தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே 'தனித்துவமான ரசனை இடைவெளி'? (3)
'சூது கவ்வும்' திரைப்படத்தின் அடுத்த கட்ட வெற்றியாக 'LKG'
தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும், வளர்ந்து வரும் சமூக விசைகள்
(Social Forces) யாவை? தேய்ந்து வரும் சமூக விசைகள் யாவை? என்ற ஆராய்ச்சிக்கு, இன்று வளர்ந்து வரும், மற்றும் தேய்ந்து வரும் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளை ஆராய்வது பலன் தரும்.
அந்த 'சாவியை'
(Key), பழந்தமிழ் இலக்கியமான 'நாலடியார்', கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளது.
"பணிவு இல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும்.
" - நாலடியார் 25:2
(‘The history of a city and
the history of music of the city are intertwined’; http://musicdrvee.blogspot.in/2012/08/history-of-city-and-history-ofmusic.html &
https://tamilsdirection.blogspot.com/2019/01/6-10.html )
https://tamilsdirection.blogspot.com/2019/01/6-10.html )
மேற்குறிப்பிட்ட பதிவானது, இசையானது எவ்வாறு ஒரு ஊரின் 'யோக்கியதையை' கண்டுபிடிக்க துணை புரியும்? என்று விளக்கியுள்ளது. (‘திரை இசை ரசனையானது, சுருதி சுத்தமான திசையில் மீண்டும் பயணிக்குமா?’; http://tamilsdirection.blogspot.com/2018/11/3-social-forces.html)
தஞ்சை ராமையதாஸின் சுருதி சுத்தத்திற்கு இலக்கணமாகும் (எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பது) பாடல்களில் ஒன்றாகிய 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற திரைப்படப்பாடலை பின்பலமாகக் கொண்டு வெளிவந்துள்ள வெற்றிப்படமே 'LKG' ஆகும்.
தமிழ்நாட்டில் கட்சிகள், குடும்பங்கள் உள்ளிட்டு எல்லா வகையிலுமான - அரசியல் அதிகார அமைப்புகள் உள்ளிட்டு
- இரட்டை வேடப் போக்குகள் இன்று அப்பட்டமாக வெளிப்பட்டு வருகின்றன. அவற்றை திரைக்கதைக்கும் வசனத்திற்கும் மூலங்களாக
(sources) கொண்டு, இளைஞர்கள் வியப்பூட்டும் புத்திசாலித்தனத்துடன் பங்களித்து உருவாக்கி வணிகரீதியிலும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் எல்லாம், பாதகமான ரசனையிலிருந்து, தமிழ்நாடு மீளத் தொடங்கியுள்ளதை வெளிப்படுத்தும் சிக்னல்கள் ஆகும். (http://tamilsdirection.blogspot.com/2017/11/2-logical-fallacy-httpsyourlogicalfalla.html
)
ஒரு சமூகமானது எந்த திசையில் பயணிக்கிறது? என்று கணிக்க உதவுவது ரசனையாகும். தமிழில் வெளிவரும் புத்தகங்களையும், இதழ்களையும் காசு கொடுத்து, வாங்கி படிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவார்கள். திரைப்படங்களின் வெற்றிகளுக்கு காரணமான மாணவர்களும், இளைஞர்களும், பெரும்பாலான சாமான்யர்களும் தமிழ் வாசிப்பு ரசனையுடன் தொடர்பின்றி பயணிப்பவர்கள் ஆவார்கள். தி.மு.க வளர்ந்த போக்கிற்கு முக்கிய பங்கு வகித்த தமிழ் வாசிப்பு ரசனையுடனும், மேடைப்பேச்சு ரசனையுடனும் தொடர்பின்றி அத்தகையோர் பயணித்த போக்கிற்கும், மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களை அனுமதிக்க மறுத்த போக்கிற்கும், ஆர்.கே.நகர் தேர்தலில், ஆளுங்கட்சி உடைந்த நிலையில், ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் தி.மு.க டெபாசீட் இழந்த போக்கிற்கும் தொடர்பு உள்ளதா? என்ற ஆராய்ச்சிக்கும் உதவக்கூடிய வகையில் வெளிவந்து, வசூலிலும் சாதனைப் படைத்து வரும் படம் 'LKG' ஆகும்.
தமிழக அரசியலை வித்தியாசமான கோணத்தில் ஈர்க்கும் வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் 'எல்கேஜி'(LKG)
ஆகும். அது தொடர்பான கீழ்வரும் விமர்சனமும் எனது கருத்தினை எதிரொலித்தது.
LKG can’t be brushed aside as
any other political satire. As much as Balaji plays to his strengths and relies
heavily on comedy to make his point, this is a very important and relevant film
that encourages us to see politics from a different point of view.; https://www.hindustantimes.com/regional-movies/lkg-movie-review-rj-balaji-s-political-satire-hits-all-the-rights-spots/story-56w70huZIy2lW3lk85Di1O.html
'சூது கவ்வும்' திரைப்படத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக 'LKG' வெளிவந்துள்ளது.
'சூது கவ்வும்' திரைப்படம் தொடர்பாக, கீழ்வரும் கருத்தும் எனது பதிவில் வெளிவந்தது.
தமிழ்நாட்டின் சீரழிவுப் போக்கினை வெளிப்படுத்தும் வெற்றிகரமான திரைப்படமாக 'சூது கவ்வும்' வெளிவந்தது. அதைத் தொடர்ந்து
"குற்றங்களே குணங்களாகிவிட்டன!"
( தினமணி கட்டுரை) என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் திரு. பழ. கருப்பையா எழுதிய கட்டுரையும் வெளிவந்தது.
1967-இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் ஒரு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தி.மு.க ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். முதல்வர் பொறுப்பை ஏற்றது முதல் இறக்கும் வரை தனது கட்சியினரின் சுயநலப் போக்கினால் முதல்வர் அண்ணா எவ்வளவு மன உளைச்சலுகுள்ளானார் என்பது ஆட்சிமாற்றத்தின் தன்மையைக் கேள்விக்குறியாக்கியது. (https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html)
அதன்பின் மேலேக் குறிப்பிட்ட 'சூது கவ்வும்’ வெற்றிக்கான தொழில்நுட்பம் விதை கொண்டு வேகமாக வளர்ந்தது. அந்த மாற்றங்கள் திரைப்படம் வழியே எவ்வாறு பிரதிபலித்தது என்பதையும், இன்று தமிழ்நாட்டில் வெற்றிப்படமாக வெளிவந்த 'சூது கவ்வும்'படம் இன்றைய நிலையைப் பிரதிபலித்துள்ளது பற்றியும் தமது கட்டுரையில் பழ.கருப்பையா விளக்கியுள்ளார். தனிப்பட்ட முறையில் தனிமனித ஒழுக்கத்தில் குறை சொல்ல முடியாத திராவிட இயக்க தலைவர் பெரியாரில் துவங்கிய திராவிட இயக்கத்தின் திரைப் படங்கள் பற்றி விவாதித்து,
"சூது கவ்வும்' படத்திற்கான கதைக்களம் கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு"
என்று பழ.கருப்பையா அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
"சூது கவ்வும்' படத்திற்கான கதைக்களம் கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு;
என்பதன் தொடர்ச்சியாக, 'LKG' படத்திற்கான கதைக்களமானது கருணாநிதியும் ஜெயலலிதாவும் உருவாக்கிய தமிழ்நாடு ஆகும். இருவரில் எவரும் முதல்வராக இருந்திருந்தால், இது போன்ற படம் வெளிவந்திருக்காது;
என்று 'LKG
' திரைப்படம் முடிந்து வெளிவரும் போது, எனது காதில் விழுந்த கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.
‘கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’ என்ற கேள்வியை எழுப்பும் வகையில், 'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம் உருவாக துணை புரியும் கதைக்களமாக நிகழ்கால தமிழ்நாடு உள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html
)
தமிழ்நாட்டில் ரசனையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எல்லாம், 'சூது கவ்வும்', 'LKG' போன்ற திரைப்படங்களின் மூலமாக வெளிப்பட்டு வருகின்றன.
திராவிட அரசியல் கொள்ளையை பாரபட்சமின்றி எதிர்க்கும் அணுகுமுறையின்றி;
தமிழ்நாட்டில் பெரும்பாலான எழுத்தாளர்களும், பேச்சாளார்களும், கவிஞர்களும் தமது படைப்புகளில், தமது 'சுயலாப பாதுகாப்பு லட்சுமண் கோட்டினை' தாண்டாமல், வாழ்வியல் புத்திசாலித்துடன்(?) முன் நிறுத்தும் 'ரசனை' யினை தமது படைப்புகள் மூலமாக வெளிப்படுத்தினார்கள். மேல்நடுத்தர, வசதியான குடும்பங்களில் பெரும்பாலோர், அந்த படைப்பாளிகளை போலவே, 'பாதுகாப்பு மண்டிலத்தில்' பயணித்தார்கள். அதற்கேற்ற 'ரசனைக்கு தீனி போட்ட படைப்புகளே, 'அந்த' வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றன. ( http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html)
அந்த 'படைப்புகளின்', அந்த 'ரசனை'யின், வாடையின்றி பயணிக்கும் நடுத்தர, ஏழை, குறிப்பாக கிராமப்புற மக்களே, தமிழ்நாட்டில் ஆங்காங்கே தினமும் தமக்கு தெரிந்த போராட்ட வடிவங்களில் போராடி வருகிறார்கள்; தமது அறிவுக்கு சரி என பட்ட பிரச்சினைகளில்.
அத்தகைய மக்களும், தமிழில் எழுதப்படிக்க தெரியாமல் எண்ணிக்கையில் அதிகரித்து வரும், ஆங்கில வழியில் கல்வி கற்ற தமிழர் குடும்ப மாணவர்களும், இளைஞர்களும்;
தமிழ் இதழ்களையும், நூல்களையும் நாம் படிக்குமாறு காட்டினாலும், 'இலாவகமாக' அவற்றை ஒதுக்கி பயணிக்கும் போக்குகளில் உள்ளார்கள்.
அவர்களில் பெரும்பாலோரின் 'ரசனை' காரணமாக:
சூது கவ்வும், ஜிகிர் தண்டா, சதுரங்க வேட்டை, காக்கா முட்டை, கோலி சோடா, ஜோக்கர்,'விக்ரம் வேதா' போன்ற இன்னும் பல (ரஜினி, கமல், விஜய், போன்ற பெரிய நடிகர்கள் இல்லாத) திரைப்படங்கள் எல்லாம் வணிக ரீதியில் பெற்று வரும் வெற்றிகளும்;
தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே;
நம்ப முடியாத அளவுக்கு 'ரசனை இடைவெளி'யானது அதிகரித்து வருவதை உணர்த்தவில்லையா? (http://tamilsdirection.blogspot.com/2017/11/blog-post.html)
நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும் சாமான்யர்களையும் குவியமாக்கும் திரைப்படங்களின் வெற்றியானது, அதற்கான 'ரசனை ஒத்திசைவானது’ (rasanai resonance) சரியான முறையில் படைக்கப்பட்டதன் வெளிப்பாடாகும்.
பெரிய கதாநாயகர்களை குவியமாக்கி திரைப்படங்கள் வெற்றி பெறுவதானது, மக்களை பலகீனமாக்கும் 'விகேரியஸ் இன்பம்'(Vicarious
Joy) தொடர்புள்ள 'ரசனை ஒத்திசைவானது', சரியான முறையில் படைக்கப்பட்டதன் வெளிப்பாடாகும். அவ்வாறு படைக்கப்படுவது சிரமமாகி வருவதும், மேலே குறிப்பிட்ட மக்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் 'ரசனை ஒத்திசைவானது' சரியான முறையில் படைக்கப்படுவதானது அதிகரித்து வருவதும், தமிழ்நாட்டின் மீட்சிக்கான சிக்னல்களே ஆகும். அதாவது தங்களை காக்க 'இரட்சகர்களாக' கதாநாயகர்களை கருதி ஏமாந்த ரசனையானது, மிகவும் பலகீனமாகி வருவதையே அந்த சிக்னல் உணர்த்துகிறது.
(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_22.html)
(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_22.html)
பெற்றோர்களுக்கு 'நல்ல'(?) பிள்ளையாக 'வளர்ந்து'(?), ஓழுங்காகப் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்களில் பெரும்பாலோர் சமூக முதுகெலும்பின்றி ஊழலுக்கு துணை போகாமல், தமிழ்நாடு இந்த அளவுக்கு சீரழிந்திருக்க முடியாது. 'நல்ல'(?) பிள்ளைகளாக வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் சீரழிவிற்கு பங்களித்து வருவதால், 'கெட்ட'(?) பிள்ளைகள் மூலமாகவே தமிழ்நாடு 'அந்த' சீரழிவிலிருந்து, விடுதலையாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஊழலையும், ஒழுக்கக்கேடுகளையும் 'உரசாத புத்திசாலித்தனத்துடன்'(?), பெற்றோருக்கு 'நல்ல'(?) பிள்ளைகளாக வளரும் போக்கிலும், அவ்வாறு வளர்ந்து 'அக்கரைப் பச்சை' என்று வெளிநாடுகளுக்கு குடி பெயரும் போக்கிலும் சிக்கிய சமூகமானது, எந்த அளவுக்கு சீரழியும்? என்ற ஆராய்ச்சிக்கு உகந்த நாடாகவும் தமிழ்நாடு இருக்கிறது.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html)
கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமாக முன் வைப்பதானது, மேலே குறிப்பிட்ட 'நல்லவர்களான'(?) குற்றவாளிகளை எல்லாம், சமூகத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே துணை புரியும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html)
கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமாக முன் வைப்பதானது, மேலே குறிப்பிட்ட 'நல்லவர்களான'(?) குற்றவாளிகளை எல்லாம், சமூகத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே துணை புரியும்.
சமூக முதுகெலும்பு முறிந்த சுயநல பேர்வழிகளாக 'நல்ல'(?) பிள்ளையாக ஓழுங்காகப் படித்த இளைஞர்கள் எல்லாம், சாமான்யர்கள் உலகில் அம்பலமாகி வரும் காட்சிகள் இடம் பெற்றன.
'சூது கவ்வும்' திரைப்பட ரசனைக்கு வழித்தடமாக அந்த ரசனை அமைந்தது.
அரசியல் கொள்ளையின் அடித்தளமான 'வார்ட் கவுன்சிலர்' அதே கொள்ளைப் போக்கில், 'பெரிசுகளை' முட்டாளாக்கி, முதல்வராகும் போக்கில், வாக்காளர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வெற்றி பெறும் ரசனையை 'LKG' நிரூபித்துள்ளது; 'சூது கவ்வும்' ரசனையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக.
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் இருந்து இன்று கல்லூரி மாணவர்களாகவும், இளைஞர்களாகவும் இருப்பவர்கள் எல்லாம் எளிதில் 'ஒத்திசைவு ரசனையில்' (Resonance
Taste Reception) ஈர்க்கப்படும் அளவுக்கு, உண்மை சம்பவங்களையே காட்சிகளாக்கிய பாணியும், அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வரும் கீழ்வரும் சமூக சூழலே, மேலே குறிப்பிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமானது.
இன்றைய தமிழ்நாட்டில் பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும் 'செல்வாக்கான' நபரின், தயவு தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை வைத்திருக்கும் கட்சி கூட, அது போன்ற வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக மாற்ற முடியாது.
சமூக ஆற்றல்களில்
(Social Energy) தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.மு.கவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு காரணமாக, தி.மு.க வின் வலைப்பின்னலானது எவ்வாறு பலகீனமாகி, அ.இ.அ.தி.மு.கவின் வலைப்பின்னல் வலிமையாகியது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
அந்த போக்கின் காரணமாகவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசீட் இழந்தது.
அது போன்ற செல்வாக்கான தொகுதி வலைப்பின்னலை 30 வருடமாக 'மெயின்டெய்ன்' பண்ணி வரும் 'பெரிசை', குறுகிய காலத்தில் 'வார்ட்' அளவிலான வலைப்பின்னலை ஒரு இளைஞன் எவ்வாறு உருவாக்கி, எந்த வழியில் வெற்றி கொள்கிறார்? என்பதை 'ரசிக்கும்' வகையில் வெளிப்படுத்தியுள்ளது 'LKG'.
பணத்திற்கு விலை போன வாக்காளர்களை,
'LKG'
குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது போல;
மேல் மட்டத்தில் வாழ்பவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம், ஆளும்/ஆண்ட கட்சிகளில், தம்மால் முடிந்த அளவுக்கு, 'பலன்களை'(?) வசூலித்து வருவதை குவியமாக்கி, அவர்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி, 'UKG' திரைப்படம் அடுத்து வெளிவந்தால் வியப்பில்லை.
மைக்ரோஉலக தொடர்பின்றி, சொந்த வாழ்வில் 'சுயநல கணக்குகளுடன்' புறத்தில் 'இந்துத்வா/தேசிய/திராவிட/தமிழ் பற்றாளர்களாக மீடியா வெளிச்சத்தில்'காட்சி தருபவர்கள் எல்லாம், மைக்ரோ உலகத்தில் 'அரசியல் செல்லாக் காசுகளாகவே' உள்ளார்கள். 'அந்த அரசியல் செல்லா காசுகளை' எல்லாம் ஓரங்கட்டி, மைக்ரோ உலகில் உள்ள மனிதர்களின் சுக துக்கங்களோடு ஒட்டி வாழும் வலைப்பின்னலை உருவாக்கும் உழைப்புடன் கூடிய இளைஞர்களை தலைமைப் பொறுப்புகளில் அமர்த்தும் அறிவும், துணிச்சலும் உள்ள கட்சிகளே, இனி தமிழ்நாட்டு அரசியலில் எடுபடும். 'LKG ' உணர்த்தியுள்ள பாடமும் அதுவேயாகும். அது போன்ற வலைப்பின்னல் உருவாகும் வகையில், நாம் நினைத்தால் வாழ முடியும்.
மைக்ரோஉலக தொடர்பின்றி, சொந்த வாழ்வில் 'சுயநல கணக்குகளுடன்' புறத்தில் 'இந்துத்வா/தேசிய/திராவிட/தமிழ் பற்றாளர்களாக மீடியா வெளிச்சத்தில்'காட்சி தருபவர்கள் எல்லாம், மைக்ரோ உலகத்தில் 'அரசியல் செல்லாக் காசுகளாகவே' உள்ளார்கள். 'அந்த அரசியல் செல்லா காசுகளை' எல்லாம் ஓரங்கட்டி, மைக்ரோ உலகில் உள்ள மனிதர்களின் சுக துக்கங்களோடு ஒட்டி வாழும் வலைப்பின்னலை உருவாக்கும் உழைப்புடன் கூடிய இளைஞர்களை தலைமைப் பொறுப்புகளில் அமர்த்தும் அறிவும், துணிச்சலும் உள்ள கட்சிகளே, இனி தமிழ்நாட்டு அரசியலில் எடுபடும். 'LKG ' உணர்த்தியுள்ள பாடமும் அதுவேயாகும். அது போன்ற வலைப்பின்னல் உருவாகும் வகையில், நாம் நினைத்தால் வாழ முடியும்.
மைக்ரோஉலகில் 'சமூக காங்கிரின்'
(Social Gangrene) நோய்க்கிருமிகளின் வேரழிந்து வருவதால், தமிழ்நாட்டை சீரழித்த அரசியலானது அரசியல் நீக்கத்திற்கு உள்ளானது. அதன் தொடர்விளைவாக ஆதாய அரசியலே கட்சிகளின் அடித்தளமாகி, மேக்ரோ உலகில் 'சமூக காங்கிரின்'
(Social Gangrene) நோய்க்கிருமிகளின் வாழ்வினை 'செயற்கை சுவாசத்தில்' நீட்டித்து வருகிறது. அதுவும் முடியும் போக்கிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 'சிக்னல்' ஆனது. நம்மைச் சுற்றியுள்ள 'சமூக காங்கிரின்'
(Social Gangrene) நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு அகற்றுவதே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நமது பங்களிப்பின் முதல்படியாகும்.
ஆதாய அரசியல் ஒழியும் வரை, 'அந்த அரசியல் செல்லாக்காசு பெரிசுகளை' ஓரங்கட்ட முடியாது. அரசு மற்றும் நீதி மன்றங்களில் உள்ள கறுப்பு ஆடுகளை ஒழிக்காமல், ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலை ஒழிக்காமல், ஆதாய அரசியலை ஒழிக்க முடியாது.
மைக்ரோ உலகில் உள்ள மனிதர்களின் சுக துக்கங்களோடு ஒட்டி வாழும் வலைப்பின்னலை உருவாக்கும் உழைப்புடன் கூடிய, தமிழின் தமிழரின் நலனை முன்னிறுத்தும், ஆதாய அரசியலில் இருந்து விடுபட்ட தேசியக்கட்சி வெளிப்படும் வரை, தமிழ்நாடு, 'சூது கவ்வும்', 'LKG'
திசையிலேயே பயணிக்கும்.