/65877873.cms )

அது போல, தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் தத்தம் நிலைப்பாடுகளை எல்லாம்;

ஈ.வெ.ரா வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தியாக வேண்டும். மறுத்தால், கால ஓட்டத்தில் செல்லாக்காசாக மாறுவதைத் தவிர்க்க முடியாது.

காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாடானது பல மன்னர்களின் ஆட்சிகளில் இருந்தது. தாய்மொழி நாடான தமிழ்நாடானது, தமிழர்களுக்கு ஒரே தாய்நாடாக இல்லை.

காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின், இன்று தமிழ்நாடானது, தமிழர்களின் ஒரே தாய்மொழி நாடாக இருப்பதும், அந்த தமிழ் தாய்மொழிநாடானது, இந்தியா என்ற தாய்நாட்டில் இருப்பதும், காலனி ஆட்சிக்கு எதிரான போக்கில், வெளிப்பட்ட ஒற்றுமையால், வரலாற்றில், சிற்சில குறைபாடுகளுடன், ஏற்பட்ட விளைவாகும்.

ஒரு தாய்மொழிநாடானது தனி தாய்நாடாக இருப்பதும், அல்லது ஒரே தாய்நாட்டில் உள்ள பல தாய்மொழி நாடுகளில் ஒன்றாக இருப்பதும்;

அந்த ஒற்றுமைக்கான வரலாற்று ரீதியிலான பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளையும், சர்வதேச அரசியல் தொடர்பான வரலாற்றுப் போக்குகளையும் பொறுத்த ஒன்றாகும். (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html)

மேற்குறிப்பிட்டதன் அடிப்படையிலேயே, தாய் நாட்டிற்கும் தாய்மொழி நாட்டிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் இயக்கத்தன்மையில்(Dynamic), அந்தந்த காலக்கட்டத்தைப் பொறுத்து, நட்பாகவும் அல்லது பகையாகவும் இருக்கும்.

அந்த புரிதலின்றி, நிரந்தர பகையாகக் ‌கருதி, ஈ.வெ.ரா, பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பலர் பயணித்ததாலேயே, தமிழ்நாடு ஆதாய அரசியலில் சிக்கி நோஞ்சான் தமிழர்கள் அதிகரித்து, இந்தியாவிலேயே பலகீனமான நோஞ்சான் தாய்மொழிநாடாக தமிழ்நாடு மாறி வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html). 

இதே போக்கு நீடிக்குமானால், இந்தியாவின் சவலைப்பிள்ளையாகி, ராஜபட்சே பாணி குடும்ப அரசியலில் நிரந்தரமாக சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகள் தொடர்வதும், அந்த கட்சிகள் மூலமாக சிரமமின்றி எளிதில் தமிழ்நாட்டை கையாளலாம் என்ற திசையில் மத்தியில் ஆளும் கட்சிகள் பயணிப்பதும் தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல; இந்தியாவிற்கும் நல்லதல்ல. (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html )


குறிப்பு: தொடர்புள்ள பதிவுகள்

What is wrong with importing Euro-centric nationalism to India?

A criticism on Romila Thapar’s ‘ON NATIONALISM’ ; https://tamilsdirection.blogspot.com/2016/07/what-is-wrong-withimporting-euro.html

 

அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்; நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (1); https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html

நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (2); நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில்; கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, ஏன் சிக்க நேர்ந்தது?; https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html

நிறுவன கட்டமைத்தல் (System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான (Nation Building) சீர்குலைவும் (3); 1967க்கு முன்பு தமிழ்நாட்டில் கட்சியிலும் ஆட்சியிலும், 'பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்' மீண்டும்  வருமா? ரஜினி மூலமாக நடக்குமா?; https://tamilsdirection.blogspot.com/2019/09/systembuilding-nationbuilding-3-1967.html

எதிரியாக தம‌து வலிமையை தமது எதிரிக்குத் 'தானம்' செய்து, தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் (1); https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_8.html

தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் (2); ராஜபட்சே பாணி குடும்பத்திடம் தமிழ்நாடு சிக்கும் ஆபத்து இருக்கிறதா?; https://tamilsdirection.blogspot.com/2020/08/2.html

No comments:

Post a Comment