Sunday, June 16, 2019


பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவில் தோற்ற காங்கிரசும், தமிழ்நாட்டில் வென்ற தி.மு.-வும்; 


ஒரே பாணியிலான‌ 'பிராண்ட் மதிப்பு' (Brand Value)  வீழ்ச்சியில்?



‘Who's in charge of Congress? For the first time, questions on whether Gandhis will continue to lead party arise’ 

என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையானது, கீழ்வரும் நபர்களின் ஆராய்ச்சிக்கு உரிய கட்டுரையாகும்.

...தி.மு. மற்றும் தி.மு. ஆகிய கட்சிகளில் 'சுயலாபத்திற்காக' இருப்பவர்கள் எல்லாம்;

"இன்னும் எவ்வளவு காலம் நாம் சம்பாதிக்கும் அளவுக்கு, இந்த கட்சி நீடிக்கும்?" என்ற ஆய்வினையும்;

தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றி, சுயலாப நோக்கற்ற அக்கறை உள்ளவர்கள் எல்லாம்;

மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சோனியா குடும்ப நிறுவனமாகி மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரசைப் போல, தமிழ்நாட்டில் ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகளும் மரணத்தைத் தழுவ வாய்ப்புள்ளதா? என்ற ஆய்வினையும்;

மேற்கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது; அவசரமுமாகி விட்டது.

மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகை நபர்களில், தமது சமூக வட்டத்தில் இருப்பவர்களை நோக்கி, கீழ்வரும் கேள்விகளைக் கேட்கும் யோக்கியதை உள்ளவர்கள் மட்டுமே, 'அந்த' ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.

"நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செல்வத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " (‘.வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி?’; 

குறைந்த அளவு முதலீடு செய்து அதிக லாபம் பெறும் வகையில், 'பிராண்டினை' உருவாக்கி, உலக அளவில் பிரபலமான வியாபார நிறுவனங்கள் McDonalds, KFC போன்றவை ஆகும். அது போல, 'நேரு குடும்ப பிராண்டில்' காங்கிரஸ் கட்சி பயணித்து, இன்று 'அந்த' கட்சியின் 'பிராண்ட் மதிப்பு (Brand Value) குறைந்து, 'அந்த' வியாபாரம் தொடர வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை, 'அந்த' கட்சியில் உள்ளபொதுவாழ்வு வியாபாரிகள் மத்தியில் எழுப்பியுள்ளதை;

மேற்குறிப்பிட்ட கட்டுரையானது விளக்கியுள்ளது.

'லிமிடெட் கம்பெனியாய்' இருந்த காங்கிரஸ் கட்சியானது எவ்வாறு 'அன்லிமிடெட் கம்பெனியாகி';

'ஏறக்குறைய சிறிது கல்வியும், தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே,  வியாபாரத்தில் கலந்து, அளவுக்கு மீறிய, அதாவது தங்களது யோக்கியதைக்கும், தகுதிக்கும், எத்தனையோ பங்கு மீறியதான லாபத்தை, பயனை, அடையும்படி'யான வியாபார நிறுவனமானது?

என்பதை .வெ.ரா அவர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்

இந்திய விடுதலையை 'உரிமை மாற்ற' ஏற்பாடாக கருதி, .வெ.ரா வெளியிட்ட கருத்து வருமாறு:

" வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்கு கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே திட்டமிட்டு, வேலை செய்யப்பட்டு, இதற்கு தேசியமுலாம் பூசப்படுகிறது." குடிஅரசு 27.12.1948

ஆனால் ஈ.வெ.ரா-வின் கணிப்புக்கு மாறாக, இந்திய விடுதலையில் வடநாட்டு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் கூலிகளாக வேலை பார்க்க படையெடுத்து வருகிறார்கள். அது மட்டுமல்ல, இன்று 'வடநாட்டு வணிக முதலைகளை' மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'வார்டு' கவுன்சிலரே பலநூறு கோடி அதிபராகி வருகின்றனர். அதற்கு விலையாக தரப்பட்டதே தமிழுக்கும், தமிழருக்கும்  தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளும் சேதங்களும் ஆகும்

இந்தியாவில் தேசிய அளவில் உள்ள நேரு குடும்ப வாரிசு அரசியலும், தமிழ்நாட்டில் உள்ள கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலும்;

தேசிய அரசியலிலும், திராவிட அரசியலிலும் 'கட்சி கட்டுமான' (Party Building) போக்கில் ஏற்பட்ட சீர்குலைவினோடு தொடர்புடையவை ஆகும்.

இந்திய விடுதலைக்கு முன்பேயே, அந்த 'கட்சி கட்டுமான சீர்குலைவு' நோயானது, 'இந்திய தேசிய கட்டுமான' (Indian Nation Building) சீர்குலைவுக்கும் காரணமானது;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

கருணாநிதி, ஸ்டாலின், என்று அதே நேரு குடும்ப பாணி வாரிசில் சிக்கியே தி.மு. பயணித்து வருவதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு.

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலின், கனிமொழி, அழகரி என்று ஒரே குடும்பத்திற்குள் அதிகாரப் போட்டிகள் நடந்து, இன்று ஸ்டாலினின் மகன் உதயநிதியும் களத்தில் இறங்கி, சிக்கலைக் கூட்டி வருவது போல;

அது போன்ற சிக்கலின்றியே  நேரு குடும்ப வாரிசு அரசியலானது, இன்று வரை தொடர்ந்து வருகிறது. அழகிரியையும், கனிமொழியையும் தி.மு.-வில் அனுமதிக்காமல், ஸ்டாலின் மட்டுமே வாரிசாக தொடர்ந்திருந்தால், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி 'குடும்பச் சிக்கலின்றி' பிரதமரானது போலவே, கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராகியிருப்பார்; என்பதும் எனது கணிப்பாகும்.’ என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான (Nation Building) சீர்குலைவும் (2); நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில்; கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, ஏன் சிக்க நேர்ந்தது?’;

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, 2017 டிசம்பரில் தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்து, தினகரன் வெற்றி பெற்றார். சுமார் 16 மாதங்களுக்குள், தினகரன் கட்சி டெபாசீட் இழந்தது. 2017 டிசம்பரில் டெபாசீட் இழந்த தி.மு. வானது, அண்ணா, கருணாநிதி பெற்ற வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, ஸ்டாலின் தலைமையில் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது;

தமிழ்நாட்டில் சாதி வங்கி, கட்சி வங்கி போன்ற எல்லா வாக்கு வங்கிகளையும் நிர்மூலமாக்கி.

'அரசியல் நீக்கம்' (Depoliticize) கோலோச்சும் சூழலில், இது போன்ற எதிர்பாராதபிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்; தினகரன் கட்சியைப் போலவே.

மத்தியில் பா.. ஆட்சியே தொடர்வதால், தமது வெற்றிக்கான 'பலன்களை' அறுவடை செய்ய முடியாத வகையிலும், தமிழ்நாட்டில் ஆட்சியைத் தொடரும் வகையில் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடித்து அறுவடை செய்ய முடியாத நிலையிலும்;

தி.மு. வின் வெற்றியானது கேலிக்கிடமாகி வருகிறது.

அது மட்டுமல்ல, கடந்த ஆட்சியில் ஊழல் ஒழிப்பில் ஏமாந்தது போல பயணிக்காமல், பிரதமர் மோடியின் ஆட்சியானது ஊழல் ஒழிப்பில் விழிப்புடன் பயணித்தால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, தி.மு. ஆட்சியைப் பிடிப்பதானது கானல் நீராகவே முடியும். அது தி.மு.கவில் உள்ளசீனியர்களுக்குவெட்ட வெளிச்சமானவுடன், உதயநிதி கட்சியில் பெறும் முக்கியத்துவம் காரணமாக, கொக்கைப் போல காத்திருக்கும் மு..அழகிரியின் அல்லது தன்மானம் எஞ்சியுள்ள வேறு 'சீனியரின்' தலைமையில் தி.மு. நம்பமுடியாத அளவுக்கு பிளவுபடும், என்பதும் எனது கணிப்பாகும். அதன் பின், பிரதமர் மோடி ஆட்சியில் வெளிப்படும் ஊழல் ஒழிப்பின் வேகத்தைப் பொறுத்து;

காங்கிரஸ் கட்சியின் 'பிராண்ட் மதிப்பு (Brand Value) குறைந்தது போலவே தி.மு.கவின் 'பிராண்ட் மதிப்பு குறைந்து, 'தமது அரசியல் வியாபாரம் தொடர வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியானது, 'அந்த' கட்சியில் உள்ளபொதுவாழ்வு வியாபாரிகள் மத்தியில் எழுவதற்கும் வாய்ப்புள்ளது.

கட்சி என்பதானது மனிதர்களை உள்ளடக்கியது. மனிதன் தனது தேவைகளை (Needs) உணர்ந்து, மனதில் அந்த தேவைகள் எல்லாம் ஈடுபாடுகளாக (Interests) மாறிய பின், அந்த ஈடுபாடுகள் மனிதனின் செயலைத் தூண்டுகின்றன‌. தமது நலனை விட கட்சி நலனே முக்கியம் என்று கருதுபவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருந்து, ஒரு கட்சி உருவாகி வளரும்போதே, எளிதில் சுயநலத்திற்கு வளைக்க முடியாத சட்ட திட்டங்களுடனும், உரிய தகுதி, திறமை அடிப்படைகளிலேயே பொறுப்புகளுடனும், கட்சி கட்டமைத்தலானது, உரிய வலுவான அடித்தளத்துடன் வலிமையாக வளரும். அதற்கு மாறாக, தலைவரின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், அடித்தளமின்றி, தலைவரின் வீழ்ச்சி காரணமாகவோ, எதிர்பாராத சமூக மாற்றங்கள் காரணமாகவோ, எந்த நேரத்திலும் மரணிக்கும் ஆபத்தில் உள்ள கட்சிகள் ஆகும். குடும்ப அரசியல் நோயில் சிக்கி பயணிக்கும் கட்சிகள் எல்லாம் அந்த வகையை சாரும்.’

.வெ.ரா, அண்ணா போன்ற சுயலாப நோக்கின்றி வாழ்ந்த மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை எல்லாம் தமிழக பா.ஜ.க தலைவர்களில் சிலர் தூற்றிக் கொண்டு வருகிறார்கள்; 'தமிழ் அடையாள அரசியல்' பற்றிய தெளிவின்றி.

அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் 'சர்க்காரியா' ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கானது, கடந்த பா.. ஆட்சியிலும் தொடர்ந்தது.அதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் ஆதாய அரசியலும், கட்சிகளின் வெற்றிடமாக உள்ள மைக்ரோஉலகத்தில், உள்மறை வேலைத்திட்டத்துடன் (Hidden Agenda)  என்.ஜி.ஓக்களின் மோடி எதிர்ப்பும் சேர்ந்து உருவாக்கிய அரசியல் சூறைக் காற்றில், தினகரன் கட்சியும், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளார்கள். மோடி அரசு விழிக்கும் வரை, தினகரன், ஸ்டாலின் என்று ஆட்கள் மாறினாலும், அதே போக்கில் தான் தமிழ்நாடு பயணித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டிற்கான 'தமிழ் அடையாள அரசியல்' திசையில், ஊசலாட்டமின்றி பயணித்து;

ஊழல் குற்றவாளிகளை தப்ப விடாமல், மோடி அரசு தண்டித்தால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மோடியால் ஈட்ட முடியும்; ஏற்கனவே 'சர்க்காரியா கமிசன்' பரிந்துரைத்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம், உரிய நீதிமன்ற விசாரணை மூலம், கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம் ஊழலுக்கு இரையாகியிருக்காது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தமிழ்நாட்டில் பஞ்சம் வந்திருக்காது. அதற்கு மாறாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கானது கடந்த பா.. ஆட்சியிலும் தொடர்ந்தது.

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்

துவக்கத்தில் குறிப்பிட்டவாறு, காங்கிரஸ் கட்சியின் 'பிராண்ட் மதிப்பு (Brand Value) குறைந்து, 'அந்த' வியாபாரம் தொடர வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை, 'அந்த' கட்சியில் உள்ளபொதுவாழ்வு வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள சூழலில்;

'தமிழகத்தில், ஊழல் கட்சியாகக் கருதப்படுகிற, .தி.மு.. -வுடன் கூட்டணி அமைத்ததை, மக்கள் ஏற்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் மீதும், ஊழல் புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால், பொது மக்கள், பா..-வை வரவேற்றிருப்பர். ஆட்சியாளர்களின் ஊழல்கள் மீது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், ஒருதலைபட்சமாக செயல்பட்டு விட்டோம் என்ற கருத்து, மக்களிடம் உருவாகி உள்ளது.

எனவே, தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்க, பா.., தயங்காது என்பதை, மக்களிடம், இனி வரும் காலங்களில் உணர்த்த வேண்டும்.' என்ற குரலானது பா..-வில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முதல், கடந்த பாராளுமன்ற தேர்தல் வரையில், மத்திய அரசின் ஊழல் ஒழிப்பானது வடிவேல் பாணி காமெடியாஎன்ற கேள்வியானது தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.
(http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.htmlநெருக்கடி கால ஆட்சியில், தி.மு.க, தி.க உள்ளிட்ட கட்சிகளின் பெரும்பாலான தலைவர்களை சிறையில் அடைத்தும், அடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு;


தமிழ்நாட்டில் நெருக்கடி கால ஆட்சியில் ஊழல் பெருமளவு குறைந்தது மட்டுமின்றி, வழக்கத்திற்கு மாறாக, இரயில்களும் கால தாமதமின்றி ஓடும் அளவுக்கு  வெளிப்பட்ட மாற்றங்களே முக்கிய காரணங்களாக அமைந்தன.

பிரதமர் மோடி அரசானது, தமிழ்நாட்டில் ஊழல் பிரமீட்டினை ஒழித்தால், அந்த வரலாறு திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. 'திராவிட ஊழல் பாதுகாப்பு மையங்கள்' பா.ஜ.கவிலும் இருந்தால், அது சாத்தியமாகுமா? சாத்தியமாகாது எனில், இயற்கையின் போக்கில், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு சுனாமி உருவானால், அதில் ('பெரியார் சமூக கிருமிகளும்' கூட குளிர் காயும் அளவுக்கு, இந்துத்வா எதிர்ப்பினை 'சமூக கோளக்கொல்லை பொம்மையாக்கி வரும்) திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ.கவும் சுவடின்றி அழிவதிலிருந்து தப்பிக்க முடியுமா?

தமிழ்நாட்டில் காங்கிரசுக்குக் கிடைத்த 'போனஸ்' எம்.பிக்களின் எண்ணிக்கையைக்  கழித்தால், காங்கிரஸ் கட்சியின் உண்மையான பலம் தெரியும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் திசையில் இந்தியா பயணித்தால், வலிமைப் பெறப் போவது மாநிலக்கட்சிகளே ஆகும். அவ்வாறு தேசியக்கட்சிகள் பலகீனமாகி, மாநிலக்கட்சிகளின் வலிமையில் மத்திய அரசு பயணிக்க நேரிடும். அந்த திசையில் இந்தியா பயணிக்கத் தொடங்கினால், அது சோவியத் ஒன்றியம் பிரிந்ததை விட, இன்னும் வேகமாக, இந்தியா சிதறும் விளைவில் முடியும்.

இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான',  'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானது, தமிழ்நாட்டில் 'வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும் வெளிநாட்டின மக்களுக்கு-  சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக இருக்கும். இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல, தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாகவும் இருந்தால், வியப்பில்லை.’ (‘இந்தியாவிற்கு அபாய எச்சரிக்கை, தமிழ்நாட்டில் இருந்து?’; 

அரசு நிர்வாகத்தில் இருந்த ஊழலை ஒழிக்காமல், 'பணநீக்கம்' உள்ளிட்ட எந்த வளர்ச்சி நோக்கிய திட்டங்களும் வெற்றி பெறாது, என்பதானது கடந்த மோடி ஆட்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் உரிய பாடங்கள் கற்று, இந்த முறை ஆட்சி செய்யவில்லை என்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பயணித்த திசையிலேயே, அடுத்த பாராளுமன்ற தேர்தலில்,  பெரும்பாலான மாநிலங்கள் பயணிக்கும்.

எனவே மேற்குறிப்பிட்டவாறு, தமிழ்நாட்டு பா..-வில் ஒலிக்கத் தொடங்கியுள்ள பாரபட்சமற்ற ஊழல் ஒழிப்பு திசையில்,  மோடி அரசு பயணிப்பதை இனி தவிர்க்க முடியாது. அந்த முயற்சி தொடங்கும் போது, அடுத்த கொள்ளைக்கான முதலீடாகக் கருதி செலவழித்த பணம் விரயமாகி, 'எஞ்சிய' பணத்தை எப்படி காப்பாற்றுவது? என்பது தொடர்பான காட்சிகள் உச்சக்கட்டத்தினை (climax) நோக்கி நெருங்கும். பிரதமர் மோடி தமிழ்நாட்டு ஊழல் ஒழிப்பில் வெற்றி பெறும் போது, 'அந்த' எஞ்சிய பணமும் பறிமுதலுக்கு உள்ளாகும். தமிழ்நாட்டில் ஆதாய அரசியல் முடிந்து போனால், அடுத்து வரும் தேர்தலில், பறக்கும் படைக்கு வேலை இருக்காது

ஆட்சியில் இருந்து கொள்ளை அடித்தால், மத்திய அரசின் ஊழல் ஒழிப்பில் இருந்து தப்ப முடியாது, என்ற நிலை வருமானால், ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம் ஆட்சியில் அமர்வதில் ஆர்வம் காட்டாமல், கடந்த பாராளுமன்ற தேர்தலில் செலவழித்தது போக, எஞ்சிய பணத்தையும், சொத்தையும், எவ்வாறு காப்பாற்றுவது? என்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.

குறிப்பு:


ஹாலிவுட் திரைப்படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் தான், கொள்ளையைடித்த பணம், காற்றில் பறக்க‌, பணத்தை விரட்டி கண்டவர்களின் கைகளுக்கு போகும்

'it’s a Mad Mad Mad Tamilnadu' திரைப்படத்திற்கான தொடக்கக் காட்சியாக, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் 'மர்மமான மரணமும், அதைத் தொடர்ந்து ஊழலில் கொள்ளையடித்த பணத்தைத் தண்ணீராக செலவழிப்பதும் வெளிப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டில் 'அமாவாசைகளின் புரட்சியைத் தூண்டி விட்டுள்ளது

கடந்த தேர்தலில், 'அமாவாசைகளின் காட்டில்' பெரும் 'பணமழை' பெய்துள்ளது. தமிழ்நாடு ஊழலில் இருந்து விடுபடும் வரையில், 'அந்த' மழையும் தொடரும். 'அமாவாசைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டிய நெருக்கடியில்', கட்சித் தலைவர்களும் சிக்கிப் பயணிக்கும் நகைச்சுவைக் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.

கடந்த முறை தமது அரசில் ஊழல் திமிங்கிலங்களைக் காப்பாற்றிய 'களைகளை' அகற்றி, ஊழல் ஒழிப்பில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் பிரதமர் மோடிக்கு கூடியுள்ளதுஅதிலும் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் பிரமீட்டினை ஒழிக்காமல்;

தமிழ்நாட்டில் பா.. 'நோட்டா'விடம் தோற்கும் போக்கில் இருந்து விடுபட முடியாது. தமிழ்நாட்டில் ' வீரியமாக' செயல்பட்டு வரும் 'ஊழல் பிரமீடை' ஒழிப்பது என்பது மத்திய அரசுக்கு சாத்தியமே; அதற்கான சமூக சூழல் கனியும் கட்டத்தில்.

எனவே அடுத்த கொள்ளைக்கான முதலீடாகக் கருதி செலவழித்த பணம் விரயமாகி, 'எஞ்சிய' பணத்தை எப்படி காப்பாற்றுவது? என்பது தொடர்பான காட்சிகள் உச்சக்கட்டத்தினை (climax) நோக்கி நெருங்கி வருகின்றன; ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மத்தின் முடிச்சுகளும் அவிழும் வகையில்

No comments:

Post a Comment