வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணி;
அனிருத் - தனுஷ் கூட்டணி; 'ஹிப் ஹாப் தமிழா'
வீழ்ச்சியில்
இருந்து மீளும் தமிழ்ப்பாடல்கள்
’வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியின் வீழ்ச்சிக்கட்டத்தில் தான், அனிருத் - தனுஷ் கூட்டணி உருவாக்கிய 'கொலைவெறிப்பாடல்' வெளிவந்து உலக அளவில் கலக்கியது. ’வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியைப் போல, காதல் மூலமாக இளைஞர்களை சீரழிக்கும் போக்கில் இருந்து மாறுபட்டு, அதே காதலை மையப்படுத்தி, அடிமட்ட இளைஞர்களின் பார்வையில் சமூக உயர்வு தாழ்வுகளை கேலி செய்து அனிருத் - தனுஷின் கூட்டணியில் அப்பாடல் உருவாகியது. அப்பிரச்சினை உலக அளவில் உள்ள பிரச்சினையாக இருந்ததும், அப்பாடலின் உலக அளவிலான வெற்றிக்குக் காரணமானது. அதில் இருந்து அடுத்த கட்ட வளர்ச்சி திசையிலேயே 'Naa Oru Alien' பாடலின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது.
திராவிடக்கட்சிகளின் ஆட்சி காலத்தில், ’வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில்', மற்றும் அதே பாணியில் பயணித்த பிற இசை அமைப்பாளர்களின் பங்களிப்பில், ‘தமிங்கிலீசில்' 'டேக் இட் ஈசி பாலிசியில்' எவ்வாறு தமிழ்த்திரைப்படப்பாடல்கள் சிக்க வழி வகுத்தது? அது எந்த அளவுக்கு மெலடிப்பாடல்களின் வீழ்ச்சிக்குக் காரணமானது?
(https://tamilsdirection.blogspot.com/2020/08/1944.html)
மனிதரின் மனங்களில் உள்ள நல்ல தேவைகளின் (Needs) ஈடுபாடுகளின் (Interests) அடிப்படையிலான ரசனையை ஊக்குவிக்கும் பாடல்கள் நல்ல பாடல்களாகும்; தீய தேவைகளின் ஈடுபாடுகளின் அடிப்படையிலான ரசனையை ஊக்குவிக்கும் பாடல்கள் தீய பாடல்களாகும். தீய பாடல்கள் எல்லாம் மெலடி ரசனையின் அடிப்படையான மென்மையான ரசனையை அழித்து, மெலடியின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். வக்கிர ரசனைகளைத் தூண்டி, அதற்கேற்ற இசையையும் பாடல்களையும் தூண்டும்.
வக்கிர ரசனையைத் தூண்டி, தி.கவுடன் 'இரட்டைக்குழல் துப்பாக்கியாக' வளர்ந்த தி.மு.கவும் தி.கவும் கொள்கை அளவில் தோற்று வருகின்றன. (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html) ஈ.வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, எவ்வாறு ஈ.வெ.ராவிற்கே எமனாக மாறியது?
(https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_21.html) எனவே அக்கட்சிகள் ஆதாய அரசியலில் நீண்ட காலம் நீடிக்காமல் மரணிப்பதும் தவிர்க்க இயலாததாகும்.
'ஊர்வசி' மூலம் வக்கிர ரசனையைத் தூண்டி, அதே போக்கில் பயணிக்கும் ரகுமானும் வைரமுத்துவும் வீழ்ச்சி திசையில் பயணிப்பதைத் தவிர்க்க முடியுமா?
'வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில்' தொடங்கிய இசைப்பயணத்தில் மெலடியின் வீழ்ச்சியும், தமிழின் வீழ்ச்சியும் எந்த அளவுக்கு மோசமாக முடிந்துள்ளது?
என்ற
ஆராய்ச்சிக்கு, கீழ்வரும் காணொளி உதவக்கூடும்.
Naa Oru Alien | Net ah Thorandha
Song feat. Hiphop Tamizha
ஆங்கிலத்தில் 'நான் ஒரு ஏலியன்' என்று ஏன் இருக்கிறது? ' Alien'
என்ற ஆங்கிலச் சொல்லினை, தொல்காப்பியத்தின்
'ஒரீஇ' சூத்திரத்துக்கு
இணங்க, தமிழில் 'ஏலியன்' என்று
எழுத வேண்டும். 'பிளாஸ்டிக்' என்பதை
'நெகிழி' என்று
அபத்தமாக பொருள் மொழி பெயர்ப்பு செய்து, தமிழக அரசையும்,
தினமணி போன்ற ஊடகங்களையும் முட்டாளாக்கி வரும் தனித்தமிழ் ஆர்வலர்கள்,
தமிழில் 'ஏலியன்' என்று
எழுத அனுமதிப்பார்களா? ஏன் வம்பு? எனவே
ஆங்கிலத்தில் ' Naa Oru Alien' என்று எழுதினார்களா?
ஆங்கிலச்
சொற்களை 'டேக் இட் ஈசி பாலிசி' என்று
தமிழில் உச்சரித்த கட்டத்திற்கு (phase) எதிர்க்கட்ட
(opposite phase) திசையில் தான், தமிழ்ச்சொற்களை
''Naa Oru Alien' என்று ஆங்கிலத்தில்
வெளிப்படுத்தியுள்ளார்களா? என்பவை எல்லாம் ஆராய்ச்சிக்கும்
விவாதத்திற்கும் உரியவை ஆகும்.
அடுத்து, 'டேக் இட் ஈசி
பாலிசி' பாடலின்
உள்ளடக்கத்தினை ஆராய்ந்தால், அந்த அழிவுபூர்மான உள்ளடக்கத்திற்கு எதிர்க்கட்ட திசையில், தமிழின்
தமிழர்களின் மரண அபாயத்தினை 'Naa
Oru Alien' வெளிப்படுத்தியுள்ளதும்
புலனாகும்.
('டேக் இட் ஈசி பாலிசி' பாடல் வரிகள்
கீழே குறிப்பில்)
'டேக் இட் ஈசி பாலிசி' பாடலின் உள்ளடக்கத்தில்
கீழ்வருவபவை வெளிப்பட்டுள்ளன.
பாடலின்
துவக்கத்தில் உள்ள 'மர்ஹபா' என்ற அராபி மொழிச்சொல்லானது வரவேற்பைக் குறிப்பதாகும். (marhaba: An Arabic greeting. Literally
means "welcome."; https://www.urbandictionary.com/define.php?term=marhaba)
முஸ்லீம் ஆகிய
ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலின் துவக்கத்தில் அராபி மொழியில் வரவேற்பதில் குறை காண
முடியாது;
அவருக்கு
தமிழையும் தமிழ்நாட்டு இளைஞர்களையும் இந்து மதத்தினையும் இழிவு செய்யும் நோக்கம்
இல்லையென்றால்.
'பேசடி ரதியே ரதியே, தமிழில்
வார்த்தைகள் மூன்று லட்சம்' மூன்று லட்சம் என்று குறிப்பிட்டு,
அடுத்து 'நீயடி கதியே
கதியே, ரெண்டு
சொல்லடி குறைந்த பட்சம்' என்றது,
இன்றைய
தமிழையும் தமிழ் இளைஞர்களையும் 'தமிழும் ஆங்கிலமும் கலந்த 'தமிங்கிலீஸ்' பாடல் மூலமாக
இழிவுபடுத்துவது ஆகாதா?
திருப்பதியில்
மொட்டை போடுவதைப் போலவே, நாகூரிலும் வேளாங்கண்ணியிலும் பக்தர்கள் மொட்டை போடுகிறார்கள்.
பாடலின் துவக்கத்தில் அராபி மொழியில்
வரவேற்று, பாடலின் உள்ளே,
'வழுக்கு
தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி' என்று திருப்பதியைக் கேலி செய்வதானது
விஷமமாகாதா?
அடுத்து, 'பூனையில் சைவம்
கிடையாது, ஆண்களில்
ராமன் கிடையாது' என்று சொல்லி, இளைஞர்களை சீரழிவுப்பாதையில் தூண்டியதானது சமூக பொறுப்பின்மை ஆகாதா? இன்று அப்பன்
பெயர் தெரியாத, அல்லது கைவிடப்பட்ட குழந்தைகளும் இளம்பெண்களும் கெஞ்சினாலும்
காப்பகங்களில் சேர முடியாத அளவுக்கு, இலவசக் காப்பகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த
அளவுக்கு தமிழ்நாடு சீரழிய, இது போன்ற பாடல்கள் எந்த அளவுக்கு பங்களித்துள்ளன? என்பதை இனியும்
இருட்டில் தள்ளினால், அது சரியா? ராம பக்தர்களையும் இழிவு செய்வதாகாதா?
அடுத்து, 'புரட்சிகள்
ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான்
இங்குண்டு சீதைக்கு தனியா சிலையேது'
என்ற வரிகள் எதை
உணர்த்துகின்றன?
காலனிய மனநோயில்
சிக்கி முன்வைக்கப்படும் 'பெண்ணுரிமை புரட்சி', எவ்வாறு தமிழரின் வரலாறு தெரியாத
முட்டாள்த்தனமான கருத்து? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
'தமிழ்நாட்டில் முன்வைக்கும் பெண்ணுரிமையானது, தமிழ்நாட்டின்
வரலாற்றில் காலனியத்திற்கு முன் இருந்த பெண்ணுரிமை பற்றிய புரிதலின்றி, காலனிய மனநோயில்
சிக்கி முன்வைக்கப்படுவதாகும்.
(https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html)
(https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html)
சென்னையில் உள்ள
கண்ணகி சிலையானது, கண்ணகிக்கு பெருமையா?
இழிவா? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது. 'சிலப்பதிகாரம் தேவடியாள் மாதிரி’ என்றார்
ஈ.வெ.ரா. (https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)
இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.கவுடன் சேர்ந்து பயணித்த தி.மு.க, 'தீ பரவட்டும்' என்று கம்ப ராமாயணத்தை எரிக்குமாறு தூண்டி, 1967இல் ஆட்சியைப் பிடித்த பின், அந்த நிலைப்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்காமல், சென்னையில் கம்பருக்கு சிலை வைத்தார்கள். அந்த வரிசையில் உருவான கண்ணகி சிலையானது கண்ணகிக்கு பெருமை ஆகுமா?
இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.கவுடன் சேர்ந்து பயணித்த தி.மு.க, 'தீ பரவட்டும்' என்று கம்ப ராமாயணத்தை எரிக்குமாறு தூண்டி, 1967இல் ஆட்சியைப் பிடித்த பின், அந்த நிலைப்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்காமல், சென்னையில் கம்பருக்கு சிலை வைத்தார்கள். அந்த வரிசையில் உருவான கண்ணகி சிலையானது கண்ணகிக்கு பெருமை ஆகுமா?
கண்ணகி கோவிலில்
கடவுளாக வணங்கப்படுவது போலவே, சீதையும் இராமர் கோவில்களில் வணங்கப்படுகிறார்.
,
,
இவையெல்லாம்
தெரியாமல் வெளிவந்த மேற்குறிப்பிட்ட வரிகள் மூலமாக, கண்ணகியும், சீதையும், தமிழ்நாட்டின்
பெண்ணுரிமை வரலாறும் இழிவுபடுத்தப்பட்டது சரியாகுமா?
தமது மதத்தை உயர்த்தி பிற மதங்களை இழிவு செய்பவர்கள் யாராயிருந்தாலும், இயற்கையின் சாபத்தில் இருந்து அத்தகையோர் தப்பிக்க முடியாது. (‘'மூட நம்பிக்கை எதிர்ப்பானது' எவ்வாறு 'குருட்டுப் பகுத்தறிவு’ ஆகும்?’;
https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post.html)
'Naa Oru Alien' பாடல் வரிகள் கீழுள்ள தொடர்பில் உள்ளன.
தமது மதத்தை உயர்த்தி பிற மதங்களை இழிவு செய்பவர்கள் யாராயிருந்தாலும், இயற்கையின் சாபத்தில் இருந்து அத்தகையோர் தப்பிக்க முடியாது. (‘'மூட நம்பிக்கை எதிர்ப்பானது' எவ்வாறு 'குருட்டுப் பகுத்தறிவு’ ஆகும்?’;
https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post.html)
'Naa Oru Alien' பாடல் வரிகள் கீழுள்ள தொடர்பில் உள்ளன.
தமிழுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் சேவைகள் புரிந்த, தமிழ்நாட்டில் வாழும் பிராமணர்களையும், ஈ.வெ.ரா, கோவை.இராமகிருட்டிணன்
போன்றவர்களையும்,
'நீ இல்லை தமிழன், நீ ஒரு கன்னடன், நீ ஒரு தெலுங்கன்' என்ற பிரிவினைகளைத் தூண்டி வருபவர்களை கிண்டல் செய்து வெளிவந்துள்ளது இப்பாடல்.
'குரங்கில் இருந்து வந்த மனிதர்கள் எல்லாம்
வந்தேறிகளே' என்று குறிப்பிட்டு,
'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற சங்க இலக்கிய கருத்தினை ஒட்டி, போர்களாலும், மனிதர்களின்
பேராசையால் இயற்கையை சீரழிப்பதாலும் வரும் கேடுகளைச் சுட்டிக்காட்டி' மனித நேயத்தை
சிறப்பாக வலியுறுத்தி இப்பாடல் வெளிவந்துள்ளது. (இதற்கு எதிரான ஆல்பம் பற்றி கீழே குறிப்பில்)
வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணி உருவாக்கிய ‘தமிங்கிலீசில்' தான் இப்பாடல்
உருவாகியுள்ளது. ஆனால் உள்ளடக்கத்தில் எதிர்த்திசையில் சங்க இலக்கியம்
வெளிப்படுத்திய போக்கில் பயணிக்கிறது. அதாவது சீரழிவு திசையில் 'வந்ததை', ஆக்கபூர்வமான
திசையில் வளர்த்துள்ளது.
எனவே 'டேக் இட் ஈசி பாலிசி' சீரழிவில் இருந்து, முதல் கட்ட மீட்சிக்கு 'கொலைவெறி' பாடல் பங்களித்ததது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மீட்சியாக 'Naa Oru Alien' பங்களித்துள்ளது.
எனவே 'டேக் இட் ஈசி பாலிசி' சீரழிவில் இருந்து, முதல் கட்ட மீட்சிக்கு 'கொலைவெறி' பாடல் பங்களித்ததது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மீட்சியாக 'Naa Oru Alien' பங்களித்துள்ளது.
’வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியின் பாடலால்
சீரழிந்த இளைஞர்களை ஈர்க்க 'Hip
Hop' (Hip hop or hip-hop; https://en.wikipedia.org/wiki/Hip_hop) என்ற மேற்கத்திய
இசைவடிவ பாணியை பின்பற்றியுள்ளார் இப்பாடலை உருவாக்கிய இசை அமைப்பாளர் 'ஹிப் ஹாப் தமிழா'.
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அளவிலும், 'கொலை வெறி' பாடல்
அளவுக்கு ஏன் 'Naa Oru Alien' 'பாடல்
வெற்றி பெறவில்லை? என்பதும் மதிப்பு மிக்க விடைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள
கேள்வியாகும்.
'ஹிப் ஹாப் தமிழா'வைப் போல, மேற்கத்திய இசை வடிவத்தை பின்பற்றாமல், தமிழில் உள்ள
மெலடி வடிவத்தில் இருந்து, உலகை ஈர்க்கக்கூடிய ஒரு புதிய இசை வடிவத்தில் 'கொலை வெறி' பாடல்
வெளிவந்துள்ளது. 'கொலை வெறி' பாடல் தொடர்பான
எனது ஆய்வுகளை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.
(https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_13.html)
(https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_13.html)
குறைந்த
பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் மூலமாக, பாடல் வரிகளில், அடிமட்ட மக்களின் தமிழ் மூலமாக தமிங்கிலீஸ் வீழ்ந்து வருகிறது.
தமிழில்
எழுத்தின் ஒலிக்கும், இசைச் சுருதிக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பியம் மூலம் நான் கண்டுபிடித்ததை, விளக்கியிருந்தேன்.
தமிழில் வைரமுத்து போன்ற பாடலாசிரியர்கள் அதைப் பின்பற்றாமல், திரைப்பாடல்கள்
எழுதும் போக்கானது அறிமுகமானது.
கொலை வெறி'ப் பாடலில்
சொற்களில் உள்ள எழுத்துக்களை எல்லாம் தெளிவாக உச்சரித்ததானது மிகவும் முக்கியமான
அதிசயமாகும். அதன்பின் வெளிவந்த திரைப்பட பாடல்களில் பெரும்பாலானவற்றில், குறிப்பாக
குறைந்த பட்ஜெட்டில் உருவான வெற்றிப்படங்களில், அவ்வாறு தெளிவாக உச்சரித்த பாடல்கள்
வெளிவந்ததும் புதிய திசையில் மெலடி பாடல்கள் பயணிக்க உள்ளதையும் உணர்த்தி
வருகின்றன.
இன்று 'ஹிட்' ஆகும் பாடல்கள்
கூட, அந்த
திரைப்படமானது திரை அரங்குகளிலிருந்து வெளியேறியவுடன், அடங்கி
விடுகின்றன. அந்த வகை 'ஹிட்' பாடல்களும் அரிதாகி வருகின்றன.
மழை பொழிய
உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டிலம் போலவே, இசை மழை பொழிவதற்கான, படைப்பாற்றல்
தாழ்வு மண்டிலம் உருவாகி வருகிறது.
'கொரோனா மூலமாக தமிழ்நாட்டில் பொது ஒழுக்கமும்
இயல்போடு வாழும் போக்கும் அதிகரித்து வருகிறது.
எனவே மெலடி
ரசனையானது புத்துயிர் பெறும் சமூக சூழலும் கனிந்து வருகிறது.
ஆனால், அவ்வாறு
வளர்ந்து வரும் புதிய மெலடி தொடர்பான ரசனைகளுக்கு ஏற்றவாறு இசை அமைப்பதற்கான
திறமைகள் கொண்ட இசை அமைப்பாளர்களே இனி
எடுபட முடியும். அதற்கான இரகசியங்கள் 'கொலை வெறி' பாடலில் உள் மறைந்துள்ளன (Latent).
ஹிட் ஆகும்
ரசனையை உணர்ந்து, சாமான்யர்களின் உலகத்திலும், இயற்கையிலும் வெளிப்படும் ஒலிச் சந்தங்களைக்
கவனித்து, அவற்றில்
இருந்து புதிய சுர கட்டமைப்புகளை உருவாக்குவதும் சாத்தியமாகும் காலமும் நெருங்கி
விட்டது.
(https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_13.html)
இளையராஜாவின் இசையை ரசிப்பவர்களில் பெரும்பாலோர் 50 வயதைக் கடந்தவர்கள் ஆவார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசைப்பிரியர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதினராகவும், நீண்ட காலமாகியும் அவரிடமிருந்து ஹிட் பாடல்கள் வெளிவரவில்லையே, என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அனிருத் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் இசைகளில் காப்பி அடித்து உருவானவைகளை மாணவர்கள் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
(https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_13.html)
இளையராஜாவின் இசையை ரசிப்பவர்களில் பெரும்பாலோர் 50 வயதைக் கடந்தவர்கள் ஆவார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசைப்பிரியர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதினராகவும், நீண்ட காலமாகியும் அவரிடமிருந்து ஹிட் பாடல்கள் வெளிவரவில்லையே, என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அனிருத் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் இசைகளில் காப்பி அடித்து உருவானவைகளை மாணவர்கள் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
மேற்குறிப்பிட்டபடி, இசை மழை
பொழிவதற்கான, படைப்பாற்றல் தாழ்வு மண்டிலம் உருவாகி வருவதன் அறிகுறிகளாகவே இதைக்
கருத முடியும்.
இன்று குறைந்த
பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற படங்களின் பாடல்களின் உள்ளடக்கமானது
சாமான்யர்களின் உலகத்தோடும் மாணவர்கள் உலகத்தோடும் ஒட்டியதாகவே உள்ளன. அவை
ரசனையிலும் இசைச்சுர கட்டமைப்பிலும் (Musical Note Structures) ஒத்திசைவான (Resonance) உறவுடன்
உருவானால் மட்டுமே காலத்தை வென்ற பாடல்களாக வெற்றி பெற முடியும். அதற்கான காலமும்
நெருங்கி விட்டதாகவே, நான் கருதுகிறேன்.
(https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_13.html)
சாமான்யர்களின் மற்றும் மாணவர்களின் உலகத்தோடும், இயற்கையோடும் ஒட்டி வாழ்ந்து, எவ்வாறு ஹிட் ஆகும் ரசனையை உணர்வது?
ஈ.வெ.ராவின் 'தமிழ்
வேர்க்கொல்லி நோயால் திரிந்த' தமிழ்நாட்டில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நேர/ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க, 'நான் அனுமதித்துள்ள மனிதர்களைத் தவிர, என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ
எவரும் பேச முடியாது. ஈமெயில் மூலமாக மட்டுமே எவரும் தொடர்பு கொள்ள முடியும்' என்ற வரையறையானது, இயற்கையோடும், சாமான்யரின் சமூகத்தோடும் 'ஒட்டி' வாழும்
வாய்ப்பினை, எனது
போக்கின் இயற்கை மூலமாக வழங்கியுள்ளது.
சாமான்யர்களின் மற்றும் மாணவர்களின் உலகத்தோடும், இயற்கையோடும் ஒட்டி வாழ்ந்து, எவ்வாறு ஹிட் ஆகும் ரசனையை உணர்வது?
சமூகத்திலும், இயற்கையிலும்
வெளிப்படும் ஒலிச் சந்தங்களைக் கவனித்து, அவற்றில் இருந்து எவ்வாறு புதிய இசைச்சுர
கட்டமைப்புகளை (New Musical Note
Structures) உருவாக்குவது?
எழுத்தின் ஓசைக்கும் பாடலில் அந்த எழுத்துக்கான இசைச்சுருதிக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில், பாடலை எவ்வாறு சீர் செய்வது?
எழுத்தின் ஓசைக்கும் பாடலில் அந்த எழுத்துக்கான இசைச்சுருதிக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில், பாடலை எவ்வாறு சீர் செய்வது?
உலக இசைகளில்
இருந்து எவ்வாறு புதிய இசைச்சுர கட்டமைப்புகளை உருவாக்குவது?
The weakening of the globalized, mediatized world is now imminent. Localized and de-mediatized world is emerging with more scope to sense the emerging new music tastes. Many music cultures, in a critical state of survival, will prove to be valuable music sources to create new music.
The weakening of the globalized, mediatized world is now imminent. Localized and de-mediatized world is emerging with more scope to sense the emerging new music tastes. Many music cultures, in a critical state of survival, will prove to be valuable music sources to create new music.
என்பது தொடர்பாக, ஆர்வமுள்ள இசை
அமைப்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டால், நான் ஆலோசனைகள் வழங்க முடியும். தொடர்புக்கு: Email: pannpadini@gmail.com (அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து, பிற தொலைபேசி
அழைப்புகளை நான் ஏற்பதில்லை)
குறிப்பு:
2.'வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியின் 'டேக் இட் ஈசி பாலிசி' பாடல் வரிகள்
1. 'Naa Oru Alien ஐக் கண்டித்து https://m.facebook.com/story.php?story_fbid=2391817621126744&id=1960141974294313?sfnsn=wiwspwa&extid=F9Qgme9CNQKI0B2X&d=w&vh=e ;
திருக்குறள் (423) வழியில் 'மெய்ப்பொருள்' காண; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_20.html
2.'வைரமுத்து - ஏ ஆர் ரகுமான் கூட்டணியின் 'டேக் இட் ஈசி பாலிசி' பாடல் வரிகள்
“மருஹாபா ஆஆ
மருஹாபா மருஹாபா ஆஆ
மருஹாபா மருஹாபா ஆஆ
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள்
மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே
ரெண்டு சொல்லடி
குறைந்த பட்சம்
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஒளியும் ஒலியும்
கரண்ட்டு போனா
டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும்
பெயிலா போனா
டேக் இட் ஈசி பாலிசி
தண்டசோருன்னு
அப்பன் சொன்னா
டேக் இட் ஈசி பாலிசி
வழுக்கு தலையன்
திருப்பதி போனா
டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
கேளடி ரதியே ரதியே
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே
காதல் நரம்பு எந்த பக்கம்
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
கண்டதும் காதல் வழியாது
கண்களால் ரத்தம் வழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது
பிலிமு காட்டி பொண்ணு
பாக்கலேன்னா
டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல
பாட்டி ஒக்காந்தா
டேக் இட் ஈசி பாலிசி
பண்டிக தேதி
சண்டேயில் வந்தா
டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி
அண்ணான்னு சொன்னா
டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
பகலிலே கலர்கள் பாராமல்
இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்
பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆடாமல்
அறுபதில் ஆடி என்ன பயன்”
No comments:
Post a Comment