சமஸ்கிருதம் செத்த மொழி என்பது அபத்தம்
தமிழ்நாட்டில் தமிழ் சாகும் மொழி ?
சமஸ்கிருத மொழி
தொடர்பாக, கீழ்வரும் கேள்வி எனக்கு வந்தது.
"சமஸ்கிருதத்தில்
என்னென்ன இருக்கிறது என்பதை யாராவது பட்டியல் இட்டு இருக்கிறார்களா?
அதைப் பற்றி
செய்திகள் எதுவும் வந்துள்ளதா?
வேள்வி
மந்திரங்கள், வழிபாட்டு மந்திரங்கள், புராணங்கள், காளிதாசரின் இலக்கியம் தவிர வேறு என்ன
இருக்கிறது ஐயா."
அவருக்கு
கீழ்வரும் பதிலை அனுப்பினேன்.
'சமஸ்கிருத
இலக்கணம் பாணினியின் அஷ்டதாயி உலக
மொழியியல் (Linguistics) துறைக்கு முக்கிய மூலமாகும். மொழியியல்
அடிப்படையில் தான் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் speech to text, text to
speech, grammar check, etc போன்ற மென்பொருட்கள் உருவாகி
பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கணிதம், அறிவியல் தொழிநுட்பம் சமஸ்கிருத மொழியில் இருந்த ஆதாரங்கள் வெளிவந்த
வண்ணம் உள்ளன. உதாரணத்திற்கு,
‘Science, Technology and Sanskrit
in Ancient India’;
உலகில்
நாத்திகம் பற்றி, அதிகமான நூல்கள் உள்ள தொன்மை மொழிகளில் சமஸ்கிருதம் மற்றும் பாலி
முதலிடம் வகிப்பதை, நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென் தெளிவுபடுத்தியுள்ளார்.
('Sanskrit and Pali have a larger atheistic and agnostic literature than
any other classical language; Greek, or Roman or Hebrew or Arabic)'; Page 35; ' Identity and Violence- The
Illusion of Destiny- Amartya sen)
ஸ்பெயின்
நாட்டைச் சேர்ந்த சமஸ்கிருத புலமையாளர் ஆஸ்கர் புஜோல் ரியம்பவ் பேசிய கீழ்வரும்
காணொளியானது;
தமிழ்நாட்டில்
வளர்ந்துள்ள 'சமஸ்கிருத வெறுப்பு நோயானது', எந்த அளவுக்கு தமிழின் வளர்ச்சிக்கு கேடாகி வருகிறது?
என்பதை எனக்கு
உணர்த்தியது.
(Spanish scholar Oscar Pujol
Riembau)
பழம்பெருமையின்
காரணத்தை விட, இன்றுள்ள வாழ்வியல் மற்றும்
தொழில்நுட்பத் தேவைகளுக்கான விடைகளைத் தரும் செல்வமாக சமஸ்கிருத மொழி, குறிப்பாக அதன் இலக்கண நூலான 'அஷ்டதாயி',
நிரூபணமாகி வருவதன் காரணமாகவே, உலக
அளவில் சமஸ்கிருத மொழியின் புகழானது வளர்ந்து வருகிறது.
கி.பி 11 ஆம் நூற்றாண்டில், முஸ்லீம் புலமையாளர் சமஸ்கிருத நூல்களை
அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதையும், அம்மொழிபெயர்ப்பானது
லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலமாக, மேற்கத்திய
நாடுகளில் சமஸ்கிருத மொழியின் புகழ் பரவ காரணமானதையும்; மேலேயுள்ள
காணொளி மூலமாக அறிந்து வியந்தேன்.
இந்தியாவில்
உத்தர்கண்டம் மாநிலத்தில் சமஸ்கிருத மொழி பேசும் கிராமங்கள் உருவாகி வருகின்றன.
Uttarakhand: 'Sanskrit Grams' To
Encourage Daily Use Of The Language ;
பழம்பெருமையின்
காரணத்தை விட, இன்றுள்ள வாழ்வியல் மற்றும்
தொழில்நுட்பத் தேவைகளுக்கான விடைகளைத் தரும் செல்வமாக உலக அளவில் சமஸ்கிருத
மொழியின் புகழானது வளர்ந்து வருகிறது.
ஆனால் 'நோஞ்சான் நோயில்' தமிழ்ப்புலமை சிக்கியதன் காரணமாக,
உலக அளவில் தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகி வரும் அபாயம்
பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
தொடர்புள்ள
துறைகளில் உள்ள புலமையாளர்கள் மத்தியில்,
தமிழ், தமிழ்
இசை தொடர்பான, தமது ஆய்வுமுடிவுகளை நிரூபிக்காமல்,
உணர்ச்சிபூர்வ ஆதரவாளர்கள் மத்தியில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் போல
பேசுவதும், எழுதுவதும் ஆகிய போக்கே, தமிழைப் பற்றி செல்டான் பொல்லாக் போன்றவர்கள் கீழாகக் கருதுவதற்கும், தமிழ் இசைப்
பற்றியும், அந்த கீழான கண்ணோட்டம் தொடர்வதற்கும்
காரணங்கள் ஆகும். அவ்வாறு நிரூபிக்கப்படுவதன் முக்கியத்துவம் பிரபல
எழுத்தாளர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் விளங்காததும்
வியப்பைத் தருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html
)
தொடர்புள்ள
துறைகளில் உள்ள புலமையாளர்கள் மத்தியில்
நிரூபிக்கப்பட்ட எனது கண்டுபிடிப்புகளை எல்லாம், அதே
பிரபல எழுத்தாளர்களும், தமிழ் அமைப்புகளும் ஏன்
புறக்கணித்து வருகிறார்கள்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.
சமஸ்கிருதம் போலவே,
உலக அளவில் தமிழின் புகழை வளர்க்க வல்ல எனது கண்டுபிடிப்புகள்:
1. இன்றுள்ள சர்வதேச இசைச்சுருதி தீர்மானிப்பு அதிர்வு எண்ணுக்கு
மிகவும் நெருக்கமான மதிப்பில் ஒரு குழல் கருவி
சிலப்பதிகாரத்தில் இருப்பதை அறிவியல் விதிகளின்படி கணக்கிட்டு
காண்பித்துள்ளேன். (1996 Ph.D; 'தமிழிசையின் இயற்பியல் – Physics of Tamil
Music’)
2. உலகில் உள்ள தாளக்கருவிகளுக்கான பொது இலக்கணம் (Percussion Grammar for all world
percussion instruments; discovered from the ancient Tamil texts;
published in the International Conference on
Arts & Humanities, HawaII, USA, Jan, 2006)
3. 'மொழியியல்' போல், உலகப்பல்கலைக்கழகங்களில்
'இசை
மொழியியல்' என்ற புதிய துறையை உருவாக்க உதவும், நோவாம் சோம்ஸ்கி
அங்கீகரித்துள்ள தொல்காப்பிய கண்டுபிடிப்பு. (The musical phonetics of the letters in ancient Tamil texts & its
complimentary dimension in the Shiva Sutras ( Śivasūtrāṇi) or Māheśvara Sūtrāṇi
in the Aṣṭādhyāyī of Pāṇini, in Sanskrit; Published ‘Musical Phonetics in Tholkappiam’
in the December 2013 issue of the
journal from the International Institute of Tamil Studies, Chennai; http://www.ulakaththamizh.in/journal/index/2013)
எனது ஆய்வுகளில்
உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதை வரவேற்கிறேன்.
நான் இதுவரை
வெளியிட்டுள்ள புத்தகங்களும் ஆய்வுக்கட்டுரைகளும்:
எனது 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' & ' The Origins of
Tamil Classical Music' காணொளிகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளைப் படிப்பதற்கான தொடர்புகள்:
சங்க
இலக்கியங்கள் எல்லாம், காதல் வீரம் மட்டுமின்றி, புதிய தொழில்,
வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்க வல்ல
அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும்
இருப்பதை எனது ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
எனது
கண்டுபிடிப்புகள் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்திருந்தால், அவை உடனே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்;
என்பதும் எனது கருத்தாகும்.
எனது ஆய்வுகள்
மூலமாக தமிழ் வளர வேண்டும் என்று விரும்புபவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
'அடுத்து நான்
என்ன செய்யலாம்? என்று தங்களுக்கு தோன்றுவதை
தயக்கமின்றி அனுப்பவும்'
லத்தீன்
மொழியின் ஆதிக்கத்தில் இருந்து ஐரோப்பிய மொழிகள் விடுதலை பெற்ற பின்னர், இன்று ஐரோப்பிய நாடுகளில் லத்தீன் மொழியில் உள்ள அறிவுப்புதையல்களை
போற்றுகிறார்களா? தூற்றுகிறார்களா? என்று ஆராய வேண்டும். அப்போது தான், சமஸ்கிருத
மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகக் கூறி , சமஸ்கிருத
மொழியையே இழிவுபடுத்தி கண்டிக்கும் தமிழர்கள், உலக அறிஞர்கள் பார்வையில் கேலிப்பொருளாகி
வருவதும் புரியும். விழிக்கவில்லை என்றால், உணர்ச்சிபூர்வ
முட்டாள்கள் என்ற முத்திரையில் தமிழர்கள் சிக்க நேரிடும்.
அ.இ.அ.தி.மு.க
ஆட்சியில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகமாகி, கொரொனாவின்
விளைவாக தனியார்ப்பள்ளிகளில் இருந்தும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் போக்கு
அதிகரித்து வருகிறது. இன்று தமிழில் சரளமாக எழுதவும்
படிக்கவும் தெரியாத மாணவர்களின் அதிவேக வளர்ச்சியின் முடிவாக, தமிழ் வேரழிந்த
நாடாக தமிழ்நாடு மாறுவதற்கு அதிக காலம் ஆகாது.
தமிழ் வேரழிந்த
நாடாக தமிழ்நாடு மாறுவதன் முன் அறிகுறியாகவே, 'நோஞ்சான் நோயில்' தமிழ்ப்புலமை
சிக்கி வருகிறதா? என்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது.
தமிழ்நாட்டில்
உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்பு ஊக்குவிக்கப்பட்ட போக்கில், அதற்கு துணை
புரிந்த நோஞ்சான் புலமையாளர்களும் ஊக்குவிக்கப்பட்டார்களா? பழந்தமிழ்
இலக்கியங்களிலோ, கல்வெட்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகளிலோ, 'சமஸ்கிருத
எதிர்ப்பு' இருந்ததற்கு சான்றுகள் உண்டா?
காலனி ஆட்சியில்
தமிழர்கள் நோஞ்சான்களாக வளர்ந்து,
தமிழானது சமஸ்கிருத கலப்பில் வீழ்ந்ததா? அதன்
தொடர்ச்சியாகவே, இன்று தமிழ் ஆங்கிலத்திடம் வீழ்ந்து வருகிறதா? 'தீதும் நன்றும்
பிறர் தர வாரா' (புறநானூறு) மறந்து,
வெறுப்பு அரசியலில் நோஞ்சான்களாகப் பயணிப்பது
இனியும் தொடரலாமா? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது.
தமிழ்வழிக்
கல்வியின் மரணப் பயணம் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும்,
ஒரு யோக்கியதை வேண்டும். யோக்கியதை இல்லாதவர்கள் எல்லாம் அவ்வாறு
மீடியா வெளிச்சத்துடன் 'நடிக்க' அனுமதித்ததானது,
தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப் பயணத்தினை
வேகப்படுத்தியுள்ளது.
'அந்த' யோக்கியதையைப் பற்றிய கவலையின்றியும், ‘தமிழ் அழிவு சுனாமி அறிகுறிகள்
பற்றிய கவலையின்றியும், ‘நாமும், நமது குடும்பமும் பிழைத்தால் போதும்’ என்று
நாம் வாழ்கிறோமா? அதன் விளைவாக, இன்னும்
2 தலைமுறைகளில், நமது
வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதை, தவிர்க்க முடியுமா?’
Note:
I had come across open minded
scholars in the field of Sanskrit, a pleasant surprise for me, with
anti-Brahmin & anti-Sanskrit associations, prior to the entry into my music
research present phase.
If anyone tries to refer to my
significant research findings w.r.t the ancient Tamil texts, they will have to
visit http://musicresearchlibrary.net/omeka/ (search S.A.Veerapandian) a great
treasure trove, for music research students.
Also, the following observation
was published in a Sanskrit research journal.
“During ancient times Sanskrit
and Tamil had mutually beneficial complimentary interactions.
The great works
of Buddhist and Jain scholars in the form of epics like ‘perungkathai’ (having
more musicological details on string instruments than chilappathikAram) and
grammar works like ‘cEnhthan thivAkaram’ (with valuable musicology details
including the earliest reference –Sanskrit references seem to be later- for the
seven music LETTERS sa, ri, ga, ma, pa, dha, & ni) might be the results of
such healthy interactions. Of all the ancient languages, Tamil and Sanskrit may
be the only two languages to have such unique complimentary relation.
Aware of
this complimentary relation, the rules of tholkAppiam were pragmatic while
ensuring distinct Tamil language identity by treating the sound format of
vatacol as an exception to the rules applicable to the sound format of the
normal Tamil word. While Manipravalam violated the rules of tholkAppiam in one
extreme, the pure Tamil movement extremism also violated the rules of
tholkAppiam in the opposite extreme. Languages can grow, not in total
insulation, but by practising healthy interactions with other languages while
ensuring the distinct identity. “
- ‘tholkAppiam and the use of
Sanskrit words in Tamil’ – The Journal of Sanskrit Academy; Volume XX – 2010;
ISSN-0976 089X
Note that the earliest reference
–Sanskrit references seem to be later- for the seven music LETTERS sa, ri, ga,
ma, pa, dha, & ni) found in the Tamil text
‘cEnhthan thivAkaram’, was published in a Sanskrit Research Journal.
Also, in Sanskrit, “Tamil
pulavars not only have produced Tamil masterpieces of poetry and learning, but
also have contributed much in Sanskrit to Literature and Philosophy.” (Jean
Filliozat - Presidential Address - First International Tamil Conference –
Seminar, Kuala Lumpur , Malaysia 18 - 23 April 1966 )
While researches can continue to
explore if Tamil and Sanskrit had common origin, the complimentary mutually
beneficial relationship between Tamil and Sanskrit, was well established. (‘Did Tamil & Sanskrit have common
origin? Are the Tamils suffering from the deep rooted inferiority complex,
after 1967?’
Why anti-Sanskrit is harmful to
the Tamil development?
'தமிழ்வழிக்கல்வியின் மரண அறிவிப்பு:
No comments:
Post a Comment