தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்மாதிரியாக
சுமார் 8 வருடங்களுக்கு முன், நான் ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது சந்தித்த கீழ்வரும் சம்பவமானது, ஒரு முக்கிய சமூக சிக்னலை வெளிப்படுத்தியது.
உள் மதிப்பீடு
(internal valuation) தேர்வு விடைத்தாளுடன் ஒரு மாணவன் எனது அறைக்குள் வந்தார். விடைத்தாளில் விடைகளின் மதிப்பெண்களை நான் கூட்டியதில் பிழை இருப்பதாக சொன்னார். நான் விடைத்தாளை வாங்கி, மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தேன். அவன் சொன்னது சரியே, எனவே 'சாரி (sorry)'
என்று சொல்லிக்கொண்டே, விடைத்தாளில் இருந்த மொத்த மதிப்பெண்ணை திருத்தினேன். 'அந்த' மாணவன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, 'சார், நீங்கள் என்னிடம் சாரி கேட்பதா?' என்று பயத்துடன் பேசினான். அதாவது ஒரு பேராசிரியர் கவனக் குறைவின் காரணமாக செய்யும் தவறினை, சம்பந்தப்பட்ட மாணவர் முன் ஏற்று வருத்தம் தெரிவிப்பதானது, மிகவும் அரிதாகும்; என்ற திசையில் தமிழ்நாடு பயணிக்கிறதா?
பொதுவாக தமிழ்நாட்டில் தமது தவறுகளை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு திருந்தி பயணிப்பவர்களின் எண்ணிக்கையானது, அதிவேகமாக குறைந்து வருகிறது; இயன்ற வரை, பிறர் மீது பழி சுமத்தி, சமூக ஒப்பீடு நோயில் (Social
Comparison Infection) சிக்கியுள்ள தமது 'பிம்பத்தை'(?) பாதுகாக்கும் போக்கே அதிகரித்து வருகிறது.
நேர்மையான மனித உறவில் இருப்பவர்கள் எல்லாம், தமக்கு வேண்டியவருக்கு இடிப்பாராகவே பயணிப்பார்கள்.
‘தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதர் தவறு செய்ய முற்படும்போது, அதைத் தடுப்பதும், மீறி புரிந்த தவறை உணர்ந்து, திருந்தி வாழ்வதும் அந்த மனிதர் வாழும் குடும்பத்தில், சமூக வட்டத்தில், சமூகத்தில் உள்ள சமூக செயல்நெறி மதகுகளின்
(Social Functional Checks) வலிமையைப் பொறுத்ததாகும்.’
தமது தவறை உணர்ந்து, பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். 'பிம்ப' சிறையில் சிக்கிய 'பிரபலங்களும், பிம்ப வழிபாட்டாளர்களும், 'அந்த' துணிச்சல் அற்ற கோழைகளாக வாழ்பவர்கள் ஆவார்கள். அத்தகையோரை நான் எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததில்லை. அண்மையில் எனது சமூக வட்டத்தில் இடம் பெற்றவர் துரைப் பாண்டி ஆவார்.
‘துரைப்பாண்டியின்
'http://www.tamilpulavar.org/' தமிழின் மீட்சிக்கு பெரும் துணை புரியக்கூடியதாகும்.
அடுத்து அவரின்
'https://isaipulavar.blogspot.com/' எனது கவனத்தை ஈர்த்தது. எனது அனுமதியுடன் எனது சில கட்டுரைகளும் அதில் வெளிவந்துள்ளன.
அண்மைக்காலங்களில் இணையத்தில் என்னை மிகவும் புகழ்ந்து எழுதி வருபவர் துரைப்பாண்டி. அவருக்கு அண்மையில் நான் அனுப்பிய மடல் அடுத்து வருகிறது.
‘அன்புடையீர்,
'நா.மம்மதுவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமான பார்வை (கட்டுரையாளர் ஆ.ஷைலா ஹெலின்)
நா.மம்மதுவின் வாழ்க்கை வரலாறு' கட்டுரையினைப் படித்தேன்.
(https://isaipulavar.blogspot.com/2019/02/1.html)
கர்நாடக இசை மும்மூர்த்தி தியாகராயரைப் பாராட்டி
'Tyagaraja- Life and Lyrics'
என்ற புத்தகமானது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டியே வெளிவந்துள்ளது.
பிம்ப வழிபாட்டு முறையில் என்னைப் பற்றி எழுதினாலும் அது குப்பையே.
இசைப்புலவர் குப்பை திசையில் பயணிப்பதற்கு இது சான்றானது.
எனவே எனது கட்டுரைகளை அகற்றி விடவும். குப்பை திசையில் பயணிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, நான் அனுமதிப்பேன்.
அன்புடன்,
செ.அ.வீரபாண்டியன்
(‘தமிழ், தமிழ் இசை - புலமை மீட்சியில் வெற்றி பெறுவோம்; பாராட்டு, புகழ் போன்ற போதைகளில் சிக்காமல்’; https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_25.html
)
எனது மேற்குறிப்பிட்ட மடலுக்கு, கீழ்வரும் பதில் எனக்கு கிடைத்ததானது, ஓர் இன்ப அதிர்ச்சியாகும்.
“அன்பின் ஐயா பதில் அனுப்பும் கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.
முதலில் இரண்டு விஷயஙகளைத் தெளிவிட வேண்டிய தேவை உள்ளது.
www.isaipulavar.blogspot.com என்பது கட்டுரைகளின் தொகுப்புப் பெட்டகம்
article archive. wwe.isaipulavar.in என்பதே இசை குறித்தான ஆய்வுத்தளம். அந்தத் தளம் இன்னமும வடிவமைப்பில்தான் உள்ளது. அடுத்ததாக ஆய்வாளர்கள் ந்.மம்மது அவர்களையோ அல்லது எந்தத் தனியரை வியந்த்தோதல் எமது நோக்கமல்ல.
பெரியோரை வியத்தல் இலமே என்பதே எமது நோக்கு. அந்தக் கட்டுரை
article archive ஆரம்பிக்கப்பட்ட போது வெளியானது. நீங்கள் குறிப்பிட்டது போல iconization
தவறு அந்தப் பதிவில் உள்ளது. அது எமது பயணத்தின் துவக்கம் என்பதால் கூரிய நுண்ணாய்வின்மை வெளிப்பட்டுள்ளது. தவறுக்கு வருத்தமும் சுட்டியமைக்கு நன்றியும். இனி இது போல் பிழை நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் ஆய்வுப் பங்களிப்பு மிக முக்கியமானது. எதனாலும் அது தடை பெற வேண்டாம்.
அன்பும் நன்றியும்
இரா.துரைபாண்டி”
மேற்குறிப்பிட்ட மடலில் வெளிப்பட்டுள்ள துரைப்பாண்டியின் 'அசாத்திய துணிச்சல் (!)' என்பதானது, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்மாதிரியாகும்
தற்காலத்தில் தமிழ் மற்றும் தமிழிசை தொடர்பாக வெளிவரும் நூல்களில், தனி மனிதர்களை 'பிம்பமாக்கும்' நூல்களே பெரும்பாலும் வெளிவருகின்றன. அதன் 'பாதுகாப்பு கவசங்கள்' போல, தமிழையும், தமிழ் இசையையும் 'பிம்பமாக்கும்' நூல்களும் பெரும்பாலும் வெளிவருகின்றன.
அண்மைக்காலங்களில் இணையத்தில் என்னை மிகவும் புகழ்ந்து எழுதி வருபவர் துரைப்பாண்டிக்கு, அண்மையில் நான் அனுப்பிய மடலையும், 'அந்த' மடலுக்கு துரைப்பாண்டி அனுப்பிய பதிலையும் மேலே பார்த்தோம்.
என்னை மிகவும் புகழ்பவராயிற்றே என்ற வகையில், துரைப்பாண்டியின் https://isaipulavar.blogspot.com/2019/02/1.html - இல் வெளிப்பட்ட தவறினை நான் சுட்டிக்காட்ட தவறவில்லை.
ஒப்பீட்டளவில், என்னை விட கூடுதலான செல்வாக்குள்ள சமூக வலைப்பின்னலுடனும், ஊடக வெளிச்சத்துடனும் பயணிக்கும் துரைப்பாண்டி, எனது மடலை வைரமுத்து பாணியில் புறக்கணித்திருக்கலாம்; (‘வைரமுத்துவின் பங்களிப்பால், 'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலமாக; 'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்றனவா?’;
எனது விமர்சனத்தால் எந்த பாதிப்பின்றியும்., வைரமுத்துவைப் போலவே தமது பயணத்தையும் தொடர்ந்திருக்கலாம்; மம்மதுவின் பிம்ப பலூனைப் பாதுகாக்கும் முயற்சியாக. மம்மதுவாக இருந்தாலும், நானாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், 'பிம்ப பலூனை' ஊக்குவிப்பதானது, தமிழ்நாட்டின் புலமை வளர்ச்சிக்கு கேடாகும். அது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நபரின் புலமை வளர்ச்சிக்கும், 'அந்த பிம்ப பலூன்' கேடாகும்; தவறுகளைச் சுட்டிக்காட்டும் 'இடிப்பார்கள்' இன்றி.
துவக்கத்தில் அறிவுநேர்மையற்ற காற்றில் ஊதப்பட்டு உருவாகும் 'பிம்ப பலூன்கள்' எல்லாம், அடுத்த கட்டத்தில் 'வழிபாட்டுக் காற்றில்' ஊதப்பட்டு பெரிதாகும்.
இது டிஜிட்டல் யுகம். செல்வாக்கானவர்களின் குறைபாடுகள் எல்லாம் இனி இருளில் நீடிக்க முடியாத நெருக்கடிகள் அதிகரித்து வரும் காலம்.
துவக்கத்தில் அறிவுநேர்மையற்ற காற்றில் ஊதப்பட்டு உருவாகும் 'பிம்ப பலூன்கள்' எல்லாம், அடுத்த கட்டத்தில் 'வழிபாட்டுக் காற்றில்' ஊதப்பட்டு பெரிதாகும்.
இது டிஜிட்டல் யுகம். செல்வாக்கானவர்களின் குறைபாடுகள் எல்லாம் இனி இருளில் நீடிக்க முடியாத நெருக்கடிகள் அதிகரித்து வரும் காலம்.
வரும் காலத்தில், அறிவு நேர்மையற்ற காற்றில் ஊதப்பட்ட, வைரமுத்து போன்றவர்களின் 'பிம்ப பலூன்கள்' எல்லாம்;
'அறிவுபூர்வ விமர்சனம்' என்ற ஊசியின் துணையுடன், புலமையின் வளர்ச்சிக்கு
கேடான அவை ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறும் போக்கு நெருங்கி வருகிறது. அதனை வேகப்படுத்தும் போக்கிலேயே, துரைப்பாண்டி எனது மடலுக்கு பதில் போட்டுள்ளார்.
Note:
Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'
Free Excerpt:
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264
Note:
Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'
Free Excerpt:
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264